Published:Updated:

வாசகர் சந்திப்பு: கிருஷ்ணகிரியில் கொட்டிய டிப்ஸ்!

வாசகர் சந்திப்பு: கிருஷ்ணகிரியில் கொட்டிய டிப்ஸ்!

வாசகர் சந்திப்பு: கிருஷ்ணகிரியில் கொட்டிய டிப்ஸ்!

வாசகர் சந்திப்பு: கிருஷ்ணகிரியில் கொட்டிய டிப்ஸ்!

Published:Updated:
நடப்பு
வாசகர் சந்திப்பு: கிருஷ்ணகிரியில் கொட்டிய டிப்ஸ்!
 

கிருஷ்ணகிரியில் கொட்டிய டிப்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாசகர் சந்திப்பு: கிருஷ்ணகிரியில் கொட்டிய டிப்ஸ்!
வாசகர் சந்திப்பு: கிருஷ்ணகிரியில் கொட்டிய டிப்ஸ்!

‘‘ப ணத்தின் அருமையைச் சொல்லித்தரும் அற்புதமான நிகழ்ச்சி. நீயும் அவசியம் அட்டெண்ட் பண்ணு’னு கோயம்புத்தூர்ல கலந்துக்கிட்ட என் ஃப்ரெண்ட் சொல்லி அனுப்பினார்!’’ - பரவச உலகுக்குள் நுழையும் வேகத்தோடு உள்ளே வந்தார்கள் நடுத்தர வயதில் இருந்த இருவர்.

இவர்களைப் போலவே, எல்லோருடைய கண்களிலும் ஆர்வமும் வேகமும் துடிப்பும் தெரிந்தது, நாகப்பன் - புகழேந்தியை வைத்து நாம் நடத்திய ‘சேமிப்பு, முதலீடு... வளமான வாழ்க்கை’ நிகழ்ச்சியில்.

ஜூன் 4-ம் தேதி, கிருஷ்ணகிரியில் நடந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு ஊர்களிலும் இருந்து ஆர்வமுடன் வந்து குவிந்தனர் வாசகர்கள்.

‘‘நாணயம் விகடன் மூலம் கோவை, திருச்சியைத் தொடர்ந்து, ‘வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் சந்திப்பு’க்காக கிருஷ்ணகிரி வந்துள்ளோம். பெரிய நகரங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகளைக் காணும் வாய்ப்பு பலருக்கும் கிடைக்கும். வளர்ந்துவரும் இரண்டாம் நிலை நகரங்களுக்கும் பயன்படவேண்டும் என்ற நோக்கத்தில்தான் கிருஷ்ணகிரியில் இந்த வாசகர் சந்திப்புக்காக வந்திருக்கிறோம்’’ என்று ஆரம்பித்தார்கள் இரட்டையர்கள் நாகப்பன் - புகழேந்தி.

வாசகர் சந்திப்பு: கிருஷ்ணகிரியில் கொட்டிய டிப்ஸ்!

எதிர்பார்த்ததற்கும் மேலாக பெருந்திரளாக வந்து ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிட்டார்கள் வாசகர்கள். வணிகப்பெருமக்கள், ஓய்வுபெற்றவர்கள் மற்றும் மிக முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் என்று பலரும் கலந்த கலவையாக இருந்த அந்த அரங்கில், இரட்டையர்களின் பேச்சுக்கு பிரமாதமான வரவேற்பு! ‘நாமும் சம்பாதிக்கமுடியும்... பணக்காரராக, வளமான வாழ்க்கையை அடையமுடியும்...’ என்ற நம்பிக்கை அவர்கள் முகத்தில் தெரிந்தது. இளைஞர்கள் மற்றும் பெண்களும்கூட, அதிக அளவில் வந்திருந்தனர். வருமானத்தைப் பெருக்கும் வித்தையைக் கற்றுக்கொள்ள யாருக்குத்தான் ஆர்வம் இல்லை..!

நிகழ்ச்சி ஆரம்பித்தவுடன் வாசகர் ஜோதியில் கலந்துவிட்டார் புகழேந்தி. வாசகர்களும் தம்மில் ஒருவரோடு உரையாடுவதுபோல் நினைத்துக்கொண்டு, அண்ணன் தம்பியிடம் கேட்பதுபோல தங்களிடம் இருந்த அடிப்படையான சின்னச்சின்ன சந்தேகங்களை இடையிடையே கேட்டு வந்தனர்.

‘வாழ்க்கையில் எப்படிச் சம்பாதிப்பது, எவ்வளவு தேவையென்பதை இதுவரை கணக்குப் பார்க்கவே இல்லை.

வாசகர் சந்திப்பு: கிருஷ்ணகிரியில் கொட்டிய டிப்ஸ்!

இனி அதை முறையாகச் செய்வேன். அதற்காகத்தான் இங்கு வந்தேன்’ என்றார் ஒருவர்.

அன்றாட வாழ்க்கையை எப்படித் திட்டமிட்டுக் கொள்வது. பணத்தைச் சம்பாதிப்பது, பெருக்கு வது, அதைச் சேமிப்பது, முதலீடு செய்வது என்பதுவரை பல ஏரியாக்களிலும் புகுந்து கேள்விகளைக் கேட்டுக்கொண்டே வந்தனர். சளைக்காமல், நகைச்சுவை இழையோட அவை அத்தனைக்கும் பதில் சொல்லிக்கொண்டே வந்தார் புகழேந்தி.

தொடர்ந்து கேள்வி - பதில் நேரம் நடந்தது. வழங்கப்பட்ட சிறு கேள்வித்தாளில் தங்கள் சந்தேகங்களைக் கேட்க... அதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தனர் இரட்டையர். அதிலிருந்து...

‘‘தற்போதுள்ள வங்கி வேலையை விட்டுவிட்டு முழுநேரம் பங்குச் சந்தையில் ஈடுபடலாமா?’’ என்று கேட்டார் சரவணன் என்ற வாசகர் .

‘‘தற்போதுள்ள வேலையை விட்டுவிடவேண்டாம். பங்குச் சந்தை தொழிலுக்கு முழுநேரம் அவசியமில்லை தினம் இரண்டு மணி நேரம் ஒதுக்கினாலே போதும். உங்களது மாத வருமானத்தை இழக்கவேண்டாம்.’’

வாசகர் சந்திப்பு: கிருஷ்ணகிரியில் கொட்டிய டிப்ஸ்!

எழிலரசி எனும் வாசகி, ‘‘கிராமப்புறங்களில் உள்ள வர்கள் பங்குச் சந்தையில் ஈடுபட வாய்ப்புள்ளதா?’’ என்று கேட்டார்.

‘‘நாணயம் விகடனில் பங்குச் சந்தை பற்றி எளிமையாக எழுதி வருகிறோம். பொதுவாக கிராமபுரத்தில் பங்குத் தரகர்கள் இருப்பதற்கு வாய்புகள் இல்லை. ‘பான் கார்ட்’ வாங்க நகரத்துக்குச் செல்லவேண்டும். அதுபற்றிய தகவல்களை அறிவதில் சிரமங்கள் இருக்கும். இன்னும் சில வருடங்களில் ‘பிராட் பேண்ட்’ கனெக்ஷன் எல்லாப் பகுதிகளுக்கும் வரும்போது, இதில் உள்ள சில நடைமுறைச் சிக்கல்கள் விலகும். தற்சமயம் பக்கத்து நகரங்களில் உள்ள பங்குத் தரகர்களை அணுகி, விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்’’

ஓசூர் வாசகி ப்ரியாவின் கேள்வி: ‘‘பங்குச் சந்தையில் புத்திசாலி என்று யாரைக் குறிப்பிடுவது?’’

‘‘பங்குச் சந்தையில் அப்படி நான்கு ஐந்து பேரைக் குறிப்பிடலாம். அவர்களில் ஒருவர் பெஞ்சமின் கிரஹாம். இவர் எழுதிய புத்தகம் ‘இன்டெலிஜென்ட் இன்வெஸ்டர்’.

வாசகர் சந்திப்பு: கிருஷ்ணகிரியில் கொட்டிய டிப்ஸ்!

அடுத்து, ‘வாரன் பஃபே’. இவரது ‘பெர்க்ஷையர் ஹேத்வே’ நிறுவனம் மூலம் தொடர்ந்து 40 வருடமாக தன் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கொடுத்து வருகிறார். அவர் சொல்வதெல்லாம் ‘உங்களுக்குத் தெரியாத, அறிமுகம் இல்லாத தொழில்களைச் செய்யும் நிறுவனத்தின் பங்குகளை வாங்காதீர்கள்’ என்பதுதான். இவர் தன் குரு என்று குறிப்பிடுவது பெஞ்சமின் கிரஹாம்-ஐ தான்.’’

கதிரேசன் எனும் வாசகர், ‘‘ரிஸ்க் எடுப்பதுதான் பணம் சம்பாதிக்கும் வழி என்கிறீர்கள். கண் எதிரே பணம் வரும்போது இருக்கிற சந்தோஷம், பங்குச் சந்தை சரிவால் பணம் சரியும்போது பறிபோய், பதற்றத்தை ஏற்படுத்துகிறதே..?’’ என்று கேட்டார்.

வாசகர் சந்திப்பு: கிருஷ்ணகிரியில் கொட்டிய டிப்ஸ்!

‘‘பங்குச் சந்தையில் இறங்க நல்ல மனப்பக்குவம் வேண்டும். சம்பாதித்தவர்கள் எல்லாரும் புத்திசாலிகள் இல்லை. புத்திசாலிகளும் பணத்தை விட்டிருக்கிறார்கள். எப்போது முதலீடு செய்யும்போதும் நல்ல மனப்பக்குவம் வேண்டும். அதாவது, எப்போது முதலீடு செய்வது, எப்போது வெளியே வருவது... எனத் தெரிந்திருக்க வேண்டும். ஒரு சிலர் 20% லாபம் கிடைத்தாலே போதும் என வெளியே வந்துவிடுவார்கள். இந்த லாபம் போதும் என்னும் மனப்பக்குவத்துடன் வெளியே வருவதுதான் நல்லது. சிலர், புரோக்கர் சொன்னாலும் கேட்கமாட்டார்கள். 100% லாபம் வரும் என காத்திருந்து நஷ்டமடைந்து விடுவார்கள். எனவே, இன்னும் விலை ஏறட்டும் என காத்திருக்காதீர்கள். லாபம் குறையும் சூழல் வந்தாலும் குறைந்த நஷ்டத்தில் உடனே விற்று விட்டு வெளியேறிவிடுங்கள். பயம் இருக்கக்கூடாது.’’

‘‘பங்குச் சந்தை இந்த மே, ஜூன் மாதம் இறங்கினாலும் அக்டோபர், நவம்பரில் ஏறுமுகமாக இருக்கும் என்று சொல்கிறார்களே! இது உண்மையா?’’ - கேட்டது கிருஷ்ணகிரி வாசகர் டேவிட்.

‘‘பங்குச் சந்தை இப்படித்தான் என்று சிலர் தாங்களாகவே சில முடிவுகளுக்கு வந்துவிடுகிறார்கள். உதாரணமாக, ‘வெள்ளிக்கிழையானால் பங்குகள் இறங்கும். திங்கள்கிழமையில் பங்கு விலைகள் ஏறும்’ என்று தங்களுக்குள்ளே ஒரு ஸ்டைலை வைத்துக் கொண்டு, பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுகிறார்கள். இது தான் தின வர்த்தகத்தில் (டே டிரேடிங்) நடக்கிறது.அவ்வாறு, நினைத்துக்கொண்டு இறங்கினால் அது லாபம் தராது. அதேபோலதான் பட்ஜெட்க்கு முன்னால் ஏறும்... தீபாவளி சமயத்தில் ஏறும் என்பதும். இவையெல்லாம் உண்மையல்ல.’’

‘‘எது பாதுகாப்பான முதலீடு பங்குச் சந்தையா, மியூச்சுவல் ஃபண்டா?’’ என்ற ஒரு வாசகரின் கேள்விக்கு பதில் சொன்ன நாகப்பன், ‘‘பங்குச் சந்தைபற்றிய விவரங்கள் எதுவும் தெரியாதபோது, முதலில் மியூச்சுவல் ஃபண்ட்டில் இறங்குவதுதான் சிறந்தது... பாதுகாப்பானதும் கூட’’ என விளக்கினார்.

வாசகர் சந்திப்பு: கிருஷ்ணகிரியில் கொட்டிய டிப்ஸ்!

கேள்வி பதில் நிகழ்ச்சி முடிந்த பிறகு, வழக்கம் போல் வாசகர்களில் பலரும் நாகப்பன்-புகழேந்தி இருவரையும் சூழ்ந்துகொண்டு, தங்களுடைய தனிப்பட்ட சந்தேகங்கள், பங்குச் சந்தை ஆலோசனைகள் அனைத்தையும் கேட்டுத் தெளிவு பெற்ற பின்னரே, அவர்களை வழி அனுப்பி வைத்தனர். அடுத்து எந்த ஊருக்கு இரட்டையர்கள் வரப்போகிறார்கள் என்ற ஆவல் மிகுந்த கேள்விகளையும் கேட்கத் தவறவில்லை கிருஷ்ணகிரி வாசகர்கள்.

ஆர்வம் பீறிட்ட வாசகர்கள், உற்சாகமான கேள்விகள், உள்ளன்போடு உபசரணைகள் என அசத்திவிட்டார்கள் கிருஷ்ணகிரி வாசகர்கள்.

நிகழ்ச்சி முடிந்து வெளியே கிளம்பிய ஒவ்வொரு வாசகரின் முகத்திலும் 1000 வாட்ஸ் பிரகாசம். வாசகர்களின் அன்பான மொய்ப்பில் சிக்கித் திக்குமுக்காடி சந்தோஷக் களைப்போடு வெளியேவந்த நாகப்பன் - புகழேந்தியும் அந்தக் கேள்வியைக் கேட்டார்கள்.

‘அடுத்து எந்த ஊருக்குப் போகப் போறோம்..?’

அநேகமாக தென் மாவட்டம் - அடுத்த இதழில் அறிவிப்பு வரும். காத்திருங்கள், வாசகர்களே..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism