Published:Updated:

‘‘கிரெடிட் கார்ட்களால் லாபமடைந்தவர் உண்டா?’’

‘‘கிரெடிட் கார்ட்களால் லாபமடைந்தவர் உண்டா?’’

‘‘கிரெடிட் கார்ட்களால் லாபமடைந்தவர் உண்டா?’’

‘‘கிரெடிட் கார்ட்களால் லாபமடைந்தவர் உண்டா?’’

Published:Updated:
கடன்
‘‘கிரெடிட் கார்ட்களால் லாபமடைந்தவர் உண்டா?’’
 

‘‘கிரெடிட் கார்ட்களால் லாபமடைந்தவர் உண்டா?’’

கி ரெடிட் கார்ட் பற்றிய வாசகர்களின் சந்தேகங்களுக்கு இந்த இதழில் பதில் அளிக்கிறார், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் கிரெடிட் கார்ட் பிரிவு தலைவரும், மும்பையிலிருக்கும் பொது மேலாளருமான பி. மதிவாணன்.

‘‘எனது கிரெடிட் கார்ட் அனுமதி காலம் ஓராண்டு முடிந்தபின் அந்தக் கணக்கை முடித்துவிடவேண்டும் என நினைத்தேன். ஆனால், வங்கி எனது கார்டின் கால அவகாசம் முடிந்த தகவலைச் சொல்லாமல் அடுத்த ஆண்டுக் கட்டணத்தை என் கணக்கில் டெபிட் செய்து விட்டார்கள். இது சரியான முறையா..?’’

- த.மகேஷ், விழுப்புரம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘கிரெடிட் கார்ட்களால் லாபமடைந்தவர் உண்டா?’’

‘‘கிரெடிட் கார்ட்களைப் பொறுத்தவரை, ஓராண்டு முடிந்தவுடன், அடுத்த ஆண்டுக்கும் புதுப்பிப்பது குறித்த ஒப்புதல், கார்ட் விண்ணப்பத்தின்போதே பெறப்படுகிறது. விண்ணப்பத்தின் நிபந்தனைகள் மற்றும் நியதிகள் ( Terms - Conditions ) என்பனவற்றில் இது அடங்கி இருக்கிறது. அதனால், ஒவ்வொரு ஆண்டும் இதற்கெனத் தனியாக ஒப்புதல் பெறப்படுவதில்லை. அதேபோல, புதுப்பிக்கும் கட்டணம் குறித்தும் விண்ணப் பத்திலேயே தகவல் உள்ளது. இவற்றில் வாடிக்கையாளர் கையெழுத்திட்ட பின்தான் அவருக்கு கார்ட் வழங்கப் படுகிறது.

எங்களது ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்களிடமிருந்தும் கட்டணம் குறித்த இதுபோன்ற ஏராளமான புகார்கள் வந்தன. இவற்றை பரிசீலித்ததில் இது ஒரு மிகப்பெரிய பிரச்னையாகத் தெரிந்தது. இனி ஐ.சி.ஐ.சி.ஐ கிரெடிட் கார்ட்களுக்கு ஆரம்ப நுழைவுக் கட்டணமோ, ஆண்டு இறுதியில் புதுப்பிக்கும் கட்டணமோ வசூலிப்பதில்லை என முடிவுசெய்து இலவச சேவை வழங்குவது என முடிவு செய்துள்ளோம்.

இது, பயணத் திட்டங்களுக்காக வழங்கப்படும் ஒரு சில சிறப்பு வகை கார்ட்கள் தவிர, மற்ற எல்லாவிதமான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கார்டுகளுக்கும் பொருந்தும்.’’

‘‘ஏ.டி.எம் மெஷின்களுக்கு சர்வீஸ் டேக்ஸ் உண்டு என இந்த பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார்களே! இதனால் கிரெடிட் கார்ட் மூலம் ஏ.டி.எம்-மில் பணம் எடுப்பவர்களுக்கு பாதிப்பு வருமா?’’

- கி.ராமமூர்த்தி, குற்றாலம்.

‘‘பாதிப்பு இருக்கத்தான் செய்யும். ஏ.டி.எம்-களில் கிரெடிட் கார்ட் மூலம் பணம் எடுத்தால், எவ்வளவு பணம் எடுக்கப்படுகிறதோ அந்தத் தொகை மீது சேவைக் கட்டணம் விதிக்கப்படும். அத்துடன், அந்த சேவைக் கட்டணத்தின் மீது 12.24% சேவை வரியும் வசூலிக்கப்படும். இதுதவிர, ஒரு வங்கியின் ஏ.டி.எம்-மில் வேறொரு வங்கியின் கிரெடிட் கார்ட் மூலம் பணம் எடுத்தால், அந்த ‘பணப் பரிமாற்ற’த்துக்கு எவ்வளவு கட்டணம் விதிக்கப்படுகிறதோ, அந்தத் தொகையின் மீது சேவை வரி விதிக்கப்படும். பண பரிமாற்ற கட்டணம் எவ்வளவு என்பதும், சேவைக் கட்டணம் எவ்வளவு என்பதும் வங்கிக்கு வங்கி மாறுபடலாம்.’’

‘‘கிரெடிட் கார்ட் வாங்க ‘குறைந்தபட்ச வருமானம் இவ்வளவு இருக்கவேண்டும்’ என்று லிமிட் உண்டா?’’

- ஆர்.மாதவி, தஞ்சாவூர்.

‘‘உண்டு. மாத சம்பளக்காரர் என்றால் ஆண்டு வருமானம் ரூபாய் 60 ஆயிரமாக இருக்க வேண்டும். சுய தொழில் செய்பவர் என்றால் ஆண்டு வருமானம் 50 ஆயிரமாக இருக்கவேண்டும்.’’

‘‘இன்டர்நெட்டில் கிரெடிட் கார்ட்களைப் பயன்படுத்துவது எந்த அளவு பாதுகாப்பானது?’’

- பி.ரமாமணி, திருநெல்வேலி.

‘‘கிரெடிட் கார்ட்களால் லாபமடைந்தவர் உண்டா?’’

‘‘தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப் பதால், இன்டர்நெட்டில் பொருட்கள் வாங்க கிரெடிட் கார்ட்களைத் தாராளமாகப் பயன்படுத்தலாம். அதில் சில விஷயங்களை உறுதி செய்து கொள்ளுங்கள்.

உங்களது கார்ட் எண், அதன் பயன்பாடு முடிவுறும் நாள் ( Expiry Date ), CMM2 எண் எனப்படும் தனி அடையாள எண் போன்றவற்றை ரகசியமாக வைத்திருங்கள்.

பொருட்கள் வாங்க நினைக்கும் வலைத்தளம் சர்வதேச அளவில் பாதுகாப்பு சான்றிதழ் பெற்றதா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். காரணம், இந்தச் சான்றிதழ் பெற்ற தளங்கள் மூலமாக நீங்கள் அனுப்பும் தகவல்கள் அனைத்தும் சங்கேத மொழியாக மாற்றப்பட்டு பின்னர்தான் பரிமாறப்படுகிறது. இதனால் தகவல் திருடர்கள் உங்களது தகவல்களை அறிவது சாத்தியமில்லை.

இ-மெயில் மூலமோ, மற்ற வகையிலோ உங்களது கிரெடிட் கார்ட் பற்றிய தகவலை யாருக்கும் எந்த சூழலிலும் கொடுக்காதீர்கள்.’’

‘‘கிரெடிட் கார்ட்டில் பொருட்கள் வாங்கிவிட்டு, மாதாமாதம் சம்பளத்தில் பிடித்தம் செய்துகொள்ள சொல்லி ஒப்புதல் தந்தேன். இப்போது எனது கிரெடிட் கார்ட் பயன்பாடு, எல்லை மீறிப் போய்விட்டது. அதனால், முன்பு நானே சொன்னபடி சம்பளத்தில் முழுத்தொகையைப் பிடித்தம் செய்வதை நிறுத்த, யாரை அணுகவேண்டும்?’’

- எஸ்.ரமேஷ், திருவண்ணாமலை.

‘‘இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கிக்கு எழுத்து மூலமான தகவல் தரவேண்டும். அதில் முழுத் தொகையைப் பிடித்தம் செய்யாமல் மாதாமாதம் செலுத்தவேண்டிய குறைந்த பட்ச தொகையை மட்டும் ‘ஆட்டோ டெபிட்’ முறையில் பிடித்தம் செய்து கொள்ளக் கோரலாம்.’’

‘‘நான் வாங்காத பொருட்களை வாங்கியதாக எனது மாதாந்திர கடன் அட்டை பில்லில் இரண்டு தொகைகள் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்து வங்கியுடன் தொடர்புகொண்டு பேசினால் சரியான பதில் இல்லை. விசாரித்ததில், இதைச் சோதித்துப்பார்க்க, வங்கிக்கு நான் தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டுமாம். என்ன செய்வது?’’

- கே.அன்பழகன், சென்னை - 69

‘‘கிரெடிட் கார்ட் மூலம் பொருட்கள் வாங்கியதற்கு ‘சாட்சி’ எனச் சொல்லப்படுவது, கடையில் பொருள் வாங்கும்போது வாடிக்கை யாளரிடம் கையெழுத்துப் பெறுகிறார்களே அந்த சீட்டுதான்! அதன் ஒரு நகல், அப்போதே உங்களிடம் தரப்படும். மற்றொரு நகல் தேவைப்படும்போது, அதை சம்பந்தப்பட்ட கடையில் இருந்து பெற்றுத்தர ஆகும் செலவை வாடிக்கையாளரிடம் இருந்துதான் வசூலிக்கமுடியும். அப்படித்தான் செய்கிறார்கள். ஆனால், அந்த வாடிக்கையாளர் இந்தப் பொருளை வாங்கவில்லை என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி தெளிவாக்கிவிட்டால், வங்கி ‘தவறு நடந்தது எங்கே..?’ என்று விசாரித்து உண்மையை அறிய முயற்சிசெய்யும். விசாரணை முடிவு கார்ட் தாரருக்குச் சாதகமாக அமைந்தால் கட்டணம் விதிக்கப்படாது.’’

‘‘நான் எனது கிரெடிட் கார்ட்க்கான மாதாந்திர கட்டணத்தை அவர்கள் குறிப்பிடும் செக் ட்ராப் பாக்ஸில் போட்டுவிட்டேன். ஆனால், அடுத்த மாதம் வங்கி எனக்கு அனுப்பிய பில்லில், ‘தவணை கட்டவில்லை’ என அபராதம் விதித்திருந்தது. விசாரித்தால், ‘செக் கிடைக்கவில்லை. எங்காவது தவறியிருக்கலாம்’ என்கிறார்கள். செக்கைக் கையாள்வதில் வங்கி செய்த தவறுக்கு நான் ஏன் பொறுப்பேற்க வேண்டும்?’’

- தே.விக்னேஸ்வரன், கோவை.

‘‘செக் ட்ராப் பாக்ஸ்களில் போடப்படும் செக்குகளை எப்படிக் கையாளவேண்டும் என ரிசர்வ் வங்கி சில வரையறைகளைத் தந்திருக்கிறது. அதன்படிதான் நடைமுறைகள் இருக்கும். நிஜமாகவே வாடிக்கையாளர் செக் ட்ராப் பாக்ஸில் செக்கைப் போட்டிருக்கும் பட்சத்தில், இதுகுறித்து வங்கி விசாரணை மேற்கொள்ளும். இதில் வாடிக்கையாளர் மீது தவறில்லை என்பதும் வங்கிதரப்பில்தான் தவறு என்பதும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் உறுதியாகும் பட்சத்தில், அந்த வாடிக்கையாளருக்கு விதிக்கப்பட்ட அபராதம் திரும்பப் பெறப்படும். இது தொடர்பான புகாரை வாடிக்கையாளர் சம்பந்தப்பட்ட வங்கியிடமே பதிவு செய்யலாம். நிவாரணம் கிடைக்கும்.’’

‘‘கிரெடிட் கார்ட்களால் லாபமடைந்தவர்கள் என்று எவராது உண்டா? அதை எப்படிப் பயன்படுத்துவது லாபகரமானது?’’

- திருச்சிற்றம்பலம், சின்னசேலம்.

‘‘இது பயன்படுத்துபவரைப் பொறுத்தது. லாபகரமாக கார்ட்களைப் பயன்படுத்த வழிகள் உள்ளன.

கிரெடிட் கார்ட்கள் குறைந்தபட்சமாக 20 நாட்கள் முதல் அதிகபட்சமாக 52 நாட்கள் வரை வட்டியில்லா கடன் வசதி அளிக்கின்றன. கிரெடிட் கார்ட் மூலம் பெற்ற கடனை முழுத் தொகையாகவோ, குறைந்தபட்ச மாத தவணைகளிலோ திரும்பச் செலுத்தமுடியும். அவசரத் தேவைகளின்போது உடனடியாக கடன் பெறும் வசதி, கிரெடிட் கார்ட் மூலம் சிரமமில்லாமல் கிடைக்கிறது. கையில் பணமாக எடுத்துச்செல்வதன் பாதிப்புகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள சிறந்த வழியாகவும் கிரெடிட் கார்ட்கள் இருக்கின்றன. இவையெல்லாம் கார்ட்களைப் பயன்படுத்துபவர்கள் அடையும் லாபம்தானே!’’

‘‘கண்ட நேரத்திலும் ‘கிரெடிட் கார்ட் வேண்டுமா?’ என்று கேட்டு போன் பண்ணுகிறார்களே... அவர்களுக்கு எப்படி நம் நம்பர் கிடைக்கிறது?’’

- மாணிக்கவேல், பூந்தமல்லி.

‘‘வங்கிகள் தங்களது கார்ட் விற்பனைக்கு உதவ ஏஜென்சிகளை அமர்த்துகிறார்கள். இதில் வேலை செய்யும் ஆட்கள் டெலிபோன் டைரக்டரிகள், யெல்லோ பேஜஸ் போன்ற பல வழிகளில் தொலைபேசி எண்களைப் பெற்று, தங்களது வாடிக்கையாளரைத் தேடுகிறார்கள். இதுபோன்ற அழைப்புகளைப் பெற விரும்பாதவர்கள், வங்கியின் வலைதளத்துக்குச் சென்று அதில் இருக்கும் ‘என்னை அழைக்காதே!’ என்ற பட்டியலில் தங்கள் பெயரைப் பதிவு செய்து வைக்கலாம்.’’

‘‘கிரெடிட் கார்ட்களால் லாபமடைந்தவர் உண்டா?’’
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism