Published:Updated:

வாடகை வீடா... சொந்த வீடா..?

வாடகை வீடா... சொந்த வீடா..?

வாடகை வீடா... சொந்த வீடா..?

வாடகை வீடா... சொந்த வீடா..?

Published:Updated:
சிக்கனம்
வாடகை வீடா... சொந்த வீடா..?
 


வாடகை வீடா... சொந்த வீடா..?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாடகை வீடா... சொந்த வீடா..?

ந்தத் தலைப்பில் பட்டிமன்றமே நடத்தலாம். ‘சொந்த வீடு வாங்கி மாதாமாதம் இ.எம்.ஐ கட்டுவது நல்லதா அல்லது வசதிக்கு ஏற்றபடி வாடகை வீட்டிலேயே இருப்பது நல்லதா..?’ என்று மக்களிடம் இருக்கிற குழப்பம், ‘கன்னித்தீவு’ சப்ஜெக்ட்!

வாடகை வீடா... சொந்த வீடா..?

ஒரு அலுவலகத்தில், ஒரே செக்ஷனில் வேலை பார்க்கும் மூர்த்திக்கும் ரவிக்கும் இடையே நடக்கும் உரையாடலைக் கவனியுங்கள்... நீங்கள் தான் தீர்ப்பு சொல்லப்போகும் பட்டிமன்ற நீதிபதி. அதனால், கொஞ்சம் கூர்ந்து ஆழ்ந்து கவனியுங்கள்!

முதலில் பேச ஆரம்பித்தார் மூர்த்தி, ‘‘ஹவுஸ் ஓனர் வீட்டை காலி பண்ணச் சொல்லிவிட்டார். வேற நல்ல வீடா தேடிட்டு இருக்கேன். உனக்குத் தெரிஞ்ச வீடு ஏதும் இருந்தா சொல்லுப்பா!’’

‘‘அடடே... நல்ல நேரத்திலே கேட்டே... எங்க அபார்ட்மென்டிலேயே ஒரு ஃப்ளாட் காலியா இருக்கு. அந்த ஃப்ளாட் ஓனர் வெளிநாட்டுல இருக்கார். வாடகையை பேங்க்லயே கட்டலாம்’’ என்று சொன்ன ரவி,

‘‘ஏம்பா மூர்த்தி... இன்னும் எத்தனை நாளைக்குதான் இப்படி சட்டியையும், பெட்டியையும் தூக்கிட்டு வாடகை வீடு தேடி அலைவே... பேசாமல், பேங்க் லோன் போட்டு, என்னை மாதிரி சொந்தமா வீட்டை வாங்கிட வேண்டியதுதானே?’’ என்று யோசனையும் சொன்னார்.

‘‘சொந்த வீடா..? அட போப்பா, இருக்கறவனுக்கு ஒரு வீடு, இல்லாதவனுக்கு உலகமே வீடு! என் ஆபீஸ் வசதிக்காக, இங்கே ஒரு வீட்டில் இருந்தேன். அடுத்து குழந்தைகள் ஸ்கூலுக்காக, அவங்களுக்கு வசதியான வேற வீட்டுக்கு மாறினேன். அப்பாவை ஆபரேஷனுக் காக கூட்டிட்டு வந்திருந்தப்போ, ஆஸ்பத்திரி பக்கத்தில் ஒரு வீட்டுக்குப் போனேன். சொந்த வீடு வாங்கினால், இப்படி நம்ம வசதிக்கேத்த மாதிரி மாறமுடியுமா?’’ என்று லாஜிக் பேசினார் மூர்த்தி.

‘‘நியாயம்தான்... ஆனால், உனக்கு வசதியான வீடாக இருந்தாலும் ஹவுஸ் ஓனர் காலி பண்ணச் சொன்னால் நீ காலி பண்ணித்தானே ஆகணும். அதோடு, வருஷா வருஷம் ஏறிக்கொண்டே போகும் வாடகை உனக்கு செலவுதானே... அதைவிட, லோன் காலம் முழுக்க ஒரே அளவிலான தவணை கட்டிட்டே வந்தா, கடன் ஒருபக்கம் அடையும். வாடகைச் செலவும் மிச்சம்தானே!’’ என்றார் ரவி.

‘‘வாடகை ஏறும், ஒப்புக்கறேன். ஆனா, அப்போது எல்லாம் நம் வசதிக்கு ஏற்றமாதிரியும் ஏறுகிற சம்பளத்துக்கு தகுந்த மாதிரியும் தானே வீட்டைத் தேர்ந்தெடுக்கிறோம். இன்னிக்கு இருக்கிற வசதிக்கு ஏத்த சொந்த வீடு வாங்கிட்டு, நாளைக்கு இதைவிட பெரிய வீடு தேவைப்பட்டா சட்னு மாறிக்க முடியாதே. என்ன இருந்தாலும் நாம் சம்பளக்காரங்கதானே!’’ என்று தன் கருத்துக்கு சப்போர்ட்டாக மேலும் பாயின்ட்களைச் சேர்த்த மூர்த்தி, ‘‘இ.எம்.ஐ மட்டுமல்ல, தண்ணீர் வரி, சொத்து வரி அது இதுனு பல விஷயமும் இருக்கு. அதற்கெல்லாம் பணம் செலவாவதுடன் வீணாக அலையவும்வேண்டும். அப்படிப் பார்த்தால், சொந்த வீடு கொஞ்சம் தொல்லைதான்’’ என்று ஒரே போடாகப் போட்டார்.

ரவியும் விடுவதாக இல்லை, தன் பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகித்தார்.

‘‘நீ சொல்வதை ஒப்புக்கொள்கிறேன். சொத்து வரி, தண்ணீர் வரி போன்றவை எல்லாம் நம்முடைய வசதிகளுக்காக கட்டும் வரிகள். வாடகைக்கு குடியிருப்பவர்கள் நேரடியாகக் கட்டுவதில்லை என்றாலும், வீட்டு ஓனர் அதற்கும் சேர்த்துதான் வாடகையாக வசூலித்துக் கொள்கிறார்களே!

நீ வாடகையாக மாதாமாதம் கொடுக்கும் பணத்தை விடக் கொஞ்சம் அதிகமாக நான் இ.எம்.ஐ\யாகக் கொடுக்கிறேன் என்பது உண்மைதான். ஆனால், சில வருடங்களுக்குப் பிறகு நீ ரிட்டயர் ஆகும்போது, உன் பென்ஷனுக்குத் தகுந்தமாதிரி சிறிய ஒரு வீட்டை வாடகைக்குத் தேடுவாய்... நான் என் சொந்த வீட்டில் நிம்மதியாக இருப்பேன். எந்தச் சுமையும் இல்லாமல். இன்னும் சொல்லப்போனால், எனக்குச் சொந்தமாக ஒரு சொத்து இருக்கிறது என்ற நிம்மதியே பெரிய பலமாக இருக்கும்! மேலும், அந்தச் சொத்தின் மதிப்பும் வட்டியாக கட்டியதொகை அளவுக்கு மேலும்கூட உயர்ந்திருக்கும். இதையெல்லாம் விட முக்கியமான லாபம் இ.எம்.ஐ\யாகச் செலுத்துகிற பணத்துக்கு வருமானவரிச் சலுகையும் கிடைக்கிறது’’ ரவி சொன்னதும் மூர்த்தி யோசனையில் ஆழ்ந்துவிட்டார்.

வாடகை வீடா... சொந்த வீடா..?

உங்கள் தீர்ப்பைச் சொல்லும்முன் நீங்கள் தெளிவு பெற, இன்னும்கூட சில பாயின்ட்கள் இருக்கின்றன.

இருக்கிற காசைச் செலவழிக்கும் விதத்தில் சிக்கனமாக இருப்பதுதான் நம் எதிர்காலச் சேமிப்பாக இருக்கப் போகிறது. அந்தவகையில் வீட்டுக்கடன் என்பது ஒரு கட்டாய சேமிப்பு. அது வாடகைத் தொகையை விடக் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், அது முக்கியம் என்பதால், நாம் நம்முடைய மற்ற செலவுகளைக் கொஞ்சம் குறைத்து சிக்கனப்படுத்திக் கொள்வோம். எல்லாமே நன்மைக்குத்தானே! ஒரு நிமிடம்...

சென்னையின் பிரபலமான சார்டட் அக்கவுன்டன்ட் பழனிவேலு சொல்வதையும் கேட்டபிறகு முடிவெடுங்கள். ‘‘நம்மில் பலருக்கும் வாடகை வீட்டிலேயேதான் காலம் போகிறது. எத்தனை வசதிகள் இருந்தாலும் அது அடுத்தவர் வீடுதானே. வாடகையில் காலத்தைக் கழிப்பதைவிட, கடன்பட்டாவது ஒரு வீட்டை வாங்கிவிடுவது நல்லதுதான். அதேசமயம், கடன் என்பது நம் இன்றைய வாழ்க்கையைப் பாதிக்கும் சுமையாகிவிடக்கூடாது. ‘மாத வருமானத்திலிருந்து 40% வீட்டுச் செலவுகளுக்குப் போக, மீதமுள்ள 60 சதவிகிதத்தைத்தான் வீட்டுக்குக் கடனாகச் செலுத்தமுடியும்’ என்று கணக்கிட்டுதான் வங்கிகள் கடன் கொடுக்கின்றன.

மாத வாடகையாக எவ்வளவு செலவழிக்கிறோம். அத்துடன் வீட்டைச் சார்ந்து ஏற்படும் நேரடி, மறைமுகச் செலவுகள், இவற்றையெல்லாம் சேர்த்து ஆகும் மொத்தச்செலவை கணக்கிட்டுப் பார்க்கவேண்டும்.

உதாரணமாக, ஒருவர் வீட்டு வாடகை மாதம் ரூபாய் 3,000 செலவழிக்கிறார் என்றால், வீட்டுக்கடன் தொகை 2,000 கூடுதலாக அதாவது 5,000 ரூபாய் கட்டும்விதமாக ஐந்து லட்சம் வரை கடனாகப் பெறலாம். அத்தொகைக்கு வீட்டுக்கடன் வட்டியில் கணக்கிட்டால் பதினைந்து வருடத்துக்கு அவர் மாதம் கட்டவேண்டிய இ.எம்.ஐ ரூ.4,580தான். சொத்துவரி, தண்ணீர் வரி, வீட்டுக்கான இன்ஷூரன்ஸ், பராமரிப்பு செலவுகள் போன்றவற்றுக்கு மீதமுள்ள 420 ரூபாயை இதில் சேர்த்துக்கொள்ளவேண்டும். 15 வருட தவணை முடியும்போது, அவர் அப்போது செலுத்தும் வாடகையைவிட குறைவாகவே இ.எம்.ஐ கட்டுவார்.

இவை எல்லாவற்றுக்கும் மேலே வருமான வரி செலுத்தும் பட்சத்தில் வரிச்சலுகைகள் இருக்கின்றன. இது மாதக் கடனை ஓரளவு குறைக்க உதவும். இந்தச் சலுகைகளைப் பொறுத்தவரை சொந்த உபயோகத்துக்கு வாங்கும்போது, ரூபாய் ஒரு லட்சம் வரை அசலிலும், ஆண்டுக்கு ரூபாய் 1,50,000 வரை வட்டியிலும் முழு வரிவிலக்கு இருப்பதால், நிம்மதிப் பெருமூச்சு விடலாம். எனவே எப்படிப் பார்த்தாலும் சொந்த வீடு வாங்குவது சிறந்ததாகிறது’’ என்றார் பழனிவேலு.

உங்கள் பட்ஜெட்டில் என்ன தீர்ப்பு எழுதப் போகிறீர்கள், வாசக நீதிபதிகளே..?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism