Published:Updated:

ஊரில் நிகழ்ச்சி... பாக்கெட்டில் மகிழ்ச்சி!

ஊரில் நிகழ்ச்சி... பாக்கெட்டில் மகிழ்ச்சி!

ஊரில் நிகழ்ச்சி... பாக்கெட்டில் மகிழ்ச்சி!

ஊரில் நிகழ்ச்சி... பாக்கெட்டில் மகிழ்ச்சி!

Published:Updated:
தொழில்
ஊரில் நிகழ்ச்சி... பாக்கெட்டில் மகிழ்ச்சி!
 


ஊரில் நிகழ்ச்சி...

பாக்கெட்டில் மகிழ்ச்சி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஊரில் நிகழ்ச்சி... பாக்கெட்டில் மகிழ்ச்சி!

த்து பேர் கலந்துகொள்ளும் குடும்ப விழாவாக இருந்தாலும் சரி, பத்தாயிரம் பேர் கூடும் பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் ஏற்பாடுகள் என்பது ஒரேமாதிரிதான்... முன்பெல்லாம் பெரிய கல்யாணத்தையே குடும்பத்தினர் ஒன்றுகூடி நடத்தி முடித்துவிடுவார்கள். ஆனால், இன்று சின்ன பர்த்டே பார்ட்டியாக இருந்தால்கூட ஏற்பாடு களுக்கென்று பல ஆட்களைத்தான் நாடுகிறார்கள். அதனால், இப்படி விழா ஏற்பாடு செய்வது என்பதே இப்போது பலருக்கும் நல்ல தொழிலாகி விட்டது.

ஊரில் நிகழ்ச்சி... பாக்கெட்டில் மகிழ்ச்சி!

மொத்தமாகச் செய்ய முடியாவிட்டாலும் விழாவுக்குத் தேவைப்படும் விஷயங்களைத் தனித்தனியே வைத்துக்கொண்டு தொழில் நடத்தலாம். அதற்கு சில டிப்ஸ்கள் இதோ!

நல்ல பிஸியான, எளிதான போக்குவரத்து வசதி உள்ள இடத்தில் உங்களுக்கு இடமோ அல்லது கட்டடமோ இருந்தால் அதை ‘பார்ட்டி ஹால்’ ஆக மாற்றி வாடகைக்கு விடலாம். உங்கள் வீடே அப்படி ஒரு இடத்தில் இருந்தால், உங்கள் வசதிக்கு ஏற்றபடி வீட்டைக் கொஞ்சம் மாற்றிக்கொண்டு வீட்டின் கீழ்த்தளத்தையோ அல்லது மாடியையோ பார்ட்டிகளுக்கு வாடகைக்கு விட்டு வருமானம் பார்க்கலாம்!

‘‘ஃபங்ஷன் நடக்கும் இடங்களைத் தேடுவோர் ‘தாங்கள் அழைக்கும் அனைவரும் வந்துசெல்லும் வகையில் வசதியான ஏரியாவாக இருக்கிறதா?’ என்றுதான் பார்க்கிறார்கள். அப்படி ஒரு இடத்தில் உங்களால் குறைந்தபட்சம் நூறு பேர் இருக்கும் அளவுக்கு ஹாலை உருவாக்க முடிந்தால், சுளையாக நிகழ்ச்சிக்கு ஆயிரம் ரூபாய்க்குக் குறையாமல் வாடகை பெறமுடியும். சென்னை, திருச்சி, மதுரை, கோவை போன்ற பெரிய நகரங்களில் தாராளமாக மாதத்துக்கு இருபது நிகழ்ச்சிகள்வரை நடத்த முடியும். வாடகையைத் தவிர மின்சாரம், தண்ணீர் போன்றவற்றுக்குக் கூடுதலாக கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம். அதேபோல, சேர்கள் மற்றும் கேட்டரிங் பாத்திரங்களையும் வாங்கி வைத்து வாடகைக்கு விடலாம். இதனால் கூடுதல் வருமானம் வருவதற்கு வழி ஏற்படுத்திக் கொள்ளலாம்’’ என்றார் சென்னையில் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு இடத்தை வாடகைக்குக் கொடுக்கும் தேவராஜ்.

அவரே தொடர்ந்து, ‘‘ஒன்றிரண்டு நிகழ்ச்சிகள் நடந்தாலே, இடத்தைப் பற்றி மக்களுக்கு எளிதில் தெரிந்துவிடும். கூடுதலாக அவ்வப்போது துண்டுப் பிரசுரங்கள் மூலம் விளம்பரமும் செய்து இடத்தைப் பிரபலப்படுத்தலாம்’’ என்றார்.

சென்னையில் உள்ள பல நிறுவனங்கள், வார இறுதி நாட்களில் அதிக அளவில் பார்ட்டிகள் நடத்துவதால், கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஏராளமான பார்ட்டி ஹால்கள் தேவைப்பட ஆரம்பித்திருக்கின்றன. அந்த ஏரியாவில் இடம் இருப்பவர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதுபோல உங்கள் பகுதியில் என்ன மாதிரியான நிகழ்ச்சிகள் நடக்கின்றன என்று பார்த்து, அந்தத் தேவைகளுக்கேற்றபடி பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ஊரில் நிகழ்ச்சி... பாக்கெட்டில் மகிழ்ச்சி!

விழாக்களில் பிரதானமாக இடம் பிடிப்பது விருந்துதான். உங்களுக்குச் சமைக்கும் கலை தெரிந்திருந்தால், விருந்து தயாரித்துக் கொடுத்து நல்ல வருமானம் பார்க்கலாம். நீங்கள் சிறு ஓட்டல் நடத்துபவராக இருந்தால், தேவையான ஆர்டர்களைப் பெற்று விழாக்களில் சப்ளை செய்யலாம். சிறு நிகழ்ச்சியாக இருந்தால் ஸ்வீட், சமோசா, கட்லெட் போன்ற ஸ்நாக்ஸ்களைக்கூட சப்ளை செய்யலாம். உணவு விஷயத்தில் பாதிக்கும் மேல் லாபம் நிச்சயம்!

நல்ல விருந்து சமைக்கத் தெரிந்தவர்களாக இருந்தால் வாடிக்கையாளரின் விருப்பத்துக்கு ஏற்ப விதவிதமாக சமைத்துக்கொடுத்து அசத்தலாம். விருந்து பறிமாறப்படும்போது கூடவே, விசிட்டிங் கார்டோ அல்லது உங்கள் விலாசம், தொலைபேசி எண்கள் அடங்கிய கார்டையோ கொடுத்தால், விழாவுக்கு வந்தவர்கள் தங்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு உங்களை அழைக்க வசதியாக இருக்கும். உங்களுக்கும் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கும்.

கேட்டரிங் தொழிலைச் செய்துவரும் கீதாகிருஷ்ணன் இதுபற்றிக் கூறும்போது, ‘‘ஃபங்ஷன் ஹால் வாடகைக்கு விடுகிறவர்களிடம் சொல்லி வைத்தாலே, அவர்கள் நம்மைப் பரிந்துரை செய்வார்கள். இதைப்போலவே, நிகழ்ச்சிக்கான பொருட்களை வாடகைக்கு விடுபவர்களைத் தெரிந்து வைத்திருக்கும்போது வாய்ப்புகள் கூடும்’’ என்றார்.

ஊரில் நிகழ்ச்சி... பாக்கெட்டில் மகிழ்ச்சி!

அலுவலக நிகழ்ச்சியாக இருந்தால் நிச்சயம் சவுண்ட் சிஸ்டம், எல்.சி.டி ப்ளேயர் போன்றவற்றின் தேவை அதிகமாக இருக்கும். அவற்றை வாடகைக்கு விடுவதன் மூலமும் நல்ல வருமானம் பார்க்கலாம்.

எல்.சி.டி புரஜெக்டர், ஸ்க்ரீன், ஒய்ட் போர்ட், கார்ட்லெஸ் மைக், ஸ்லைட் புரஜெக்டர், லேசர் பாய்ன்டர் போன்றவற்றை வாங்கி வைத்தால் கலந்துரையாடல், செமினார் போன்ற அலுவலக விழாக்களுக்கு வாடகைக்கு விடலாம். இதற்காக குறைந்தபட்சம், ஒரு லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யவேண்டி இருக்கும். ஆனால், இதற்கெல்லாம் அதிகமாக வாடகை வசூலிக்க முடியும் என்பதால், முதலீடு செய்த பணத்தை ஓராண்டிலேயே எடுத்து விட வாய்ப்புள்ளது.

சென்னையில் இதுபோன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாடகைக்கு விடும் முத்துவிடம் பேசியபோது, ‘‘மாதத்துக்கு குறைந்தது பத்து நிகழ்ச்சிகள் நடத்தினால்கூட இருபதாயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கலாம். இதுபோன்ற அலுவலக விழாக்களை பெரும்பாலும் ஓட்டல் களில்தான் நடத்துவார்கள் என்பதால், நகரில் உள்ள முக்கியமான ஓட்டல்களில் பேசி வைத்துக் கொண்டாலே நமக்கான ஆர்டர்கள் எளிதாகக் கிடைக்கும்’’ என்றார்.

இப்போதெல்லாம் நிகழ்ச்சிகளில் அலங்கார விஷயங்களுக்கு தனி கவனம் செலுத்தப்படுகிறது. அதிலும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் ஏதாவது ஒரு கருத்தின் அடிப்படையில் அலங்கரிப்பது ஃபேஷனாகி வருகிறது. பலூன், கேக் தொடங்கி குழந்தைகளின் டிரெஸ், நினைவுப்பரிசுகள் வரையில் எல்லாமே ஒரே வண்ணத்தில், ஒரேமாதிரியான கருத்தைச் சொல்லும் விதமாக அமைக்கப்படுகின்றன. அதற்கு ஏற்றமாதிரி புதுமையான ஐடியாக்கள் கொண்டவர்களாக இருந்தால் இந்தத் துறையில் பிரகாசிக்கமுடியும்.

ஊரில் நிகழ்ச்சி... பாக்கெட்டில் மகிழ்ச்சி!

சென்னையில் ‘கிரசன்டோ என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனத்தின் சங்கர் மற்றும் பரணி பேசும்போது, ‘‘சிறிய நிகழ்ச்சி என்றாலும் சினிமா செட்டிங் போல அலங்கரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் மக்கள்.

ஆனால், வெறும் பலூன்களைக் கொண்டு மட்டுமே அலங்கரித்தால்கூட, ஆயிரம் ரூபாய்வரை லாபம் பார்க்கலாம். அதிகபட்சமாக எந்த அளவுக்கு அலங்கரிக்கிறோமோ அந்த அளவுக்கு வருமானம் கிடைக்கும். பிறந்தநாள் போன்ற விழாக்களில் புதுப்புது மாடல்களில் தெர்மகோலில் பெயர்களை கட் செய்து கொடுத்து அசத்தலாம். கூடவே அலங்காரத்துக்குத் தேவைப்படும் பொருட்களை வாடகைவிட்டு கூடுதல் வருமானம் பார்க்க முடியும்’’ என்றார்.

சேர்களை வாடகைக்கு விடும் பிஸினஸை செய்து வரும் ஜானகிராமனிடம் பேசியபோது, வெறும் நாற்காலிகளை வாடகைக்கு விடுவதன் மூலம் மட்டுமே ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கமுடியும் என்ற ஆச்சர்யம் புரிந்தது. ‘‘பிளாஸ்டிக் சேருக்கு ஒரு நாளைக்கு 4 ரூபாய் முதல் ஆறு ரூபாய் வரை வாடகை வசூலிக்கப்படுகிறது. இதுவே பிற வகையான சேர்களுக்கு அதன் அலங்காரத்தைப் பொறுத்து வாடகையும் உயர்ந்துகொண்டு போகிறது.

ஊரில் நிகழ்ச்சி... பாக்கெட்டில் மகிழ்ச்சி!

பொதுவாக நகரங்களில் ஐந்நூறு சேர் இருந்தாலேயே மாதம் இருபதாயிரம் ரூபாய் வரை கிடைக்கும். சேர் தவிர, ஷாமியானா துணி போன்றவை இருந்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும். சேர் வாடகைக்கு விடும்போது, ஏதாவது சேதாரம் என்றால் அதற்கான காசையும் அந்த நிகழ்ச்சி நடத்துபவர்களிடமே வசூலித்துவிட வேண்டும். சேரை வாடகைக்கு விடும்போது, கூடுதலாக ஒரு வண்டி இருந்தால், நிகழ்ச்சி நடக்கும் இடம் வரை சேர்களைக் கொண்டுசேர்த்து அதற்கென்று தனியே வாகன வாடகையையும் வசூலிக்கலாம்’’ என்றார் ஜானகிராமன்.

செமினார் நடக்கும்போது பேனா, பென்சில், குறிப்பேடுகள் போன்றவையும் தருவதால் ஸ்டேஷனரி பொருட்களும், லெதர் பேக், ஃபைல்களும் விற்பனை ஆகின்றன. இதற்காக நிறுவனத்தின் பெயர் அல்லது நிகழ்ச்சி நடத்துகிறவர்களின் பெயர் கூட அச்சிட்டு தருகிறார்கள். இதற்கு என்று மொத்தமாக ஆர்டர் பிடித்துக் கொடுப்பவர்களும் உண்டு.

ஃபங்ஷனுக்கு தேவைப்படும் புகைப்படம் எடுத்தல், வீடியோ கவரேஜ், வினைல் போர்டு பேனர், ஸ்நாக்ஸ், மலர்ச்செண்டு கொடுத்தல் மற்றும் அழைப்பிதழ் தயாரித்தல் என்று வெவ்வேறு பிஸினஸ் செய்து நல்ல காசு பார்க்கிறார்கள். பல பகுதிகளில் ஜெனரேட்டர் வாடகைக்குக் கொடுத்தும் வருமானம் பார்க்கிறார்கள்.

‘ஊர்ல கல்யாணம்... மார்ல சந்தனம்! என்பார்கள். அதுபோல, ஃபங்ஷன் எங்கே நடந்தாலும் அங்கே காசு பார்க்கவும் ஒரு வாய்ப்பிருக்கிறது என்று தெரிகிறது. மொத்தத்தில் ஃபங்ஷன் என்பது பணம் கொழிக்கும் தொழில்தான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism