Published:Updated:

பூச்செடி தருமே பிரமாத வருமானம்!

பூச்செடி தருமே பிரமாத வருமானம்!

பூச்செடி தருமே பிரமாத வருமானம்!

பூச்செடி தருமே பிரமாத வருமானம்!

Published:Updated:
தொழில்
பூச்செடி தருமே பிரமாத வருமானம்!
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பூச்செடி தருமே பிரமாத வருமானம்!


பூச்செடிகள் பற்றிய ரசனை, கொஞ்சம் இடவசதி, சிறிய முதலீடு...
இவை இருந்தால் போதும்... தொட்டிச் செடிகள் வளர்த்து விற்கும்
‘நர்சரி கார்டன்’ தொழிலில் தாராளமாக இறங்கிவிடலாம்.

பூச்செடி தருமே பிரமாத வருமானம்!

ருடம் முழுவதும் வருமானம் தரக்கூடிய இந்தத் தொழிலில் இறங்குமுன், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பிரதான சாலையில் ஓர் இடத்தைப் பிடிக்கவேண்டும். அதில் கொஞ்சம் செலவானாலும் பரவாயில்லை, மக்கள் கண்ணில் படும் வகையில் செடிகளை வைப்பதுதான் இத் தொழிலின் அவசியத் தேவை. செடி வளர்ப்பு பற்றி அடிப்படையைக் கொஞ்சம் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. பொதுவாக, செம்மண்ணில்தான் செடிகள் நன்றாக வளரும். செம்மண் மூன்று பங்கு, இயற்கை உரம் ஒரு பங்கு என்ற கலவையில் போட்டு, மண் தொட்டியில் செடிகள் வளர்த்து, விற்பனை செய்யலாம்.

இந்தச் செடிகளுக்கான நாற்றுகளை எங்கே வாங்குவது என்பது பற்றியும் நன்றாக விசாரித்துக் கொள்ள வேண்டும். சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் குரோட்டன்ஸ், குல்மொஹர் போன்ற செடிகளின் கன்றுகள், படப்பை போன்ற புறநகர் பகுதிகளில் கிடைக்கும். மற்ற பகுதிகளில் இருப் பவர்கள் அருகிலுள்ள அரசு தோட்டக்கலை பண்ணை களில் நாற்றுகளை வாங்கிக்கொள்ளலாம். தனியார் பலரும்கூட, சிறு கன்றுகளாக விற்கிறார்கள்.

நாற்றுகளை வாங்குவதற்காக 15 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் 50, 60 ரகங்களில் செடி வாங்கி விற்று, ஒரு மாதத்தில் தாராளமாக 10,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். வெறும் அழகுச் செடிகள் மட்டுமின்றி மா, நெல்லி, கொய்யா, சப்போட்டா போன்ற மரக் கன்றுகளையும் விற்கலாம்!

பூச்செடி தருமே பிரமாத வருமானம்!

செடி நாற்றுகளை பண்ணைக்குக் கொண்டு வருவதற்கான போக்குவரத்துச் செலவு மற்றும் விற்பனை தாமதமானால் அதைப் பராமரிக்கும் செலவு போன்றவற்றையும் சேர்த்து விற்பனை விலையை நிர்ணயம் செய்யவேண்டும். கிட்டத்தட்ட இரண்டு மடங்கு விலை வைத்து விற்கலாம். 5 ரூபாய்க்கு பூச்செடி வாங்கி, அதை பத்து ரூபாய்க்குக் குறையாமல் விற்கமுடியும். மரக்கன்றுகளைப் பொறுத்தவரை அவற்றின் வளர்ச்சி, ரகத்துக்கு ஏற்ப 15 ரூபாயிலிருந்து 50 ரூபாய் வரை லாபம் வைக்கலாம்!

சாதாரணமாக, தினசரி 250 முதல் 300 ரூபாய்வரை லாபம் கிடைக்கும். இதுவே, டிசம்பர் முதல் ஏப்ரல் மாதம்வரை உள்ள காலகட்டத்தில் 500 ரூபாய் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. செடிகளை உற்பத்தி செய் பவர்களிடமிருந்து நேரடியாக வாங்கி, விற்றால் கூடுதல் லாபம் கிடைக்கும். பூச்செடிகளைவிட, மரக் கன்றுகள் விற்பனை மூலம் அதிக லாபம் கிடைக்கும்.

பூச்செடி தருமே பிரமாத வருமானம்!

தினசரி ஒரு முறையாவது செடிகளுக்கு நீர் ஊற்றுவது அவசியம். மழை நேரத்தில், தேவைப்பட்டால் மட்டுமே தண்ணீர் ஊற்றவேண்டும். மழைக்காலத்தில் நர்சரியில் தண்ணீர் தேங்காத அளவுக்கு, தரைப் பகுதியை மேடாக்கிக் கொள்வது நல்லது.

பிளாஸ்டிக் கவர், தொட்டி இரண்டிலும் செடிகளை வைத்துக்கொள்ள வேண்டும். கவரில் இருக்கும் செடி கள்தான் அதிகம் விற்கும். உடையாமலும், வாடிக்கை யாளர் எளிதில் எடுத்துச் செல்வதற்கு வசதியாகவும் இருப்பதுதான் இதற்குக் காரணம். ஆனால், குரோட் டன்ஸ் போன்ற அலங்காரச் செடிகளை தொட்டியில் மட்டுமே நட்டு விற்கவேண்டும்.

பூச்செடிகள், மரக்கன்றுகளை தனித்தனியே வரிசையாக அழகாக அடுக்கி வைத்தால் அது, வாடிக்கையாளர்களைக் கவரும். அவர்களுக்கு வேண்டியதைத் தேர்ந்தெடுக்க உதவியாக இருக்கும். ரோஜா, மல்லி, செம்பருத்தி போன்ற பூச்செடிகள் அதிகம் விற்பனையாகும் என்பதால் அவை எப்போதும் அதிகக் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். மரக்கன்றுகள் என்றால் தென்னை, மா, சப்போட்டா போன்றவை அதிகம் போகும். பழவகை மரக்கன்றுகளைப் பொறுத்தவரையில், தற்போது ஒட்டு ரகங்களுக்குத்தான் ஏக கிராக்கி.

செடிகள் பூவோடு இருந்தால்தான் நல்ல விலைக்குப் போகும். ரோஜா பூவோடு இருந்தால் அதுவும் பொலிவோடு இருந்தால் சொன்ன விலைக்குப் போகும்.

செடிகளின் வளர்ச்சியைப் போலவே உங்கள் வருமானமும் வளர வாழ்த்துக்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism