Published:Updated:

பிஸினஸ் குட்டிக்கதை

பிஸினஸ் குட்டிக்கதை

பிஸினஸ் குட்டிக்கதை

பிஸினஸ் குட்டிக்கதை

Published:Updated:
தொழில்
பிஸினஸ் குட்டிக் கதை!
 

வெற்றி நிச்சயம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிஸினஸ் குட்டிக்கதை

தொ ட்டதெல்லாம் பொன்னாகும் ராசி ராம்குமாருக்கு! அவருடைய கணிப்புத் திறமைக்கு பரிசாக பணம் கோடிகோடியாகக் கொட்டுகிறது. அவரது ‘ஆர்.கே குரூப் கம்பெனீஸ்’ கால் வைக்காத துறையே இல்லை என்று சொல்லலாம்.

ஒரு பார்ட்னரைச் சேர்த்துக்கொண்டு தொழில் ஒன்றில் இறங்குவார். முதலீடு இவருடையதாக இருக்கும், உழைப்பு பார்ட்னருடையதாக இருக்கும். ஒரு கட்டத்தில் மொத்த கம்பெனியையும் பார்ட்னர் பொறுப்பில் விட்டுவிட்டு அடுத்த தொழிலைத் தேடிப் போய்விடுவார். இவருடைய பெயருக்காகவும், முதலீட்டுக்காகவும் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் வந்துவிடும்.

சமீபத்தில், ஒரு தோல் தொழிற்சாலையைத் துவக்கும் திட்டத்தில் இறங்கினார் ராம்குமார். அதற்கு பார்ட்னராக யாரைப் பிடிக்கலாம் என்று தேடியபோது ஸ்டீஃபனின் முகம் நினைவுக்கு வந்தது.

ஏற்கெனவே இந்தத் துறையில் தொழில் நடத்தியவர் ஸ்டீஃபன். அவரைப் பற்றிச் சொன்னதும் ஜி.எம் அதிர்ந்துவிட்டார். ‘எப்போதுமே சரியாகக் கணிக்கும் எம்.டி\க்கு இப்போது என்னாச்சு..? சொந்தமாகத் தோல் தொழிற்சாலை ஒன்றை நடத்தி, அதில் தோற்று கிட்டத்தட்ட இன்சால்வன்ஸி கொடுத்து, இப்போது தொழில் இல்லாமல் இருப்பவர்தான் ஸ்டீஃபன். அவரை நம்பி நிர்வாகத்தைக் கொடுப்பதா..? நம் முதலாளி ஆர்.கே-வுக்கு இறங்குமுகம் ஆரம்பமாகி விட்டதா?’ என்று மனம் கலங்கி, புழுங்கியவர் ஒரு சந்தர்ப்பத்தில் அதை ராம்குமாரிடம் சொல்லியும் விட்டார்.

‘‘இல்லை ஜி.எம்! நீங்கள் பார்ப்பது ஒருவிதமான கண்ணோட்டம்தான். ஸ்டீஃபன் தவறு செய்தவர்தான், தொழிலையே இழந்தவர்தான். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால், அந்தத் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டிருப்பார். அவர் கம்பெனியை மூடிய இந்த இரண்டு வருடத்தில் தினம் தினம், எப்படியெல்லாம் நடத்தியிருந்தால் லாபகரமாக இருந்திருக்கும் என்ற திட்டங்களை மனதளவில் போட்டுப் போட்டுக் கலைத்திருப்பார். அதை செயல்படுத்த ஒரு வாய்ப்புக் கொடுக்கும்போது, இன்னும் பலமடங்கு வேகத்தோடும், ஜெயித்துக் காட்டவேண்டும் என்ற வெறியோடும் உழைப்பார்.

அதைவிட, நம்மை நம்பி ஒருவர் பணத்தைக் கொட்டியிருக்கிறார். அவருக்கு உண்மையாக உழைத்து விட்ட இடத்தைப் பிடிக்கவேண்டும் என்ற வெறியும் வேகமும் அவருக்குள் இருக்கும். ஜெயித்துக் காட்டுவார். உடனே, ஸ்டீபனை வரவழையுங்கள்’’ என்றார் ராம்குமார்.

தெளிவு தெரிந்தது ஜி.எம்-மிடம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism