வேலை |
ஸ்டூடன்ட் நம்பர் 1 |
|

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!


மாரிமுத்து பேசுகிறார்.. . ‘‘ப குதிநேரத் தொழில்களில் கிடைக்கும் வருமானம்தான் கல்லூரிப் படிப்பைத் தொடர எனக்குக் கை கொடுக்கிறது. கையில் காசு இல்லை என்பதால் படிப்பு பிரேக் ஆகாமல், என் உழைப்பில் நான் படிப்பது சந்தோஷமான விஷயம். காலையில் மூன்றரை மணிக்குத் தொடங்கும் என்னுடைய ஒருநாள் பொழுது. அந்த நேரத்துக்கு எழுந்து தினசரி பேப்பர்களை வீடு, வீடாக டெலிவரி செய்வேன். மூன்று மணிநேரம் வேலை சரியாக இருக்கும். அப்படியே வந்து குளித்து ரெடியாகி, ரயிலைப் பிடித்து காலேஜுக்குக் கிளம்பிவிடுவேன். மதியம் 2.30 மணிவரை கல்லூரி. அதன்பிறகு மாலை ஆறுமணிவரை பாடங்களைப் படிப்பதற்காக நேரத்தை ஒதுக்கிக்கொள்வேன். இரவு ஏழுமணிக்கு புத்தகங்கள் சப்ளை செய்வது, பில் பணத்தை வசூல் செய்வது போன்ற வேலைகளில் ஈடுபடுவேன். வீடு திரும்ப இரவு ஒன்பது மணியாகிவிடும். வாரத்தின் சில நாட்களில் பத்திரிகைகளின் போஸ்டர்களை ஒட்டும் வேலை கிடைக்கும். அதேபோல, கல்லூரி விடுமுறை நாட்களில் பிரபலமான வியாபார நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் பிட் நோட்டீஸ் களைக் கொடுத்து நகரின் முக்கியமான இடங்களில் விநியோகிக்கச் சொல்வார்கள். இதுபோன்ற வேலைகளைச் செய்வதன் மூலம், மாதத்துக்கு 3,000 ரூபாய்க்குக் குறையாமல் சம்பாதிக்கிறேன். இதன்மூலம் என் கல்வித் தேவைகள் தீர்வதோடு சகோதரிகளின் திருமணத்துக்கு வாங்கிய கடனை அடைக்கவும் என்னால் உதவ முடிகிறது. குடும்ப பாரத்தில் பங்கெடுத்துக்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது. ‘காலேஜ் படிக்கிற நாம் இந்த வேலையைச் செய்வதா?’ என்று யோசிக்காமல் எல்லாவித வேலைகளுக்கும் தயாராக இருந்தால் பெரிய அனுபவங்களைப் பெறமுடியும்.’’ ‘ஸ்டூடன்ட் நம்பர் ஒன்’னை
அறிமுகம் செய்து ரூபாய் 200 பரிசு பெறுகிறார் |