Published:Updated:

தொழில் ஆர்வம் இருக்கிறதா... ஐடியா தரத் தயார்!

தொழில் ஆர்வம் இருக்கிறதா... ஐடியா தரத் தயார்!

தொழில் ஆர்வம் இருக்கிறதா... ஐடியா தரத் தயார்!

தொழில் ஆர்வம் இருக்கிறதா... ஐடியா தரத் தயார்!

Published:Updated:
தொழில்
தொழில் ஆர்வம் இருக்கிறதா... ஐடியா தரத் தயார்!
 

தொழில் ஆர்வம் இருக்கிறதா...

ஐடியா தரத் தயார்!

‘‘ஏ தாவது தொழில் செய்து நாமும் சம்பாதிக்கவேண்டும் என்று மனது முழுக்க ஆசை இருக்கிறது. ஆனால், என்ன தொழில் செய்வதென்றுதான் புரியவில்லை. வீட்டில் இருந்தபடியே செய்வதற்கு நல்ல தொழில் வாய்ப்பு ஏதுமிருக்கிறதா..?’’ என்று நம் அலுவலகத்துக்கு அடிக்கடி போன் செய்துகொண்டே இருக்கிற வாசகிகளுக்காக களத்தில் இறங்கினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொழில் ஆர்வம் இருக்கிறதா... ஐடியா தரத் தயார்!

‘‘வழி இருக்கிறதே..! சாதாரணப் பெண்களைக்கூட சாதனைப் பெண்களாக மாற்ற திட்டம் இருக்கிறது’’ என்று ஆர்வத் தோடு வரவேற்றார், டான்ஸ்டியா-எஃப்.என்.எஃப் சேவை மைய இயக்குநர் சரஸ்வதி. கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள இந்த மையம், பெண் தொழில் முனைவோருக்கு வழங்கி வரும் திட்டங்கள் பற்றியும் சொல்ல ஆரம்பித்தார்.

‘‘பெண்கள் பல துறைகளிலும் காலூன்றி சாதித்துக் கொண்டிருந்தாலும் தொழில் ஒன்று ஆரம்பிக்கவேண்டும் என்றால், இன்னமும் முதலீட்டுக்கு தந்தை அல்லது கணவரைச் சார்ந்திருக்க வேண்டி இருக்கிறது. இதனால் அவர்களுக்குப் பயன்படும் வகையில், 50 ஆயிரம் முதல் 3 லட்சம் ரூபாய் வரையிலான முதலீட்டுத் திட்டங்களைத் தந்து உதவுவதோடு, கடனுக்கும் ஏற்பாடு செய்கிறோம். வசதியிருக்கும் பட்சத் தில் அவர்கள் அதிக முதலீட்டிலும் தொழில் ஆரம்பிக்கலாம்’’ என்றார் சரஸ்வதி.

தொழில் ஆர்வம் இருக்கிறதா... ஐடியா தரத் தயார்!

‘‘தொழில் தொடங்க ஆர்வம் காட்டும் பெண்களுக்கு ஓர் உந்துதல் தேவைப்படுகிறது. தயக்கங்களை விட்டு வெளியே வரவைக்க அவர் களுக்கு கவுன்சிலிங் நடத்துகிறோம். இது, ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமை மாலை இரண்டு மணி முதல் ஐந்து மணி வரையில் எங்கள் அலுவலகத்தில் நடக்கும். அப்போது, சுயதொழில் செய்ய விரும்பும் பெண்ணிடம் கன்சல்டன்ட் ஒருவர் இயல்பாகப் பேசி, அவரின் தொழில் ஆர்வம், முன் அனுபவம், நிதி வசதி போன்ற வற்றை அறிந்துகொள்வார். அவருக்கேற்ற தொழிலைத் தேர்ந்தெடுக்க ஆலோசனைகள் தருவார். கிட்டத்தட்ட இதுபோன்ற 250 கன்சல்டன்ட்கள் எங்களிடம் இருக்கிறார்கள். பெண்களுக்கு பொருத்தமானது என்று நூற்றுக்கும் மேற்பட்ட தொழில்களைத் தேர்வுசெய்து வைத்து வைத்திருக்கிறோம். இத்தொழில் கள் தொடர்பான ஐடியாக் களையும் திட்ட அறிக்கையாக தயார் செய்து வைத்திருக்கிறோம். அவர்கள் ஆர்வம் காட்டும் துறைக்கேற்ற பிராஜெக்ட் ரிப்போர்ட் வழங்குகிறோம்’’ என்றார்.

தனிநபர்களின் முதலீடு - பட்ஜெட் டுக்கு ஏற்ற தொழிலுக்கான புதிய யோசனைகளையும் தருகிறார்கள். மேலும், வங்கிகளிடமிருந்து கடன், வருமான வரி, விற்பனை வரி, ஐ.எஸ்.ஓ சான்றிதழ், டிரேட் மார்க் பதிவு போன்ற பணிகளை மேற்கொள்ளவும் உதவி அளிக்கிறார்கள்.

தொழில் ஆர்வம் இருக்கிறதா... ஐடியா தரத் தயார்!
தொழில் ஆர்வம் இருக்கிறதா... ஐடியா தரத் தயார்!

பெண்கள் முக அழகுக்கான 100% மூலிகைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘ஹெர்பல் ஃபேஸ் பேக்’ தயாரித்து விற்பனை செய்துவரும் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த லலிதா, டான்ஸ்டியா -எஃப்.என்.எஃப் சேவை மையம் மூலமாகப் பயன் அடைந்திருக்கிறார்.

‘‘என்கைப்பக்குவத்தில் தயாரான 16 வகை மூலிகை களைக் கொண்ட ‘ஹெர்பல் ஃபேஸ் பேக்’ ஒன்றை உருவாக்கினேன். அதற்கு அதிக அளவில் ஆர்டர்கள் கிடைக்க வழி செய்ததோடு, தங்கள் வெப்சைட்டில் வெளி யிட்டு, ஏற்றுமதி வாய்ப்பு கிடைக்கவும் அந்த அமைப்பினர் உதவினார் கள்’’ என்கிறார் லலிதா.

அதேபோல, சென்னை அம்பத்தூரில் மசாலா பொடி மற்றும் ரெடிமிக்ஸ் என அறுபதுக்கும் மேற் பட்ட உணவு வகைகளை தயாரித்து இலங்கை, கனடா, ஆஸ்திரேலி யாவுக்கு ஏற்றுமதி செய்து வரும் ஜே.கே இன்டர் நேஷனல் நிறுவனத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமியும் இந்த அமைப்பின் உதவி பெற்றவர்தான்.

‘‘தொழிலை விரிவாக்கம் செய்ய வங்கிக் கடன் வாங்கவும், அதற்கான பிராஜெக்ட் தயாரிக்கவும் டான்ஸ்டியா எஃப்.என். எஃப் சேவை மையம் எங்களுக்கு உதவி செய்தி ருக்கிறது. மையத்தில் ஆலோசனை பெற்ற ஒருவர் தொடர்ந்து தொழிலில் எந்த நிலையில் இருக் கிறார்... ஏற்ற இறக்கங்களை அறிந்து அவருக்கு ஆலோசனை, உதவி ஏதாவது தேவைப்படுமா? என்று அடிக்கடி அக்கறையோடு விசாரித்து தேவைப்படும்போது உதவியும் செய்வது, ஊக்கம் தருவதாகவும் இருக்கிறது’’ என்கிறார் ஜெயலட்சுமி.

எங்கே கிளம்பிவிட்டீர்கள்... தொழில் ஆலோசனை கேட்கவா...? ஆல் த பெஸ்ட்!

இதோ, தொழில் பட்டியல்!

மிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் ( TANSTIA ), ஜெர்மனியில் உள்ள ஃபெட்ரிக் நாமன் ஃபவுண்டேஷன் ( FNF ) இணைந்து சிறு மற்றும் குறுந்தொழில்களுக்குச் சேவை அளிக்க தொடங்கப்பட்டதுதான் டான்ஸ்டியா-எஃப்.என்.எஃப் சேவை மையம். உலக அளவில் 80 நாடுகளில் எஃப்.என்.எஃப் இயங்கிவருகிறது. இந்தியாவில் சென்னையில் மட்டுமே செயல்படுகிறது.

இந்தியாவில் இங்கு மட்டுமே...!

களிர் சுய உதவி குழுக்கள், தனிப்பட்ட பெண்கள், தொழில் தொடர்பான தங்களது சந்தேகங்களை தெரிவித்து கடிதம் அனுப்பினால், மையத்தின் மூலம் பதில் அனுப்பப்படுகிறது. இயந்திரங்கள், மூலப் பொருட்கள் கிடைக்குமிடங்கள், அவற்றின் விலை விவரம், தொழில் நுட்பம், சந்தை வாய்ப்புகள் போன்ற தகவல்கள் இங்கே கிடைக்கின்றன.

இந்த அமைப்பு வழங்கும் ஆலோசனை மற்றும் உதவிக்கு மிகக் குறைந்த கட்டணமே பெறப்படுகிறது. உதாரணமாக, கவுன்சிலிங்குக்கு ஐம்பது ரூபாய், திட்ட அறிக்கைக்கு நூறு ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

அகர்பத்தி, செயற்கை மலர்கள், கடலை மிட்டாய், சாக்பீஸ், டிடர்ஜென்ட் கேக், பால் பண்ணை, எமர்ஜென்ஸி விளக்குகள், உரக் கலவை, சத்து மாவு, கவரிங் நகைகள், சணல் பைகள், ஹவாய் செருப்புகள், மூலிகை தைலம், பின்னலாடை, வாழ்த்து அட்டை, ஷூ பாலிஷ், மசாலா பொடி, தையல் கடை, மெழுகுவத்திகள், மரப் பெட்டிகள், திரவ சோப்பு, சொட்டு நீலம், சிறு அச்சகம், நகப் பூச்சு, மொஸைக் டைல்ஸ், நோட் புக், அலங்கார மீன், உலர் பழங்கள், மோர் பாக்கெட், பேப்பர் கப், ஊறுகாய் வகைகள், பிளாஸ்டிக் பொம்மை... இப்படித் நீள்கிறது பெண்களுக்கான தொழில் பட்டியல்!


தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism