Published:Updated:

ஸ்டூடன்ட் நம்பர் 1

ஸ்டூடன்ட் நம்பர் 1

ஸ்டூடன்ட் நம்பர் 1

ஸ்டூடன்ட் நம்பர் 1

Published:Updated:
வேலை
ஸ்டூடன்ட் நம்பர் 1
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்டூடன்ட் நம்பர் 1

பெயர்: மணிபிரியா.
வயது: 19.
படிப்பு: பி.எஸ்.ஜி கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு.
பகுதி நேர ப்பணி: காபி ஷாப் ஊழியர்.

கோவை, மணிபிரியா பேசுகிறார்...

‘‘ப குதிநேர வேலை செய்பவர்கள் எல்லா சூழ்நிலைக்கும் தங்களை தயார் படுத்திக்கொள்ளமுடியும் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தவள் நான்.

மாதம் சுமாராக நாலாயிரம் ரூபாய்வரை வருமானம் கிடைக்கிறது. இந்த வருமானம் என் குடும்பத்துக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. மற்றவர்களிடம் எப்படிப் பழகவேண்டும், உடன் வேலை செய்பவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், உயரதிகாரிகளிடம் பணிவுடன் எப்படிப் பேசவேண்டும் என்பதை கற்றுக்கொள்ளும் களமாக காபி ஷாப் போன்ற இடங்கள் இருக்கின்றன.

ஆர்வத்தோடும் விருப்பத்தோடும் செய்தால், வேலை ஒரு சுமையாகவே தெரியாது. படிப்பு முடிந்ததும், வேலையில் சிறப்பாகச் செயலாற்ற இந்த அனுபவம் மிகவும் உதவியாக இருக்கும்.

என் கல்லூரி மாலை 3.45-க்கு முடிந்துவிடும். 4.30-லிருந்து இரவு 9 மணிவரை வேலை. பிறகு வீடு திரும்புவேன். அன்றைய தினம் படிக்க வேண்டியதைப் படித்துவிடுவேன். வேலை பார்த்துக்கொண்டே படித்தாலும், படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி 90% மார்க் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

எல்லாவற்றுக்கும் மேலாக பார்ட்டைம் வேலைக்குப் போவது எனக்குத் தன்னம்பிகையையும் தைரியத்தையும் தருகிறது.’’

படம்: ச.டிஸ்னி

ஸ்டூடன்ட் நம்பர் 1

பெயர்: அன்பரசு.
வயது: 19.
படிப்பு: அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில்
........... பி.காம் இரண்டாம் ஆண்டு.
பகுதிநேரப்பணி: தையல் கலைஞர்.

விழுப்புரம், அன்பரசு பேசுகிறார்...

‘‘எ ங்கள் குடும்பத்துக்கு நிலையான வருமானம் கிடையாது. அப்பா செக்யூரிட்டியாக இருப்பதால் குறைவான சம்பளமே கிடைக்கிறது. அதனால், என் படிப்புக்கும் குடும்பத்தின் தேவைகளுக்கும் நானும் சம்பாதித்தால்தான் முடியும் என்ற நிலை. எங்கள் பகுதியில் கட்பீஸ் துணிகளை வெட்டி தலையணை உறை, பாவாடை, பெட்டிகோட் போன்றவற்றைத் தைத்துக் கொடுக்கும் கம்பெனிகள் பல இருக்கின்றன. அதில் ஒரு கம்பெனியில் சேர்ந்து துணிகளைத் தைத்துக் கொடுத்து, மாதம் 3,000 முதல் 3,500 ரூபாய் வரை சம்பாதிக்கிறேன்.

கல்லூரி மதியத்துடன் முடிந்துவிடுவதால், உழைக்கும் நேரத்தை அதிகப்படுத்திக்கொண்டேன். கல்லூரிக்குப் போவதற்கு முன்னால், காலை 8 மணியிலிருந்து 10 மணிவரை தைத்துவிட்டு பிறகு செல்வேன். கல்லூரி முடிந்தவுடன், மீண்டும் வேலைக்கு வந்துவிடுவேன். கவனத்துடன் மனதை ஒருமுகப்படுத்திச் செய்யவேண்டிய வேலை இது என்பதால், என்னுடைய படிப்பிலும் மனதை ஒருமுகப்படுத்த உதவுகிறது. பி.காம் படிப்பு தவிர, இந்தியிலும் பரீட்சைகள் எழுதி முடித்துவிட்டேன்.

படிக்கும்போதே நான் சம்பாதிக்கும் இந்தத் தொகை என் குடும்பத்தைக் காப்பாற்ற பெரிதும் உதவுகிறது என்னும்போது, அதைவிட எனக்கு வேறு என்ன சந்தோஷம் இருக்கிறது..!’’

ஸ்டூடன்ட் நம்பர் 1

பெயர் : ந.புண்ணியமூர்த்தி.
வயது: 21.
படிப்பு: புலவர் பட்டயம் இரண்டாம் ஆண்டு.
பகுதி நேர பணி: புரோட்டா மாஸ்டர்.

தஞ்சை, புண்ணியமூர்த்தி பேசுகிறார்...

‘‘மிடில் கிளாஸ் குடும்பம் எங்களுடையது. கிடைக்கிற கஞ்சியைக் குடிச்சுட்டு காலையிலேயே வயல் வேலைக்குப் போயிட்டு, சாயங்காலம் 6 மணிக்கு வீடு திரும்பற அம்மாவையும் அப்பாவையும் பாக்குறப்ப கஷ்டமா இருக்கும். அவங்களோட கஷ்டத்துக்கு இடையிலே என்னை +2 வரை படிக்க வெச்சாங்க.

தன் ரத்தத்தைப் பிழிஞ்சு படிக்க வைக்கிற பெத்தவங்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்தாகணும்னுதான் 11\ம் வகுப்பு படிக்கும்போதே ஒரு ஓட்டலில் சர்வர் வேலைக்கு வந்தேன்.

வேலை பார்த்துட்டு 50, 100 பணத்தை அம்மா கையில கொண்டுபோய் தரும்போது, அவங்க படற சந்தோஷத்தில் களைப்பெல்லாம் பறந்துடும். இப்போ, காலேஜ் முடிச்சு வந்தபிறகு வேலை பார்க்கிறேன்.

வீட்லேர்ந்து பணம் எதிர்பார்க்காம என் உழைப்புலேயே படிக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. சர்வராக இருந்து புரோட்டா மாஸ்டரா பிரமோஷன் ஆன நான், இப்போ காலேஜ் ஸ்டூடன்டாகவும் பிரமோஷன் ஆகியிருக்கேன். வருமானமும் இப்போ மாசம் 3,000 ரூபாய் வருமானம் வருது. வாழ்க்கையில் எல்லா உயரங்களுக்கும் பிரமோஷன் ஆக இந்த உயர்வு நிச்சயம் நல்ல அடித்தளமாக இருக்கும்.’’

படம்: ஜே.ராஜ்வினோத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism