Published:Updated:

தமிழக பட்ஜெட்! ஸ்பெஷல் பார்வை

தமிழக பட்ஜெட்! ஸ்பெஷல் பார்வை

தமிழக பட்ஜெட்! ஸ்பெஷல் பார்வை

தமிழக பட்ஜெட்! ஸ்பெஷல் பார்வை

Published:Updated:
நடப்பு
தமிழக பட்ஜெட்! ஸ்பெஷல் பார்வை
 


தமிழக பட்ஜெட்!

ஸ்பெஷல் பார்வை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழக பட்ஜெட்! ஸ்பெஷல் பார்வை

‘தே ர்தல் அறிக்கைதான் பட்ஜெட்டாக மலரப் போகிறது’ \ தி.மு.க அரசின் பட்ஜெட் பற்றி இப்படித்தான் பேச்சு இருக்கிறது. கடந்த அ.தி.மு.க அரசு ஆறுமாதத்துக்கு ஒரு பட்ஜெட்டைப் போட்டுவிட்டுச் செல்ல, அதையடுத்து நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க மீதமுள்ள ஆறுமாதத்துக்கான இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்யப்போகிறது. அநேகமாக, இந்த மாதக் கடைசி வாரத்தில் பட்ஜெட் அறிவிப்பு இருக்கக்கூடும்.

தேர்தல் நேரத்தில் தி.மு.க கொடுத்திருக்கும் வாக்குறுதிகளை வைத்துப் பார்க்கும்போது, தி.மு.க அரசு, முதல் பட்ஜெட்டில் இருந்தே கவனம் செலுத்தினால்தான் அவற்றையெல்லாம் ஓரளவுக்காவது நிறைவேற்றமுடியும். ஆனால், வெறும் வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றும் விதமாகவும் பட்ஜெட்டைப் போடமுடியாது. அதைத்தாண்டி மக்களின் தேவைகளை நிறைவேற்றும் விதமாகவும் அது அமையவேண்டும். இந்தச் சவாலை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் முதல்வர் கருணாநிதி?

‘‘எப்படிப் பார்த்தாலும் இது மக்களைத் துன்புறுத்தாத பட்ஜெட்டாகவே இருக்கும். அதாவது, பெரிய அளவில் வரிகள் எல்லாம் போட்டு துன்புறுத்த மாட்டார்கள். அதேசமயம், பெரிய நலத்திட்டங்களும் இருக்காது.

தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட 122 வாக்குறுதி களில் 68 அறிவிப்புகள் வெளியாகி இருக்கும்நிலையில் மீதமுள்ளவற்றை பட்ஜெட்டில் கொண்டு வந்துவிடவேண்டும் என திட்டமிட்டிருக்கிறார்கள் என்று தகவல் கிடைக்கிறது.’’ என்கிறார்கள் பத்திரிகைத் துறையைச் சேர்ந்தவர்கள்.

அதில் சீனியர் ஒருவர் இன்னும் விரிவாகச் சொன்னார். ‘‘பட்ஜெட் பெரும்பகுதி தேர்தல் அறிக்கையிலிருந்து உருவாகும் என்றால், அதற்கே இருக்கிற நிதி ஆதாரங்கள் போதாது என்கிற நிலை வந்துவிடும். பிறகு எங்கிருந்து பாலங்கள், எதிர்காலத் திட்டங்கள் தீட்டுவது... செயல் படுத்துவது?

தமிழக பட்ஜெட்! ஸ்பெஷல் பார்வை

இன்னும் சில காலத்துக்கு, இருக்கிறதைக் கொண்டு பசியில்லாமல் சாப்பிட்டுக்கொண்டு, அத்தியாவசிய தேவை என்றாலும் அடுத்தகட்ட வளர்ச்சியைக் காணமுடியாத குடியானவனின் நிலைதான் தமிழ்நாட்டுக்கும்!’’ என்றார்.

‘‘கடந்தமுறை அ.தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது, ‘அரசின் நிதிநிலை படுமோசமாக இருக்கிறது. கஜானாவில் கால் காசுகூட இல்லை’ என்ற பல்லவியையே பாடிவந்தது. ஆனாலும், இடைக்கால பட்ஜெட்டில் கவர்ச்சியான அறிவிப்புகளை வெளியிட்டு, ஓட்டுப்போட்டு தங்களை வெற்றிபெறச்செய்த மக்களைக் குஷிப்படுத்தியது. அடுத்த நான்கு மாதத்தில் அதிரடியாகக் காட்சி மாறியது.

அப்போது முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் கொண்டு வந்த மினி பட்ஜெட்டில், பால் முதல் பஸ் கட்டணம் வரை எதையுமே விட்டுவைக்காமல் அதிரடியாக எல்லா பொருட்களின் விலையையும் ஏற்றி, அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். அரசு ஊழியகளின் சலுகைகள் பறிப்பு, புதிய ஆட்கள் நியமிக்கத் தடை என்று எத்தனையோ விஷயங்கள் அதில் இடம் பெற்றன. இந்த அறிவிப்புகள் எல்லாமே அரசின் நிதி ஆதாரத்தைப் பெருக்கிக் கொள்ளத்தான்!

அதேபோல, வெற்றி தந்த மக்களுக்கு பார்ட்டி தருவது போலவே, இந்?த பட்ஜெட் இருக்கும். அடுத்து, உள்ளாட்சித் தேர்தல் மேகங்கள் வேறு தென்பட ஆரம்பித்துவிட்டதால், சூரியக் கதிர்கள் நம்மைச் சுட்டெரிக்காது.

இதையெல்லாம் விட்டுவிட்டு, இடையில் ஒரு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து அதில் வருமானத்துக்கு வழி தேடிக்கொள்வார்கள்’’ என்பதுதான் நிதித்துறை நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

ஆடிட்டரும் பொருளாதார நிபுணருமான எம்.ஆர்.வெங்கடேஷ் பேசும்போது, ‘‘வரப்போகும் இடைக்கால பட்ஜெட்டில் மூன்று விஷயங்கள் அரசுக்குச் சவாலாக இருக்கும். இரண்டு ரூபாய் அரிசி அறிவிப்பு, 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குத் தள்ளுபடி செய்யப்பட்ட கூட்டுறவுக் கடன், வாட் வரிவிதிப்பு முறை! இந்த மூன்று விஷயங்கள் பட்ஜெட்டில் பாதிப்பை உண்டாக்கலாம்.

3.50 விலைக்கு அரிசி கொடுக்கும் போதே 1,500 கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு மானியம் என்கிற பெயரில் இழப்பு ஏற்படுகிறது. இரண்டு ரூபாய்க்கு அரிசி கொடுப்பதால் கூடுதலாக பல கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். கூட்டுறவுக் கடன்களைத் தள்ளுபடி செய்த அரசு, அந்தத் தொகையை கூட்டுறவு வங்கிகளுக்குத் திருப்பித் தரவேண்டும். இதற்காக சுமார் 7ஆயிரம் கோடியை ஈடுகட்டவேண்டும். பணத்தைத் தராவிட்டால், அந்த வங்கிகள் எல்லாம் நொடித்துப்போகும் நிலைவரும். இப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அரசாங்கத்துக்குப் பெரிய அளவில் இழப்பு ஏற்படும். இதை ஈடுகட்ட பஸ்கட்டணத்தை உயர்த்த அரசு முன்வராது.

இதோடு ‘வாட்’டையும் சேர்த்தால் சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பட்ஜெட்டில் துண்டு விழும். இந்த பத்தாயிரம் கோடி ரூபாயை அரசு எங்கிருந்து கொண்டுவரப்போகிறது என்பது தெரியவில்லை. 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பட்ஜெட் போடும் அரசுக்கு, பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு இழப்பு என்பது மொத்த பட்ஜெட்டில் 40%. ஆனால், இதைச் சமாளிக்கப் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டி இருக்கும்.

ஒரு மீட்டர் துணியை வைத்துக் கொண்டு பேண்ட், சட்டை இரண்டை யும் தைக்கமுடியாது என்பதை அரசியல் கட்சிகள் எண்ணிப்பார்ப்பது கிடையாது. புதுப்புது திட்டங்கள் அறிவிக்கிறார்கள்... ஆனால், அந்தத் திட்டத்துக்கான நிதி ஆதாரத்தை எங்கிருந்து பெறுவோம் என்கிற விஷயத்தை மட்டும் அவர்கள் சொல்வது கிடையாது’’ என்ற வெங்கடேஷ், இப்போதைய தேவைகளைப் பட்டியலிட்டார்.

‘‘மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது மிக முக்கியம். தலைநகரை வைத்துதான் மாநிலத்தின் தலையெழுத்து நிர்ணயிக்கப்படுகிறது. நவீன விமானநிலையம், பாதாள ரயில் திட்டம், குடிநீர் திட்டங்கள் போன்ற வசதிகள் இருந்தால்தான் வெளியில் இருந்து நிதி ஆதாரங்கள் கிடைக்கும்.

வெளிநாடுகளை எடுத்துக்கொண்டால் இந்த மூன்று விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவார்கள். நமக்குத் தகுதியான ஒருவரைத்தான் கூட்டாளியாகத் தேர்ந்தெடுப்போம். அதுபோல, நமக்கான தகுதியான கட்டமைப்புகள் உருவாக்கும்போதுதான், முதலீடுகள் இங்கு வந்து குவியும்’’ என்றார் வெங்கடேஷ்.

பட்ஜெட் என்பது மக்களின் வயிற்றுப்பாட்டை மட்டுமல்ல... வாழ்க்கையை உயர்த்தவும் பயன்பட வேண்டும். இந்த இடைக்கால பட்ஜெட் அப்படி இருக்கும் என்று நம்புவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism