Published:Updated:

கட்டுமானச் செலவைக் குறைக்கணுமா?

கட்டுமானச் செலவைக் குறைக்கணுமா?

கட்டுமானச் செலவைக் குறைக்கணுமா?

கட்டுமானச் செலவைக் குறைக்கணுமா?

Published:Updated:
சிக்கனம்
கட்டுமானச் செலவைக் குறைக்கணுமா?
 

கட்டுமானச் செலவைக் குறைக்கணுமா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கட்டுமானச் செலவைக் குறைக்கணுமா?

கு ருவி சேர்ப்பது போல கொஞ்சம் கொஞ்சமாகக் காசு சேர்த்து... ஆசை ஆசையாக வீடு கட்டப்போகும் நேரத்தில், ஆகாயத்துக்கு உயர்ந்து நிற்கும் கட்டுமானப் பொருட்களின் விலை பயமுறுத்துகிறது. ‘போட்ட பட்ஜெட்டுக்கு இப்ப காம்பவுண்ட் சுவர் மட்டும்தான் கட்டமுடியும் போலிருக்கு!’ என்று விழி பிதுங்கி நிற்கும் நிலை!

‘‘வழக்கமாக வீடு கட்டப் பயன்படுத்தும் மணல், செங்கல், சிமென்ட், இரும்பு கம்பி இவற்றைப் பயன்படுத்தினால்தானே இப்படி எல்லாம் கவலைப்பட வேண்டும். அவற்றைப் பயன்படுத்தாமல் வீடு கட்டுங்க. நான் ரூட் சொல்லித்தருகிறேன்...!’’ என்று வியப்பூட்டுகிறார் வீரப்பன். பொதுப்பணித் துறையில் தலைமைப் பொறியாளராகப் பணிபுரிந்தவர். சுமார் முப்பது வருடங்களுக்கு மேலாக அரசுப்பணியில் இருந்துவிட்டு, தற்போது சென்னையில் ‘ஸ்ட்ரக்ச்சுரல் கன்சல்டன்ட்டாக’ (கட்டுமானப் பணிகள் தொடர்பான ஆலோசகர்) இருக்கிறார். பல்வேறு தனியார் நிறுவனங்களும், பிரபல கட்டுமானப் பொருட்கள் தயாரிக்கும் மெகா நிறுவனங்களும் இவரது ஆலோசனைகளைக் கவனமாகச் செவிமடுத்துக் கேட்கின்றன.

கட்டுமானச் செலவைக் குறைக்கணுமா?

மதுரையில் உள்ள பொதுப்பணித் துறை ஊழியர்களின் பயிற்சி நிறுவன முகாமில் சிறப்புரையாற்ற வந்தவரிடம் கட்டுமானத்துறை சிக்கனம் பற்றிப் பேசினோம்.

‘‘மணல், சிமென்ட், செங்கல், இரும்பு கம்பி இல்லாமல் வீடு கட்ட முடியாது என்று நம் மக்களின் மனதில் பதிந்து விட்டிருக்கிறது. இந்தக் கட்டுமானப் பொருட்கள்தான் வீட்டின் தரம், உறுதியை மட்டுமில்லாமல், பட்ஜெட்டையும் தீர்மானிக்கிறது.

புதிய அல்லது மாற்றுப் பொருட் களை லேட்டஸ்ட் தொழில் நுட்பத்துடன் பயன்படுத்தினால், கட்டுமானத்தில் காசை மிச்சம் பிடித்து கச்சிதமான வீடுகளை உருவாக்கலாம். மணலை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தக்காலத்தில் பெரிய பெரிய கோயில்கள், அரண்மனைகள், எல்லாமே ஆற்றுப் படுகைகள் ஓரமாகத்தான் கட்டியிருக்கிறார்கள். ஏனென்றால், துணை அடித்தளப் பொருளாக அப்போது மணலைத் தவிர வேறு சிறந்த பொருள் இல்லை. ஆனால், முழுக்க முழுக்க மணலைப் பயன்படுத்திக் கட்டடங்கள் கட்டுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், தனித்தனி துகள்களாக இருக்கும் மணலின் பைண்டிங் பவர் பலவீனமானது. அதோடு, மழைக்காலத்தில் அதிகபட்ச ஈரத்தை உறிஞ்சுவதும், கோடையில் நீர் அனைத்தையும் வெளியேற்றி விடுவதுமான தன்மை கொண்டது! இதனால் ஏற்படுகிற ‘சுருக்கம் - விரிவு’ காரணமாக வீட்டின் தரைப்பகுதியும், சுவர்ப்பகுதியும் சேரும் இடங்களில் விரிசல் உண்டாகும்.

அதுபோக, மணலுக்கு நாளுக்கு நாள் டிமாண்ட் அதிகமாகிக்கொண்டே போவதால், விலையும் உயர்ந்துகொண்டே போகிறது. 100% மணலை பயன் படுத்துவதற்குப் பதிலாக மணல், செஞ்சரளை மணல் (க்ராவல்) கலவையை 1:3 என்ற விகிதத்தில் கலந்து பயன்படுத்தலாம். மணலே இல்லாமல், கருங்கல் ஜல்லி உடைக்கும்போது கிடைக்கும் தூளையும், செஞ்சரளை மணல் கலவையை யும்கூட, அதே விகிதத்தில் பயன்படுத்தலாம். இந்தக் கலவையில் கட்டடத்தின் உறுதி பன்மடங்கு கூடும். அதோடு, மணலை பயன்படுத்து வதால் ஏற்படுகிற செலவை 40% வரை குறைக்கலாம். இது நிரூபிக்கப்பட்டிருக்கிறது’’ என்று ஆச்சர்யப்படுத்தி யவர், செங்கல் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

‘‘குடிசைத்தொழிலாகத் தயாரிக்கப்படுகிற செங்கற்களின் தாங்குதிறன் சீராக இருக்காது. அதிகமான தண்ணீரை உறிஞ்சும். ஒரு லோடு செங்கல் வாங்கினால் நிச்சயமாக 20% வரை சேதாரமாகும். ஆனால், ஃப்ளை ஆஷ் பிளாக்ஸ்கள்( fly ash blocks ), சாதாரண செங்கற்களைவிட இரண்டு, மூன்று மடங்கு தாங்குதிறன் கொண்டதாக இருக்கிறது. தங்க பிஸ்கட் மாதிரி ஆறுபக்கமும் ஒரே சீராக இருப்பதால், இவை அதிகபட்ச அடர்த்தி, எடையுடன் இருப்பதோடு, குறைந்தபட்ச ஈரத்தை உறிஞ்சும் திறன் கொண்டதாகவும் இருக்கிறது. பொதுவாக, சேதாரமே கிடையாது. செங்கல்லைவிட, இவை குறைவான விலையிலேயே கிடைக்கிறது. முக்கியமாக, ப்ளை ஆஷ் கற்கள் எங்கு தயாரானாலும் ஒரே தரத்தில்தான் இருக்கும்.’’ என்றார்.

அடுத்து வீரப்பன் தொட்ட சப்ஜெக்ட் \ இரும்புக் கம்பிகள்...

‘‘ஒரு கட்டடத்தின் எலும்புகள்போல உழைப்பது இரும்புக்கம்பிகள்தான். அதைச் சரியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். சி.டி.டி ( CTD ) என்று சொல் லப்படும் குளிர் முறுக்குக் கம்பிகளை விட, டி.எம்.டி (TMT ) என்று சொல்லப்படும் எஃகு உறுதியூட்டிகள் தரமானவை. அதோடு, இந்தக் கம்பிகளை பயன்படுத்தினல் சி.டி.டி கம்பிகளைவிட 18% குறைவான மூலப்பொருள்தான் தேவைப்படும். டி.எம்.டி கம்பிகளின் விலை சற்றே அதிகமாக இருந்தாலும் அதனால் ஏற்படுகிற 18% சேமிப்பு, உறுதியான உழைப்பு முதலியவற்றைப் பார்த்தால் லாபம்தான்! கான்கிரீட் கட்டுமானங் களில்தான் இந்த டி.எம்.டி கம்பிகளின் தேவை அதிகமாக இருக்கும்!’’ என்றவர், சிமெண்ட்டுக்கு வந்தார்.

கட்டுமானச் செலவைக் குறைக்கணுமா?

‘‘53 கிரேட் ஓ.பி.சி எனப்படும் சாதாரண போர்ட்லேண்ட் சிமென்ட் தான் பலமானது என்ற பரவலாக எல்லோரும் உபயோகப்படுத்துகிறார்கள். ஆனால், இந்த சிமென்ட்டிலும் பல குறைபாடுகள் உள்ளன. இப்போது மார்க்கெட்டில் எல்லா பெரிய சிமென்ட் கம்பெனிகளும் அறிமுகப்படுத்தியிருக்கும் காம்போஸிட் அல்லது ப்ளெண்டட் சிமென்ட்டைப் பயன்படுத்தினால், கட்டடங்களின் உறுதி பன்மடங்கு கூடும். விலையும் சாதாரண சிமென்ட்டைவிடக் குறைவாகவே கிடைக்கிறது’’ என்ற வீரப்பன், மரங்களைப் பற்றியும் சொன்னார்.

‘‘பொதுவாகக் கதவுகளுக்கு மரம் அல்லது பி.வி.சி\யைத்தான் பயன்படுத்துவோம். மரத்துக்கு பராமரிப்பு செலவு அதிகம்! பி.வி.சி-யின் ஆயுள் குறைவு! இப்போது நவீனமுறையில மரத்தைச் சுற்றி எல்லா பக்கங்களிலும் FRP என்ற ஒரு வகையான பிளாஸ்டிக்கால் மோல்டிங் செய்துவிட்டால், கதவுகளின் ஆயுள் நூறு வருஷத்துக்கு குறையாது. பராமரிப்பு செலவும் மிகக் குறைவு. அதோடு, சில நவீனவகை ரசாயனங்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தினால் கட்டுமானச் செலவும், காலமும் நிறையவே மிச்சமாகும். கட்டடங்களின் உறுதியும், தரமும் தலை முறை தலைமுறையாக நீடிக்கும்!’’ என்று முடித்தார்.

எளிமையான, செலவைச் சிக்கனம் பிடிக்கும் இதுபோன்ற வழிமுறைகளைக் கடைபிடித்து வீட்டைக் கட்டுங்கள். பணத்தை மிச்சம் பிடியுங்கள்!

கட்டுமானச் செலவைக் குறைக்கணுமா?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism