Published:Updated:

ஷேர்லக் ஹோம்ஸ்

ஷேர்லக் ஹோம்ஸ்

ஷேர்லக் ஹோம்ஸ்

ஷேர்லக் ஹோம்ஸ்

Published:Updated:
நடப்பு
ஷேர்லக் ஹோம்ஸ்
 

அந்நியர் போட்ட அசகாய கணக்கு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஷேர்லக் ஹோம்ஸ்

லகக் கோப்பை கால்பந்து போட்டியை டி.வி\யில் ரசித்துக்கொண்டிருந்த நேரத்தில் உள்ளே நுழைந்தார் ஷேர்லக் ஹோம்ஸ்! அவருடைய ரெயின்கோட் காஸ்ட்யூமைப் பார்த்ததும்தான் வெளியில் கோடைமழை பெய்யும் விஷயமே தெரிந்தது.

‘‘உமக்கு ஓசியில் ஈ.எஸ்.பி.என் கிடைத்ததும் அதிலேயே மூழ்கிவிட்டீரா?’’ என்று செல்லமாகக் கோபித்துக்கொண்டு எதிரே உட்கார்ந்தார் ஷேர்லக்!

சட்டென்று மேஜைக்கு கீழிருந்து கத்தை பாராட்டுக் கடிதங்களை எடுத்து நீட்டியபடியே, ‘‘கோல் ஆகாத செய்திகளாகத் தந்ததற்கு வாசகர் களின் பாராட்டுக் கடிதங்கள்’’ என்றதும், ஒரு மந்தகாசப் புன்னகையுடன் கடிதங்களை வாங்கிக் கொண்டவர், செய்திகளுக்குத் தாவினார்.

‘‘முதல் செய்தி... பங்குச் சந்தை பலிகடா ஒருவர் பற்றி! சென்னையைச் சேர்ந்த பெரு முதலீட்டாளர் ஒருவர் இந்தச் சரிவில் பெரிய தொகையை இழந்திருக்கிறாராம். அந்தத் தொகை எவ்வளவு இருக்கும் என்று உம்மால் யூகிக்க முடியுமா?’’ என்று புதிர் போட்டார்.

பெரிய தொகையாகச் சொல்வதாக நினைத்து, ‘‘என்ன ஒரு கோடி இருக்குமா..?’’ என்றோம்.

பெரிதாகச் சிரித்த ஷேர்லக், ‘‘நீங்கள் சொல்வது லோ பட்ஜெட்... நான் சொல்வது ரஜினி பட பட்ஜெட்... கிட்டத்தட்ட 35 கோடி ரூபாய்!’’ என்றார்.

‘‘இப்போது அடங்கிப்போய் இருக்கிறாராம் மனுஷர். இரண்டு முன்னணி புரோக்கிங் நிறுவனங் களிடம் கணக்கு வைத்திருந்து தலா 15 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இழந்திருக்கிறார். இப்போது பக்கத்தில் நிற்பவருக்கே பேசும் சத்தம் கேட்கவில் லையாம். ‘கொஞ்சம் அடக்கி வாசியுங்கள்’ என்று சொல்லப்பட்ட அறிவுரை இப்போதுதான் காதில் விழுகிறதாம். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன சாதிக்க முடியும்? இங்கேயே, இந்த நிலை என்றால் மும்பை பற்றிக் கேட்கவே வேண்டாம்!’’ என்றார்.

‘‘அது சரி... சுனாமி வந்த மாதிரி அல்லவா அந்நிய முதலீட்டாளர்கள் அதிரடி பண்ணிக் கொண்டிருக் கிறார்கள்...’’ என்று ஆரம்பித்தோம்.

அந்த ஏரியாவில் விஷயம் இருக்கவே, நூல் பிடித்துச் சொல்லத் தொடங்கினார் ஷேர்லக்.

‘‘அவர்களின் திட்டம் வேறு... நடந்தது வேறு! அந்தப் பின்னணி பற்றி இப்போது செய்திகள் கசிய ஆரம்பித்திருக்கின்றன. அதுபற்றிக் கொஞ்சம் விரிவாகவே சொல்கிறேன்...’’ என்று தொண்டையை செருமிக்கொண்டு சொல்ல ஆரம்பித்தார் ஷேர்லக்.

‘‘இந்தியா நல்ல முதலீட்டு வாய்ப்புள்ள சந்தை என்பதறிந்த முதலீட்டாளர்கள் களமிறங்கியபோது, சுமார் 6000 புள்ளிகளில் இருந்தது சென்செக்ஸ். இன்னும் 2, 3 வருடங்களில் இது 2500 புள்ளிகள் ஏறும் என்பது அவர்கள் போட்ட கணக்கு. 2000 புள்ளிகள் வரை ஏறினாலே லாபம்தான் என்று களமிறங்கினார்கள். அவர்களது எதிர்பார்ப்பையும் மீறி, ராக்கெட் வேகத்தில் ஜிவ்வென ஏற ஆரம்பித்தது சந்தை. 8,000-ஐக் கடந்து சென்ற சென்செக்ஸை உற்று நோக்கிய அந்நிய முதலீட்டாளர்கள் மௌனப் புன்னகையோடு காத்திருந்தார்கள். இன்னும் ஏறும் என்பது அவர்கள் கணக்கு.’’

‘‘சரிதான்... அது தப்பாமல் நடந்துவிட்டதே!’’ என்றோம்.

ஷேர்லக் ஹோம்ஸ்

தொடர்ந்தார் ஷேர்லக். ‘‘அந்நிய முதலீட்டாளர்களுடன் இணைந்து இந்திய முதலீட்டாளர்களும் களத்தில் இறங்க... இரண்டே வருடங்களில் பிரமாதமாக பாய்ந்தது காளை. பெரும்பாலான பங்குகள் அந்நிய முதலீட்டாளர் வசம் சிக்கியிருந்ததால், மார்க்கெட்டில் இருந்த கொஞ்ச நஞ்ச பங்குகளுக்கு ஏக கிராக்கி. அதன் எதிரொலியாக பங்குகள் விலை பறந்தன. அந்நிய முதலீட்டாளர்கள் எதிர்பார்த்தது இதைத்தானே!

உள்ளூர ஏகக் குஷியில் இருந்தவர்கள், வெளியேற சரியான சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருந்தார்கள்.

உலக சந்தையில் இறக்கம், மத்திய அரசுக் கெடுபிடி என்று காரணங்கள் சிக்க... இதுதான் சமயம் என்று இந்திய லாபத்தோடு கம்பி நீட்டும் வேலையைத் தொடங்கிவிட்டார்கள். இப்போது அவர்கள் விற்றுக்கொண்டிருப்பதும்கூட, நல்ல லாபத்தில்தான். இந்திய முதலீட்டாளர்களும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் போட்ட முதலீடுகள் பேப்பர் நஷ்டம் சுமந்து நிற்க... ஜோராக பணத்தைக் கட்டிக் கொண்டு கிளம்பிவிட்டார்கள்’’ என்ற ஷேர்லக்,

‘‘ஆனாலும், வரி விதிப்பு விஷயத்தில் இந்திய அரசு தரப்பிலிருந்து தெளிவான அறிவிப்பு வருகிறதா என்று அந்நிய முதலீட்டாளர்கள் காத்திருக்கிறார்கள்’’ என்ற நம்பிக்கை வார்த்தைகளையும் சொன்னார்.

‘‘அதனால்தான் அவர்கள் பங்குகள் விற்ற பணத்தை எல்லாம் இன்னமும் நம் வங்கிக் கணக்கிலேயே வைத்திருக்கிறார்களோ..?’’ என்று கேட்டோம்.

‘‘அப்படியும் சொல்லலாம். என் காதுக்கு வந்த தகவலைச் சொல்லட்டுமா..? ‘பணத்தை நம் வங்கிகளில் வைத்திருக்கும்வரை அது ரூபாய் மதிப்பில் இருக்கும். அதை எடுத்துச்செல்லும்போது டாலர் மதிப்புக்கு மாறும். இப்போது, டாலருக்கு சுமாராக 46 ரூபாய் இருக்கிறது. டாலரின் மதிப்பு குறையும்போது, இந்தியப் பணத்தை மாற்றுவதுதானே லாபம்!’ என்று ஒரு பாயின்ட்டைச் சொன்ன ஷேர்லக், நாம் கொடுத்த சூடான லெமன் டீயை ரசித்துப் பருகிவிட்டு நிமிர்ந்தார்.

‘‘எதிர்பார்த்தபடி நல்ல மழை பெய்துவருவதால், இந்த ஆண்டு விளைச்சலுக்கு பங்கம் இருக்காது என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. இதனால் கமாடிட்டி சந்தையில் உணவுப் பொருட்கள் விலை குறையும் என்கிறார்கள்’’ என்றவரிடம்,

‘‘எல்லோருமே உங்கள் ஷேர் டிப்ஸ் பற்றி ஆர்வமாக விசாரிக்கிறார்கள். டிப்ஸ் எதுவும் உண்டா?’’

‘‘தரமான பங்குகள் எல்லாம் சகாய விலையில் கிடைக்கிற இந்த நேரத்தில், தனியாக என்ன பரிந்துரை வேண்டி இருக்கிறது..? டிஸ்கோ, எல் - டி என பெருந்தலைப் பங்குகள் எல்லாம் மிகக்குறைந்த விலையில் கிடைக்கிறதே! வாங்கிப் போடுங்கள். அதற்கு முன் சந்தையில் இன்னும் இறக்கம் இருக்கும்போல் தெரிகிறது. அதையும் கவனித்து, காத்திருந்து வாங்குங்கள்!’’ என்ற ஷேர்லக், ‘‘தமிழ் சினிமா தயாரிப்பு கம்பெனியின் ஒரு ரூபாய் ஷேர், அதற்கும் கீழே வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டெழுத்து நிறுவனம் எதிர்காலத்தில் ஜெகஜோதியாகப் பிரகாசிக்கும் என்ற நம்பிக்கையில் வர்த்தக வங்கி ஒன்று அதன் பங்குகளை வாங்கி இருக்கிறது. இதைக் கவனிக்கவேண்டிய பட்டியலில் வையுங்கள்’’ என்றார்.

‘‘இப்படி சிக்கலான சூழ்நிலையிலும் பங்குச் சந்தை செய்திகளைச் சொல்வது உங்களுக்குத்தான் கைவந்த கலையாக இருக்கிறது’’ என்று பாராட்டியதும் உற்சாகமாகக் கிளம்பினார்.

ஷேர்லக் ஹோம்ஸ்

‘‘புறப்படும் முன் ஒரு தகவல் சொல்கிறேன். சென்செக்ஸில் இருக்கும் இன்னும் இரண்டு எண்களை டெக்னிக்கல் ரிப்போர்ட்கள் அடையாளம் கண்டுள்ளனவாம். 8800 வரை கீழே சென்றால் பின்னர் மேல்நோக்கி வேகம் எடுக்கலாம். அதைக் கடந்து கீழேபோய் விட்டால் 7600 வரை சென்று பின் திசை மாறும் என்கிறார்கள்’’ - இறங்குமுக செய்தியை நாம் ரசிக்கவில்லை என்று தெரிந்ததும் அடுத்த செய்திக்குத் தாவினார்.

‘‘வங்கிகளில் போலி ஏ.டி.எம் கார்ட்களை வைத்து திருட்டுத்தனமாக பணம் எடுக்கிற அந்நிய நாட்டவர்களின் ஊடுருவல் சமீபகாலமாக அதிகரித்திருப்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.’’

‘‘ஆமாம்... சிலர் பிடிபட்ட செய்திகூட, பேப்பரில் விலாவாரியாக வந்ததே!’’

‘‘ஆமாம். ஆனால், ஊடுருவல் ஆசாமிகள் இன்னமும் ஓயவில்லை. வெளிநாட்டில் தயாராகும் போலி கார்ட் கத்தைகளுடன் ஏ.டி.எம் உலா வந்துகொண்டே இருக்கிறார்கள். சமீபத்தில் தமிழகம் முழுக்க பரவிக் கிடக்கிற தனியார் வங்கி ஒன்றின் ஏ.டி.எம்-மில் பல லட்ச ரூபாய் சுருட்டி விட்டாராம். வங்கி நிர்வாகம், பதறி போலீஸுக்குப் போனது - ஒரு நிபந்தனையுடன்.’’

‘‘என்ன நிபந்தனை..?’’

‘‘இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக பத்திரிகைகளுக்குச் சொல்லாமல் ரகசியமாக குற்றவாளியைக் கண்டுபிடித்துக் கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டதாம். ஒரு ஏ.டி.எம் காவலர், அந்த சுருட்டல் ஆசாமியின் வண்டி எண்ணைப் பார்த்து வைத்தது ஒன்றுதான் க்ளூ. ஆளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்’’ என்ற ஷேர்லக் எஸ்கேப்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism