Published:Updated:

தொடர்: சிகரம் தொடுவோம்!

தொடர்: சிகரம் தொடுவோம்!

தொடர்: சிகரம் தொடுவோம்!

தொடர்: சிகரம் தொடுவோம்!

Published:Updated:
பங்குகள்
தொடர்: சிகரம் தொடுவோம்!
 

சிகரம் தொடுவோம்!

ராமனாதன், செந்திலுக்கு அவ்வப்போது அறிவுரை சொல்வதும் அதைப்பின்பற்றி செந்தில் தன் நடவடிக்கைகளைச் செய்வதும் என்று
பழகி இருந்தார்கள். ஒரு மாலையில் ராமனாதனைச் சந்தித்தார் செந்தில்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொடர்: சிகரம் தொடுவோம்!

“உ ங்களுக்கு விவசாயம் பற்றித் தெரியுமா?” என்று கேட்டார் ராமனாதன். ‘‘திடீரென்று எதற்கு இந்தக் கேள்வி?’’ என முதலில் குழம்பிய செந்தில், உள்ளுக்குள் ஏதோ சூட்சுமம் இருக்கும் என்று நினைத்தபடி, தான் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் என்றும், தன் தந்தை இப்போதும் கிராமத்தில் விவசாயம் செய்து கொண்டிருப்பதாகவும் சொன்னார்.

“ரொம்ப நல்லதாகப் போச்சு... விதைபோட்டு பயிர் வளரத் துவங்கியதும் உங்கள் தந்தை என்ன செய்வார்?”

‘பங்குச் சந்தை பற்றி சொல்லித் தரச் சொன்னால், கேட்க வந்த நம்மை, உழவர் சந்தைக்கு அழைத்துப் போகிறாரே!’ என்று யோசித்தபடியே பதிலைச் சொன்னார்.

“காலையில் எழுந்து தோட்டத்தை ஒரு சுற்று சுற்றி வருவார், ஆடு, மாடு எதுவும் பயிரை மேய்ந்திருக்கிறதா, வேலி எல்லாம் ஒழுங்காக இருக்கிறதா, பயிர்களின் வளர்ச்சி சீராக இருக்கிறதா, தண்ணீர் எல்லா இடத்துக்கும் பாய்ந்துள்ளதா, பூச்சிகள் தாக்கி, பயிருக்கு நோய்கள் ஏதும் வந்துள்ளதா, பயிர் வளர்ச்சியைத் தடுக்கும் களைகள் ஏதும் வளர்ந்துள்ளதா? என்று பல விஷயங்களைப் பார்ப்பார்’’ என்று செந்தில் சொன்னதும், ‘‘உங்கப்பா உங்க தோட்டத்தை மட்டும்தான் பார்ப்பாரா..?’’ என்று அடுத்த கேள்வியைப் போட்டார்.

‘‘பக்கத்துத் தோட்டத்தில் பயிர் வளர்ச்சி எப்படி இருக்கிறது..? அவர்கள் ஏதேனும் புதுமைகள் செய்கிறாரா என்றும் பார்ப்பார்” என்று செந்தில் சொன்னதும், லேசாகச் சிரித்த ராமனாதன் பாயின்டைப் பிடித்தார்.

தொடர்: சிகரம் தொடுவோம்!

“பயிரைப் போலதான் பங்குகளும். பயிர் நன்றாக வளர என்ன செய்கிறோமோ அதைப் பங்குகள் விஷயத்திலும் கடைப்பிடிக்கவேண்டும். தினமும் நமது பங்குகளின் மதிப்பின் ஏற்ற இறக்கத்தைக் கவனிக்கவேண்டும். நல்ல பங்குகளுக்கு இடையே நாம் சில களைகளைப் போன்ற பங்குகளையும் அறியாமல் வாங்கி இருக்கலாம். அவை களை என்று தெரிந்தவுடன் அதை விற்று நமது முதலீட்டைக் காக்கவேண்டும்’’ என்றார்.

மேலும் தொடர்ந்த ராமனாதன், “எதற்காக உங்கள் அப்பா பக்கத்துத் தோட்டத்தைப் பார்க்கிறார் தெரியுமா? பக்கத்து தோட்டத்துப் பயிருக்கு ஏதாவது சேதாரம் அல்லது பூச்சி தாக்கி வளர்ச்சியைப் பாதித்திருந்தால் சில நாட்களில் நமது பயிரையும் அது பாதிக்குமே... அதற்காகத்தான். இது அப்படியே பங்குச் சந்தைக்கும் பொருந்தும். நமது பங்குகள் உள்ள துறையின் மற்ற பங்குகளையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

உதாரணத்துக்கு, நம்மிடம் அரசுடைமையாக்கப்பட்ட ஒரு வங்கியின் பங்கு இருக்கிறது என்றால், நமது பங்கின் நிலையைப் பார்ப்பதோடு, மற்ற அரசுடைமை வங்கிகளின் பங்குகள் எப்படியுள்ளன என்று தினமும் கவனிக்கவேண்டும். அப்படி மற்ற வங்கிகளின் பங்கு மதிப்பு வீழ்ச்சியடைகிறது என்றால், அதன் வீழ்ச்சிக்கான காரணத்தை ஆராய வேண்டும். காரணம் பொதுவானதாக இருந்தால், அது ஒருவேளை, நம்மிடம் இருக்கும் பங்கையும் பாதிக்கக்கூடும் இல்லையா?’’ என்று விளக்கினார் ராமனாதன்.

இடைமறித்த செந்தில், ‘‘வீழ்ச்சிக்கான காரணத்தை எப்படி தெரிந்துகொள்ள முடியும்?’’ என்று கேட்டார்.

‘‘பங்குச் சந்தையில் ஏற்கெனவே வர்த்தகமாகும் ஒரு குறிப்பிட்ட வங்கியின் பங்கு வெளியீட்டையோ அல்லது தனியார் மயமாக்கலையோ சில அரசியல் கட்சிகள் எதிர்க்கலாம். அதன் காரணமாக அந்த வங்கியின் பங்குகளின் விலை சரியக்கூடும். இதேகாரணம் இதைப்போன்ற மற்ற பொதுத்துறை வங்கிகளுக்கும் பொருந்தலாம் என்பதால், அவற்றின் விலையும் சற்றே இறக்கத்தைக் காணும். உடனடியாக அதன் தாக்கத்தை அறிந்து, அதற்கேற்ப செயல்படவேண்டும். அதற்காகத்தான் இப்படி கவனிக்கவேண்டும் என்கிறேன்’’ என்றார்.

அடுத்து செந்திலிடம், “என்ன செய்தித்தாள் வாங்குகிறீர்கள்... எந்த டி.வி சேனல் பார்ப்பீர்கள்?” என்று ராமனாதன் கேட்க, ‘‘ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரண்டு தினசரி வாங்குவேன். டி.வி-யில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் பார்ப்பேன். டிஸ்கவரி சேனலும் ரசித்துப் பார்ப்பேன்’’ என்றார் செந்தில்.

“நல்லது. இனி பிஸினஸ் பத்திரிகைகளும் வாசிக்கப் பழகிக் கொள்ளுங்கள். பிஸினஸ் தினசரிகளில் ஏதாவது ஒன்றைக் கட்டாயம் வாங்குங்கள். அதில் நீங்கள் வாங்கிய பங்குகளின் மதிப்பை தினமும் பாருங்கள். ஏற்ற இறக்கத்திற்கான காரணங்களைக் கண்டுபிடிக்க முயலுங்கள். சிலசமயம் நியாயமான காரணம் ஏதுமில்லாமல்கூட விலை மாற்றங்கள் நிகழலாம். நண்பர்களுடன் விவாதியுங்கள். பின் தேவை என்றால் அதற்குத் தக்க முடிவெடுங்கள். அதேபோல, பிஸினஸ் செய்திகளுக்கென்று பல சேனல்கள் வருகின்றன. அந்த சேனல்களைப் பார்க்க ஆரம்பியுங்கள். டிஸ்கவரி சேனலைவிட பல சுவாரஸ்யங்கள் கிடைக்கும். முக்கியமான பங்குகளின் விலை ஏற்ற, இறக்கத்தை அதில் காட்டுவார்கள். அதோடு பங்குச் சந்தை நிலவரத்தைப் பற்றிய நிபுணர்கள் அலசலும், முக்கிய கம்பெனிகளின் காலாண்டு மற்றும் ஆண்டு அறிக்கைகளின் சாராம்சத்தையும், தொழில் நிறுவனங்களுக்குச் சாதகமான மற்றும் பாதகமான சட்ட திருத்தங்களையும், அதனால் பங்குச் சந்தையில் நிகழக்கூடிய மாற்றங்களையும் விவரிப்பார்கள். எப்படி ஒரு காலத்தில் விவசாயிகளுக்கு ‘வயலும் வாழ்வும்’ நிகழ்ச்சி முக்கியமாக இருந்ததோ அதைப் போலத்தான் இதுவும்” என்றார் ராமனாதன்.

தொடர்: சிகரம் தொடுவோம்!

“சரி... எப்போது இந்தப் பங்குகளை வாங்கினீர்கள்?” என்று ராமனாதன் கேட்க, ‘‘ஏப்ரல் 17\ம் தேதி, நீங்கள் குறிப்பிட்டிருந்த விலையை ஒட்டியே பங்குகளை வாங்கினேன்’’ என்றார் செந்தில்.

‘‘அடுத்தமுறை நாம் சந்திக்கும்போது, அந்தப் பங்குகளை வாங்கிய விலையோடு வாருங்கள். ஒரு மாதத்தில் அவை எப்படியெல்லாம் ஏறி, இறங்கி இருக்கிறது... ஏன் அப்படி நடந்தது..? என்பது பற்றி நான் உங்களுக்கு விளக்கமாகச் சொல்கிறேன்’’ என்றார் ராமனாதன்.

வாசகர்களே, நீங்கள் செய்யவேண்டிய முக்கிய வேலை, முதலில் நீங்கள் வாங்கிய பங்குகள் உங்களது டீமேட் அக்கவுண்டில் வரவு வைக்கப் பட்டிருக்கிறதா என்று சரிபாருங்கள். வாங்கிய மூன்று நாட்களுக்குள் உங்கள் கணக்குக்குப் பங்குகள் வரவேண்டும். உங்களிடம் விற்றவர் ஏதோ ஒரு காரணத்துக்காக பங்குகளைச் சரியான நேரத்தில் டெலிவரி கொடுக்கவில்லை என்றால், சந்தையில் ஏலமிட்டு அதை வாங்கிக் கொடுப்பார்கள். இதனால், மேலும் ஒரு நாள் தாமதமாகலாம்.

நீங்கள் பங்கு வாங்கிய நிறுவனம் அதன் செயல்பாடுகள் பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு நாள் காலையும் பிஸினஸ் தினசரி படிக்கும்போது அந்த நிறுவனம் மற்றும் அது சம்பந்தப்பட்ட செக்டார் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படியுங்கள். அந்த கம்பெனிகளின் லாப, நஷ்டக் கணக்குகளைப் பார்க்க new.bseindia.com சென்று பாருங்கள். ஒளிவு மறைவில்லாமல், ஆதார பூர்வமான முழுவிவரமும் தெளிவாகக் கிடைக்கும்.

உங்களிடம் இன்டர்நெட் இணைப்பு இருக்கிறதா..? வாங்கிய பங்குகளை இணையதளத்தில் போர்ட் ஃபோலியோ ( portfolio ) மேனேஜ்மென்ட் பகுதியின் கீழ் வைத்துக்கொண்டால், அந்தப் பங்குகளைப் பற்றிய அத்தனை தகவல்களும் கிடைக்கும். ஒவ்வொரு நிமிடமும் மாறும் பங்குகளின் விலையைப் பார்க்கமுடியும். வாங்கிய விலை, வாங்கிய நாள், அன்றுவரை அதன் மதிப்பு உயர்வு அல்லது தாழ்வு போன்ற விவரங்களும் கிடைக்கும். அதோடு, அத்தனை பங்குகளையும் ஒரே இடத்திலும்கூட பார்க்கமுடியும்.

உங்களுக்கு ஆன்லைன் மூலம் கையிருப்பைப் பார்க்கும் வசதியிருந்தால் சரிபாருங்கள். இப்போது பல நிறுவனங்கள் கட்டணம் ஏதுமில்லாமலேயே இந்தச் சேவையை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறார்கள். இதற்கான ‘யூசர் ஐ.டி’ மற்றும் ‘பாஸ் வேர்ட்’களை நீங்கள் மட்டுமே பார்க்கும் வகையில் பத்திரமாகக் குறித்து வைத்துக் கொள்ளவும்.

அடுத்தது தினசரி பங்குகளின் ஏற்ற இறக்கத்தைப் பாருங்கள். ஏன் ஏறுகிறது அல்லது இறங்குகிறது? என்ற கேள்வியை மனதுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். இதை அறிந்துகொண்டால், நீங்கள் உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆகிவிடுவீர்கள். இது முடியக்கூடிய காரியம்தான். இதுதான் நமது பயணத்தின் துவக்கம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism