Published:Updated:

பிஸினஸ் குட்டிக்கதை

பிஸினஸ் குட்டிக்கதை

பிஸினஸ் குட்டிக்கதை

பிஸினஸ் குட்டிக்கதை

Published:Updated:
தொழில்
பிஸினஸ் குட்டிக்கதை
 

இலவசம்... தப்பில்லை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிஸினஸ் குட்டிக்கதை

தாசிவத்தின் ஓட்டல் அத்தனை பெரிதில்லை... ஆனாலும், சாப்பாட்டு ருசிக்காக எல்லோரும் அங்கு மொய்க்கிறார்கள். சின்னதாக மரத்தடியில் இட்லி சுட்டு விற்றபோதும் சரி, இன்று சற்றே பெரிய அளவுக்கு வந்தபிறகும் சரி... சதாசிவத்தின் ருசிதான் பேசும்!

இந்த ருசிக்கு அடிமையாகி பலரும் நிரந்தர வாடிக்கையாளர்களாக ஆண்டுக்கணக்கில் அங்கு சாப்பிட வருகிறார்கள். இப்போது ப்ளஸ் டூ பரீட்சை எழுதியிருக்கும் தன் மகன் கதிர்வேலையும் தொழில் பழகிக்கொள்ள, தினமும் ஓட்டலுக்கு அழைத்து வருகிறார் சதாசிவம்.

ஓட்டலின் ரெகுலர் கஸ்டமர்களில் ஒருவரான குமாரசாமி, அன்று கிட்டத்தட்ட கடை மூடும் நேரத்துக்கு வந்தார்.

‘‘நீங்க மட்டும் வந்திருக்கீங்க... உங்க நண்பர்கள் வரலையா..?’’ என்றபடி,
குமாரசாமிக்குப் பிடித்த ஆனியன் ரவா தோசைக்கு ஆர்டர் சொன்னார் சதாசிவம்.

‘‘பார்சல் வேணும்... ஆனால், ஒரு சின்ன சிக்கல்! கிளம்புற அவசரத்துல சட்டையை மாத்திப் போட்டுட்டு வந்துட்டேன். பணம் இல்லை. குறிச்சு வெச்சுக்கோங்க... நாளைக்குத் தர்றேன்’’ என்று குமாரசாமி தயக்கமான குரலில் சொல்ல...

‘‘அடடா... நம்ம கடையிலேதான் கடன் கொடுக்கறதில்லையே! நீங்க இத்தனை நாளா வந்து போறீங்க... உங்களுக்கு என்ன கடன், கணக்கு எல்லாம்! ஆனியன் ரவா தோசை வீட்ல சாப்பிட்டதா நினைச்சுக்கங்க... இந்த தோசையை நான் ஃப்ரீயாவே தர்றேன்’’ என்று பார்சலைக் கையில் திணித்து அனுப்பிவைத்தார்.

இதைப் பார்த்த கதிர்வேலுக்கு கோபமான கோபம். ‘‘என்னப்பா நீங்க...? 20 ரூபா பில்லை இப்படி ஃப்ரீயா விட்டுட்டீங்க... அவருதான் நாளைக்குக் காசு தர்றேன்றார். ஆனா, நீங்க சாதாரணமாக தூக்கிக் கொடுத்துட்டீங்களே!’’ என்றான்.

‘‘நிஜம்தான் கதிரு... ஆனால், இந்த அக்கவுன்ட் இன்றோடு நிற்காது. ஒரு நோட்டு போட்டு எழுதற அளவுக்கு வளரும். அதேமாதிரி, அவரோடும் நிற்காமல் அவர் நண்பர்களுக்கும் பரவும். இதிலே யாராவது மொத்தமா கணக்கை ஏத்தி வெச்சுட்டு கடைக்கு வராமப் போயிட்டா, காசு நஷ்டம் ஒரு பக்கம்.. ஒரு கஸ்டமரை இழந்தது இன்னொரு பக்கம்! அதனால்தான் ஆரம்பத்திலேயே இல்லைனு சொல்லிட்டேன். நம்ம கடை சுவைக்கும் சுத்தத்துக்கும் கூட்டம் வந்துகிட்டுத்தான் இருக்கும். அதனால், கோவிச்சுக்கிட்டு போயிடுவாங்கனு பயப்பட வேண்டாம்’’ என்றார் சதாசிவம்.

கதிர்வேலுக்கு அன்று ஒரு பாடம் கிடைத்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism