Published:Updated:

வீட்டுக்குள் வந்தாச்சு ஆபீஸ் வேலை!

வீட்டுக்குள் வந்தாச்சு ஆபீஸ் வேலை!

வீட்டுக்குள் வந்தாச்சு ஆபீஸ் வேலை!

வீட்டுக்குள் வந்தாச்சு ஆபீஸ் வேலை!

Published:Updated:
வேலை
வீட்டுக்குள் வந்தாச்சு ஆபீஸ் வேலை!
 

வீட்டுக்குள் வந்தாச்சு ஆபீஸ் வேலை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வீட்டுக்குள் வந்தாச்சு ஆபீஸ் வேலை!

.டி நிறுவனம் ஒன்றில் டெஸ்டிங் இன்ஜினீயராகப் பணிபுரியும் மீனாட்சி, காலை நேர பரபரப்பு எதுவும் இல்லாமல் நிதானமாக இருந்தார். இத்தனைக்கும் அன்றைய தேதியில் அவர் ஓகே செய்து அனுப்ப வேண்டிய பிராஜெக்ட்கள் கை நிறைய இருந்தன.

கணவனுக்குத் தேவையான விஷயங்களைத் தயார்செய்து, அவரை அலுவலகத்துக்கு அனுப்பிவிட்டு, குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி தூங்கவைத்துவிட்டு, வீட்டில் உள்ள கம்ப்யூட்டரை ஆன் செய்தார்... அங்கே ஆரம்பமானது மீனாட்சியின் அலுவலக நேரம்.

‘‘என்னுடைய கம்ப்யூட்டர் மெயில் பாக்ஸ்தான் என் ஆபீஸ். அதில்தான் எனக்கான இன்றைய வேலைகள் இருக்கும். கஸ்டமர்களுக்குத் தேவையான மல்டிமீடியா பிரசன்டேஷன் பிராஜெக்ட்டைத் தயாரித்து, எனக்கு அனுப்பி வைப்பார்கள். நான் அதை செக் செய்து ஓகே பண்ணவேண்டும். அதன்பிறகு மேலதிகாரிகளின் ஒப்புதலோடு அந்த பிராஜெக்ட் கஸ்டமர்கள் கைக்குப் போய்ச்சேரும். வீட்டிலேயே என் அலுவலக வேலைகளைப் பார்ப்பதால், குழந்தைக்கு எந்தக் குறையுமில்லாமல் கவனித்துக்கொள்ள முடிகிறது’’ என்று சந்தோஷமாகச் சொன்னார் மீனாட்சி.

வீட்டுக்குள் வந்தாச்சு ஆபீஸ் வேலை!

விஞ்ஞான வளர்ச்சியால் உலகம் சுருங்கிக்கொண்டே போவது ஒருபுறம் இருக்க, அலுவலகம் விரிவடைந்துகொண்டே போகிறது. மீனாட்சியின் அலுவலகமான ‘சி2 வொர்க்ஷாப்’ சென்னை கீழ்ப்பாக்கத்தில் இருக்கிறது. மீனாட்சியோ சுமார் இருபது கிலோமீட்டர் தள்ளி போரூரை அடுத்த முகலிவாக்கத்தில் இருக்கிறார். இன்டர்நெட் விஞ்ஞானம் இவரது வீட்டையே அலுவலகமாக்கி இருக்கிறது.

நகரம் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இன்றைய சூழலில், இப்படி வீட்டையே அலுவலகமாகப் பயன்படுத்துவதற்கான தேவையும் அதிகரித்து வருகிறது.

‘‘உண்மைதான்... முழுச் சக்தியோடு வீட்டிலிருந்து கிளம்புவோம். பத்து, பதினைந்து கிலோமீட்டர் தூரம் பயணித்து அலுவலகம் வரும்போதே, பாதி களைப்பாகிவிடும். வேலையில் கவனம் செலுத்தமுடியாது. நம் திறமையும் முழுமையாக வெளிப்படாது. இதனால், கம்பெனிக்குதான் நஷ்டம். அதற்கு மாற்று ஏற்பாடாக வீட்டில் இருந்தே பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தால், முழுமையாக அலுவலக வேலைகளுக்கு நம் நேரத்தைப் பயன்படுத்த முடியும். நம் திறமையும் பளிச்சிடும். அலுவல கத்திலும் கம்ப்யூட்டர் சார்ந்த பணிகளில் தங்கள் ஊழியர்களை ஈடுபடுத்தும் நிறுவனங்கள் வீட்டிலிருந்தே வேலைபார்க்கும் முறையைப் பரிசீலிக்கலாம்’’ என்றார் நாள் முழுக்க கம்ப்யூட்டரில் பணியாற்றும் ஓர் ஊழியர்.

நகரின் மையப்பகுதியில் வசதியான அளவில் இடம்பிடித்து, அதற்காக பெரிய தொகை ஒன்றை முடக்கவேண்டிய அவசியம் இல்லை. பலரையும் எளிதில் தொடர்புகொள்ள வசதியான ஒரு சிறிய இடம் இருந்தால்போதும். மற்ற ஊழியர்கள் தங்கள் வேலைகளை அவரவர் வீட்டில் இருந்தே பார்த்துக்கொள்ளலாம்.

இப்போது சென்னையில் உள்ள இ-பப்ளிஷிங், இ-லேர்னிங், இ-பிஸினஸ், மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் போன்ற பணிகளைச் செய்யும் நிறுவனங்கள் இதை நடைமுறையில் வைத்துள்ளன.

வீட்டுக்குள் வந்தாச்சு ஆபீஸ் வேலை!

மீனாட்சி விஷயத்தையே எடுத்துக் கொள்வோம். பிரசவ காலத்தில் நீண்ட விடுமுறை எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால், வேலையை விட முடிவுசெய்தார் மீனாட்சி.

‘‘மீனாட்சி போன்ற திறமையான ஊழியரை இழக்கவேண்டியது பற்றி யோசித்தோம். அவர் அளவுக்கு இன்னொருவரைத் தயார்படுத்துவதற்கும் அதிக காலம் பிடிக்கும். இதனால், எங்கள் நிறுவன வேலைகள் பாதிக்கும் என்று உணர்ந் தோம். அலுவலகத்தில் செய்த வேலையை அவர் வீட்டில் இருந்தே செய்தாலும் எங்கள் பணிகளில் எந்த பாதிப்பும் இருக்காது என்று தெரிந்தது. இரண்டு தரப்பின் பிரச்னையும் தீர்ந்தது’’ என்று புன்னகைக்கிறார் மீனாட்சி பணிபுரியும் ‘சி2 வொர்க்ஷாப்’ நிறுவனத்தின் சி.இ.ஓ ரவிபிரதாப்.

‘‘காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. ஆண்களும் விருப்பம் தெரிவித்தால் வீட்டிலிருந்தே பணி செய்ய அனுமதி கொடுக்கத் தயாராக உள்ளோம். நாங்கள் பணியைத் தரும்போதே, அதை எப்போது முடித்துக் கொடுக்கவேண்டும் என்பதற்கான நேரத்தையும் நிர்ணயித்துவிடுவதால், அந்த வேலை போக மீதி நேரத்தை தங்கள் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். பணியாளர்களோடு மாதம் ஒரு முறையோ, இருமுறையோ சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதால், நிர்வாகத் தேவைகளையும் பேசிக்கொள்ள முடிகிறது’’ என்ற ரவிபிரதாப்,

‘‘இந்த முறையில் சில குறைபாடுகளும் இருக்கின்றன. ஓர் அலுவலகத்தில் எல்லோரும் கூடி வேலை பார்க்கும்போது, மற்றவர்களுடைய வேலைப் பளுவைப் புரிந்து உதவிசெய்ய முடியும். அதன்மூலம், மற்ற துறைகளிலும் பயிற்சி பெறமுடியும். பதவி உயர்வு போன்ற விஷயங்களுக்கு இது உதவியாக இருக்கும். ஆனால், வீட்டில் இருந்தே பணிபுரிவதால், தானுண்டு தன் வேலையுண்டு என்றுதான் இருக்கமுடியும். அதனால் தனிப்பட்ட திறமை, சுறுசுறுப்பு, வேகம் இவற்றைக் கவனிக்க முடியாமல் போகும். இது ஊழியர்கள் வளர்ச்சிக்கு உதவியாக இருக்காது’’ என்ற கருத்தையும் சொன்னார்.

‘‘வீட்டில் இருந்துகொண்டே சாஃப்ட்வேர் தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ளலாம் என்பதால் எதிர்காலத்தில் வீடே அலுவலகம் ஆவதற்கு அதிக வாய்ப்புள்ளது’’ என்கிறார் ஹரிராம் ஆத்ரேயா. அண்ணா பல்கலைக் கழகத் தின் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பணியாற்றுகிற விஞ்ஞானி இவர். ‘‘இப்போது பள்ளிகளிலேயே கம்ப்யூட்டர் கல்விக்கு முக்கியத்துவம் இருப்பதால், வரும் காலங்களில் அனைவருமே கம்ப்யூட்டர் அறிவுடன் தான் இருப்பார்கள். அப்போது சேவை துறையிலும் இதர துறைகளிலும் வீட்டில் இருந்தபடியே பணிசெய்யும் வாய்ப்பு உருவாகும்’’ என்று அதற்குக் காரணமும் சொன்னார். அதற்கு ஏற்றமாதிரி வேகமான இன்டர்நெட் சேவையைப் பெறும்வகையில் பிராட் பேண்ட் கனெக்ஷன் களும் குறைந்த கட்டணத்திலேயே கிடைக்கின்றன.

ஆயிரத்தெட்டு டென்ஷனில் இருக்கும் மக்களுக்கு, அலுவலக டென்ஷன் இல்லாமல் ஒரு வேலை என்பதே சுகமான கற்பனைதான்... அது நனவாகத் தொடங்கியிருப்பது நல்ல விஷயம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism