ஆட்டோ டெபிட் பேமென்ட்
- ஒருவருக்கு கடன் அட்டை வழங்கிய வங்கியிலேயே அவருக்கு சேமிப்புக் கணக்கும்
இருந்தால், கடன் அட்டைக்காக அவர் செலுத்தவேண்டிய மாதாந்திர தவணைத் தொகையைக்
குறிப்பிட்ட தேதியில் சேமிப்புக் கணக்கிலிருந்து வங்கியே எடுத்துக்கொள்ள, வாடிக்கையாளர்
அனுமதி தரலாம். இதை ‘ஆட்டோ டெபிட் பேமென்ட்‘ என்கிறார்கள்.
டெபாசிட்டரி ரிசிட் -
இந்திய பங்குச் சந்தையில் பங்குகள் என்று குறிப்பிடுவதைப் போல, சர்வதேச சந்தைகளில்
விற்கப்படும் பங்குகளை ‘டெபாசிட்டரி ரிசிட்’ என்கிறார்கள். குறிப்பிட்ட சில நாடுகளில்
மட்டும் விற்கப்படும் பங்குகள், அந்தந்த நாட்டுப் பெயரில் டெபாசிட்டரி ரிசிட் என
குறிப்பிடப்படுகிறது.
|