Published:Updated:

பள்ளியை வைத்து அள்ளலாம் பணம்!

பள்ளியை வைத்து அள்ளலாம் பணம்!

பள்ளியை வைத்து அள்ளலாம் பணம்!

பள்ளியை வைத்து அள்ளலாம் பணம்!

Published:Updated:
தொழில்
பள்ளியை வைத்து அள்ளலாம் பணம்!
 

பள்ளியை வைத்து அள்ளலாம் பணம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பள்ளியை வைத்து அள்ளலாம் பணம்!
பள்ளியை வைத்து அள்ளலாம் பணம்!

கொ ளுத்தும் வெயில்காலத்தில் குடை விற்கலாம்... நடுக்கும் குளிர்காலத்தில் கம்பளி விற்கலாம்... இதெல்லாம் சீசன் வியாபாரங்கள்! ஒவ்வொரு சீசனுக்கும் ஏற்றமாதிரி வியாபாரம் செய்து அந்த காலகட்டத்தில் காசை அள்ளும் ஐடியா இது. அந்த வரிசையில் இப்போது விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் திறக்கும் நேரம் இது... இந்த நேரத்தில் என்ன பிஸினஸ் செய்தால் பணம் கொட்டும்...

இதோ சில ஐடியாக்கள்!

பள்ளிக்கூடம் திறக்கும்போதே தேவைப்படும் விஷயங்கள் நோட்டுப் புத்தகங்கள்தான்!

அதிலும், நல்ல டிஸைனில் பளிச்சென்று அட்டைபோட்டு கொண்டு செல்வதற்குதான் பிள்ளைகள் ஆசைப்படுவார்கள். அதேசமயம், பெற்றோருக்கோ இந்த அட்டை மூன்று மாதத்துக் குத் தாக்குப்பிடிக்குமா என்ற கவலை!

இந்த இரண்டு தரப்பையும் திருப்திசெய்யும் வகையில் புதிதாக வந்திருக்கும் பாலிதீன் அட்டைகளை விற்பனை செய்யலாம். மீட்டருக்கு ஆறு முதல் பத்து ரூபாய் வரையிலான விலையில் கிடைக்கும் இந்த அட்டைகளை வாங்கி, நோட்டுகளுக்கு போடும் வகையில் கட் செய்து விற்பனை செய்யலாம். பெரிய நோட்டென்றால் இரண்டுக்கும், சிறியதென்றால் மூன்றுக்கும் அட்டை போடும் அளவுக்கு வரும் அந்த பாலிதீன் அட்டை.

இவற்றுக்கு நல்ல விலை வைத்து விற்பனை செய்ய முடியும். பள்ளிக்கூடத்தில் பேசி, மொத்தமாக ஆர்டர் எடுத்தால், இன்னும் குறைவான செலவுதான் ஆகும். அதனால் நல்ல லாபமும் கிடைக்கும்.

இதுதவிர, வெள்ளை நிற சிந்தட்டிக் ரேப்பரும் விற்பனைக்கு வந்திருக்கிறது. வழுக்காத வகையில் ஒரு பக்கம் சொர சொரப்பாக இருக்கிறது. 17-க்கு 22 இஞ்ச் அளவுள்ள ஒரு ஷீட்டின் சில்லறை விலை 3 ரூபாயாக இருக்கிறது. இந்த ஷீட்டுகளை கொண்டு அட்டை போடும் போது மழைத் தண்ணீர் பட்டாலும் புத்தகங்களுக்குப் பாதிப்பு வராது என்பதால் பெற்றோர் இதில் ஆர்வம் காட்டுவார்கள். மேலும், புத்தகத்தின் அட்டைப்பகுதி மறைக்கப்படாமல் பளிச் சென்று தெரிவது அழகாக இருக்கிறது.

அதேபோல, புத்தகங்களுக்கு அட்டை போடு வதற்காக மும்பையில் இருந்து ஆரஞ்சு வண்ணத்தில் பி.வி.சி ஷீட் இப்போது விற்பனைக்கு வந்திருக்கிறது. முன்பு ஆரஞ்சு லேமினேட்டட் ஷீட் வந்ததைப் போலவே தோற்றத்தில் பிளாஸ்டிக் காகிதமாக பளிச்சென்று இருக்கிறது இது. நான்கு மீட்டர் கொண்ட ஒரு சுருளை சில்லறை விலையில் 18 ரூபாய்க்கு விற்க முடியும். இவற்றையும் மொத்தமாக வாங்கி விற்பனை செய்யலாம். புதிய பொருட்களுக்கு எப்போதுமே டிமாண்ட் இருக்கும் என்பது இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.

பள்ளியை வைத்து அள்ளலாம் பணம்!

வகுப்பறையிலேயே தான் மட்டும் தனித்துத் தெரிவதை குழந்தைகள் எப்போதுமே விரும்புவார்கள். அதில் ஒரு தனிப் பெருமைதான்! குழந்தைகளின் இந்த ரசனைக்கு மரியாதை செய்யும்விதமாக, நோட்டுகளிலும் புத்தகங்களிலும் ஒட்டும் லேபிள்களை விதவிதமாகத் தயாரித்துக் கொடுக்கலாம். சென்னையில் உள்ள ‘ஸ்வஸ்திக் டிஜிட்டல் பிரின்டிங்’ நிறுவனத்தில், குழந்தைகளின் போட்டோ போட்டு லேபிள் அச்சடித்துக் கொடுக்கிறார்கள்.

‘‘முதலில் எங்கள் குழந்தை களுக்கு இதுபோன்ற லேபிள்களை அடித்துக் கொடுத்தோம். அது பலருக்கும் பிடித்துவிட, இப்போது அதை எங்கள் தொழிலில் ஒன்றாக்கி விட்டோம்’’ என்றார்கள் ‘ஸ்வஸ்திக்’ நிறுவனத்தைச் சேர்ந்த பிரேம்குமாரும் பிரபாகரும்!

பள்ளியை வைத்து அள்ளலாம் பணம்!

பள்ளிக்கூடத்தில் ஐ.டி கார்டுக்காக புகைப்படம் எடுக்கும் போட்டோகிராபர்கள் அப்படியே இந்த லேபிள்களுக்கான ஆர்டரையும் சேர்த்துப் பெறலாம். 30 லேபிள்கள் கொண்ட ஒரு செட்டுக்கு குறைந்தபட்சம் 75 ரூபாய் வாங்கலாம். போட்டோ பிரின்ட் போடுவதற்கான பொருட் கள் விற்பனையாகும் கடைகளில் ஸ்டிக்கர் பேப்பரே கிடைக்கும். அதில் பிரின்ட் செய்துகொடுத்தால், நல்ல வரவேற்பு இருக்கும். ஏழு ரூபாய்க்கு ஸ்டிக்கர் பேப்பர், பிரின்டிங் செலவுகள் என்று பார்த்தாலும் ஒரு செட்டுக்கு நல்ல லாபம் நிற்கும்.

அதேபோல, குழந்தை களுக்கான ஸ்கூல் பேக், வாட்டர் பாட்டில், ஸ்நாக்ஸ் பாக்ஸ் போன்றவற்றைக்கூட தனிப்பட்ட முறையில் பெயர் அச்சடித்து விற்பனை செய்யலாம். ஒரு பள்ளிக்கூடத்துக்கு போய் பள்ளிக்கூட பெயர் போட்டுக் கொடுப்பதாக ஆர்டர் பிடித்தால், சுமாராக ஆயிரம் பேக் வரைகூட ஆர்டர் பிடிக்கலாம். அச்சடிக்கும் செலவு என்று பார்த்தால் ஒரு பைக்கு இரண்டு ரூபாய்தான் வரும். ஆனால், தங்கள் பள்ளிக்கான தனித்த அடையாளத்தோடு இருக்கும் பைகளை எல்லோருமே விரும்புவார்கள்.

தமிழகம் முழுக்க ஸ்கூல் பைகளை விற்பனை செய்துவரும் ‘நியூ ஜோதி ஸ்டோர்ஸ்’ ஸின் அஜ்மல்கான் இதுபற்றிப் பேசும்போது, ‘‘பெயர் போட்ட பைகளுக்கு தனி மவுசு உண்டுதான். இன்னும் ஒருபடி மேலே போய், குழந்தைகளின் பெயரை எழுதி செருகி வைக்க வசதியாக ஒரு பிளாஸ்டிக் கவரையும் பையோடு சேர்த்து தைத்துக் கொடுக்கலாம்’’ என்றார்.

பள்ளியை வைத்து அள்ளலாம் பணம்!
பள்ளியை வைத்து அள்ளலாம் பணம்!

மாணவர்களின் புத்தக சுமையைக் குறைக்கும் விதமாக இரண்டு கோடு, நான்கு கோடு, கணக்கு கட்டங்கள், கோடு இல்லாமல் என நான்குவிதமான தாள்களை ஒவ்வொன்றிலும் குறிப் பிட்ட அளவுக்கு இணைத்து (மிக்ஸ்டு நோட் புக்) ஒரே நோட்டாகத் தயாரித்து விற்கலாம்.

சிறு குழந்தைகளுக்கு பரிசளிக்க ஏற்ற வகையில் பென்சில், ஸ்கேல், ரப்பர், ஷார்ப்பனர், கலர் பென்சில் போன்றவற்றைக்கொண்ட அழகிய செட்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றின் விலை 20 முதல் 25 ரூபாயாக இருக்கிறது. இவற்றை மொத்த விலைக்கு வாங்கி, பள்ளிகளுக்கு அருகில் உள்ள பெட்டிக் கடைகளுக்கும் பள்ளிக்கூட ஸ்டேஷனரி ஷாப்களுக்கும் விற்பனை செய்யலாம். ‘‘நல்ல தரமான ஜாமென்ட்ரி பாக்ஸ், பென்சில், பேனா போன்ற பொருட்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். எங்கள் கடைக்கு வருவோர் பெரும்பாலும் இது போன்ற பொருட்களைத்தான் தேடுகிறார்கள்’’ என்றார், பாரிமுனை ‘சர்வலட்சுமி ஸ்டோர்ஸ்’ஸின் பாலாஜி.

பள்ளியை வைத்து அள்ளலாம் பணம்!

ஸ்கூல் யூனிஃபார்ம் என்பது பெற்றோருக்கு பள்ளிக்கூடம் திறக்கும் நேரத்தில் பெரிய அளவில் செலவு வைக்கக்கூடிய விஷயம்.

அவர்களுக்குக் கைகொடுக்கும் வகையிலும் நல்ல லாபம் கிடைக்கும் விதமாகவும் தவணைமுறை சலுகைத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தலாம்.

சென்னையை அடுத்த தாம்பரம் பகுதியில் இது போன்ற திட்டத்தைச் செயல்படுத்தி வரும் ‘ஸ்கைலார்க்’ நிறுவனத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி, ‘‘ஒரே வீட்டில் இரண்டு, மூன்று பிள்ளைகள் இருந்தால், அவர்களுக்கு எளிய தவணையில் யூனிஃபார்ம் கொடுக்கிறோம். இதற்கான பணத்தை வார, மாத தவணைகளில் சுமார் மூன்று மாதங்களில் கட்டவேண்டும்’’ என்கிறார்.

யூனிஃபார்ம் துணியை மொத்தமாக வாங்குவதால் குறைவான விலையில் கிடைத்து, நல்ல லாபமும் தரும் என்பதையும் கவனிக்க வேண்டும்.

நீங்கள் இந்தத் தொழிலில் இருந்தாலும் சரி, புதிதாக இறங்கத் திட்டமிட்டாலும் சரி. உங்கள் ஊர் நகரமோ, கிராமமோ... பிள்ளைகளின் கல்விக்காக எவ்வளவு பணமும் செலவிடத் தயாராக இருப்பார்கள் பெற்றோர்கள். அவர்களுடைய சிரமத்தைக் குறைக்கும் அதேநேரம் நியாயமான விலையில் பொருட்களை வழங்கினால், அடுத்த ஆண்டும் உங்கள் காட்டில் மழைதான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism