Published:Updated:

சீட்டுக் கட்டி சேமிக்கலாமா?

சீட்டுக் கட்டி சேமிக்கலாமா?

சீட்டுக் கட்டி சேமிக்கலாமா?

சீட்டுக் கட்டி சேமிக்கலாமா?

Published:Updated:
சேமிப்பு
சீட்டுக் கட்டி சேமிக்கலாமா?
 

 

சீட்டுக்கட்டி சேமிக்கலாமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சீட்டுக் கட்டி சேமிக்கலாமா?

ரா ஜசேகர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர். நடுத்தர பதவி... நடுத்தர வசதி. ஆமாம், அவருக்கு எல்லாமே நடுத்தரம்தான். முயன்று கொண்டிருக்கிறார் மேலே வந்து விடுவதற்கு. அதேசமயம், சமாளித்துக்கொண்டும் இருக்கிறார் கீழே விழுந்துவிடாமல் இருப்பதற்கு!

வாங்குகிற சம்பளம் கைக்கும் வாய்க்குமே சரியாக இருக்கிறது என்ற நிலை. குழந்தைகளின் படிப்புச் செலவு, அவசர மருத்துவ தேவைகள் என்று எல்லாவற்றுக்குமே திண்டாடக் கூடிய நிலையில்தான் இருக்கிறது அவருடைய வாழ்க்கை!

‘‘என்னப்பா... இப்படியே சொல்லிக்கிட்டு சேமிப்பே இல்லாமல் வாழ்ந்தால், நாளைக்கு உன் குழந்தைகளுக்குதான் கஷ்டம். ஒரு சீட்டு கீட்ல சேர்ந்து காசைச் சேர்க்கப்பாரு. பணம் சேர்ந்த துன்னா, உருப்படியா தங்கமோ, நிலமோ வாங்கிப் போடலாமில்லே...’’ என்று நண்பர் வில்வநாதன் சொல்ல, ராஜசேகரும் சேமிக்க முடிவெடுத்தார். அதை உடனடியாகச் செயல்படுத்தவும் செய்தார்.

ராஜசேகருடைய மாதச் சம்பளம் ஐயாயிரத்து சொச்சம். ஆனால், மாதம் 2,000 ரூபாய் செலுத்தக் கூடிய சேமிப்புச் சீட்டில் சேர்ந்தார். சேமிக்கச் சொன்ன வில்வநாதனுக்கே ஆச்சரியம்! ராஜசேகரால் எப்படி இவ்வளவு பெரிய தொகையைச் சேமிக்க முடியுமென்று!

சீட்டுக் கட்டி சேமிக்கலாமா?

ஆனால், ராஜசேகர் பேசுவதில் சமர்த்தர். ‘‘இத்தனை நாள் சேமிக்காமல் விட்டதைப் பிடிக்க வேண்டாமா... அதற்கான திட்டம்தான் இது. 2,000 ரூபாய் சீட்டு என்றாலும் ஏலத் தள்ளு போக 1,400 ரூபாய் ரேஞ்சுக்குதானே வரும். நான் ஒரு திட்டத்தோடுதான் போயிட்டிருக்கேன்’’ என்றார் கண்களைச் சிமிட்டியபடி.

இரண்டாயிரம் ரூபாய் சீட்டு. 15 மாதங்கள் கட்ட வேண்டும். முதல் மாதம் கட்டிவிட்டார். அடுத்தமாதம் தேவைப்படுகிறது என்று போட்டி போட்டு, 7,000 ரூபாய் ஏலத்தில் தள்ளி எடுத்தார்.

30,000 ரூபாய் சேமிக்கும் திட்டத்தில், இரண்டாம் மாதமே 9,000 ரூபாயை தள்ளி, 21,000 ரூபாயைக் கையில் வாங்கிவிட்டார்.

மனசெல்லாம் மகிழ்ச்சி. இந்தப் பணத்தை அப்படியே விதவிதமாக முதலீடு செய்து பணத்தை இரட்டிப்பாக்குவது அவருடைய திட்டம். ஆனால், பணம் வந்ததும் செலவுகள் வந்தன. சில சில்லரை ரிப்பேர். பின்பு பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் துணிமணிகள். ஒரு சின்ன இன்பச் சுற்றுலா!

‘எல்லாம் செய்யவேண்டிய செலவுகள்தானே. செய்யாமல் எப்படி?’ என்று மனதைச் சமாதானம் செய்துகொண்டார். கையில் இருந்தது 15,000 ரூபாய். அதற்குள் அடுத்த மாதம் வந்துவிட்டது. அடுத்த தவணை சீட்டு கட்ட வேண்டும். தள்ளு போக 1,400 ரூபாய்தான் கட்டவேண்டி வந்தது.

‘‘பார்த்தாயா? எவ்வளவு மிச்சம்? அதான் சீட்டு என்பது. ரூபாய் 2,000 கட்ட வேண்டியதற்கு பதில் 1,400தான் கட்டுகிறோம்’’ என்றார் வில்வநாதனிடம். கையில் இருந்ததில் இருந்து சரியான நேரத்தில் 1,400 ரூபாய் கட்டினார்.

‘‘அதுசரி... தள்ளி எடுத்தாயே, அந்த 9,000 உனக்கு நஷ்டம்தானே!’’ என்றார் வில்வநாதன்.

‘அங்கதான் நீ இந்த ராஜசேகரைப் புரிஞ்சுக்கல. தள்ளு போனது எவ்வளவு? 9,000 ரூபாய்தானே, சீட்டு முடியறதுக்குள்ள அதை எப்படிப் பிடிக்கிறேன் பார்.’’

‘‘அதைப் பிடிக்கிறது இருக்கட்டும். இப்போ நிறைய செலவழிச்சிட்டியே... அது?’’

‘‘கம்னு என் திட்டங்களைப் பாரு... என் புத்திசாலித்தனம் என்னனு காட்டறேன். நம்ம நண்பன் மோகன் வந்திருக்கான். அவன் அறிவுரைப்படி, சில பங்குகளை வாங்கப் போறேன். ஒரு மாசத்துல எல்லாம் டபுள்தான்’’

‘‘ஆக... சார் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்போறீங்க.’’

‘‘யெஸ், மிஸ்டர் வில்வநாதன்!’’ என்று ஓவர் நம்பிக்கையுடன் சொன்ன ராஜசேகர், சரியான ஆலோசனையின் பேரில்தான் பங்குகளை வாங்கினார். ஆனால், இரண்டு மாதத்துக்குள் பணத்தை எடுக்க முடியவில்லை. சந்தையில் சரிவு ஏற்பட்டுவிட்டது. ஏதோ சர்வதேச காரணங்கள் என்றார்கள். இன்னும் என்னென்னவோ சொன்னவர்கள், காத்திருக்க வழியில்லை என்று பங்குகளை விற்றுவிடச் சொன்னார்கள். இப்படியாக முடிந்தது அந்தக்கதை. பங்குகளை விற்று வந்த பணம் 7,000 ரூபாய்க்கும் கொஞ்சம் அதிகம்.

இன்னும் 9 மாதங்கள் சீட்டுப்பணம் கட்டியாக வேண்டும். கையில் இருப்பதோ 7,000 ரூபாய்தான். ஆனது ஆகட்டும், பேசாமல் பெண்ணுக்கு ஒரு மோதிரமாவது வாங்கிவிடலாம் என்று மிச்சப்பணத்துக்கு ஒரு மோதிரம் வாங்கிவிட்டார் ராஜசேகர். எங்கே தவறு நேர்ந்தது, ஒருவேளை தனக்கு நேரம் சரியில்லையா என்று பார்ப்பதற்கு ராஜசேகர் ஒரு ஜோசியரிடம் போனார். அதில் ஐநூறு ரூபாய் செலவு!

சேமிக்கவேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு சேமித்த பணத்தை அவசியமில்லாத தேவைகளுக்கு செலவழிக்கக் கூடாது என்பதும் முக்கியம்.

சேமித்த பணத்தை முறையாக முதலீடு செய்ய வேண்டும் என்பது உண்மைதான். அதற்காக, அந்த முதலீடு அடுத்த நாளே லாபம் சம்பாதித்துத் தரும் என்ற பேராசையில், சிந்திக்காமல் முதலீடு செய்யக் கூடாது.

தன் தகுதிக்கு ஏற்ற அளவில்தான் சேமிக்க வேண்டும். அளவுக்கு மீறி சேமிக்க ஆசைப்பட்டால் சிக்கல்தான்!

இவையெல்லாம் ராஜசேகர் நமக்குக் கற்றுத்தந்த பாடங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism