Published:Updated:

பிஸினஸ் குட்டிக்கதை

பிஸினஸ் குட்டிக்கதை

பிஸினஸ் குட்டிக்கதை

பிஸினஸ் குட்டிக்கதை

Published:Updated:
தொழில்
பிஸினஸ் குட்டிக்கதை!
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிஸினஸ் குட்டிக்கதை

ளிச்சென்று சட்டை, சுத்தமான அயர்ன் செய்யப்பட்ட பேன்ட் என்று படு ஸ்டைலாக வந்திருந்தான் குமார். அவனுக்கு வேலை கிடைத்திருக்கிறது, ராஜா சூப்பர் மார்க்கெட்டில் சூப்ரவைசராக!

காலையில் சீக்கிரமே வந்துவிட்டான். அவனைப் பார்த்ததும் கடைதிறக்க வந்த முதலாளிக்கு சந்தோஷமாகிவிட்டது. ‘‘பரவாயில்லையே தம்பி... இவ்வளவு சின்ஸியரா இருக்கியே... உள்ளே வா... உன் வாழ்க்கை எங்கேயோ போகப்போகுது...’’ என்றபடி கையைப் பிடித்து கடைக்குள் அழைத்துச் சென்றார்.

சாமி படங்களுக்கு ஊதுவத்தி காட்டிவிட்டு, குமாருக்கும் திருநீறு கொடுத்து, தானும் பூசிக்கொண்டார் முதலாளி.

‘‘நல்லது தம்பி... ஏழரை ஒன்பது நல்ல நேரம். அதனால், இப்போதே வேலையை ஆரம்பிச்சுடு...’’ என்றபடி, மூலையில் இருந்த துடைப்பத்தை எடுத்துக்கொடுத்து, ‘‘நல்லா சுத்தமா கூட்டித் தள்ளிடு...’’ என்று சொல்லிவிட்டுத் திரும்பினார்.

குமாருக்கு திகைப்பாகிவிட்டது. ‘படித்த படிப்புக்குக் கொஞ்சம் கூட மரியாதை கொடுக்காமல், இப்படி துடைப்பத்தைக் கையில் கொடுத்துவிட்டாரே... சூப்ரவைசர் வேலைக்கு வந்தால், எடுபிடி ஆக்கிவிட்டாரே!’ என்ற வேதனையோடு நின்று கொண்டிருந்தான்.

‘‘என்ன தம்பி..?’’ என்றபடி திரும்பி வந்தார் முதலாளி.

‘‘இல்லே சார்... நான் பி.ஏ படிச்சிருக்கேன்...’’ என்று இழுத்தான் குமார்.

‘‘ஓ... அதனால், குப்பையைக் கூட்டறது எப்படினு தெரியாதா... தெரியாததைக் கேட்டு தெரிஞ்சுக்கறது தப்பில்லை. குடு, நான் சொல்லித்தர்றேன்...’’ என்று துடைப்பத்தை வாங்கி கூட்ட ஆரம்பித்துவிட்டார். கடையின் முதலாளி குப்பை கூட்டுகிறாரே... என்று மனம் பதறிவிட்டது குமாருக்கு. ‘‘குடுங்க சார்... நானே கூட்டறேன்...’’ என்று துடைப்பத்தை வாங்கினான்.

‘‘வெரிகுட்... நீ செய்யவேண்டிய வேலையை நான் செய்தவுடன் உனக்கு பதற்றம் வந்துச்சு இல்லையா... அதே மாதிரி, உனக்கு கீழே வேலை செய்றவங்க உன்னைப் பார்த்தவுடன் பதறணும். அதுக்கு நீ எல்லா வேலையிலும் கில்லாடியாக இருக்கணும். நாம் செய்யாமல்விட்டால், சூப்ரவைசர் செய்திடுவார்னு பயம் வரணும். அதனால், எல்லாவற்றையும் கத்துக்கோ...’’ என்று துடைப்பத்தைக் கையில் கொடுத்தார் முதலாளி.

குமார் உற்சாகமாகக் கூட்ட ஆரம்பித்தான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism