Published:Updated:

வங்கி ஏஜென்ட்... வகையான வருமானம்!

வங்கி ஏஜென்ட்... வகையான வருமானம்!

வங்கி ஏஜென்ட்... வகையான வருமானம்!

வங்கி ஏஜென்ட்... வகையான வருமானம்!

Published:Updated:
தொழில்
வங்கி ஏஜென்ட்... வகையான வருமானம்!
 

வங்கி ஏஜென்ட்... வகையான வருமானம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வங்கி ஏஜென்ட்... வகையான வருமானம்!

ங்கிகள் இன்று தங்களது பணிகள் பலவற்றுக்கு அவுட் சோர்ஸிங் முறையில் ஆட்களைத் தேடுகின்றன. அது இன்று, குறைந்த முதலீட்டில் செய்யும் நல்ல தொழில் வாய்ப்பாக இருக்கிறது. நம்முடைய திறமைகளை மட்டும் மூலதனமாகக் கொண்டு, வங்கி ஏஜென்ட்களாகத் தொழில் தொடங்கலாம்.

பெரிய பெரிய வங்கிகள் இப்போதெல்லாம் தங்கள் வாடிக்கையாளர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதில்லை. கடன்களைப் பற்றியும் வங்கித் திட்டங்களைப் பற்றியும் சொல்லி வாடிக்கையாளர் களைக் கவர்வதற்கும், கடன் கேட்டு விண்ணப்பித்தவர்கள் சரியான திருப்பிச் செலுத்தும் தகுதி கொண்ட நபர்கள்தானா என்பதையும் சரி பார்த்துக் கொள்வதற்கும் தனியார் ஏஜென்சிகளையே நாடுகின்றன.

இப்போது பல இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் இத்தகைய ஏஜென்சிகளை நாடத் தொடங்கி இருப்பதால் இதற்கான தேவை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனால், நல்ல நிர்வாகத் திறமை உள்ளவர்களுக்கு இந்த ‘வங்கி ஏஜென்சி தொழில்’ நல்ல வாய்ப்பு! அதோடு, பன்னாட்டு வங்கிகள் பலவும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் கால்பதித்து வருகிற நேரம் இது என்பதையும் கவனிக்கவேண்டும்.

இதுபோன்ற ஏஜென்சி வாய்ப்புகளை வழங்க வங்கிகள் சில வரையறைகளை வைத்திருக்கின்றன. ஒரு அலுவலகமாக இயங்கக்கூடிய அளவுக்கு இடவசதி இருக்கவேண்டும். குறைந்தபட்சம் ஐந்து முதல் பத்து பேர் பணிபுரியக்கூடியதாக இருக்கவேண்டும் என்பதால், அலுவலகம் சுமார் 1000 சதுர அடிக்கு குறைவில்லாத அளவில் இருக்கவேண்டும் என்று சில கண்டிஷன்கள் உண்டு. இதை நடத்துபவர் நல்ல நிர்வாகத் திறமையோடு இருக்கிறாரா என்பதையும் சோதித்து அறிந்துகொண்ட பிறகு தான் ஏஜென்ட் வாய்ப்பை வங்கிகள் கொடுக்கும்.

அதேபோல, ஏஜென்ட்களுக்கு கமிஷன் தொகையைக் கொடுக்க, வங்கிகள் குறிப்பிட்ட கால அவகாசம் எடுத்துக்கொள்ளும். அந்தக் கால கட்டத்தில் தன் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுத்து, அலுவலகத்தைப் பராமரிக்கும் அளவுக்கு நிதி ஆதாரத்தோடு நிர்வாகி இருக்கிறாரா என்பதையும் கவனிக்கும்.

வங்கி ஏஜென்ட்... வகையான வருமானம்!

முக்கியமான ஒரு விஷயம், ஆரம்பத்தில் எந்த வங்கியுமே நேரடியாக ஏஜென்ட் ஆகும் வாய்ப்பைக் கொடுப்பதில்லை. திறமையைச் சோதித்துப் பார்க்க, ஏற்கெனவே ஏஜென்ட்டாக இருப்பவரிடம் ரிப்போர்ட் செய்யும் வகையில், சில அஸைன்மென்ட்களைக் கொடுக்கும். கடன் கேட்டு விண்ணப்பித்த வாடிக்கையாளர்களைச் சந்தித்து, அவர்கள் கொடுத்த தகவல்களைச் சரிபார்க்கவேண்டும். புதியவர்களைத் தேடிப்பிடித்து, வங்கியின் வாடிக்கையாளர்களாக்க வேண்டும். ஒரு மாதத்தில் இந்த வேலையில் எந்த அளவுக்கு திறமையாகச் செயல்படுகிறோம் என்பதைப் பார்த்து, வங்கியே பதிவு எண் கொடுத்து, நேரடியாக ஏஜென்ட் ஆக்கிக்கொள்ளும்.

நீங்கள் இப்படிப்பட்ட தகுதிகளோடு இருக்கிறீர்களா..? உங்கள் பகுதியில் இருக்கும் தனியார் வங்கிகளை அணுகி, ஏஜென்ட் ஆக வாய்ப்பைக் கேட்டுப் பெறுங்கள். வீட்டுக்கடன், வாகனக்கடன், கிரெடிட் கார்ட் வசதிகளைக் கொடுக்கும் அனைத்து வங்கிகளும் இத்தகைய ஏஜென்ட்களின் உதவியை நாடுகின்றன.

வீட்டுக்கடன், வாகனக்கடன், கிரெடிட் கார்ட் போன்றவற்றுக்கு விண்ணப்பித்தவர்களின் முகவரி களைச் சரிபார்க்கும் பணிகளுக்காக வங்கி கொடுக்கும். அதை வைத்துக்கொண்டு ‘அந்த விண்ணப்பத்தில் உள்ள தகவல்கள் உண்மையானதா?’ என்பதை தெரிந்து சொல்வதுதான் வேலை. வேலைக்கேற்றவாறு ஒரு விண்ணப்பத்துக்கு 30 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை என்ற கணக்கில் வங்கி, ஏஜென்ட் கமிஷனைக் கொடுத்துவிடும். இதுதவிர, புதிதாக ஆட்களை இழுத்து கிரெடிட் கார்ட், கடன்கள் வாங்க வைப்பதற்கான முயற்சி எடுத்தும் வருமானம் பார்க்கலாம்.

அவர்களுக்கு விண்ணப்பங்களைத் தந்து, பூர்த்திசெய்து வங்கியில் கொடுத்தால், விண்ணப்பங்கள் ஓகே ஆவதைப் பொறுத்து கமிஷன் கிடைக்கும்.

இதையெல்லாம் விட முக்கியமான, மிகக் கவனமாகக் கையாள வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. அதுதான் கலெக்ஷன் பணி. அதாவது, கடன் பெற்றவர்களில் சிலர் தவணைத் தேதிக்குப் பிறகும் அந்த மாதத் தொகையை வங்கிக்குச் செலுத்தாமல் இருப்பார்கள். அவர்களிடம் பேசி, பணத்தை வசூலித்துக் கொடுக்க வேண்டும். இதற்கு கமிஷன் அதிகமாகக் கிடைக்கும். ஆனால், இதில் கவனமாக இருக்கவேண்டிய இடம் எதுவென்றால், வாடிக்கையாளர் மனம் நோகும்படி பேசிவிடக் கூடாது. அவர் வங்கி மற்றும் காவல்துறையில் போய் புகார் செய்தால் ஏஜென்ட்டுக்கு பிளாக் மார்க் குத்திவிடுவார்கள்.

இதுபோன்ற நேரங்களில் தன் ஆட்களை அனுப்பும் ஏஜென்ட், அவர்களுக்குச் சரியான வழிகாட்டுதலைச் செய்து தரும். வாடிக்கையாளர்களிடம் இருந்து இரண்டு, மூன்று முறைக்கு மேல் புகார் வந்துவிட்டால் ஏஜென்சியே ரத்தாகக்கூட வாய்ப்பு இருக்கிறது. அதனால் கவனமாக இருக்கவேண்டும்.

பொதுவாக ஏஜென்ட்கள் தவிர, வங்கியும் தனியாக விசாரணைக்குழு ஒன்றை வைத்திருக்கும். ஏஜென்ட்கள் தரும் விண்ணப்பங்களை அந்த விசாரணைக் குழுவிடம் கொடுத்து கிராஸ் செக் செய்யவும் வங்கி சொல்லும். அதனால், கூடுதல் கவனத்துடன் வேலை செய்யவேண்டும்.

இந்தத் தொழிலில் இறங்க ஆகும் செலவு என்று பார்த்தால், சுமாராக மாதத்துக்கு ஐம்பதாயிரம் வரை ஆகும். அதாவது, ஊழியர்களின் சம்பளம், தொலை பேசி, கம்ப்யூட்டர், அலுவலகச் செலவுகள் போன்றவை. இதுதவிர, வங்கியில் இருந்து கமிஷன் பில் வருவதற்கு தாமதமாகலாம். அப்போது இந்தச் செலவுகளைச் சமாளிக்கும் அளவுக்கு கையில் கொஞ்சம் பணம் இருப்பு வைத்துக் கொள்ளவேண்டியதும் அவசியம்.

சராசரியாக ஒரு ஊழியர் தினம் 5 விண்ணப் பங்களை டீல் பண்ணுவதாக வைத்துக்கொண்டாலும் ஒரு மாதத்தில் குறைந்தபட்சம் 500 விண்ணப்பங்கள். ஒரு விண்ணப்பத்துக்கு குறைந்தபட்சமாக 30 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை செய்யும் வேலையைப் பொறுத்து வங்கிக் கமிஷன் கிடைக்கும். மாதத்துக்கு சுமாராக 75 ஆயிரம் ரூபாய் வருமானம் வரும்.

செலவெல்லாம் போனாலும் 25 ஆயிரம் நிகர வருமானம் கிடைக்கும். இதற்கு சீசன் என்பதெல்லாம் கிடையாது என்பதாலும், வங்கியைச் சார்ந்து தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கக்கூடிய தொழில் என்பதாலும் வங்கிச் சேவை ஏஜென்ட் என்பது நல்ல தொழில் வாய்ப்புதான்!

உடனே உங்கள் ஊர் வங்கிக் கிளையில் முயற்சித்துப் பாருங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism