Published:Updated:

புதுப்பிறவி எடுக்கும் பூர்வீக வீடுகள்!

புதுப்பிறவி எடுக்கும் பூர்வீக வீடுகள்!

புதுப்பிறவி எடுக்கும் பூர்வீக வீடுகள்!

புதுப்பிறவி எடுக்கும் பூர்வீக வீடுகள்!

Published:Updated:
தொழில்
புதுப்பிறவி எடுக்கும் பூர்வீக வீடுகள்!
 

புதுப்பிறவி எடுக்கும் பூர்வீக வீடுகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதுப்பிறவி எடுக்கும் பூர்வீக வீடுகள்!

தா த்தா காலத்து வீடு... நம் வசதிக்கு ஏற்ற மாதிரியும் இல்லை. அதேசமயம், இடித்துவிட்டு புதிதாகக் கட்டவும் வழியில்லை என்று இரண்டும் கெட்டான் நிலையில் தவிப்பவர்களுக்கு, வழிகாட்டியாக வந்திருக்கிறது பழசைப் புதிதாக்கும் ஸ்டைல்!

வீட்டை இடிக்காமல்... பெரிதாகச் சேதப்படுத் தாமல், மாடலை மட்டும் கொஞ்சம் மாற்றி, வசதி செய்துகொள்ளும் ஐடியா! பழைய வீட்டை வைத்துக்கொண்டு அல்லாடுபவர்களுக்கு, இது நல்ல வாய்ப்பு என்கிற அதேசமயம், கட்டடக் கலையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் சூப்பரான தொழில் வாய்ப்பு!

புதுப்பிறவி எடுக்கும் பூர்வீக வீடுகள்!

இப்போது கட்டப்படும் வீடுகளின் ஆயுள் அதிகபட்சம், ஐம்பது ஆண்டு என்று கொள்வோம். அதன்பின் சின்னச் சின்னதாக வேலை வைத்துக் கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட கட்டடங் களைக் கொஞ்சம் செலவு செய்து புதுப்பித்துக் கொண்டால், மேலும் பல வருடங்களுக்குத் தொல்லையின்றி இருக்கும். அப்படி புதுப்பிக்கும் சமயத்தில், வீட்டிலுள்ள சிறிய குறைபாடுகளைக் களைந்து, நம் வசதிக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவும் முடியும் என்பது கூடுதல் லாபம்தானே!

நம்மில் பெரும்பாலோர் சென்டிமென்ட் பார்ப்பவர்களாக இருக்கிறார்கள். ‘என் தாத்தா ரசித்துக் கட்டி, வாழ்ந்த வீடு இது! இதை இடிக்கவும் முடியாது. அப்படியே வைத்துக்கொண்டு வாழ்வதும் ஆபத்து என்னும் அளவுக்குச் சிதிலமாகிக் கொண்டிருக்கின்றன சுவர்கள். என்ன செய்வது..?’ என்று குழம்புகிறவர்களுக்கு, வீட்டின் தன்மை, வெளித்தோற்றம் மாறாமல் அப்படியே விரும்பும் வகையில் உள்தோற்றத்தை உருவாக்கித் தருவதற்கும் பல நிறுவனங்கள் இருக்கின்றன.

‘‘பழைய கட்டடத்தைப் புதுப்பிக்கும்போது, சிமென்ட் கலவையின் மீது சிறப்பு இணைப்பு கெமிக்கல் ஒன்றைப் பயன்படுத்தி, புதிய சிமென்ட்டை ஒட்ட வைக்கிறார்கள். இதனால், நாம் எதிர்பார்க்கும் வலு கட்டடத்துக்குக் கிடைக்கும்’’ என்கிறார், இதுபோன்ற வீட்டுப் பராமரிப்பு கெமிக்கல்களை விற்கும், ‘சிகா இந்தியா’ நிறுவனத்தின் சென்னை கிளை மார்க்கெட்டிங் மானேஜர் பரமேஸ்வரன்.

‘‘பெரிய அறைகளைச் சிறிதாக்க, காற்றோட்ட வசதியை உருவாக்க, முன் அறையை கார் பார்க்கிங் பகுதியாக மாற்ற... என்று இன்றைய தேவைகளுக்கேற்ப புதுமைகள் செய்துகொள்ள விரும்புகிறார்கள் மக்கள். பாரம்பரியம் மிக்க வீட்டை அதன் அமைப்பு மாறாமல் நவீன வசதிகளோடு அப்படியே புதுப்பித்து தந்திருக்கிறார்கள்.

வீட்டின் சுவர்களுக்கு என்ன விதமான கலவை போடப் பட்டிருக்கிறது. அது எந்த அளவு எடை தாங்கும் என்று சோதித்து அதற்கேற்ப வாடிக்கை யாளர் விரும்பும் மாற்றங்களைச் செய்து தரமுடியும்.’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த கட்டுமானத்துறை ஆலோசகர் ஏ.வீரப்பன்.

புதுப்பிறவி எடுக்கும் பூர்வீக வீடுகள்!

இதுபோன்ற பணியைச் செய்துவரும் கட்டடக் கலைஞர்கள் சென்னையில் இருக்கிறார்கள். நடிகை மனோரமா, தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம், நடிகர் சிவகுமார் போன்றவர்கள் தங்கள் வீடுகளை இது போல புதுப்பித்திருக்கிறார்கள்.

‘‘என் வீடு பழசாகிடுச்சுங்கறது ஒருபக்கம் இருந் தாலும், மழை பெய்தால் வீட்டு வாசலில் தண்ணீர் தேங்கி, வெளியில் நடமாடவே முடியாத அளவுக்கு மோசமாகிவிடும். சிமென்ட் தளம் என்பதால் தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொண்டு, எந்நேரமும் ஈரம் தேங்கிய நிலையிலேயே இருக்கும். சின்ன பிரச்னைதான். ஆனால், மழைக்காலத்தில் இது பெரிய தலைவலியாக இருக்கும். இப்போது வாசலில் உள்ள தரையை மாற்றி, பூமிக்குள் தண்ணீர் போகும்படி சிறு இடைவெளி விட்டு, சிமென்ட் டைல்ஸ் பதித்தவுடன் தண்ணீர் தேங்காமல் வடிந்துவிடுகிறது’’ பெரிய நிம்மதி யுடன் சொல்கிறார் ஆச்சி மனோ ரமா. வீட்டுக்கு உள்ளேயும் இது போன்ற சிறு சிறு மாற்றங்களைச் செய்து கொண்டுள்ளார் இவர்!

இதுபோன்ற சேவையைச் செய்து வருகிறது சென்னையில் உள்ள ரீ-பர்த் நிறுவனம். அதன் பொறுப்பாளர் வித்யா கூறும் போது, ‘‘சுமார் 50 வருடப் பழைய வீடுகளை இடித்துக் கட்டுவதைவிட, அவற்றை உறுதிப்படுத்தி புதுப்பிப்பது மிகவும் லாபகர மானது. இம்முறையில் கட்ட டத்தை இடித்துவிட்டு புதிதாகக் கட்டும் செலவில் 20-25% தான் ஆகும். இதற்கான வழிமுறைகளைக் கற்றுத்தரத் தயாராக இருக்கிறோம்’’ என்கிறார் வித்யா.

வீட்டை அழகாக்குவதோடு, அதன் உறுதிக்கும் உத்தரவாதம் இருக்கவேண்டும் என்பதால் மிகவும் கவனத்தோடு திட்டமிட வேண்டிய விஷயம் இது! புதிதாகக் கட்டுவது என்றால் சதுர அடி கணக்கை வைத்து ரேட் நிர்ணயித்துக் கொள்ளலாம். புதுப்பிக்கும் பணியில் அப்படிச் செய்யமுடியாது. எனவே, கட்டு மானப் பொருட்கள், பணியாளர் கள், தொழிலாளர்கள் செலவு போக சர்வீஸ் சார்ஜ் வசூலித்துக் கொள்கிறார்கள் இவர்கள்.

‘‘அந்தக் காலத்தில் பூகம்பம், வெள்ளம், சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்கள் இல்லாத நேரத்துக்கு ஏற்ப வீடுகள் அமைக்கப்பட்டன. இப்போது அதையும் கணக்கில்கொண்டு வீடுகளை மாற்றி அமைக்க வேண்டி இருக்கிறது. சராசரியாக ஒரு வீடு 30 வருடங்கள் உழைக்கும் என்று கணக்கில் கொண்டால், அதை முறையாகப் பராமரித்து, பழுது பார்த்து, வலிமைப்படுத்திக் கொண்டே வந்தால் அது கிட்டத் தட்ட ஐந்து மடங்கு வரை ஆயுளைப் பெருக்கிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது’’ என்கிறார் சென்னை ஐ.ஐ.டி கட்டடவியல் பேராசிரியர் ஏ.ஆர். சாந்தகுமார்.

புதுப்பிறவி எடுக்கும் பூர்வீக வீடுகள்!

இவர் சொல்வதை வைத்துப் பார்த்தால், பெரிய மனிதர்களின் நினைவு இல்லங்கள், பழையஆலயங்களை மட்டுமல்லாமல், வீடுகளைக் கூட மாற்றிக்கொள்ளலாம். சராசரி மனிதர்களின் தேவைகளே இன்று வேறு மாதிரியாகிவிட்ட நிலையில், இந்தத் தொழிலுக்கு எதிர்காலத்தில் பெரிய வரவேற்பு இருப்பது நிச்சயம். நாளுக்கு நாள் வீடுகள் பெருகிக்கொண்டே இருக்கும் இன்றைய காலகட்டத்தில், இது அவசியத் தேவையும் கூட! தமிழகத்தில் இன்னும் இந்தக் கலை பிரபலமடையாததால், இதில் கட்டடக் கலைஞர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

வீட்டின் வெளித்தோற்றம் மாறும்போதும், புதிதாக அறைகள் கட்டும்போதும் மீண்டும் உள்ளாட்சி அமைப்புகளிடம் பிளான் அப்ரூவல் வாங்கவேண்டும். அதேநேரத்தில் தரை, குளியல் அறை, படுக்கை அறை போன்றவற்றை நவீனப் படுத்தினால் புதிய அப்ரூவல் தேவையில்லை.

பெரிய பெரிய வீடுகளைக் கட்ட கான்ட்ராக்ட் எடுத்து, லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துவிட்டு லாபத்துக்காகக் காத்திருப்பதைவிட, சின்னதாக ரீ-மாடல் வேலை பார்த்துச் சம்பாதிக்க வழிகாட்டும் இத்தொழில் சூப்பரானதுதான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism