Published:Updated:

‘ஊர்’வலம் - திண்டுக்கல்

‘ஊர்’வலம் - திண்டுக்கல்

‘ஊர்’வலம் - திண்டுக்கல்

‘ஊர்’வலம் - திண்டுக்கல்

Published:Updated:
நடப்பு
‘ஊர்’வலம் - திண்டுக்கல்
 

திண்டுக்கல்

உழைக்கும் மக்களே, ஓடிவாருங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘ஊர்’வலம் - திண்டுக்கல்

ரின் பெயருக்கு விளக்கம் சொல்லும் விதமாக திண்டு மாதிரியான கல் மலையாக நிற்கிறது! மலைமேல் ஈஸ்வரன் கோயில் இருந்ததால் திண்டீச்சுரம் என்று அழைக்கப்பட்ட பெயர் மருவிவிட்டது என்றும் சொல்கிறார்கள். தென் மாவட்டங்களில் இருந்துவரும் ரயில்கள் சற்றே இளைப்பாறிச் செல்லும் ஸ்டேஷனைக் கொண்டிருக்கிறது. முக்கியமான தொழில் வாய்ப்புகளைக் கொண்டிருக்கிற திண்டுக்கல்லில் ‘ஊர்’வலம்..!

பூட்டு, புகையிலை... இந்த இரண்டுக்குமே திண்டுக்கல் ஒருகாலத்தில் மிகப் பிரபலம். ஆனால், காலமாற்றத்தில் இரண்டுமே பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்களைப் போல கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்பு வரை பிரபலமாக இருந்த ‘அங்குவிலாஸ்’ புகையிலையும், ஸ்பென்சர் சுருட்டும் இங்குதான் தயாரிக்கப்பட்டுவந்தன. ஆனால், இன்று அவை அப்படியே நசிந்து மறைந்து போய்விட்டன.

‘ஊர்’வலம் - திண்டுக்கல்

பூட்டுத்தொழில் கொஞ்சம் மூச்சைப் பிடித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. ‘‘ரயில்வே துறையில் ஏலத்துக்கு வரும் வேகன் இரும்புகளை வாங்கி, இரும்புப் பெட்டி தயாரிப்புக்கு பயன்படுத்துவோம். பெட்டியின் பூட்டுக்கு ஏழு சாவி இருக்கும். ஒரு சாவி மாறினாலும் திறக்கமுடியாது. அதை ஒட்டியே பணப்பெட்டி, டிரங்க் பெட்டி போன்றவையும் வளர்ந்தது. இங்கிருந்து சிலோன், பர்மா(மியான்மர்), சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோம்’’ என்றார் சிவமணி. இவருடைய ரத்தினம் அண்ட் கம்பெனி இரும்பு பணப்பெட்டி, அலமாரிகள், பூட்டு போன்ற வற்றை மூன்று தலைமுறையாகச் செய்துவருகிறது.

தொழிற்பேட்டை எல்லைக்குள் பூட்டு தொழிலாளர்களுக்கான கோ-ஆபரேட்டிவ் சொஸைட்டி ஒன்றை நடத்திவருகிறது மாவட்ட தொழில் மையம். முழுவதும் வெண்கலத்திலேயே தயாராகும் பூட்டுகள், உள்நாட்டில் மத்திய, மாநில அரசுத்துறை நிறுவனங்களுக்கு சப்ளை செய்யப்படுவதோடு ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதியும் ஆகிறது. இங்கே ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது.

‘‘காலமாற்றத்தில் இந்த பூட்டுத்தொழிலை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்லாமல் விட்டுவிட்டனர். ஒரு தொழில் பூர்வீகத்தன்மையோடு இருக்கும்போது அதை மேலும் மேலும் காலத்துக்கேற்ப நவீனப்படுத்தினால் என்றும் நிலைத்து நிற்கும். இப்போதும் கூட அரசு நிர்வாகம் மனது வைத்தால், இத்தொழிலில் இழந்துபோன பெருமையை மீட்டெடுத்து, உயிர்ப்பிக்க முடியும்’’ என ஆதங்கப்பட்டார் சிவமணி.

‘ஊர்’வலம் - திண்டுக்கல்

தொழில் வளர்ச்சிக்காக எண்பதாம் ஆண்டுகளில் இங்கு சிட்கோ தொழிற்பேட்டை தொடங்கப்பட்டது. சிட்கோவும், மாவட்டத் தொழில் மையமும் ரயில் நிலையத்தை ஒட்டி, ஒரே வளாகத்தில் அமைந்திருக் கின்றன. சிட்கோ ஆரம்பித்த புதிதில் போட்டி போட்டுக்கொண்டு யூனிட்களைத் தொடங்கியவர்கள் இன்று இடம் மாறிப் போய்விட்டனர். தற்போது இந்த தொழிற்பேட்டையில் அட்டை, பேக்கேஜிங் இண்டஸ்ட்ரி, பிளாஸ்டிக், ஃபர்னிச்சர், கால்மிதி, பாலிதீன் பேக், ஹேண்ட் மேட் பேப்பர் போன்ற தயாரிப்பு யூனிட்கள் 60 முதல் 70 வரை இயங்கி வருகின்றன. மாவட்டத் தொழில் மையம், பல சலுகைகளை வழங்கி ஊக்குவித்தாலும் ஏனோ தொழில் தொடங்கு பவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

மதுரை பேகம்பூர் சாலையில் இயங்கி வந்த நூற்று நாற்பதுக்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகளில் பல, நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கிறது என்ற காரணத்தால் இழுத்து மூடப்பட்டன. இன்று 40-க்கும் குறைவானவையே இயங்குகின்றன.

அந்தக் காயத்துக்கு மருந்து தடவும் விதமாக வேடசந்தூர் பகுதியில் பல டெக்ஸ்டைல் மில்கள் வந்துவிட்டன. திண்டுக்கல் தொழில் வளர்ச்சிக்கு புதிய முகவரியைக் கொடுத்திருப்பது சிறிதும் பெரிதுமாக இங்கிருக்கும் 160-க்கும் மேற்பட்ட ஸ்பின்னிங் ஃபேக்டரிகள்தான்.

‘ஊர்’வலம் - திண்டுக்கல்

அரசு பின்தங்கிய பகுதியாக வேடசந்தூர் மற்றும் அதன் சுற்றுப்புறத்தை அறிவித்ததும் அந்த வாய்ப்பைக் கவனித்த கரூர், திருப்பூர், கோவைக்காரர்கள் மில்களை இங்கு கொண்டுவரத் தொடங்கினர். அதன் விளைவாக இன்று பத்தாயிரம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பையும் ஆண்டுக்கு 1,000 கோடிக்கும் அதிகமான வியாபாரத்தையும் கொடுக்கிறது. இவற்றில் பெரும்பான்மை பருத்தி நூல் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பல பெண்கள் மூன்று வருட ஒப்பந்த முடிவில் 30,000 ரூபாய் என்ற ஸ்கீமில் இந்த மில்களில் பணிபுரிந்து வருவதால் பல குடும்பங்கள் பொருளாதார மேம்பாடு அடைந்துள்ளது

‘‘வத்தலகுண்டு, அய்யம்பாளையம் பகுதிகளில் தென்னை மரங்கள் அதிகளவில் இருப்பதால், மெத்தை களுக்குப் பயன்படும் கல்லுக்கயிறு தயாரிப்பு மற்றும் அதைச் சார்ந்த தொழில்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கிறது. இங்குமட்டும் 30 யூனிட்கள் வரை இயங்குகின்றன. இங்கிருந்து பஞ்சாப், ஹரியானா, டெல்லி, கர்நாடகா, போன்ற மாநிலத்தில் கர்லான் மெத்தைகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அனுப்புகிறோம். ஆண்டுக்கு 1,200 டன் வரை உற்பத்தியாகிறது. இதன்மூலம், வருடத்துக்கு 30 கோடிக்கு இத்தொழில் நடந்து வருகிறது. எனவே இந்தத் தொழிலை நம்பி ஆரம்பிக்கலாம். மூலப்பொருட்களுக்கான தேவை அதிகம் இருக்கிற அதேசமயம், வேலைக்கான ஆட்கள் இல்லாதநிலை இருப்பதால் வேலை ஆட்களுக்கும் நல்ல வாய்ப்புள்ள தொழில் இது” என்றார் ‘தாயகம் காயர் இண்டஸ்ட்ரீஸ்’ இஸ்மாயில்.

‘ஊர்’வலம் - திண்டுக்கல்

திண்டுக்கல்லில் அதிக அளவில் வேலை வாய்ப்புகளைக் கொடுத்துவரும் இன்னொரு தொழில் அரிசி ஆலைகள். இங்குள்ள அறுபதுக்கும் மேற்பட்ட அரிசி ஆலைகளில், மாடர்ன் ரைஸ் மில்கள் மட்டுமே 20 வரை உள்ளன. சுற்றுப்பட்டு கிராமங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்தும் நெல் அரைக்க வருகிறார்கள். ‘‘மாடர்ன் ரைஸ்மில்களில் தினமும் ஆயிரம் மூட்டை அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. இதன்மூலம் கிட்டத்தட்ட 1,500 பேர் வரை வேலை செய்ய வாய்ப்பும் கிடைக்கிறது. இன்னும் இந்த வேலைக்கு அதிக ஆள் தேவை இருக்கிறது’’ என்றார் ‘நன்மை தரும் விநாயகர் மாடர்ன் அரிசி ஆலை’ உரிமையாளர் மருதநாயகம்.

‘ஊர்’வலம் - திண்டுக்கல்

60 ஆண்டுகளுக்கு முன் சிறிதாக துவங்கப்பட்டு, இன்று துறுதுறுவென ஓடி ஆடி உழைத்து வளர்ந்திருக்கிற அணில் சேமியா நிறுவனம் திண்டுக்கல்லின் முக்கிய அடையாளமாக இருக்கிறது. இதன் உரிமையாளர் நாகராஜன் மற்றும் பங்குதாரர் ஜி.சுந்தரராஜன் ஆகியோர் நம்மிடையே பேசும்போது ‘‘தொழில் வளர்வதற்கு வாய்ப்புகளை யோசிப்பதற்கு முன் வேலைக்கான ஆட்களைப் பார்க்கவேண்டும். விவசாய மக்கள் இருக்கும் பகுதி இது. அதனால் விவசாயம் அல்லாதவர்கள் மட்டுமே ரைஸ்மில், மர அறுவை மில், எங்களைப் போன்ற தொழில் போன்றவற்றில் வேலை பார்த்து வந்தனர். இப்போது காலங்கள் மாற மாற, அனைவரும் படித்து அடுத்தகட்டத்தை நோக்கிப் போக ஆரம்பித்துவிட்டனர். இன்று வேலை செய்ய ஆட்கள் இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறது திண்டுக்கல். அதனால், இது வேலை வாய்ப்புள்ள நகரமாக மாறிவிட்டது. படித்தவர்களை விட உடல் உழைப்புக்குத் தயாராக இருப் பவர்களைத் தேடிக்கொண்டிருக்கிறது எங்கள் ஊர்!’’ என்றார்கள்.

திண்டுக்கல் சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் சௌந்தரராஜன், ‘‘இந்த ஊரில் மளிகைக்கடைகளின் பங்கு மிக முக்கியமானது. இப்போதுதான் புதிதாக டிபார்ட்மென்டல் ஸ்டோர் வர ஆரம்பித்துள்ளது. இன்னும் பல ஸ்டோர்கள் வரவேண்டும். மக்கள் நவீனத்தை அனுபவிக்கும்போதுதான் நகரம் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிப் போகும்.

30 ஆண்டுகளுக்கு முன், கரூரை விட திண்டுக்கல் பெரிய நகரம். ஆனால், இன்று பார்த்தால் கரூர் தொழில் வளர்ச்சியிலும், பொருளாதார முன்னேற்றத்திலும் விஸ்வரூபம் எடுத்துவிட்டது. அரசு நினைத்தால் திண்டுக்கல்லை மேம்படுத்தமுடியும். அப்படி ஒரு நிலை வந்தால்தான் உண்மையான தொழில் வளர்ச்சி இருக்கும்’’ என்றார்.

‘ஊர்’வலம் - திண்டுக்கல்

‘‘என்னதான் மாற்றங்கள் வந்தாலும், இங்கு தொழில் நுட்பம் சார்ந்த (டெக்னா லஜி) தொழில்கள் வளர்வதற்கான வாய்ப்பு குறைவு. ஏனென்றால், திருச்சியில் உள்ள ‘பெல் பாய்லர் யூனிட்’ போன்றோ வேறு இன்ஜினீயரிங் தொழிற்சாலைகளோ இங்கே கிடையாது. அப்படி இருந்திருந்தால் அதைச்சுற்றி பல தொழில்களும் சிறிதும், பெரிதுமாக வளர்ந்திருக்கும். எனவே, தொழில்களை தேடிக்கொண்டிருப்பதை விட, இங்கு என்ன வாய்ப்பு இருக்கிறதோ அதைச் சார்ந்த தொழில்களைக் கொண்டுவர கவனம் செலுத்தவேண்டும்’’ என்றார் தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில் சங்கத் துணைத்தலைவர் தங்கராஜ்.

‘ஊர்’வலம் - திண்டுக்கல்

இங்கு விவசாய நிலங்களைக் கொண்ட கிராமங்கள் அதிகம் என்பதால் இயற்கை யாகவே விவசாயம், மூலிகை ஏற்றுமதி, பூக்கள், சென்ட் (வாசனை திரவியம் தயாரிப்பு) போன்றவற்றுக்குத்தான் வாய்ப்புகள் அதிகம்.

‘‘உண்மைதான்... நான் அந்த வழியில் சென்றுதான் கற்றாழை சாகுபடி செய்து ஷாம்பு, முகத்துக்குப் பயன்படும் ஜெல், கற்றாழை ஜூஸ் போன்றவற்றைத் தயாரித்து வருகிறேன். பல தென் மாவட்டங்களில் பல ஊர்களின் சர்வோதயாவுக்கு சப்ளையும், மார்க்கெட்டிங்கும் செய்துவருகிறேன். இதுதவிர பிரண்டை, ஆவாரம் பூ, வேப்பம் பூ, நெறிஞ்சி, அவரி உள்ளிட்ட பல மூலிகைகள் கிடைக்கின்றன. இவற்றை ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. இதன்மூலம் ரூபாய் 15 கோடி முதல் 20 கோடிக்கான அந்நியச்செலாவணி ஈட்டமுடியும்’’ என வாய்ப்புகளையும் சொன்னார் தங்கராஜ்.

திண்டுக்கல்லில் எப்போதும் மவுசு குறையாமல் இருப்பது சிறுமலைப்பழம். இன்றும் பழநி கோயில் பஞ்சாமிர்த தயாரிப்பில் இந்தப் பழத்துக்கு முக்கிய இடம் இருக்கிறது. உரம், பூச்சிக்கொல்லி மருந்து என எதுவும் இல்லாமல் இயற்கையாக வளர்வதால் தான், அந்த மணமும் சுவையும் இருப்பதாகக் கூறுகிறார் திண்டுக்கல் சிறுமலை பழ வியாபாரிகள் சங்கச் செயலாளர் சையது இப்ராஹிம்.

‘‘இந்தப் பழங்கள் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் மார்க்கெட்டுக்கு வரும். நவம்பர், டிசம்பர் மாதம்தான் சீசன். கிட்டத்தட்ட ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு வரும் பழங்கள், 15 நாள் வைத்திருந்தாலும் தோல் கறுப்பாகுமே தவிர, கெட்டுப்போகாது. இதன்மூலம் வருடத்துக்கு ஒரு கோடி என்ற அளவில் வியாபாரம் நடைபெறுகிறது. இதுதவிர, நார்த்தங்காய், எலுமிச்சை போன்ற பழங்களும் நாள் ஒன்றுக்கு 50 டன் என வருடத்துக்கு ஐந்துகோடி ரூபாய் வரை ஏலம் மூலம் விற்பனையாகிறது. பழங்களுக்கான குளிர்பதன கிட்டங்கி இரண்டு இருக்கிறது. இதுபோன்று நிறைய வரவேண்டும். மேலும் உணவு பதப்படுத்தும் தொழில்கள், பழக்கூழ், மாம்பழம் பவுடர் தயாரிக்க வாய்ப்புள்ள ஊர். இவை இங்கு வந்தால் நிறுவனமும் லாபத்தில் ஓடும். வேலை வாய்ப்பும் கிடைக்கும்’’ என்றார் இப்ராஹிம்.

‘ஊர்’வலம் - திண்டுக்கல்

பூ மார்க்கெட், காய்கறி கமிஷன் மண்டிக்கடை இரண்டும் திண்டுக்கல்லை எப்போதுமே கலகலப்பாக்கிக் கொண்டு இருக்கின்றன. இரண்டும் சேர்ந்தே ஆண்டுக்கு எழுபத்தைந்து கோடி வரை வியாபாரம் செய்துவருகின்றன. சம்பங்கி, முல்லை, சாமந்தி, சென்டு மல்லி, கனகாம்பரம், வாடாமல்லி, மல்லிகை என அத்தனை பூக்களும் மலை மலையாகக் குவிந்து கிடக்கின்றன. கிட்டத்தட்ட 5,000 பூ விவசாயிகள்மூலம் கொண்டு வரப்படும் பூக்களின் மதிப்பு, நாள் ஒன்றுக்கு ஐந்து லட்சம் ரூபாய்! திருமண முகூர்த்தம், பண்டிகை காலம் என்றால், வர்த்தகம் கோடியை எட்டிப்பிடிக்கும் கோபுரமாக உயர்ந்து நிற்கிறது பூ மார்க்கெட்.

பூ விவசாயிகள், வியாபாரிகள் சங்கத்தின் துணைச்செயலாளர் இப்ராஹிம் ஷா, ‘‘திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள 25 ஊர்களில் மலர் சாகுபடி நடைபெறுகிறது. இங்கிருந்து தமிழ்நாடு முழுவதுக்கும், பெங்களூர், கேரளா என பூக்கள் அனுப்பப்படுகிறது.’’ என்ற மலரின் ரகசியத்தைச் சொன்னவர் மேலும் தொடர்ந்தார். ‘‘இங்கு மலர்களில் இருந்து வாசனை திரவியம் (சென்ட்) தயாரிக்கும் இரண்டு கம்பெனிகள் காந்திகிராமம் அருகில் செயல்பட்டு வருகின்றன. இதைப்போல நிறைய வரவேண்டும். எத்தனை வந்தாலும் அத்தனைக்கும் தொழில் வாய்ப்புகள் இருக்கும் ஊர் இது’’ என்றார்.

‘ஊர்’வலம் - திண்டுக்கல்

தமிழ்நாட்டிலேயே அதிக எண்ணிக் கையிலான மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ள ஊராகவும் இருக்கிறது இது! 611 குழுக்கள் நகராட்சியின் முலம் நேரடியாகவும், தனிப்பட்ட குழுக்கள் என ஐம்பதுக்கு மேற்பட்டவையும் செயல்படுகின்றன. இக்குழுக்கள் ஆவின் பால் விற்பனை நிலையம், இன்டர்நெட் பிரவுஸிங் சென்டர், ஓட்டல் மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிப்பு எனவும் செய்துவருகிறார்கள். இந்தக் குழுக்களின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வரும் செல்வியிடம் பேசியபோது, ‘‘தொழிலில் மட்டுமில்லாமல் சிறு வியாபாரமான பட்டுச்சேலை, காட்டன் சேலைகளை விற்பனை செய்தும் வருகிறோம். அடுத்தகட்டமாக இருபது பெண்களுக்கு ஆட்டோ ஓட்ட லைசென்ஸ் எடுக்க இருக்கிறோம். எங்களது குழுக்கள் மூலமாக ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் என்ற அளவில் வர்த்தகமும் நடக்கிறது’’ என்று பெருமை பொங்கச் சொன்னார்.

பெண்களின் வேலை வாய்ப்புக்கும், கூடுதல் வருமானத்துக்கும் வழி சொல் லும் ஊராக இருக்கிறது. பயன்படுத்திய பேப்பர்களைக்கூட காசாக்கிப் பார்க்கிறார்கள், இவ்வூரின் ஆர்.வி நகர் பகுதிப் பெண்கள். வயதான பெண்கள் முதல் படிக்காத பெண்கள் வரை வீட்டில் இருந்தபடியே கடைகளுக்குத் தேவையான பேப்பர் கவர்களைச் செய்துதருகிறார்கள். இதன் மூலம் ஒரு கிலோ கவர்களுக்கு நான்கு ரூபாய் கூலியாகப் பெறுகிறார்கள். தினமும் இரண்டு அல்லது மூன்று பெண்கள் சேர்ந்துகொண்டு வீட்டில் ஓய்வு நேரத்தில் பத்து கிலோ கவர்களை பேசிக்கொண்டே ஒட்டி முடித்து விடுகின்றனர். இப்படி அறுபதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பகுதி நேர சம்பாத்தியம் பார்க்கின்றன.

வேஸ்ட் பேப்பர் கடைகளும் அலுவலகங்களில் ஒருபக்கம் பயன்படுத்திய பேப்பர், கம்ப்யூட்டர் பேப்பர் போன்ற வற்றைக் குறைவான விலையில் வாங்கி ஒரே அளவில் பிரித்து பைண்டிங் செய்து சிறுசிறு நோட்டுகளாக்கி விற்கிறார்கள். இதை மளிகைக்கடை, வீடு, அலுவலகம், லாரி ஆபீஸ் என அனைவரும் வந்து வாங்கிச் செல்கின்றனர். இவ்வகை நோட்டுகள் யாவும் கிலோக்கணக்கில் விற்கிறார்கள். சிறிதும் பெரிதுமாக உள்ள இவை ரூபாய் 25-28 வரை விற்கப்படுகிறது. இதை நம்பியே நூறு பேருக்கும் மேல் வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள். எந்த ஊராக இருந்தாலும் செய்வதற்கு ஏற்ற தொழில் இது!

மல்டிமீடியா, அனிமேஷன், 2-டி, 3-டி மற்றும் இ-பப்ளிஷிங் என பலதரப்பட்ட பயிற்சிகளைத் தரும் நிறுவனங்கள் வந்துவிட்டன. ‘‘என்ன மாதிரியான புதுவிஷயங்கள் வந்தாலும் அதை இங்கு கொண்டுவந்து விடுவோம். அதுமட்டுமின்றி இங்கு இருக்கும் பொறியியல் கல்லூரிகள் மூலமும் அதிகமானவர்களுக்கு பிராஜெக்ட் செய்யத் தேவையிருப்பதால், நாங்களும் அட்வான்ஸாக இருக்கவேண்டும். இங்கு அனிமேஷன் ஸ்டூடியோக்களே வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை’’ என்றார் சி.எஸ்.சி சாஃப்ட் வியூவின் பொறுப்பாளர் முத்தையா.

பங்குச் சந்தைக்கான ஆலோசனை நிறுவனங்களான ஜியோஜித் முதல் பத்துக்கும் மேற்பட்ட பங்குத் தரகு நிறுவனங்கள் உள்ளன. மேலும், முப்பதுக்கும் மேற்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் திட்ட ஆலோசகர்கள் இருக்கிறார்கள் என்ற ஆச்சர்யத் தகவலும் கிடைத்தது. இவர்களில் 30% பேர் குடும்பத்தலைவிகள். ‘‘நிதிசார்ந்த சேவைகள் கணிசமான அளவில் வளர்ந்துவருவது ஆறுதல் அளிக்கிறது. இதன்மூலம் ஆண்டுக்கு பத்துகோடி ரூபாய்க்கு முதலீடு செய்கிறார்கள். வரும் ஆண்டுகளில் மூன்று மடங்காக உயரும்’’ என உற்சாகத்தோடு பேசினார் மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசகரான ஜெயச்சந்திரன்.

காலத்துக்கேற்ப பழைமையிலிருந்து புதுமைக்கு மாறிக்கொண்டிருக்கும் திண்டுக்கல், பலதுறை தொழில் வாய்ப்புகள் கொண்டதாகவும் வேலை வாய்ப்புக்கும் பஞ்சமில்லாத ஊராகவும் இருக்கிறது.

கா ல் டாக்ஸி, டி.டீ.பி, ஹவுஸ்கீப்பிங் மற்றும் செக்யூரிட்டி சர்வீஸஸ் சேவைத் தொழில்களுக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

மி ல்களுக்கான மின்சாரத் தேவைக்கு, காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில் ஆர்வம்காட்டி வருகிறார்கள்.

மிழ்நாடு மற்றும் ஆந்திரா ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு டிரான்ஸ்ஃபார்மர் தயாரித்து மின்வாரியங்களுக்கு சப்ளை செய்கிறது. அதில் திண்டுக்கல், பத்து கோடிக்கான ஆர்டர்களைக் கொடுக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism