Published:Updated:

இன்ஷூரன்ஸ் என் சேவகன்!

இன்ஷூரன்ஸ் என் சேவகன்!

இன்ஷூரன்ஸ் என் சேவகன்!

இன்ஷூரன்ஸ் என் சேவகன்!

Published:Updated:
பாதுகாப்பு
இன்ஷூரன்ஸ் என் சேவகன்!
 

இன்ஷூரன்ஸ் என் சேவகன்!

ஓர் அறிமுகம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்ஷூரன்ஸ் என் சேவகன்!

நி யூ இண்டியா அஷ்யூரன்ஸ் நிறுவன அதிகாரியாக இந்தத் துறையில் நுழைந்த க.நித்ய கல்யாணி, ‘இக்கனாமிக் டைம்ஸ்’, ‘தி ஹிண்டு பிஸினஸ் லைன்’, ‘பிஸினஸ் டுடே’ போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியவர். கடந்த 15 ஆண்டுகளாக இன்ஷூரன்ஸ் பற்றி பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

இன்ஷூரன்ஸ் துறையை மேற்பார்வையிட நிறுவப்பட்ட ஐ.ஆர்.டி.ஏ சார்பாக வெளியாகும் ‘ஐ.ஆர்.டி.ஏ ஜர்னல்’ என்ற மாதப் பத்திரிகையை நிறுவி, மூன்று ஆண்டுகள் அதன் ஆசிரியராக இருந்தவர்.

‘இண்டியா இன்ஷூரன்ஸ் ஜர்னல்’ என்ற இணைய தளத்தையும், ‘பிரீமியம்’ என்ற மாதப் பத்திரிகையையும் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்களுக்காகத் தொடங்கும் திட்டத்தில் இருப்பவர்.

இன்ஷூரன்ஸ் பற்றி
இதுவரை நீங்கள் அறிந்திராத புதிய தகவல் பெட்டகம்!

இன்ஷூரன்ஸ் என் சேவகன்!

கு ருமூர்த்தி தனியார் துறை நிறுவனம் ஒன்றில் நல்ல வேலையில் இருக்கிறார். அழகான மனைவி, குழந்தைகள் என்று அளவான குடும்பம். திட்டமிட்ட வாழ்க்கை வாழும் குருமூர்த்தி, தன்னுடைய வருமானத்தை வங்கிச் சேமிப்பு, பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், பல்வேறு பாண்ட்கள் என்று பல வழிகளில் தெளிவாகச் சேமித்து வருகிறார்.

‘‘எல்லாமே எதிர்காலத் தேவைகளை மனதில் வைத்துத்தான் சேமிக்கிறேன். எனக்கும் என் குழந்தைகளுக்கும் எந்தக் கவலையும் இல்லை’’ என்று பார்ப்பவர் களிடம் எல்லாம் சொல்லிச் சொல்லி மகிழ்வார்.

குடும்பமே உற்சாகமாகக் கிளம்பி, டூர் போன இடத்தில் கார் விபத்துக்குள்ளாக, எல்லோருக்கும் பலத்த காயம்!

ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்ட போது, முதலுதவி செய்த டாக்டர் கேட்டார். ‘‘மிஸ்டர் குருமூர்த்தி... நீங்கள் இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கும் கம்பெனி எது..? அவர்களுக்குத் தகவல் அனுப்பினால், உங்கள் மருத்துவச் செலவுகளை அவர்கள் பார்த்துக் கொள்வார்களே... சொல்லுங்கள்’’

குருமூர்த்திக்கு ஆக்ஸிடென்டை விடக் கடும் அதிர்ச்சி... அவர் இன்ஷூரன்ஸ் எதுவுமே எடுக்கவில்லை. ‘நல்ல ஆரோக் கியத்துடன் இருக்கிறோமே... நமக்கு எதற்கு இன்ஷூரன்ஸ்?’ என்று இத்தனை நாள் இருந்துவிட்டார்.

பன்னீர்செல்வம் தஞ்சாவூர் மாவட்டத் தில் பழுத்த விவசாயி. ஏக்கர் கணக்கில் நெல் பயிரிடுபவர். முழுநேரத் தொழிலாகவே இதைச் செய்து வருபவர்.

‘இந்த வாழ்க்கை நிலையானதில்லை’ என்று தத்துவார்த்தமாகப் பேசும் பன்னீர் செல்வம், தனக்கு ஆயுள் இன்ஷூரன்ஸ், மெடிக்கல் இன்ஷூரன்ஸ் எல்லாம் எடுத் திருந்தார்.

அந்த வருடத்தில் மழையும் பொய்த்து, காவிரியும் கைகொடுக்காமல் போய்விட, தஞ்சையே வறண்டு போய்விட்டது.

லட்சக்கணக்கில் பணத்தைப் போட்டு விதைத்து, உரமிட்டு, மருந்து அடித்து நெல்லுக்காக செலவிட்ட பணமெல்லாம் கைவிட்டுப் போன துயரத்தில் இருந்த பன்னீர்செல்வத்திடம் அவருடைய நண்பர் கேட்டார்.

‘‘என்ன பன்னீர்... நீதான் விவரமான ஆளாச்சே... பயிருக்கு இன்ஷூரன்ஸ் போட்டிருக்கியா?’’

‘என்னது... பயிருக்கு இன்ஷூரன்ஸா..? மனுஷனுக்குதான் இன்ஷூரன்ஸ் உண்டுனு நினைச்சுக்கிட்டு சும்மா இருந்துட்டேனே..!’’ என்றார் பன்னீர்செல்வம் பரிதாபமாக.

உமா மகேஸ்வரி, ஒரு குடும்பத் தலைவி... வீட்டில் ஓய்வாக உட்கார்ந்திருந்த நேரத்தில் காலிங்பெல் ஒலித்தது. வாசலில் ஒரு சர்வே பிரதிநிதி நின்று கொண்டிருந்தார்.

‘‘மேடம், உங்க வீட்டில் எத்தனை பேர்?’’

‘‘நான், என் வீட்டுக்காரர், ரெண்டு குழந்தைகள்...’’

‘‘யார் பேரில் எல்லாம் இன்ஷூரன்ஸ் எடுத்திருக் கிறீர்கள்?’’

‘‘எங்க வீட்டிலே சம்பாதிக்கிற ஆள் எங்க வீட்டுக்காரர்தான்... அதனால், வரி சேமிப்புக்காக அவர் பேரில் இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கார்.’’

‘‘அப்ப உங்களுக்கு?’’

‘‘எனக்கு எதுக்குங்க இன்ஷூரன்ஸ் செலவு எல்லாம்?’’

‘‘உங்களுக்கு ஒரு பாதிப்பு வந்தால், அது இந்தக் குடும்பத்துக்கு இழப்பு இல்லையா..?’’

‘‘அடடே, ஆமாம்... இதை ஏன் நான் யோசிக்கவே இல்லை?’’

குருமூர்த்தியைப் போல, பன்னீர்செல்வத்தைப் போல, உமா மகேஸ்வரியைப் போல இன்ஷூரன்ஸ் பற்றிய அறியாமையில் இருப்பவர்கள் சிலர்... அறிந்தும் அதைப் பயன்படுத்திக் கொள்ளாதவர்கள் பலர்.

இந்தியாவின் மக்கள் தொகை 105 கோடிக்கு மேல்! ஆனால், இன்ஷூரன்ஸ் பாலிசி வைத்திருப்பவர்கள் சுமாராக 14 கோடிதான்!

ஒப்பிட்டுப் பார்த்தால் பத்தாண்டுகளுக்கு முந்தைய நிலையைவிட, இப்போது பாதுகாப்பு பற்றிய விழிப்பு உணர்வு இந்தியர்களிடம் நன்றாகவே வளர்ந்திருக்கிறது. அது மேலும் வளரவேண்டும்... பாதுகாப்பு பற்றிய எண்ணம் பெருகவேண்டும்.

தினசரி சாலையில் போகும்போது கவனிக்க முடிகிறது. நாளுக்கு நாள் டூ-வீலர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வரும் அதேநேரம், அந்த டூ-வீலர் ஓட்டிகளைப் பார்க்கும்போது கவலையாக இருக்கும். வேகக்காற்றில் முடி படபடக்க அவர்கள் செல்லும் போது மனசு படபடக்கும்.

இன்ஷூரன்ஸ் என் சேவகன்!

ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து மோட்டார் சைக்கிள் வாங்குகிறார்கள். ஆனால், ‘கூடுதலாக ஆயிரம் ரூபாய் செலவழித்து, ஹெல்மெட் வாங்கி மாட்டிக்கொள்ள வேண்டும்... தங்கள் உயிருக்குப் பாதுகாப்புத் தேடவேண்டும்’ என்று அவர்களுக்குத் தோன்றாமல் இருக்கிறதே! நெருக்கடியான நகரத்து வாழ்க்கையை அனுசரித்து, அதன் போக்கில் வண்டி ஓட்டிவிடுவோம் என்ற நம்பிக்கை நம்மை காப்பாற்றாது. ஒரு விபத்தென்றால் நம் தலையைக் காப்பது, கவசம்தான்!

அதுபோலதான் இன்ஷூரன்ஸும். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நம் முன்னேற்றம் பற்றிய சிந்தனையுடனே பயணிக்கிற நாம், எதிர்கால அக்கறையுடனும் இருக்கவேண்டியது அவசியம்.

இன்ஷூரன்ஸ் என்பது வெறுமனே தனிமனித பாதுகாப்பு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல... குடும்பக் காவலன். ஆபத்துகால நண்பன். பாலிசியாகக் கட்டக் கூடிய சிறு தொகையில் ஆண்டு முழுக்க நம் கூடவே இருந்து கண்ணுக்குத் தெரியாமல் நமக்கான பாதுகாப்பைத் தரும் அற்புதமான சேவகன்.

நம் பாதுகாப்புக்காக அணுஅணுவாக ஆராய்ந்து, வெவ்வேறு காலகட்டங்களில் தேவைப்படும் மாற்றங்கள் செய்து, கவனமாகச் செதுக்கி, தங்கள் எஜமானர்களுக்கு எங்கெல்லாம் பிரச்னைகள் இருக்கிறது என்று கவனித்து அதற்கெல்லாம் தீர்வுகள் தரும் தனித்தனி திட்டங்களைத் தந்து... என்று உழைப்புக்கு அஞ்சாத அன்பான ஜீபூம்பா பூதமாக நிற்கிறான் இன்ஷூரன்ஸ் என்னும் சேவகன்.

எப்போதும் எந்த நிமிடத்திலும் நம்மைக் காக்க என்றே அவதாரம் எடுத்த அந்தச் சேவகனின் கரங்கள் நீண்டு கொண்டே போகிறது. பழுத்த வேர்களும் விழுதுகளுமாக கிளைபரப்பி நிற்கிற அந்த ஆலமர சேவகனின் நிழலில் இளைப்பாறியபடியே அவனது ஆரம்பம் அறிவோம்!

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே நடைமுறைக்கு வந்துவிட்ட இன்ஷூரன்ஸின் இளமைக்காலம், ஓர் ஆச்சர்யம்.

வாலிப வயதில் அதன் வளர்ச்சி, உற்சாகம்.

மத்திய வயதில் மளமளவென உலகம் முழுக்க அது தன் கரங்களை நீட்டி உலகின் சேவகனாக மாறியது மிரட்டலான பிரமாண்டம்!

அவற்றை எல்லாம் ஆற, அமரப் பார்ப்போம்!

ஐ.ஆர்.டி.ஏ வந்தது எப்படி?

துதான் இன்ஷூரன்ஸ் துறையின் கடிவாளம்..! ‘இன்ஷூரன்ஸ் துறையில் தனியார் பங்கெடுத்துக் கொள்ளலாம்’ என்று 99\ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம் அனுமதி அளித்தது. கூடவே, தனியார் நிறுவனங்களைக் கண்காணிக்க வழி செய்யும் வகையில், ‘காப்பீட்டு ஒழுங்கு மற்றும் வளர்ச்சி ஆணையம்’ - Insurance Regulatory and Development Authority (IRDA) என்ற அமைப்பையும் ஏற்படுத்தியது. இந்த அமைப்பு இன்ஷூரன்ஸ் நிறுவனங்களைக் கண்காணித்து மேற்பார்வை செய்யும் என்ற பொறுப்பையும் கொடுத்தது. அதன்படிதான் 2000\ம் ஆண்டு முதல் புதிய இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் எந்தெந்த வரையறைகளுக்கு உட்பட்டு ஆரம்பிக்கப்பட வேண்டும்... அவை எந்த சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செயல்படவேண்டும் என்பது போன்ற விஷயங்களைத் தீர்மானிக்கத் தொடங்கியது.

புதிய இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் வரவால் இன்ஷூரன்ஸ் துறையில் வேலைவாய்ப்பு பெருகத் தொடங்கியது.

அங்கே, அங்க காப்பீடு!

ந்த நடிகை கண்களை இன்ஷூர் செய்திருக்கிறார், இந்த ஓட்டப்பந்தய வீரர் தன் கால்களை இன்ஷூர் செய்திருக்கிறார் என்றெல்லாம் அவ்வப்போது செய்திகள் வெளியாகும். அதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியாது. ஆனால், நம்மூரில் இதுபோன்ற இன்ஷூரன்ஸ் பிரபலமாகவில்லை.

சமீபத்தில் வந்த நடனத்தை மையக் கதையாகக் கொண்ட ‘லார்ட் ஆஃப் த டான்ஸ்’ படத்தின் ஹீரோ மைக்கேல் பிளாட்லி தன்னுடைய கால்களை 25 மில்லியன் டாலர்களுக்கு இன்ஷூர் செய்திருந்தார். 40\களிலேயே ஹாலிவுட் நடிகை பெட்டி கிரேபிள் தன்னுடைய கால்களை 1 மில்லியன் டாலருக்கு இன்ஷூர் செய்திருக்கிறார்.

நம்மூரில் சச்சின் டெண்டுல்கர் தன் கைகளுக்கு காப்பீடு செய்திருந்தால், எவ்வளவுக்கு செய்திருப் பார்?!

காப்பீடு-ஒரு கணக்கீடு!

ந்திய ஆயுள் இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் கடந்த ஆண்டில் திரட்டிய புதிய பாலிசிகளுக்கான பிரீமியம் தொகை 35,900 கோடி ரூபாய். முந்தைய ஆண்டுகளில் பாலிசி எடுத்தவர்கள், பாலிசியை புதுப்பிப்பதற்காகக் கட்டிய பிரீமியம், இதுபோல மூன்றரை மடங்கு இருக்கும். ஆக, ஆயுள் இன்ஷூரன்ஸில் மட்டும் சுமாராக 1,08,000 கோடி ரூபாய்க்கும் மேல் பணப்புழக்கம் இருக்கிறது. இதுதவிர வாகனக் காப்பீடு, பொருட்களுக்கான காப்பீடு போன்ற பொதுக்காப்பீட்டில் 21,000 கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருக்கிறது. ஆக, இன்ஷூரன்ஸ் பிரீமியங்கள் மூலம் கிடைத்த வருமானம் என்று பார்த்தால் 1,30,000 கோடி ரூபாயைத் தொடுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism