Published:Updated:

மனதுக்குப் பிடித்த மாற்றங்கள்!

மனதுக்குப் பிடித்த மாற்றங்கள்!

மனதுக்குப் பிடித்த மாற்றங்கள்!

மனதுக்குப் பிடித்த மாற்றங்கள்!

Published:Updated:
வேலை
சோதனை... பரிசோதனை!
 

மனதுக்குப் பிடித்த மாற்றங்கள்!

‘‘ப டிப்பு முடித்து வேலை தேட ஆரம்பிக்கும்போது, மனதுக்குள் ஆயிரம் கனவுகள் இருக்கும். ஆனால், பிடித்த மாதிரி வேலை கிடைத்துவிட்ட பிறகோ, சுற்றியுள்ள சூழல் பல கசப்பான அனுபவங்களைத் தரும். அந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். அந்த அவஸ்தைகளையும் சவால்களாக்கி, தன் கனவுகளையும் நனவாக்கிக் கொள்வதுதான் வெற்றிக்கு அழகு! அவர்களைத்தான் இந்தச் சமூகம் அண்ணாந்து பார்த்து அதிசயிக்கும்’’ என்கிறார் உலக அளவில் வர்த்தகம் செய்யும் ‘டேலி இண்டியா’ நிறுவனத்தின் விற்பனைப்பிரிவு பொதுமேலாளர் கோபி. அந்தச் சாதனையைத் தொட, அவர் தரும் டிப்ஸ்கள்.. .

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மனதுக்குப் பிடித்த மாற்றங்கள்!

தா ங்கள் சார்ந்திருக்கும் நிறுவனத்தில் எழும் சவால்களையும் பிரச்னைகளையும் தீர்க்கும் ஆற்றல் படைத்தவராகவும் நீங்கள் இருக்கவேண்டும் என்று நிர்வாகம் எதிர்பார்க்கும். எனவே, வேலையில் சேரும்போதே, நிறுவனத்தை உயர்த்தும் எண்ணங்களோடு செல்லுங்கள்... அவற்றைச் செயல்படுத்துங்கள். நிறுவனம் வளர்ச்சி அடைவதோடு, உங்களையும் அரவணைத்து உயர்த்தும்.

டை ப் செய்வதில் தொடங்கி காப்பி எடுப்பது, கவரில்போட்டு கூரியரில் அனுப்புவது வரை நீங்களே செய்து முடிக்கவேண்டும்’ என்று மேலதிகாரியிடம் இருந்து ஒரு அஸைன்மென்ட் கொடுக்கப்பட்டால், ‘உயர் பதவியில் இருக்கிற எனக்கு, கிளார்க்கின் வேலையை எல்லாம் தலையில் கட்டுகிறார்களே!’ என்று எப்போதும் நினைக்காதீர்கள். அந்த அலுவலகத்தில், நீங்கள் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்!

டமாறுதல் என்றாலே பனிஷ்மென்ட் என்பது போலதான் பலருக்கும் மனதில் தோன்றும்! அதுவும் கொஞ்சம் ஒதுக்குப்புறமாகவோ, வசதி குறைவான ஊராகவோ இருந்துவிட்டால், ‘திட்டமிட்டே என்னை தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்திட்டாங்கப்பா...’ என்று புலம்ப ஆரம்பித்துவிடுவார்கள். ‘காலில் போட்டால் செருப்பாக இருப்பேன், எண்ணெயில் போட்டால் அப்பளமாக இருப்பேன்’ என்ற ‘எதற்கும் தயார் மனநிலையில் இருப்பாரா?’ என்பதை நிர்வாகம் சோதித்துப் பார்க்கிறது என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். போகிற இடத்திலும் முழுத் திறமையோடு செயல்பட்டு, சோபிக்கத் தெரிந்திருக்கவேண்டும்.

ரு பொறுப்பில் இருக்கும்போதே, வேறு ஒரு பொறுப்பையும் சுமக்கவேண்டி வரலாம். ‘என்ன இது... ஒரு வேலையில் உருப்படியாகக் கவனம் செலுத்தவிடாமல் இடைஞ்சல் செய்கிறார்களே...’ என்று சலித்துக்கொள்ளாதீர்கள். தெரிந்த வேலையை மட்டுமே செய்பவரைவிட, தெரியாத வேலையையும் செய்பவரைத்தான் அதிகாரிகள் ரசிப்பார்கள். எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கும் பன்முகத்திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பாகத்தான் அதைப் பார்க்கவேண்டும்!

ருடத்துக்கு ஒருமுறை பணியிலோ அல்லது துறையிலோ மாற்றத்தைக் கொண்டுவரும் ‘ஜாப் ரொட்டேஷன்’ என்னும் வேலை சுழற்சி முறை, இப்போது பல அலுவலகங்களில் நடைமுறையில் இருக்கிறது. அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் மறுக்காதீர்கள்... முகம் சுளிக்காதீர்கள். பல துறைகள் சேர்ந்ததுதான் நிறுவனம். எல்லா துறைகளையும் தெரிந்துகொண்டு, அதில் திறம்படச் செயல்படுபவர்தான், நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புகளை அடையமுடியும். அந்த ஆசையை மனதில் நிறைய வளர்த்துக்கொள்ளுங்கள்.

நி றுவனத்தின் பாதை எதுவோ, அதில் பயணிப்பதுதான் வெற்றிக்கான வழியாக இருக்கும். நிறுவனம் உலக அளவில் பரந்து விரிந்த இலக்கோடு இருந்தால், நீங்கள் குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டும் மனநிலையில் இருக்கக்கூடாது. நாளையே உங்கள் நிறுவனம் வெளிநாட்டில் கிளை தொடங்கலாம். நீங்கள் அந்தக் கிளைக்குச் சென்று பணியாற்ற வேண்டிய சூழல் வரலாம். எனவே, நிறுவனத்தின் அலைவரிசையோடு இயைந்து செயல்படுவது முக்கியம்!

பீஸ் நேரம் தாண்டியும் பணிகள் இருந்தால் சோர்வடையாதீர்கள். அதுவரையில் ஓர் ஊழியராக இருந்த உங்களுக்கு, நேரம் பார்க்காமல் கடமையில் கவனம் செலுத்தும்போது, ஓர் அதிகாரிக்குரிய பயிற்சி கிடைக்கிறது. ‘இந்த வேலை என்னுடையது’ என்ற மனநிலையை வளர்த்துக்கொண்டால்தான் இது சாத்தியம்!

ங்கள் படிப்புக்கும் பார்க்கும் வேலைக்கும் தொடர்பே இல்லாமல் இருக்கலாம். அப்படி ஒரு சூழலில், ‘நாம் எதிர்பார்க்கும் எதுவுமே நமக்குக் கிடைப்பதில்லை...’ என விரக்தியோடு, விட்டேத்தியாக இருக்காதீர்கள். ‘நமக்குத் தெரியாதவற்றைப் புதிதாகக் கற்றுக்கொள்ளக் கிடைத்திருக்கும் வாய்ப்பு’ என்ற பாஸிடிவ் சிந்தனையோடு உழைக்கத் தொடங்குங்கள். வெற்றி உங்களைத் தேடி வரும்.

நி றுவனம் எடுக்கும் முடிவுகளுக்குச் செவிசாயுங்கள். ஏனென்றால், நிறுவனம் எப்போதும் தனி மனிதனைவிடப் பெரியது. முதலாளி ஒரு முடிவெடுத்தால் அது நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுகிறதா என்று பார்க்கவேண்டுமே தவிர, தனிப்பட்டவர் நலனுக்கு ஏற்றதாக இருக்கிறதா என்று பார்க்கக்கூடாது. நிர்வாகத்தின் முடிவு பிடிக்காமல் போனாலும், நிறுவனத்தை வெறுக்கக் கூடாது.

ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள். மாற்றம் என்ற வார்த்தை மட்டும்தான் மாறாமல் இருக்கும்... மற்ற எல்லாமே மாறக்கூடியவைதான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism