Published:Updated:

மரம் செய்ய விரும்பு!

மரம் செய்ய விரும்பு!

மரம் செய்ய விரும்பு!

மரம் செய்ய விரும்பு!

Published:Updated:
வேலை
மரம் செய்ய விரும்பு!
 

மரம் செய்ய விரும்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மரம் செய்ய விரும்பு!

யா ராக இருந்தாலும் தினமும் ஒருமுறையாவது கண்ணாடியைப் பார்க்காமல் இருப்பது இல்லை. தன் அழகை ரசிப்பதில் எல்லோருக்குமே ஆர்வம் இருக்கும். கண்ணாடியில் புற அழகைப் பார்க்கலாம்... அக அழகை எப்படிப் பார்ப்பது, ரசிப்பது?

ஒரு மனிதனுடைய குணாதிசயம்தான் அக அழகு... அது சிறப்பாக இருந்தால்தான் எல்லா வகையிலும் வெற்றி பெறமுடியும். பணிபுரிபவராக இருந்தாலும், பலரை வேலை வாங்கும் உயர் பொறுப்பில் இருப்பவராக இருந்தாலும், பெரிய வியாபார நிறுவனத்தை நடத்துபவராக இருந்தாலும் நல்ல குணாதிசயம், அவசியமானது. அதுதான் வெற்றிகளைக் கொண்டுவந்து குவிக்கக்கூடியது. அக அழகை மேம்படுத்திக்கொண்டு வெற்றியைக் கை கொள்வதற்கு வழிகளைச் சொல்கிறார், டி.வி.எஸ் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டுத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற எஸ்.சூரியமூர்த்தி.

மு தலீடு என்பது அனைவருக்கும் தேவையான விஷயம். பணம் மட்டுமல்ல... ஊற்றாகப் பெருகும் அறிவு, சுறுசுறு செயல்திறன், ஆரோக்கிய உடல், அமைதியான மனம் இவையும் வெற்றிக்கான முக்கிய முதலீடுகள்தான். இவற்றை வெளியில் தேடமுடியாது. இவற்றைச் செழிப்பாக்கும் தேடல்களில் கவனம் செலுத்துங்கள். வெற்றி, தானாகவே உங்களைத் தேடிவரும்.

ங்களால் எந்த அளவுக்குச் செயலாற்ற முடியுமோ அதைவிடக் கொஞ்சம் குறைவான வாக்குறுதியைக் கொடுங்கள். கொடுத்ததைவிட அதிகமாக வேலை செய்யும் போது, உங்கள்மீது மரியாதை அதிகமாகும். இவர் நமக்காக எவ்வளவு செய்கிறார் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் போது தகதகவென ஜொலிக்கும் உங்கள் அக அழகு!

ப்போதுமே சும்மா வந்துவிடுவதில்லை வெற்றி! பாலைவனத்தில் புயல் வரும்போது, தலையை மணலுக்குள் புதைத்துக்கொண்டால், புயலையே சந்திக்கத் தேவையில்லை என்று எண்ணுமாம் நெருப்புக்கோழி! ஆனால், அது புயலின் தன்மையை உணரமுடியாமல், சிக்கிக்கொள்ளும் என்பதுதான் உண்மை. பாலைவனப் புயல் போன்றவைதான் அன்றாடம் எழும் பிரச்னைகள். அதைத் தவிர்க்கவோ, தள்ளிப் போடவோ முயற்சி செய்வது, நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகும். எப்போதுமே எந்தப் பிரச்னையாக இருந்தாலும் எதிர்கொள்ளுங்கள். அது எல்லாமே அறிவையும் அனுபவத்தையும் கூர்தீட்டிக் கொள்ளப் பயன்படும் மரங்கள்தான் என்பதை உணருங்கள்!

ழகான, கவர்ச்சியான, பார்த்ததும் பிடித்துப் போகக்கூடிய, விசிட்டிங் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு எங்கேயுமே நல்ல வரவேற்பு கிடைக்கும். ஒரு மனிதனின் வெளித்தோற்றமும், விசிட்டிங் கார்ட் மாதிரிதான்! மிகவும் புத்துணர்ச்சியானவர், எந்தச் செயலையும் எளிதாகச் செய்துமுடிக்கும் திறமை கொண்டவர் என்ற எண்ணத்தை உண்டாக்கும் வகையில் கம்பீரமான, அதேசமயம் கனிவான வெளித்தோற்றத்தோடு வளைய வாருங்கள். உங்களைப் பலரும் விரும்புவார்கள்.

ள்ளுக்குள் என்ன திறமை இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து, அதைத் திறமையாக வெளிப்படுத்து வதிலும் வெற்றிக்கான சூட்சுமம் அடங்கியிருக்கிறது. வெளிப்படாத திறமை வீண்தான். ஆப்ரிக்கா கண்டத்தில் இல்லாத கனிமவளங்களே கிடையாது. ஆனால், அதையெல்லாம் முழுமையாகப் பயன்படுத்தாததால், அங்குள்ள நாடுகளெல்லாம் ஏழ்மையிலேயே இருக்கின்றன. இதுவே, எந்த வளமும் இல்லாத ஸ்விட்சர்லாந்து தன் உழைப்பால் கடிகாரத் தயாரிப்பு, வங்கித்துறை போன்றவற்றில் உலகில் தலைசிறந்து நிற்கிறது. உள்ளுக்குள் இருக்கும் திறமைகளைச் சரி யான சந்தர்ப்பத்தில் முழுதாகப் பயன்படுத்துங்கள்!

ம்பதுபைசா தபால் அட்டையின் பயணத்திலேயே ஓர் இலக்கு இருக்கிறது என்னும்போது, உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் ஓர் இலக்கு இல்லை என்றால் எப்படி..? இலக்குகளை நிர்ணயம் செய்து, பயணிக்கும்போதுதான் வெற்றியின் விலாசம் கிட்டும்.

‘ம ரம்போல வாழ வேண்டும்’ என்று ஒரு சொற்றொடர் உண்டு. அறிவைத் தேடி மரத்தின் வேர்களைப் போல ஊடுருவிப் பரவவேண்டும்; உறுதியான தன்னம்பிக்கையில் மரத்தின் நடுத்தண்டைப்போல நிற்க வேண்டும்; வாய்ப்பு களைத் தேடி கிளைகளைப் போல நீளவேண்டும்; முடிவில் வெற்றிகள் என்னும் கனிகளைத் தரவேண்டும் என்பதுதான் அதற்கு அர்த்தம். நீங்களும் மரம் ஆகுங்கள்! பிரகாசமாக அடையாளம் காணப்படுவீர்கள்.

ங்கள் பயணம் எப்படி இருக்கவேண்டும்? என்பதையும் திட்டமிட்டுக்கொள்ளவேண்டும். அதற்காக, ஒரு வரைபடம்கூட வரைந்து வைத்துக் கொள்ளலாம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்ன சாதிக்க வேண்டும், அடுத்த பத்தாண்டுகளில் என்னவாக இருக்கவேண்டும் என்பதற்கான திட்டம் இருக்கட்டும். அந்தப் பாதையில் சீராகப் பயணித்தாலே வெற்றிக்கோட்டை அடைய முடியும்.

ளர்த்துக் கொள்ளப்பட வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் பேச்சாற்றல்! பேசவேண்டிய இடத்தில் தெளிவாகப் பேசவேண்டும். சொல்ல வந்த கருத்தை எளிமையாகவும், ஆணித்தரமாகவும் சொல்லும் போது, அது மந்திரம் போலவே வலிமை மிக்கதாகிவிடும். இதைக் கற்றுக்கொள்ளும் அதே நேரத்தில், பேசவேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பதால் ஏற்படும் நஷ்டங் களையும், பேசக்கூடாத இடத்தில் பேச்சை வளர்ப்பதால் வரும் விபரீதங்களையும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism