Published:Updated:

காக்டெய்ல்

காக்டெய்ல்

காக்டெய்ல்

காக்டெய்ல்

Published:Updated:
நடப்பு
காக்டெய்ல்
 

யூலிப்புக்கு செக்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காக்டெய்ல்

யூ னிட் லிங்க்ட் இன்ஷூரன்ஸ் பாலிசி (யூலிப்) என்ற வகை இன்ஷூரன்ஸ் பாலிசியை வாங்கச்சொல்லி, இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பலவும் கூவிக்கொண்டு இருக்கின்றன. காரணம், இந்தவகை பாலிசிகளுக்கு ஜூலை ஒன்றாம் தேதிமுதல் பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது ஐ.ஆர்.டி.ஏ!

ஏன் இத்தனை கெடுபிடிகளை ஐ.ஆர்.டி.ஏ போடுகிறது?

வழக்கமான இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் இருந்து மாறு பட்டது இந்த யூலிப்! இதில் கட்டப்படும் பிரீமியத்தில் ஆயுள் பாதுகாப்புக்கு ஒதுக்கப்படும் தொகை மிகக்குறைந்த அளவுதான். பெருமளவு தொகையை ஷேர் மற்றும் கடன் மார்க்கெட்டில் முதலீடு செய்கிறார்கள். அதனால், அதிகமாக லாபம் கொடுக்கக்கூடிய பாலிசி என்று நம்பிக்கை தரும் யூலிப், நஷ்டமும் கொடுக்கக்கூடும். பாலிசிதாரர் இறந்துவிட்டால் ஆயுள் காப்பீட்டுத் தொகை குறைவாக இருக்கக்கூடிய ரிஸ்க் உள்ளது இந்த வகை பாலிசி.

இதனால்தான், பாலிசிதாரர்களின் பணத்தின் பாதுகாப்பையே முக்கிய நோக்கமாகக்கொண்டு செயல்படும் ஐ.ஆர்.டி.ஏ கட்டுப்பாடுகளைக் கொண்டுவருகிறது. யூலிப் திட்டங்களுக்கு குறைந்தபட்சம் ஐந்து வருடம் லாக் \ இன் பீரியட், மூன்று வருடங்களுக்குப் பின்தான் சரண்டர் வேல்யூ என்பது போல சில வரையறைகளை வகுத்துக் கொடுத்திருக்கிறது.

‘இன்ஷூரன்ஸ் என்பது நீண்டகால முதலீடு, அதை மார்க்கெட்டில் முதலீடு செய்யும் கருவியாக மாற்ற விடக் கூடாது’ என்ற எண்ணத்தில் இந்த வரையறைகள் அமலாக்கப்படுகின்றன. இன்னும் 15 நாட்களில் புதிய வரையறைகள் வரப் போகின்றன என்பதால், இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் யூலிப் திட்டங்களை வேகமாக விற்க முனைந்துள்ளன.

பெட்ரோல் விலை...

தனியாவுக்கும் பாதிப்பு...

காக்டெய்ல்

‘‘பெ ட்ரோல், டீசல் விலை உயர்வு அனைத்துத் தரப்பினரையும் கதிகலங்க வைத்திருக்கிறது. இதில், முதலில் பாதிப்பு, எங்களைப் போன்ற வியாபாரிகளுக்குதான். வெளிமாநிலங்களில் இருந்து வரும் தனியா போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட மளிகைப் பொருட்களின் விலை எகிற வாய்ப்பிருக்கிறது. ஏற்கெனவே, இந்த மாதத்தில் பள்ளிக்கூடச் செலவுகளால் மக்களின் வாங்கும் திறன் குறைந்திருக்கிறது.

இந்நிலையில் போக்குவரத்துச் செலவு உயரும் காரணங்களால், மக்கள் கடைக்கு வரத் தயங்குவார்கள். ஆனாலும், எங்கள் லாபத்தைக் குறைத்துக்கொண்டு வியாபாரத்தை இழுத்துப்பிடித்து ஓட்ட வேண்டியதுதான். பெட்ரோல் விலை உயர்வு பாதிப்புதான்’’ என்றார் தமிழ்நாடு மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் சொரூபன்.

தக்காளிக்கும் பாதிப்பு!

காக்டெய்ல்

‘‘கா ய்கறி வியாபாரத்திலும் இந்த பெட்ரோல் விலையேற்றம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்’’ என்றார் கோயம்பேடு மொத்த காய்கறி விற்பனையாளர் சங்கச் செயலாளர் சந்திரன்.

‘‘ஏற்கெனவே உச்சத்தில் இருந்த தக்காளி விலை, கடந்த வாரத்தில் கொஞ்சம் இறங்கி, 12 ரூபாய்க்கு வந்தது. ஆனால், வடமாநிலங்களில் பெய்த மழையால் மீண்டும் 20 ரூபாய்க்குப் போய்விட்டது.

வெங்காயம் விலை இன்னும் குறைந்து, கிலோவுக்கு இரண்டு ரூபாய்க்கு வரக்கூட வாய்ப்பு இருக்கிறது. மற்ற காய்கறி விலைகளில் பெரிய மாற்றங்கள் இருக்காது’’ என்றார் சந்திரன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism