Published:Updated:

மாத பட்ஜெட்டுக்கு இலவச டிப்ஸ்!

மாத பட்ஜெட்டுக்கு இலவச டிப்ஸ்!

மாத பட்ஜெட்டுக்கு இலவச டிப்ஸ்!

மாத பட்ஜெட்டுக்கு இலவச டிப்ஸ்!

Published:Updated:
சிக்கனம்
மாத பட்ஜெட்டுக்கு இலவச டிப்ஸ்!
 

மாத பட்ஜெட்டுக்கு இலவச டிப்ஸ்!

ரு பாக்கெட்டில் சம்பள கவரும் இன்னொரு பாக்கெட்டில் செலவு பட்டியலுமாகத்தான் இருக்கிறது பலருடைய வாழ்க்கை! ‘பத்தாம் தேதிக்குப் பிறகு கையில் பைசா இருக்காது. திடீரென பெரிய செலவுகள் ஏதும் வந்துவிடுமோ என்ற ‘பக்பக்’ மனதுடனே காலத்தை ஓட்ட வேண்டி இருக்கிறது’ என்று புலம்புபவர்கள் அநேகம் பேர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாத பட்ஜெட்டுக்கு இலவச டிப்ஸ்!

இன்னும் சிலரோ, ‘மார்ச் மாதமானால் சம்பளத் தொகை முழுக்க இன்கம்டேக்ஸ்னு பிடிச்சிடுவாங்க. கையெழுத்தைப் போட்டுட்டு வெறுங்கையோடுதான் வீடு திரும்பணும்’ என்பார்கள். இவர்களுக்கு ஒரே அட்வைஸ், ‘உடனடித் தேவை - சிக்கனம்’ என்பதுதான்.

சிக்கனமாக இருப்பதால் செலவைக் குறைப்பதோடு வேறு பல சலுகைகளையும் பெறமுடியும். அதற்குத் தேவை முறையான திட்டமிடல். சாதாரண மாக பால் வாங்கும்போது தினம் ஒரு பாக்கெட் வாங்குவதைவிட பால் கூப்பன் வாங்கிக்கொண்டால் பணமும் மிச்சமாகும். நமக்கான பால் தனியாக இருக்கும் என்ற உத்தரவாதமும் கிடைக்கும்.

ரயிலுக்கு சீசன் டிக்கெட் எடுத்துவிட்டால், போக்கு வரத்துச் செலவு பாதியாகக் குறையும். இதெல்லாம் மாத பட்ஜெட்டிலேயே சிக்கனமாக இருப்பதால் கிடைக்கும் லாபம் என்றால், இதையே கொஞ்சம் பெரிய அளவில் செய்தால்..? பலவித சிக்கன நடவடிக்கைகளும் முறையான சேமிப்பு களுமாகச் செய்தால் எவ்வளவோ லாபம் கிடைக்குமே!

மாத வருமானத்தில் குடும்பத்தேவை களுக்குப் போக, மீதியைப் பிரித்து என்னென்ன வழிகளில் எல்லாம் சேமிக்கலாம் என்று திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலம் பெருமளவு பணத்தை மிச்சம் பிடிக்கலாம்... அந்தப் பணத்தைப் பெருக்கவும்முடியும்.

‘‘கிட்டத்தட்ட இதேபோன்ற சிந்தனை யோடுதான் நாங்கள் ‘வெல்த் ஸோன்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினோம்’’ என்றார் மகாதேவன்.

மாத வருமானத்தை எப்படியெல்லாம் பிரித்துச் செலவழிக்கமுடியும், எந்தெந்த வழிகளில் சிக்கனப்படுத்த முடியும் என்றெல் லாம் திட்டமிட வழி சொல்லித்தரும் சேவை யை இலவசமாகச் செய்துவருகிறார்கள்.

‘‘ஒருவரது சம்பளத்தில் பிடித்தமெல்லாம் போக, வீட்டுக்கு எடுத்துச் செல்வதில் குடும்பத் தேவைக்காகச் செலவிடும் தொகை, 50%-ஐ தாண்டக்கூடாது. அதுதான், ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்த உதவி செய்யும்.

மாத பட்ஜெட்டுக்கு இலவச டிப்ஸ்!

அவசரகாலத் தேவைகளைச் சமாளிப்பது, சேமிப்பு, முதலீடு, இன்ஷூரன்ஸ், வீடு, பொருட்களின் பாதுகாப்பு, ஓய்வுகால வாழ்க்கை, மருத்துவ காப்பீடு போன்றவை மிகமிக அவசியம். இன்றைய சூழ்நிலையில் எல்லா மனிதர்களும் இந்தப் பாதுகாப்பு வளையத்துக்குள் இருப்பது நல்லது.

வருமானத்தை அதிகரிப்பதற்கு திட்டமிடுவது போலவே, வரும் வருமானத்தைச் சிக்கனமாக செலவழிக்கவும் திட்டமிட வேண்டும். அதிலும், எந்தெந்த வழிகளில் பணத்தைச் சேமித்தால் நல்ல முதலீடாக மாறும் என்பதைச் சொல்ல எங்களிடம் பலதுறை வல்லுநர்கள் இருக்கிறார் கள். அவர்கள் காட்டும் பாதையில் நீங்கள் சிக்கனப்படுத்திய பணத்தைச் சேமிக்கலாம். தேவைகளைப் பட்டியலிட்டு, எப்படிப் பணத்தை ஒதுக்கவேண்டும். எதற்கு எவ்வளவு செலவழிக்க வேண்டும் என்பதுவரை கணக்கிட்டுத் தருவது தான் எங்கள் வேலையே!’’ என்றார்.

மளிகை, அன்றாட தேவை, வீடு பராமரிப்பு, பால், கேஸ், பேப்பர், பொழுதுபோக்கு, மருத்துவ செலவு, ஹோட்டல், பள்ளி, கல்லூரிக்கட்டணம், சுற்றுலா, பொருட்கள் வாங்குவது போன்ற குடும்பச்செலவுகளை ஒரே இனமாகக் காட்டுவோம். இதற்காக ஒருவர் தன் வருமானத்திலிருந்து 50% வரை செலவழிக்கலாம்.

மீதமுள்ள தொகையில் வங்கிச் சேமிப்பு, மியூச்சுவல் ஃபண்ட் திட்டம், பல்வேறு காப்பீட்டுச் செலவுக்காக 20%, எதிர்கால சொத்தாக வீட்டுக்கான கடன் தொகை அல்லது அசையும், அசையா சொத்துக்கள் வாங்க 30% என்றும் பிரிக்கவேண்டும். அப்படிச் செய்தால் வாழ்க்கை பேலன்ஸ் இழக்காமல் செல்லும்’’ என்கிறார் மகாதேவன்.

ஏற்கெனவே பங்குச் சந்தை வர்த்தகத்தில் புரோக்கராக இருக்கும் ‘வெல்த் ஸோன்’, இந்த சிக்கன டிப்ஸை இலவச சேவையாக வழங்கி வருகிறது. மியூச்சுவல் ஃபண்ட், இன்ஷூரன்ஸ் போன்ற சேமிப்பு திட்டங்களுக்கான நிறுவனங்களை அறிமுகப்படுத்துவதன் மூலமாக அந்த நிறுவனங்களிலிருந்து கிடைக்கும் வருமானமே இவர்களுக்கான வாய்ப்பு. ஆனால், இந்தத் திட்டத்தில்தான் சேரவேண்டும் என்று யாரையும் இவர்கள் கட்டாயப்படுத்துவதில்லை.

சிக்கனமாக இருந்து சேமிக்கவும், சேமித்ததை முதலீடு செய்யவும் வழி இருக்கிறது. சிந்தியுங்கள்... சிக்கனமாக இருங்கள்!

மாத பட்ஜெட்டுக்கு இலவச டிப்ஸ்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism