Published:Updated:

‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்

‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்

‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்

‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்

Published:Updated:
தொழில்
‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்
 

‘மூளை’தனம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்

புதுப்புது ஐடியாக்கள்!

வெறுங்கையால் முழம் போட வைக்கும் ‘பளிச்’ தொடர்!

நூ று ரூபாய் போட்டு நூறு ரூபாய் எடுக்கிற தொழில் சாமர்த்தியம் பெரிய விஷயம்தான்! அதேசமயம், 25 ரூபாய் போட்டு 200 ரூபாய் எடுக்க வேண்டுமானால் அதற்கு சாமர்த்தியத்துடன் புத்திசாலித்தனமும் தேவை. அதற்கு முக்கியமான தேவை, வித்தியாசமான சிந்தனை.

காலம் காலமாக இதை, இப்படித்தான் வியாபாரம் செய்யவேண்டும் என்ற சிந்தனையை மாற்றி, அதில் ஒரு புதுமையைப் புகுத்தும்போது, அந்தத் தொழில் நிச்சயம் ஜெயிக்கும். அந்தத் தொழில்களுக்குப் பெரிய முதலீட்டுக்கான தேவையோ, பொருளைப் பற்றிக்கூவி விற்க வேண்டிய அவசியமோ கிடையாது.

‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்

பாண்டிபஜாரில் ஒரு பெண்மணி கை நிறைய மணக்கும் பத்தி பாக்கெட் விற்றுக்கொண்டிருந்தார். அந்தப் பக்கமாகப் போன என்னிடம், ‘கொசுபத்தி வேணுமா சார்..? என்றார். ‘வாசனை பத்தியா..?’ என்றேன். ‘இல்லீங்க... கொசு பத்தி! கொசு வளையம் கொளுத்தி வெச்சா, வீடு முழுக்க மூக்குக்குப் பிடிக்காத வாசனை கிளம்பி மூச்சுத் திணறும் இல்லீங்களா..? அதுக்குப் பதிலா, இதைக் கொளுத்தி வெச்சா, கொசுவை விரட்டற அதேசமயம், சந்தன வாசம் வீசற மாதிரி வீடே மணக்கும். அப்படி டூ-இன்-ஒன்னா இந்தப் பத்தியைத் தயார் பண்ணி இருக்கோம்ங்க!” என்றார்.

பத்தியின் வெளித்தோற்றம் கவர்ச்சியாக இல்லை. பட்டாசு கொளுத்தப் பயன்படுத்துவது போன்ற பத்தி. குழந்தைகள் பிடிக்கிற கொழுக்கட்டை மாதிரி, மேடு பள்ளமாக விரல் ரேகைகள் தெரிய... சரியான ஃபினிஷிங் இல்லாமல் இருந்தது. ஆனால், நான் பேசிக்கொண்டிருக்கும்போதே அந்தப் பெண்மணியைத் தேடிவந்து இருவர் வாங்கிச்சென்றனர்.

‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்

50 ஸ்டிக்குகள் கொண்ட பாக்கெட்டுக்கு 25 ரூபாய் என்று விலை போட்டிருக்கிறார். ஒரு பாக்கெட் 20 ரூபாய்க்கு விற்கிறார். பேரம் பேசினால் மூன்று பாக்கெட்டையே ஐம்பது ரூபாய்க்கு தருகிறார். ரகசியமாக விசாரித்தால் அந்த ஒரு பாக்கெட்டின் தயாரிப்புச் செலவு ஒற்றை இலக்கத்தில்தான் இருக்கிறது. ஒரு பாக்கெட்டில் மூன்று மடங்கு லாபம் என்பது எவ்வளவு சுலபமாக இருக்கிறது பாருங்கள்.

இரண்டு வெவ்வேறு விஷயங்களை இணைத்து, ஒன்றில் உள்ள மைனஸை களைந்து, அதற்கேற்ற விலையில் கொடுக்கும்போது தேடிவந்து வாங்குகிறார்களே மக்கள்! இதையே வெறும் பத்தியாக விற்றால், இத்தனை லாபம் பார்க்க முடியாதே! இப்போது கிடைப்பதைப் போல இருமடங்கு லாபம் கிடைப்பது அந்த ஐடியாவுக்குத்தானே!

25 ரூபாய்க்கு விற்கிற கேஸ் லைட்டரில், சிறிய டார்ச் இணைத்துக்கொடுத்து, அதை ஐம்பது ரூபாய்க்கு விற்கிற காலம் இது. பதினைந்து ரூபாய் லைட்டர், ஐந்து ரூபாய் டார்ச் இரண்டுமாக ஒன்றரை மடங்கு லாபத்தைச் சம்பாதித்துக் கொடுப்பது, ஒரு சின்ன புத்திசாலித்தனமான சிந்தனையில்தானே!

‘வேல்யூ அடிஷன்’ என்ற இந்த யோசனைகளைச் செயல்படுத்தி பெரிய நிறுவனங்கள் பலவும் லாபம் அடைந்துகொண்டிருக்கின்றன. உற்பத்தியைப் பலமடங்கு பெருக்கிக்கொண்டு இருக்கின்றன. தேவை அறிந்து கொடுக்கிற அதுபோன்ற ஐடியாக்களில் ஒன்றுதான் - செல்போனில் கேமரா, செல்போனில் எஃப்.எம் போன்றவை எல்லாம்.

நாங்களும் அப்படி ஒன்றை முயற்சித்தோம். சலூன்களின் அட்மாஸ்ஃபியரை அழகாக அமைத்தால், வருகிற கஸ்டமர்கள் எண்ணிக்கை பெருகுமே என்று யோசித்து சலூன் பிஸினஸில் இறங்கினோம். சுகாதாரமான, சுத்தமான சலூன்களை அமைத்தோம்.

கட்டிங்குக்கு 30 ரூபாய்தான். குறைந்தவிலை, மனதுக்குப் பிடித்த சுற்றுப்புறம், கனிவான உபசரிப்பு, தரமான சேவை என்றதும் வாடிக்கையாளர்கள் அணி வகுத்தார்கள். ஆனால், பெண்கள் என்ற 50 சதவிகிதத் தினரை எங்களால் எட்ட முடியவில்லை. ‘அதனால் என்ன..?’ என்று பெண்களுக்கென பிரத்யேகமாக ஷாப் திறந்தோம். அதற்கும் நல்ல வரவேற்பு. இந்நிலையில்தான் திடீரென ஒரு சிந்தனை.

தனித்தனியாகப் போகும் நிலையில்தான் சலூன் இருக்கவேண்டுமா..? டிபார்ட்மென்ட் ஸ்டோருக்கும், சினிமா தியேட்டருக்கும், ரெஸ்டாரென்ட்டுக்கும் குடும்ப சகிதமாகப் போவதுபோல் ஏன் நாம் அமைக்கக்கூடாது..? என்று ஒரு ஐடியா. ‘அப்படி ஒன்றை அமைத்துப் பார்ப்போமே!’ என்று சோதனை முயற்சியில் இறங்கினோம்.

என்னதான் ஃபேமிலி ஷாப் என்றாலும் சேர்ந்து இருவரையும் ஒரே இடத்தில் அனுமதிப்பது இங்கே கலாசார மீறலாகிவிடுமே! எனவே, ஒரே கடையில் இரு பிரிவுகள். பெண்கள் பகுதி, ஆண்கள் பகுதி என்று பிரித்தோம். குழந்தைகள் வந்தால், அவர்கள் விளையாட தனிப்பகுதி.

இது சூப்பர் க்ளிக்காகிவிட்டது. அவுட்டிங் போவது போல, இங்கேயும் குடும்பத்துடன் வருகிறார்கள். தலை அலங்காரம், மசாஜ், ஸ்டீமிங் என்று ஒரே இடத்தில் முடித்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் செல்ல முடிகிற இந்த கடைக்கு வரவேற்பு பெருக... இன்று அண்ணாநகர், தி.நகர் உள்பட ‘க்ரீன் ட்ரெண்ட்ஸ்’ என்ற பெயரில் சென்னையில் மட்டும் 12 கடைகள்... டெல்லி, பெங் களூர் என்று வெளி மாநிலங்களில் எட்டு கிளைகளுடன் சக்கைபோடு போடுகிறது ஃபேமிலி ஐடியா.

இந்தப் புதுமையான சிந்தனைகளின் முக்கிய லாபமே, விளம்பரங்கள் ஏதும் செய்யாமலே, வாய்வழி விளம்பரங்களிலேயே வாடிக்கையாளர்களைத் தேடிவரவைத்துவிட முடியும். இது என் தொழில் அனுபவத்தில் பலமுறை கண்ட உண்மை. லேட்டஸ்ட், இந்த சலூன்!

மக்கள் இன்று வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களது வேலைகளை சுலபமாக முடித்துக்கொடுக்கிற சிந்தனைகளுக்கு நல்ல டிமாண்ட்டும் வேகமான விற்பனையும் கிடைக்கிறது. மக்களுக்குப் பிடிக்கிற விஷயம் எது என்று நன்கு சிந்தியுங்கள். மணிக்கணக்கு கூட வேண்டாம். நாள் கணக்கு, வாரக்கணக்கில் மனதில் ஊறவைத்து, ஒரு நல்ல ஐடியாவைப் பிடியுங்கள். அது உங்களுக்குப் பரிச்சயமான துறை பற்றியதாக இருக்கட்டும்.

ஒருவேளை அந்த யோசனை சிறிது முதலீடு எதிர்பார்ப்பதாக இருந்தாலும் கலங்காதீர்கள். ஒரு நல்ல இயக்குநர், பிரமாதமான கதையை எடுத்துச் சென்றால், இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்பாளரும் ஆர்வமுடன் படம் எடுக்க முன்வருவார் இல்லையா..? அதுபோல, ‘என்னிடம் இப்படி ஒரு தொழில் சிந்தனை இருக்கிறது. நீங்கள் முதல் போடுங்கள். நான் பொருளைத் தயாரித்துத் தருகிறேன். நாம் இந்தத் தொழிலில் இறங்குவோம்’ என்று அக்ரிமென்ட் போட்டுக்கொள்ளுங்கள். உங்கள் எதிர்கால நலனுடன் கூடிய அக்ரிமென்ட்டாக அது இருக்கட்டும். அல்லது உங்கள் ஐடியாவைக் காட்டி, பணத்தைக் கடனாகக் கேளுங்கள். அதைக்கொண்டு தொழில் தொடங்குங்கள். களத்தில் இறங்குங்கள்.

‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்

முதல் போட்டுத்தான் தொழில் லாபம் பார்க்க வேண்டும் என்பதில்லை. வெங்காயம் உரிக்க சோம்பேறித் தனம் காட்டும் மக்களுக்கு உரித்த வெங்காயத்தைத் தந்தால், மார்க்கெட் விலையைவிட இருமடங்கு பணம் தந்து, அதை வாங்கிக்கொள்ள ஆட்கள் இருக்கிற ஊர் இது! நம் ஊரில், நமக்கு நன்கு அறிமுகமான இடத்தில் இப்படி சேவைத்துறையில் கால் பதித்தும் பணம் பார்க்கலாம்.

வேலூர் சி.எம்.சி மருத்துவமனை வாசலிலேயே ஒரு சிறு ஓட்டல் இருக்கிறது. சுகாதாரமான சுற்றுச் சூழல், அன்பான உபசரிப்பில் அந்த மருத்துவமனைக்கு வரும் பலரும்கூட இந்த ஓட்டலுக்கு வர ஆரம்பித்து விட்டார்கள். தன் கடையை நோக்கி ஈர்த்துவிட்டார் அந்த ஓட்டல்காரர். இங்கே அவரது டெக்னிக், மருந்து வாடை இல்லாத சுகாதாரமான சுற்றுச்சூழல்.

திண்டுக்கல்லில் ஒரு பிரியாணிக்கடை. எந்த பின்னணி யில் தயாராகிறது என்றெல்லாம்கூட யோசிக்காமல் காரில் வந்து வாங்கிச்செல்லும் கஸ்டமர்கள் இருக் கிறார்கள். அங்கே, சப்புக்கொட்ட வைக்கும் சுவை என்பதே பிரதானம்.

இடத்துக்கேற்ப இப்படி ஒரே துறையில்கூட இரண்டு வித்தியாசமான சிந்தனைகள் இருப்பதைக் கவனியுங்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது..? நம்ஏரியா, சுற்றுச்சூழல், அங்குள்ள வாடிக்கை யாளர்களின் தேவைகள்தான் அங்கே செய்ய வேண்டிய புதுமைகளை, வித்தியாசமான சிந்தனைகளைத் தீர்மானிக்கிறது.

கடலூரில் ஒரு முறுக்கு வியாபாரி இன்று மிக பிரபலம். அவரது ஆரம்பகாலம் என்ன தெரியுமா..? தன் வீட்டில் செய்த சிறிய அளவு முறுக்குப் பாக்கெட்டோடு கடை, கடையாகப் போவார். புதிய தயாரிப்பு என்பதால் கடைக்காரர்கள் வாங்க மறுத்தார்கள்.

‘கொடுத்துட்டுப் போங்க... வியாபாரம் ஆனா காசு தர்றேன்!’ என்றார்கள். அவர் ‘இது வனஸ்பதி யில் தயாரான ருசிக்கலவை சேர்க்கப்பட்ட தரமான முறுக்கு. இந்த சாம்பிளைச் சாப்பிட்டுப் பாருங்கள்’ என்றார். வாங்கிச் சாப்பிடும் கடைக்காரருக்கு அந்தச் சுவை பிடித்துப் போகும். ‘சரி... இரண்டு பாக்கெட் குடுங்க... வித்துப் பார்க்கிறேன்! நாளைக்கு வந்து காசு வாங்கிக்கங்க’ என்று கடைக்காரர் இறங்கி வரும் போதும், அந்த முறுக்கு வியாபாரி சளைப்பதில்லை.

‘இல்லீங்க... நான் சின்ன அளவிலே முதல் போட்டு இதைப் பண்றேன். கடன் கொடுத்தா, நாளைக்கு சரக்கு ரெடி பண்ண முடியாது. பாக்கெட்டுக்கு ஐம்பது பைசா குறைச்சுக்கங்க. ஆனா, அதுக்கான காசை இப்பவே காசு கொடுங்க!’’ என்று அடம் பண்ணி காசை வாங்கி விடுவார்.

இதுவும் ஒரு டெக்னிக்தானே! நம் கை முதலை இழக்காமல், பொருளையும் அன்றே விற்று காசு பார்ப்பதன் மூலம், தினம் தினம் தொழில் 10% வளர்ச்சி அடைந்துகொண்டே போகுமே! இன்று 50 பாக்கெட் தயாரித்தவர், நாளை கூடுதலாக ஐந்து பாக்கெட் முறுக்கோடு வலம் வருவாரே! யோசித்துப் பாருங்கள். இதுதான் 25 ரூபாயை 200 ரூபாயாக்கும் வித்தை!

நாம் ஒரு தனியாரிடம் ஊழியராக இருக்கிறோம். நம் எதிர்காலம் இனி மாதச் சம்பளம்தான் என்று துவண்டு விடாதீர்கள். யாரும் எந்த நேரத்திலும் கால் பதிக்கக்கூடிய, ஓய்வு என்பதே இல்லாத ஒரு ஏரியா \ பிஸினஸ்.

இறங்குங்கள்... வெற்றி வாகை சூடுங்கள்!

பிஸினஸிலே இரண்டு வகை... நீங்கள் எந்த வகை..?

‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்

பேமிலி பிஸினஸ்... பிஸினஸ் ஃபேமிலி - இப்படி வியாபாரத்தில் இரண்டு வகை உண்டு.

சூட்டிகையான வியாபாரியாக இருப்பார். நல்ல அணுகுமுறையோடு தொழில் நடத்துவார். குடும்பத்தின் மேலும் அட்டாச்மென்ட் உள்ளவராக இருப்பார். ‘நாம் சம்பாதிப்பதே நம் குடும்பத்துக்காகத்தானே!’ என்பது அவரது அணுகுமுறையாக இருக்கும். குடும்பத்தினருக்கு ஏதாவது ஒன்று என்றால், வியாபாரத்தில் இருந்து காசை எடுத்துச் செலவழிக்கத் துளியும் தயங்கமாட்டார். இவர் ஃபேமிலி பிஸினஸ் வகையானவர்.

இரண்டாவது நபர், தொழிலே கண்ணாக இருப்பார். தொழில் வளர்ச்சி மட்டுமே சிந்தனை கொண்டவராக இருக்கும் இவர், குடும்பச் செலவுக்குத் தவிர கூடுதலாகப் பணம் எடுக்காமல் உழைப்பார். குடும்பத்தாரிடம் அன்பு காட்டி, நேரம் ஒதுக்கினாலும் பண விஷயத்தில் படு கறாராக இருப்பார்.

உலக அளவில் நடத்தப்பட்ட ஒரு சர்வேயில், இதில் முதல் வகை பிஸினஸில், ஒரு கட்டத்தில் ஃபேமிலி ஜெயித்து, பிஸினஸ் படுத்துவிட்டிருக்கிறது. இந்த வியாபாரத்தின் அதிகபட்ச ஆயுள் 20 வருடங்கள்தான் என்கிறார்கள்.

இரண்டாவது வகையில், பரம்பரைகள் பல தாண்டினாலும் பிஸினஸ் மட்டும் சீரான வளர்ச்சியில் ஒரே வேகத்தில் சென்றுகொண்டே இருந்திருக்கிறது. ஒரு நல்ல தொழிலபதிருக்கு அழகே, தொழிலை வாழ வைப்பத்தில்தான் இருக்கிறது

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism