Published:Updated:

கொட்டிக் கொடுக்கும் கோலியஸ்... பணக் கிழங்கு!

கொட்டிக் கொடுக்கும் கோலியஸ்... பணக் கிழங்கு!

கொட்டிக் கொடுக்கும் கோலியஸ்... பணக் கிழங்கு!

கொட்டிக் கொடுக்கும் கோலியஸ்... பணக் கிழங்கு!

Published:Updated:
தொழில்
கொட்டிக் கொடுக்கும் கோலியஸ்... பணக் கிழங்கு!
 

கொட்டிக் கொடுக்கும் கோலியஸ்...

பணக் கிழங்கு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கொட்டிக் கொடுக்கும் கோலியஸ்... பணக் கிழங்கு!

கண்ணுக்குத் தெரியாமல் எத்தனையோ மூலிகைகள் மண்மூடிக் கிடக்கின்றன. உடலுக்கு நல்லது என்பது ஒருபக்கம் இருக்க... அவை பணம் கொழிக்கும் விவசாயமாகவும் இருக்கிறது என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய விஷயம்!

கொட்டிக் கொடுக்கும் கோலியஸ்... பணக் கிழங்கு!

டல் பருமனைக் குறைக்கவும், கண், இதயம் தொடர்பான நோய்கள் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கும் மருந்தாகப் பயன்படுகிற கோலியஸ் கிழங்குதான் அந்த மூலிகை. இந்தக் கிழங்கிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஃபோர்ஸ் கோலின் எனும் வேதிப்பொருள் மருந்தாகப் பயன்படுகிறது.

நீண்டகாலமாக மலைக்காடுகளில் வெறும் செடியாகவே இருந்த கோலியஸை, 1972-ம் ஆண்டு ஆய்வு செய்துள்ளனர். அப்போது, இதிலுள்ள ஃபோர்ஸ்கோலின் என்னும் வேதிப்பொருள் மருத்துவ குணங்கள் நிறைந்தது என்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள். பின்னர்தான் இந்த பணம் கொழிக்கும் மூலிகையின் மகத்துவம் புரிந்திருக்கிறது.

இதற்கு நம் நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள மருந்து நிறுவனங்கள் போட்டி போட்டு வாங்குகிற அளவுக்கு இந்தக் கிழங்கு நல்ல டிமாண்டாக இருக்கிறது. குறைந்த அளவிலேயே விவசாயம் நடப்பதுதான் இந்த டிமாண்டுக்கு முக்கியமான காரணம். அதனாலேயே இந்தத் தொழிலுக்கு எதிர்கால வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது!

தமிழ்நாட்டில், கோலியஸை சாகுபடி செய்து ஏக்கருக்கு 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை லாபம் பெற வழி செய்திருக்கிறார் சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள எம்.ஜி.பி நிறுவனத்தின் உரிமையாளர் ‘அக்ரி’ பழனிவேல். ‘‘ஐந்து ஏக்கரில், ஐந்தே விவசாயிகளை வைத்துத் தொடங்கப்பட்ட கோலியஸ் விவசாயம், இன்று 8,000 ஏக்கரில் 1,000 விவசாயிகளை வளமுடன் வாழ வழிசெய்துள்ளது’’ என்கிறார் இவர்.

‘‘தமிழ்நாட்டின் மண்வளம் இக்கிழங்குகளுக்கு வரப்பிரசாதம். இங்கே விளைகிற கிழங்குகளில் வேதிப்பொருள் அதிகம் கிடைப்பதால், மருந்து நிறுவனங்கள் இவற்றை தேடித்தேடி வாங்குகின்றன’’ என்ற பழனிச்சாமி, இந்தக் கிழங்கைப் பயிரிடுவது பற்றிச் சொன்னார்.

‘‘ஆறுமாத காலத்தில் வருமானம் தரக்கூடிய கிழங்கு இது. வடிகால் வசதியுள்ள செம்மண் மற்றும் சரளை மண் பகுதிகளில் இதனைப் பயிர் செய்ய முடியும். இதை செடியாக வாங்கித்தான் நடவு செய்யவேண்டும்.

மூன்று மாதங்கள் வளர்ந்து கணுக்கணுவாக இருக்கும். நீண்ட தண்டும் கணுவுக்கு இரண்டு இலைகளுமாக இருக்கும். இந்தச் செடியில் உள்ள இளம் கணுக்களை பிளேடால் வெட்டி, விதைபோல ஊன்ற வேண்டும். ஒரு கணு பூமியில் புதையும்படி நட்டால் அப்படியே வேர் பிடித்துவிடும். இந்தச் செடிகளை எங்களைப் போன்ற பண்ணை நடத்துபவர்களிடம் இருந்து வாங்கிக் கொள்ளலாம்.

கொட்டிக் கொடுக்கும் கோலியஸ்... பணக் கிழங்கு!

ஆறுமாதம் கழித்து அறுவடை சமயத்தில் கிழங்கு களை எங்களிடமே விற்கவும் முடியும். அதோடு கிழங்கு வளர்க்கத் தேவைப்படும் உரங்கள் வாங்குவது போன்ற செலவுகளுக்கு (ஏக்கருக்கு 6,000 முதல் 10,000 ஆயிரம் ரூபாய்) வங்கிக்கடன்களும் கிடைக்கிறது’’ என்றார் பழனிவேல்.

ஏக்கருக்கு 6 முதல் 12 டன் வரை மகசூல் கிடைக்கும். இந்த வருட ஒப்பந்தப்படி விவசாயிகள், கிலோவுக்கு 5 ரூபாய் வீதம் 20,000 முதல் ரூபாய் 50,000 வரை லாபம் பெற லாம். இயற்கை சீற்றங் களில் இருந்து காக்க, இன்ஷூரன்ஸ் வசதி யும் உண்டு.

‘‘கோலியஸ் பல விவசாயிகளை வருமானத்துடன் வாழ வைத்திருக்கிறது’’ என்று சந்தோஷப் பூரிப்புடன் சொல்கிறார் ‘ஆனந்தா டிரேடிங் நிறுவன’த்தின் செந்தில்வேலன். எம்.பி.ஏ பட்டதாரியான இவரும், 10 மாவட்டங்களில் 1,500 ஏக்கரில் கோலியஸை ஒப்பந்த விவசாயம் மூலம் பயிர் செய்திருக்கிறார்.

‘‘இந்த வருடம் தமிழ்நாடு முழுக்க 5,000 ஏக்கரில் கனரா வங்கியின் உதவியுடன் கோலியஸ் பயிரிட விருக்கிறோம்’’ என்ற செந்தில்வேலன்,

‘‘தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விதமான நிலத்துக்கும் தகுந்தாற்போல் 10 விதமான மூலிகை களைப் பயிரிடும் திட்டமும்கூட இருக்கிறது. இதில் ஆர்வம் காட்டும் விவசாயிகளுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறோம்’’ என்ற உறுதி கொடுத்த செந்தில்வேலன், கோலியஸைப் பயிரிடும்போது கடைப்பிடிக்க வேண்டிய சில முறைகளைப்பற்றி விளக்கினார்.

‘‘ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள்தான் நடவுக்கு ஏற்ற மாதங்கள். நடவு செய்வதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே ஏக்கருக்கு 7 டன் தொழு உரமிட்டு உழவு செய்ய வேண்டும்.

மண் இறுகாமல் இருப்பது அவசியம். இதற்கு, வெங்காயம் பயிர் செய்வதற்கு பாத்தி அமைப்பதைப் போன்றே பாத்தி அமைக்கவேண்டும். வளமான மண்ணில் பாத்திக்கு நடுவே 2 அடியும், செடிக்கு இடையே ஒன்றரை அடி வீதமும் இடைவெளிவிட்டு ஏக்கருக்கு 14,500 கன்றுகள் வரை நடலாம்.

கொட்டிக் கொடுக்கும் கோலியஸ்... பணக் கிழங்கு!

நட்ட மூன்றாவது நாள் உயிர்த் தண்ணீர் விட வேண்டும். காய்ச்சலுமில்லாத, பாய்ச்சலும் இல்லாத பாசனம்தான் இந்த மூலிகைக்கு ஏற்றது. 40 நாட்கள் வரை வாரம் ஒருதடவை பாசனமும், அதன்பின் 10 நாட்களுக்கு ஒருமுறையும் நீர் பாய்ச்சி, அறுவடைக்கு பத்து நாட்களுக்கு முன்பு பாசனத்தை நிறுத்திவிட வேண்டும். வளர்ப்பு முறை, அறுவடை போன்ற விஷயங்களில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களே சூபர்வைஸர் களின் மூலம் விவசாயிகளுக்கு உதவுகின்றன.

ஆறுமாதம் கழித்து அறுவடை முடிந்ததும் மூன்று மாத இடைவெளி தேவை. அந்த காலத்தில், வேறு குறுகிய கால மூலிகைகளையோ, பயிர்களையோ சாகுபடி செய்யலாம்’’ என்றார் செந்தில்வேலன்.

கோலியஸ் கிழங்கைக் காயவைத்து, அரைத்து மாவாக்கி பெங்களூருக்கு அனுப்புகிறார்கள். அங்கே ஹோமியோபதி மருந்தாக்கி அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு அனுப்புகிறார்கள்.

விவசாயிகளே..! உங்களது தலைப்பாகையில் பணத்தைச் செருகிக்கொள்ள, இந்த மூலிகைப் பக்கமும் கவனம் செலுத்துங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism