Published:Updated:

காசு கொட்டும் கெர்கின்ஸ்!

காசு கொட்டும் கெர்கின்ஸ்!

காசு கொட்டும் கெர்கின்ஸ்!

காசு கொட்டும் கெர்கின்ஸ்!

Published:Updated:
தொழில்
காசு கொட்டும் கெர்கின்ஸ்!
 

காசு கொட்டும் கெர்கின்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காசு கொட்டும் கெர்கின்ஸ்!
காசு கொட்டும் கெர்கின்ஸ்!

ண்ணையும் விண்ணையும் பார்த்துப் பார்த்து பெருமூச்சுவிடும் விவசாயி களுக்குக் கைகொடுப்பதற்காகவே காத் திருக்கிறது ‘கெர்கின்ஸ்’ எனப்படும் ‘வீரிய வெள்ளரி’!

இனிப்பான இந்த வெள்ளரியை இங்கே யாரும் சாப்பிடுவதில்லை. ஆனால், வெளிநாட்டவர்கள் இதை விரும்பிச் சாப்பிடுவதாலேயே ஏற்றுமதியை நம்பி இந்த கெர்கின்ஸை, தமிழகத்தின் சில மாவட்டங்களில் பயிரிட்டு வருகிறார்கள். உலக நாடுகள் பலவற்றிலும் இதற்கான சந்தை பெருக ஆரம்பித்திருப்பதால் தமிழகத்திலும் ‘கெர்கின்ஸ்’ பயிரிடுவோரின் எண்ணிக்கை மளமளவென ஏறிக்கொண்டே இருக்கிறது.

கெர்கின்ஸ் தொடர்ந்து பராமரிக்க வேண்டிய பயிராக இருப்பதால், வேலையாட்களுக்குக் கடும் பற்றாக்குறை நிலவுகிற ஐரோப்பிய நாடுகள் கெர்கின்ஸை இறக்குமதி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றன. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஏதுவான தட்பவெப்ப சூழ்நிலை இருப்பதால், இப்பகுதி விவசாயிகள் கெர்கின்ஸ் பயிரை விளைவிக்க முடியும்.

காசு கொட்டும் கெர்கின்ஸ்!

ஆனால், நம்நாட்டில் கெர்கின்ஸ் விற்பனை ஆகும் வாய்ப்பு அறவே இல்லாததால், விவசாயிகள் இதைத் தனியாகப் பயிரிட்டுச் சந்தைப்படுத்த முடியாது. ஏதாவது ஏற்றுமதி நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்துகொண்டுதான் பயிர்செய்து விற்க முடியும்.

திண்டுக்கல், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருநெல்வேலி, ஈரோடு ஆகிய பகுதி களில் சில விவசாயிகள் ஒப்பந்த முறையில் இதைப் பயிரிடுகிறார்கள். விவசாயிகளிடம் இருந்து வாங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது சிவகங்கையைச் சேர்ந்த ரவிபாலா எக்ஸ்போர்ட்ஸ்! அதன் நிர்வாக இயக்குநர் ஞானசேகரைச் சந்தித்தோம்.

காசு கொட்டும் கெர்கின்ஸ்!

“இந்த ஐந்து வருடங்களில் கெர்கின்ஸ் மிகப் பிரபலம் ஆகி இருக்கிறது. களிமண் நிலம் இல்லாத எந்த நிலத் திலும் இதைப் பயிரிடலாம். செம்மண்ணில் நன்கு வளரும். தவிர, தண்ணீர் தேவையும் குறைவாகவே இருப்பதால் எந்த ஊரிலும் கெர்கின்ஸைப் பயிர் செய்யலாம். நிலத்தில் தண்ணீர் தேங்கக்கூடாது. தமிழ் நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் பலரும் கெர்கின்ஸ் பயிரிட ஆரம்பித்துள்ளனர்.

நடவு செய்த 30\வது நாளில் இருந்தே அறுவடை செய்ய ஆரம்பித்துவிடலாம். எங்களோடு ஒப்பந்தம் செய்துகொள்ளும் விவசாயிகளுக்கு விதை, உரம், மருந்து போன்றவற்றை நாங்களே கொடுப்போம். எங்களுடைய ஃபீல்டு ஆபீஸர் தொடர்ந்து பயிரைக் கண்காணித்து வருவார். தண்ணீர் விடுவது, அறுவடை செய்வது எல்லாம் விவசாயிகளின் பொறுப்பு. அறுவடை ஆரம்பித்த நாளில் இருந்து தினமும் நிலத்துக்கே ஆள் அனுப்பி, எடை போட்டு தரவாரியாக காய்களைப் பிரித்து எடுத்துக் கொள்வோம். பிஞ்சாக இருக்கும் காய்கள் நல்ல தரம் என்பதால், அதற்கு விலை அதிகம். காய் முற்றினால் விலையும் குறைந்துவிடும். அதனால் பிஞ்சிலே அறுவடை செய்தால் நல்ல விலை கிடைக்கும்.

ஒரு ஏக்கருக்கு 7,000 கிலோ வரை காய்கள் கிடைக்கும். விவசாயிக்கு 45,000 ரூபாய் கிடைக்கும். அதில் கூலி மற்ற செலவுகள் போக, மூன்று மாத மகசூலில் 25,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.

இதைப் பயிரிடுகிற விவசாயிகளுக்கு பிரச்னையே இல்லை. எங்களுக்கு மார்க்கெட் எவ்வளவு ஏறி இறங்கினாலும் விவசாயிகளுக்கு ஒப்பந்தம் செய்த நாளில் நிர்ணயித்த விலையையே கொடுக் கிறோம். விவசாயிகளுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் நாங்களே செய்து கொடுக் கிறோம்” என்று சொல்லும் ஞானசேகர், ஆண்டுக்கு 1,000 கன்டெய்னர்கள் கெர்கின்ஸ் ஏற்றுமதி செய்து 20 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறார்.

காசு கொட்டும் கெர்கின்ஸ்!

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தின் கோயில் அடிவாரம் பகுதியில் கெர்கின்ஸ் பயிர் செய்து வரும் கருப்பையா நம்மிடம், ‘‘நான் 11 வருஷமா வெள்ளரி பயிர் பண்றேன். முன்னே மக்காச் சோளம், கத்திரி, வெண்டை பயிர் போட்டுக்கிட்டு இருந்தேன். இந்த கெர்கின்ஸ் பத்தி சிவகெங்கை கம்பெனி யில இருந்து ஃபீல்ட் ஆபீஸர் எடுத்துச் சொன்னார். சரினு நடவு செஞ்சேன். மத்த பயிர்ல வரவு, செலவு இழுத்துக்கோ பறிச்சுக்கோனு இருக்கும். இதுலதான் கையில கொஞ்சம் காசு நிக்குது.

ஆறு ஏக்கர் குத்தைகைக்கு எடுத்திருக்கேன். அதுல ஒவ்வொரு சீசனுக்கும் இரண்டரை ஏக்கர் கெர்கின்ஸ் நடறேன். ஒரு பருவம் முடிஞ்சு அறுவடை செஞ்சதும் அந்த நிலத்துல வேற பயிர் போட்டுட்டு அடுத்த இரண்டரை ஏக்கர்ல கெர்கின்ஸ் போட்ருவேன். தொடர்ந்து ஒரே நிலத்துல பயிர் பண்ணுனா விளைச்சல் குறைஞ்சுடும். நடவு செஞ்ச 90 நாளில் வருமானம் பாத்துடலாம். உழைப்புக்கு தக்குன வருமானம் கட்டாயம் கிடைக்குது. போன சீசன் நல்லா விளைஞ்சதால செலவு போக 80,000 ரூபாய் கையில நின்னது!” என்று கெர்கின்ஸ் பெருமை சொன்னார் கருப்பையா.

தமிழ்நாட்டில் 6 ஏற்றுமதி நிறுவனங்கள், பெங்களூரில் 13 நிறுவனங்கள் இப்போதைக்கு இருந்தாலும் இதற்கான வாய்ப்பு இன்னும் அதிகமானதாகவே தெரிகிறது. கெர்கின்ஸ் ஏற்றுமதிக்கு வரிவிலக்கு இருக்கிறது. முக்கியப் பிரச்னையாக இருப்பது சட்டென வந்து தாக்கும் கனமழைதான். இதனால் பயிர் நாசமாகி ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட, பயிர் இன்ஷூரன்ஸுக்கு முயற்சி செய்து வருகிறார்கள்.

இதற்கான தேவைகளை மனதில் கொண்டு, அரசுகளும் கைகொடுத்தால், காசு கொட்டும் விஷயமாக இருக்கும் கெர்கின்ஸ், கொழிக்கும் பிஸினஸாக மாறும்!

காசு கொட்டும் கெர்கின்ஸ்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism