Published:Updated:

டிப்ஸ்!

டிப்ஸ்!

டிப்ஸ்!

டிப்ஸ்!

Published:Updated:
தொழில்
டிப்ஸ்!
 

டிப்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டிப்ஸ்!

செ ன்ற வாரம் சைதாப்பேட்டையில் இருந்த நண்பரைப் பார்க்க அவருடைய அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். அவரிடம் பேசிக்கொண்டிருந்த சமயம், மெக்கானிக் ஒருவர் தட தடக்கும் ஸ்கூட்டரில் வந்து, அதை நிறுத்திவிட்டு, நண்பரின் காரை கிளப்பிச் சென்றார்.

‘‘என்னங்க... புதுமையான எக்ஸ்சேஞ்ச் ஆஃபரா இருக்கு..!’’ என்றேன் கிண்டலாக. ‘‘நீ வேற! வந்தவரு நம்ம ரெகுலர் மெக்கானிக். காரை சர்வீஸ் செய்ய எடுத்துட்டுப் போறார். தொழில்ல பிஸியா இருக்கிறதால, என்னால வண்டிய சரியான நேரத்திலே சர்வீஸுக்குக் கொடுக்க முடியறதில்லை. இந்த மெக்கானிக், எனக்கு வசதிப்பட்ட நேரமா வந்து எடுத்துக்கிட்டுப் போய், சர்வீஸ் பண்ணிக் கொடுத்துடுவார். அதுக்குத் தனியே கொஞ்சம் சர்வீஸ் சார்ஜ் போடுவார். நமக்குத் தொல்லையில்லாம வண்டிக்கு ஒரு வேலை முடியுதே! அதுக்காக, அந்தக் காசைத் தரலாம்!’’ என்றார்.

இந்த அன்பான அணுகுமுறையால் கஸ்டமர்கள் கையை விட்டுப் போகாமல் இருப்பார்கள் என்பதோடு, நான்கு நண்பர்களுக்கும் அறிமுகம் செய்து வைப்பார்கள். இது அந்த மெக்கானிக்குக்கும் தொழில் வட்டம் பெருகும் வாய்ப்புதானே! டூ-வீலர், கார் மெக்கானிக்குகளே, இந்த டெக்னிக்கைப் பின்பற்றி கூடுதல் வருமானம் பாருங்களேன்!

- பொன்னரசன், சென்னை-6.

டிப்ஸ்!

டீ க்கடைக்காரர்களே, சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே இருக்கிறது. இதனாலேயே அவர்கள் வெளி இடங்களில் டீ, காபி குடிக்கத் தயங்குவார்கள். சிலர் சர்க்கரை இல்லாத டீ வாங்கிக் குடிப்பார்கள். இவர்களுக்கென்று ‘சுகர் ஃப்ரீ’ என்ற லிக்விட், மாத்திரை உள்ளது. இதனை வாங்கி வைத்துக்கொண்டு ‘சர்க்கரை நோயாளிகளுக்கு சுகர் ஃப்ரீ டீ கிடைக்கும்’ என்ற வாசகம் அடங்கிய போர்டை முகப்பில் கட்டித் தொங்கவிடுங்கள். இந்த ஸ்பெஷல் டீக்கென சிறிது கூடுதல் காசும் வாங்கலாம்... புதிய வாடிக்கையாளர்கள் வர ஆரம்பித்து விடுவார்கள். உங்களுக்குக் கூடுதல் வருமானத்துக்கு வழியாக இருக்கும்.

- செ.பிரமநாயகம், திருப்பூர்.

டிப்ஸ்!

கு ம்பகோணம் வெத்தலை, பத்தமடை பாய், காஞ்சிப் பட்டு, கோவில்பட்டி கடலை மிட்டாய்... என்று உங்கள் ஊரில் ஏதாவது பிரசித்தி பெற்ற பொருள்கள் கிடைக்குமா? இருந்தால் அதில் வருமானம் பார்க்க ஒரு வழி இருக்கிறது.

சமீபத்தில் கோவையிலிருந்து நெல்லை சென்றேன். கடை வைத்திருக்கும் என் நண்பர், ‘திரும்பி வர்றப்போ, 25கிலோ அல்வா வாங்கிட்டு வா!’ என்றார். சிரமப்பட்டு தூக்கிச்சென்று நண்பரிடம் தந்தேன். ‘அது அவரது தனிப்பட்ட உபயோகத்துக்கு’ என்று நான் நினைத்திருக்க, அவரோ அதை, கிலோவுக்கு 40 ரூபாய் லாபம் வைத்து விற்றார். லாபத்தில் பாதி எனக்கு. 500 ரூபாய்!

நண்பர்களே... ஊரின் சிறப்போடு வெளியூர் செல்லுங்கள்... லாபம் அள்ளுங்கள்!

- உதயா, நெல்லை.

டிப்ஸ்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism