Published:Updated:

வங்கி கடனில் சேமிப்பு லாபம்!

வங்கி கடனில் சேமிப்பு லாபம்!

வங்கி கடனில் சேமிப்பு லாபம்!

வங்கி கடனில் சேமிப்பு லாபம்!

Published:Updated:
சேமிப்பு
வங்கி கடனில் சேமிப்பு லாபம்!
 

வங்கிக் கடனில் சேமிப்பு லாபம்!

கொ ஞ்சம் சரி... கொஞ்சம் தவறு. எது..? கடன் வாங்குவது! கடன் வாங்கி, எதை வாங்கப் போகிறோம் என்பதில் இருக்கிறது விஷயம். முதலீடுகளுக்குக் கடன் வாங்கலாம். கடன் வாங்கினால் அதற்குக் கொடுக்கும் வட்டியைவிட அதிகமாகச் சம்பாதிக்க முடிகிறதா, அதற்குக் கடன் வாங்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வங்கி கடனில் சேமிப்பு லாபம்!

முதலீடு என்பது நிச்சயமற்ற வியாபார வாய்ப்புகளுக்கு அல்ல... நிச்சயமான வருமானம் தரும் வீடு.

கையில் காசிருந்தால் என்ன ஆகும்? செலவாகும். ஆனது ராமுவுக்கும்! நல்ல நிறுவனத்தில் வேலை. கைநிறையச் சம்பளம். நண்பர்கள் வந்துவிடுவார்கள். பைக், ஓட்டல், சினிமாதான். வளர்ந்துவிட்ட பிள்ளை... என்ன சொல்வது? பெற்றோர் சொல்ல, வழியின்றி தவித்துக் கொண்டிருந்தார்கள்.

ஒருநாள் சித்தப்பா வந்தார். கேஷ§வலாக பேசிக் கொண்டிருக்கும்போது, ‘‘என்ன ராமு... வேலை எப்படி இருக்கு? கையில் என்ன வரும்?’’ என்றார். சிரித்தான் ராமு.

‘‘ஆம்பளைகிட்டே சம்பளத்தைக் கேட்காதேனு சொல்வாங்க... அதெல்லாம் மற்றவர்களுக்கு... உன்கிட்டே தாராளமாகக் கேட்கலாம்’’ என்று பதிலுக்கு சிரித்துக் கொண்டே கேள்விக்கு பதில் வாங்குவதில் ஆர்வம் காட்டின சித்தப்பாவைத் தட்டிக் கழிக்க முடியவில்லை ராமுவால்.

‘‘இருபதாயிரத்து சொச்சம் வரும்’’ என்ற ராமு, அடுத்து, ‘என்ன செலவழிக்கிறே?’ என்று சித்தப்பா கேட்பார் என்ற எண்ணத்துடன் அவருடைய வாய் பார்த்துத் தயாரானான்.

சித்தப்பாவோ, ‘‘என்ன சேர்த்து வெச்சிருக்கே..?’’ என்றார். ராமு இந்தக் கேள்வியை எதிர்பார்க்க வில்லை. அமைதியாகக் கிளம்பிப் போய்விட்டான். அப்பாவும் சித்தப்பாவும் பேசிக்கொண்டி ருந்தார்கள்.

மாலையில் ராமு வீட்டுக்கு வந்தான். சாப்பிட்ட பின் குடும்ப சட்டசபை மொட்டை மாடியில் கூடியது. ‘‘சாலிகிராமத்தில் ஒரு ஃப்ளாட் நல்ல விலைக்கு வருது’’ என்று ஆரம்பித்தார் சித்தப்பா. ‘‘இந்த வீட்டுக்கு என்ன குறைச்சல்... அப்பா, இன்னொரு வீடு பார்க்கிறீங்களா?’’ என்றான் ராமு அப்பாவியாக.

வங்கி கடனில் சேமிப்பு லாபம்!

‘‘அந்த வீடு உனக்குத்தான் ராமு!’’ என்றார் சித்தப்பா.

‘‘எனக்கா?’’ என்றான் ராமு ஆச்சர்யத்துடன்.

‘‘ஆமாம்... உனக்கேதான். வருஷத்துக்கு எவ்வளவு இன்கம் டேக்ஸ் கட்டுறே..?’’ என்று அடுத்த கேள்விக்குத் தாவினார்.

‘‘ஆமாம்... நல்ல சம்பளம் வாங்குறான். ஆனால், மார்ச் மாதமானால் கையில் பைசா இல்லாமல், செலவுக்குக் காசு கேட்டு என்னிடம் வந்து நிற்பான். கேட்டால், எல்லாத்தையும் டேக்ஸ்ல பிடிச்சிட்டாங்கனு சொல்வான்’’ என்றபடி அம்மாவும் சபையில் கலந்துகொண்டார்.

‘‘அந்த டேக்ஸில் இருந்து தப்பிக்கத்தான் நான் ஐடியா சொல்றேன். வங்கியில் கடன் வாங்கி தவணை முறையில் ஒரு புது ஃப்ளாட்டை வாங்கிடு. இன்னிக்கு தேதியிலே, வருஷத்துக்கு ஒன்றரை லட்சம் வரை நீ வீட்டுக்கடனுக்காக கட்ற வட்டி பணத்துக்கு வரி கிடையாது. கணக்குப் போட்டுப் பாரு. கிட்டத்தட்ட ஒருபக்கம் வரி மிச்சம் ஆகறதும் ஒரு வகையிலே சேமிப்பு மாதிரிதான். அதைத் தனியா எடுத்து வெச்சா அது ஒருபக்கம் சேர்ந்துகிட்டே வரும். நாளைக்கே நீ ஒரு வாடகை வீடு பிடிச்சு தனிக்குடித்தனம் போறேனு வெச்சுக்க, அந்த வாடகை லாபமும் உனக்கு தனி வருமானம்...’’

‘‘என்ன சொல்ல வர்றீங்க சித்தப்பா!’’ என்றான் ராமு, தன்னை எங்கோ சிக்க வைப்ப தற்காக பொறி வைப்பதாக நினைத்துக்கொண்டு!

இப்போது அப்பா பேச ஆரம்பித்தார். ‘‘அதுமட்டும் இல்லடா... சித்தப்பா சொல்ற ஃப்ளாட் இப்போ சதுர அடி 1,500 ரூபாய்க்குப் போகுது. வாங்கிப் போட்டால், இன்னும் பதினஞ்சு வருஷத்தில் அதோட விலை கிடுகிடுனு ஏறி, எங்கோ போய்டும். வட்டியா வங்கிக்கு கட்டற பணம் கிட்டத்தட்ட வீட்டு மதிப்பிலே ஏறி இருக்கும். சொல்லப் போனா, நீ கட்டறதைவிட, நிச்சயமா கூடுதலாதான் இருக்கும். அதுவும் உனக்கு லாபம்தானே!’’ என்றார்.

‘‘அதெப்படி..? என் ஃப்ரெண்ட் வீட்டு லோன் வாங்கினார். வாங்கின கடனைப் போல, இரண்டரை மடங்கு தொகை கட்ட வேண்டி இருக்கிறதா சொன்னார். அப்படி வட்டிக்கு கடன் வாங்கி வீடு வாங்கறது அவசியமா?’’ என்றான் ராமு. அவனுக்குத் தப்பித்தால் போதுமென்று இருந்தது.

ஆனால், சித்தப்பா விடுவதாக இல்லை. ‘‘கரெக்ட்... வட்டி கட்டுவே! ஆனால், எத்தனை சதவிகிதம் கட்டுறே? இப்ப வீட்டுக் கடனுக்கு சுமாரா ஒன்பது சதவிகிதம்தான் வட்டி வருது. ஆனால், வீட்டின் விலை அதைவிட வேகத்துல ஏறுமே?’’ என்றவர், ‘‘உன் சம்பளத்திலே இருந்து மாசம் ஐந்தாயிரம் கட்ற மாதிரி கடன் எடுத்துக்க... அது கடன் இல்லே! உன் எதிர்காலத்துக்கான சேமிப்பு!’’ என்று சித்தப்பா சொல்ல, ராமு கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தான்.

வங்கி கடனில் சேமிப்பு லாபம்!

‘‘டேய் ராமு, உன் சம்பளம் அடுத்தடுத்து ஏறுமா, ஏறாதா..? அப்படி ஏறும்போது, இந்த இ.எம்.ஐ ஏறப்போவதில்லை. அப்போது உனக்குச் செலவழிக்க நிறையப் பணம் கிடைக்கும். கவலைப்படாதே... கல்யாணம் பண்ணிட் டால், ‘என்ன சேர்த்து வெச்சிருக்கே..?’னு வருபவள் கேட்பாளே, என்ன பதில் சொல்வே?’’ என்றார் சித்தப்பா.

சட்டென சொன்னான் ராமு. ‘‘சரி, சித்தப்பா... வர்ற சண்டே ஃப்ளாட்டைப் பார்க்கலாம்.’’

ராமுவுக்கு மூளைச் சலவை செய்ய சித்தப்பா தேவைப்பட்டார். வீட்டுக் கடனை வாங்க வைத்தார். உங்களுக்கு அப்படி யாராவது தேவையா என்ன?

வாங்கும் சம்பளத்தில் முதல் செலவு சேமிப்பாக இருக்கவேண்டும் என்பது பொதுவாக எல்லோரும் சொல்வது. அந்தச் சேமிப்பு வீட்டுக்கடன் போல நீண்டகால பிணைப்பாக, பயனுள் ளதாக இருக்கவேண்டும். சுகமான சுமையாக, விரும்பிப் போட்டுக் கொண்ட விலங்காக இருக்கவேண்டும்.

நாளைக்கு நமக்கு நாலுமடங்காகத் திரும்ப வரப்போகிற சேமிப்புதானே. கொஞ்சம் சிரமப்பட்டாவது சேமியுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism