Published:Updated:

கிரெடிட் கார்டின் தள்ளுபடி ரகசியம்!

கிரெடிட் கார்டின் தள்ளுபடி ரகசியம்!

கிரெடிட் கார்டின் தள்ளுபடி ரகசியம்!

கிரெடிட் கார்டின் தள்ளுபடி ரகசியம்!

Published:Updated:
பாதுகாப்பு
கேள்வி - பதில்
 

கிரெடிட் கார்டின் தள்ளுபடி ரகசியம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிரெடிட் கார்டின் தள்ளுபடி ரகசியம்!

‘‘கி ரெடிட் கார்ட் என்பது கத்தி மாதிரி... முறையாகப் பயன்படுத்தினால் பழம் நறுக்கலாம். தவறினால் கையைப் பதம் பார்த்துவிடும்...’’ என்று நறுக்கென்ற வார்த்தை களோடு வரவேற்றார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ரீ\டெய்ல் பேங்கிங் பிரிவு பொது மேலாளர் அசோகா சாட்டர்ஜி. இந்த வங்கியில் இத்தனை உயர்ந்த பதவிக்கு வந்த இரண்டாவது பெண்மணி இவர். இனி, வாசகர்களின் கேள்விகளும் அசோகா சாட்டர்ஜியின் பதில்களும்!

‘‘கைரேகையைப் பதித்து, அதன்மூலம் பயன்பெறும் வகையில் அமைத்தால், கிரெடிட் கார்டை இன்னும் பாதுகாப்பாகப் பயன்படுத்த முடியுமே... ஏன் இன்னும் அப்படியரு திட்டம் வரவில்லை?’’

\ என்.சுகுமாரன், காரைக்கால்.

கிரெடிட் கார்டின் தள்ளுபடி ரகசியம்!

‘‘பாதுகாப்பு அதிகரிக்கும் என்பது உண்மை தான். ஆனால், எழுதப்படிக்கத் தெரியாத மக்களிடம்தான் எந்த ஒரு பண விஷயத்துக்கும் கைரேகையைப் பதிக்கச் சொல்லுவது நம் நாட்டில் வழக்கமாக இருக்கிறது. அப்படி இருக்கும்போது, கிரெடிட் கார்ட் பயன்பாட்டுக்காக கைரேகை பதிக்கச் சொன்னால் ஒரு தாழ்வு மனப்பான்மை மக்கள் மத்தியில் வரலாம்.

அதோடு, ஏற்கெனவே பங்கு முதலீட்டுத் துறையில் ‘மேப்பின் எண்’ வழங்க, கைரேகையைப் பதிவு செய்யச்சொல்லும் திட்டத்தை அறிமுகப் படுத்தினார்கள். ஆனால், அது எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. அந்தத் திட்டமே மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது.

அடுத்து, கைரேகை பதிவுமுறை அமல்படுத்தத் தேவையான ஹார்ட்வேர், சாஃப்ட்வேர் போன்றவை கூடுதல் செலவு வைக்கக்கூடிய விஷயங்கள். இப்படி பல தடைக்கற்கள் இருக்கின்றன. வருங்காலத்தில் இப்படியரு முறை நடப்புக்கு வரலாம்.’’

‘‘பொருள் வாங்கும்போது சில கடைகளில் மட்டும் சர்வீஸ் சார்ஜ் வாங்குகிறார்களே... ஏன்?’’

\ ராஜசேகர், மானாமதுரை.

‘‘சர்வீஸ் சார்ஜ் என்பது வங்கிகள் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. கடைகளைப் பொறுத்தவிஷயம். ஒரு பொருள் அதிகபட்ச சில்லரை விலைக்கு விற்கப்படும்போது, சர்வீஸ் சார்ஜ் வசூலிக்கப் படுவதில்லை. காரணம், அந்த விலையிலேயே இந்தக் கட்டணமும் அடங்கிவிடும்.

ஆனால், சில வியாபாரிகள் விற்பனையை அதிகரிக்க தள்ளுபடி கொடுத்து, குறைந்த விலையில் பொருட்களை விற்கும்போது சர்வீஸ் சார்ஜ் வசூலிக்கிறார்கள். உதாரணமாக, சில பெட்ரோல் பங்க்குகளில் இதுபோன்ற கட்டணம் வசூலிக்கப் படுகிறது. ‘அரசு நிர்ணயிக்கும் விலையில்தான் பெட்ரோலை விற்கவேண்டும். விற்பனைக்கு ஏற்ப கமிஷன்’ என்ற கட்டுப்பாடு இருப்பதால், கிரெடிட் கார்ட் மீது சர்வீஸ் சார்ஜ் வசூலிக்கிறார்கள்.

ஆனால், இப்போது பெட்ரோல் நிறுவனங்களும் கிரெடிட் கார்ட் நிறுவனங்களும் சேர்ந்து கூட்டாக வெளியிடும் கடன் அட்டை மூலம், பெட்ரோல் வாங்கினால் சர்வீஸ் கட்டணம் கேட்பதில்லை.’’

‘‘கிரெடிட் கார்ட் மூலம் பொருட்கள் வாங்கினால், அத்தொகைக்கு சில வங்கியில் 5% வரை தள்ளுபடி தருகிறார்கள். இது எப்படிச் சாத்தியமாகிறது?’’

\ கே.ராமகிருஷ்ணன், கல்லக்குடி.

‘‘கிரெடிட் கார்ட் நடவடிக்கைகள் மூலம் வங்கி களுக்கு வருமானம் கிடைக்கிறது. அதனால் அதிக நபர்களை கார்ட் மூலம் பொருள் வாங்கத் தூண்ட, பல வழிகளைக் கையாள்கிறார்கள்.

ஐ.ஓ.பி உள்ளிட்ட சில வங்கிகள், வாடிக்கையாளர் கள் வாங்கும் பொருட்களின் மதிப்புக்கு ஏற்ப ‘ரிவார்ட் பாயின்ட்’கள் வழங்குகின்றன. வாடிக்கையாளர்களை அதிகப் பொருட்கள் வாங்கத் தூண்டும் இப்படியான சலுகைகளில் ஒன்றுதான் 5% தள்ளுபடியும்.

வாடிக்கையாளர்கள் மூலம் அதிக வருமானம் பெற, தங்கள் வருமானத்தில் சிறு பகுதியை வாடிக்கையா ளருக்கே திருப்பித் தந்து அவர்களை ஊக்குவிக்கும் யுக்திதான். இதற்கு கடைகளும், வங்கியும் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்கிறார்கள்.’’

‘‘கிரெடிட் கார்டில் கடன் லிமிட் எப்படி நிர்ணயிக்கப் படுகிறது?’’

\ சி.சுகுமாரன், குடியாத்தம்.

‘‘ஒருவருடைய மாத வருமானம்தான் அடிப்படை. ஒரு கடன் அட்டைதாரரின் நிகர மாத வருமானம், அவரது நிகர மாதச் செலவுகள் போன்ற விஷயத்தைக் கருத்தில்கொண்டு, இந்த லிமிட் நிர்ணயிக்கப்படுகிறது. கார்ட்தாரரின் சொத்துகள், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, வேறு கடன் அட்டை வைத்திருப்பவரா என்ற தகவல், கடனை திருப்பிச் செலுத்தும் விதம், அதில் இருக்கும் ஒழுங்கு போன்ற பல விஷயங்களைப் பரிசீலித்து, பின்னர் இந்த லிமிட்டில் மாற்றங்கள் செய்யப்படுவதும் உண்டு.

கடனைத் திருப்பிச் செலுத்துவதில் ஒழுங்கும், காலம் தவறாமையும் கொண்டவருக்கு எளிதாக இந்த லிமிட் அதிகரிக்கப்படும். கூடுதல் வருமானம் உள்ளவர்களுக்கு ஆரம்பத்திலேயே அதிகக் கடன் லிமிட் கிடைக்கும். குறைந்தது ரூபாய் 10 ஆயிரத்தில் தொடங்கி, அதிகபட்சமாக 5 லட்சம் வரைகூட லிமிட்கள் உள்ளன.’’

‘‘அனுமதிக்கப்பட்ட லிமிட்டுக்கு மேல் பொருள் வாங்க முடியாது என்கிறார்கள் சிலர். இன்னும் சிலர் வாங்கமுடியும் என்கிறார்கள். எது உண்மை?’’

\ வி.பரிமேலழகன், காட்டுமன்னார்குடி.

கிரெடிட் கார்டின் தள்ளுபடி ரகசியம்!

‘‘இரண்டுமே உண்மைதான். கடனை ஒழுங்காகக் குறித்த நேரத்தில் திருப்பிச் செலுத்தும் வழக்கம் கொண்ட வாடிக்கையாளர் பொருட்கள் வாங்கி இருக்கிறார். அதற்கான தொகையைச் செலுத்தியும் விட்டார். ஆனால், அந்தப் பணம் இன்னும் வங்கி யைச் சென்றடையவில்லை. இப்படிப்பட்ட சூழலில், அவர் பொருள் வாங்கச் சென்றால், லிமிட்டைத் தாண்டினாலும், மதிப்பளித்து ஏற்கப்படும்.

ஆனால், இந்தச் சலுகையை எல்லோரும் பெறமுடியாது. இவ்வாறு சலுகை பெறும்போது, சில வங்கிகள் வழக்கத்தை விட கூடுதலாக 2% வட்டி வரை வசூலிப்பதுண்டு. கடன் அட்டை தாரரின் ஒழுங்கான நடைமுறையால் சிலர் கூடுதல் வட்டி செலுத்தாமல், வழக்கமான வட்டி விகிதத் திலேயே கடன் பெறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. எல்லாமே கடந்த கால பயன்பாட்டைப் பொறுத்ததுதான்.’’

‘‘நான் கடை நடத்தி வருகிறேன். என் கஸ்டமர்கள் சிலர் கிரெடிட் கார்ட்டை நீட்டுகிறார்கள். என் கடையில் அந்த வசதியில்லை. அதைப்பெறும் முறை என்ன?’’

\ டி.விஸ்வநாதன், பாண்டிச்சேரி.

‘‘கிரெடிட் கார்ட் வழங்கும் வங்கிகளிடம் இருந்து ‘பாயின்ட் ஆஃப் சேல் டெர்மினல்’ எனப்படும் ‘ஸ்வைப்’ செய்யும் இயந்திரத்தைப் பெறவேண்டும். இதை சில வங்கிகள் இலவச மாகவும் சில வங்கிகள் மாத வாடகைக்கும் வழங்குகிறார்கள். இதில் ‘விசா’, ‘மாஸ்டர்’ என இருவகை கார்ட்களுக்கும் தனித்தனி டெர்மினல்கள் உள்ளன. எனவே, இந்த இரு டெர்மினல்களையும் பெற்றுக்கொள்வது நல்லது.

அடுத்து, இந்த டெர்மினல்களை வழங்கும் வங்கியில் ஒரு நடப்புக் கணக்கு தொடங்க வேண்டும். இந்த டெர்மினல் மூலம் நடக்கும் வியாபாரத் தொகை முழுவதும் உடனடியாக உங்கள் கணக்கில் வரவாகிவிடும். நீங்கள் அதை வேண்டும் போது, பயன்படுத்திக் கொள்ளலாம்.’’

‘‘கிரெடிட் கார்ட் வேண்டாம் எனும் போது, சரண்டர் செய்வது எப்படி?’’

\ என்.ரமேஷ், விருத்தாசலம்.

‘‘முதலில் நீங்கள் செய்ய வேண்டியது, உங்கள் கார்டில் கடன் பாக்கி இருந்தால், மொத்தத் தொகையையும் அதற்கான கெடு தேதிக்குமுன் செட்டில் செய்யவேண்டும். பாக்கி இல்லாத நிலையில், கார்டைத் திருப்பி அனுப்புவதாக ஒரு கடிதம் எழுதவேண்டும். அதோடு, உங்கள் கிரெடிட் கார்டை மீண்டும் யாரும் பயன்படுத்த இயலாதபடி இரண்டு துண்டுகளாக்கி, பதிவு தபாலில் வங்கி முகவரிக்கு அனுப்பிவிடுங்கள். அந்தக் கடித நகல், பதிவு தபால் ரசீது போன்றவற்றைப் பாதுகாப்பாக வைத்திருங்கள். அநேகமாக இந்தக் கடிதம் கிடைத்தவுடன் வங்கி உங்கள் கணக்கை முடிக்கும்.’’

‘‘என் கிரெடிட் கார்ட் ஸ்டேட்மென்ட்டில் இருந்த ஒரு தவறு குறித்த புகாரை, வங்கி கஸ்டமர் கேர் டிபார்ட்மென்ட் தொலைபேசி மூலம் பதிவு செய்தேன். அவர்களும் 3 நாட்களில் சரி செய்வதாகச் சொன்னார்கள். அடுத்த மாத பில்லிலும் அதே பிரச்னை தொடர்ந்தது. மீண்டும் போன் செய்து விஷயத்தைக்கேட்டால், மீண்டும் ஆரம்பத்தில் இருந்து விஷயம் தொடங்குகிறது. அப்படியானால், நான் முதலில் கொடுத்த புகாருக்கு என்ன மரியாதை?’’

\ ஆர்.உத்திராபதி, கோவை-5.

‘‘இதுபோன்ற பிரச்னைகளுக்கு முக்கியக் காரணம் பல வங்கிகள் தங்கள் பணிகளை ‘அவுட் சோர்ஸிங்’ முறையில் செய்வதுதான். இதுபோன்ற ஆட்களில் சிலருடைய பொறுப்பில்லாத செயல்களாலும் பிரச்னைகள் வருகின்றன.

வங்கியின் நடவடிக்கையால் அல்லது வேறு சின்னசின்ன பிரச்னைகளால் இதுபோன்ற தவறுகள் நேர்ந்து விட்டால், அவை உடனடியாகத் தீர்க்கப்பட்டுவிடும். ஆனால், தவறான பில் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருப்பது... அதிக தொகைக்கு பில் வந்திருப்பது போன்ற பிரச்னைகள் என்றால்... இதில் சம்பந்தப்பட்ட பல தரப்பினரிடமும் இதுகுறித்த விசாரணை நடத்த வேண்டியிருக்கும். இதில் தாமதம் நிகழ வாய்ப்புண்டு. அப்படியான தாமதம் என்றால் நீங்கள் சற்று பொறுமை காக்கவேண்டி இருக்கும்.’’

‘‘கிரெடிட் கார்ட் மூலம் வாங்கும் பொருளுக்கான பணம் நம்மிடம் வசூலிக்கப்படும்முன், நடக்கும் விஷயங்கள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். விளக்க முடியுமா?’’

\ இராம.அண்ணாமலை, தஞ்சாவூர்.

‘‘கிரெடிட் கார்ட் மூலம் பொருள் வாங்கியதும், முதலில் உங்கள் கார்ட், பாயின்ட் ஆஃப் சேல் டெர்மினலில் ஸ்வைப் செய்யப்படுகிறது. அப்போது உங்கள் கார்டில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்கள் ஆன் லைன் தகவல் பரிமாற்றம் மூலம் விசா, மாஸ்டர் கார்ட் நிறுவனங்களின் தகவல்களுடன் சரிபார்க்கப் படுகின்றன.

அது ஓகேயென்றால், அதன்பின் உங்கள் கடன் கணக்கில் எவ்வளவு தொகையைச் சேர்க்கவேண்டும் என்பது அந்த பாயின்ட் ஆஃப் சேல் டெர்மினல் மூலமே ஆன் லைனில் கடைக்காரரால் பதிவு செய்யப்படுகிறது.

விசா அல்லது மாஸ்டர் கார்ட் நிறுவனங்கள் இந்த தகவல்களைப் பெற்று, உங்களுக்கு கார்ட் வழங்கிய வங்கிக்கு கொடுக்கிறது. வங்கி அந்தத் தொகையை உடனே வியாபாரிக்கு செட்டில் செய்துவிட்டு, உங்கள் கணக்கில் கடனாகக் குறித்து வைத்துக்கொள்கிறது.

குறிப்பிட்ட நாட்களுக்குப் பின்னர், வங்கி உங்கள் கடன் பாக்கி, தவணைத் தொகை, அதற்கான கெடு நாள் போன்ற தகவல்களை ஸ்டேட்மென்ட்டாக உங்கள் முகவரிக்கு அனுப்புகிறது. நீங்கள் வங்கிக்கு பணத்தைச் செலுத்தினால் கடன் வளையம் நிறைவு பெறுகிறது. கடன்தொகை தவணைமுறையில் செலுத்தப் படும்போது, தான் செலுத்திய பணத்துக்கு வட்டியையும் சேர்த்தே உங்களிடம் இருந்து பெற்றுக் கொள்கிறது வங்கி.’’

கிரெடிட் கார்டின் தள்ளுபடி ரகசியம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism