Published:Updated:

பங்குப் பரிந்துரை

பங்குப் பரிந்துரை

பங்குப் பரிந்துரை

பங்குப் பரிந்துரை

Published:Updated:
பங்குகள்
பங்குப் பரிந்துரை
 

பங்கு வாங்க நல்ல நேரமிது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பங்குப் பரிந்துரை

மே 12-ம் தேதி, தேசிய பங்குச் சந்தையில் நிலவிய பங்குகளின் விலை அடிப்படையிலான பரிந்துரை!

ட்யூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ரூ.589.20 ( TUBEINVEST )

செ ன்னை, முருகப்பா குழுமத்தின் கீழ் வரும் இந்த சைக்கிள் தயாரிப்பு நிறுவனம், இங்கிலாந்து நாட்டின் ‘ட்யூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ்’ என்ற கம்பெனியுடன் கூட்டு சேர்ந்து தொடங்கப்பட்டது. ஹெர்குலிஸ், பி.எஸ்.ஏ-எஸ்.எல்.ஆர் போன்றவை இவர்களின் பிரபல தயாரிப்புகள். கடந்த சில ஆண்டுகளாக ஆட்டோ உதிரி பாகங்கள், இரும்புக் குழாய்கள் உற்பத்தியிலும் ஈடுபடத் தொடங்கியுள்ள இந்நிறுவனம், தற்போது மாருதி, ஹுண்டாய் கார்களுக்கான கதவுகள் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது.

இதுதவிர, தன் துணை நிறுவனமான ‘டி.ஐ டைமண்ட் செயின்’ மூலம் சைக்கிள், மோட்டார் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்குத் தேவையான செயின்களையும் தயாரித்து வருகிறது. 2001\ம் ஆண்டு வட இந்திய மார்க்கெட்டை மனதில் கொண்டு நாசிக்கில் ஓர் ஆலையை நிறுவியது. அதோடு, செலவைக் குறைக்க 2002-ல் சீனாவிலிருந்து சைக்கிள் உதிரிபாகங்கள் இறக்குமதி செய்யத் தொடங்கியது.

இதே ஆண்டில் பொதுமக்களிடமிருந்து 25% பங்குகள் திரும்பப் பெறப்பட்டன. 2004-ல் இந்நிறுவனம் தனது முதலீட்டாளர் களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்கியது. அதிலிருந்து மெள்ள வளர்ச்சி பெற்று, இன்று வலுவான ஒரு நிலையை எட்டியுள்ளது.

அண்மையில் இது தனது பங்குகளை, 10 ரூபாய் என்ற முக மதிப்பிலிருந்து 2 ரூபாய் கொண் டதாக பிரிக்க முடிவு செய்துள்ளது. சிறப்பான வருமானத்தை ஈட்டித் தரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் இந்தப் பங்குகளை நீண்டகால அடிப்படையில் நம்பி வாங்கலாம்.

பலார்ப்பூர் இண்டஸ்ட்ரீஸ் ரூ.139.75 ( BILT )

பங்குப் பரிந்துரை

லார்ப்பூர் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவின் முக்கிய பேப்பர் உற்பத்தி நிறுவனம். இது அச்சுக் காகிதம், எழுதப் பயன்படுத்தும் காகிதம், தொழிற்துறைக்கு பயன்படுத்தப்படும் சிறப்பு வகை காகிதம் என பலவற்றைத் தயாரித்து வருகிறது. பூச்சுகொண்ட, எடை குறைந்த காகித உற்பத்திக்கு தென் கொரியா மற்றும் ஜப்பானிய நிறுவனங்களுடன் தொழில்நுட்ப ஒப்பந்தம் செய்துள்ளது.

2002-ம் ஆண்டு 28 ரூபாய் பிரீமியத்தில் உரிமைப் பங்குகளை வெளியிட்டது. அத்துடன் 140 கோடி ரூபாய்க்கு கடன்பத்திரங்களையும் வெளியிட்டு, நிதி திரட்டி தனது விரிவாக்கத் திட்டங்களுக்குப் பயன்படுத்திக்கொண்டது. 2005\ம் ஆண்டு இறுதியில் டிஷ்யூ பேப்பர் எனப்படும் சிறப்புவகை பேப்பர் உற்பத்தியில் இறங்கி, ஆண்டுதோறும் 100 கோடி ரூபாய் என்ற விற்பனை இலக்கோடு செயல்பட்டு வருகிறது.

2006 ஜனவரியில் இது ஏ.பி.ஆர் பேக்கேஜிங் என்ற துணை நிறுவனத்தைத் தன்னுடனேயே இணைத்துக் கொண்டது. பிப்ரவரி மாதத்தில் எல்.ஐ.சி நிறுவனம், பலார்ப்பூர் நிறுவனத்தின் 5 லட்சம் பங்குகளை சந்தை விலையில் வாங்கியுள்ளது. வரும் நாட்களில் இந்நிறுவனம் சிறப்பான வளர்ச்சிகாண வாய்ப்புகள் உள்ளதால், ஓராண்டு அடிப்படையில் இப்பங்குகளில் செய்யப்படும் முதலீடு, நல்ல வருமானத்தை ஈட்டித்தரும் எனச் சொல்லலாம்.

ஹைதராபாத் இண்டஸ்ட்ரீஸ் ரூ.433.80 ( HYDRBADIND )

பங்குப் பரிந்துரை

ந்து உற்பத்தி நிலையங்களில் அஸ்பெஸ்டாஸ் சிமென்ட் (ஏ.சி) கூரைத் தகடுகள், பைப்கள், மின் கடத்தாத இன்ஸ்லேட்டர்கள், இன்ஜினீயரிங் பொருட்கள் போன்றவற்றை உற்பத்தி செய்து வருகிறது ஹைதராபாத் இண்டஸ்ட்ரீஸ். இதன் இன்ஜினீயரிங் பிரிவு, ஏ.சி. பொருட்கள் உற்பத்தி மட்டுமின்றி அதற்குத் தேவையான இயந்திரங்கள் உற்பத்தியிலும், அவற்றை ஏற்றுமதி செய்வதிலும் ஈடுபட்டு வருகிறது.

தொழிற்சாலைகளுக்குத் தேவையான கிடங்கு, தொழிற்கூடம் போன்றவற்றை நவீனமுறையில் அமைத்துத் தருவதில் இதன் கட்டுமானப் பிரிவு ஈடுபட்டுள்ளது. உர உற்பத்தியாலைகள், சிமென்ட் உற்பத்திக் கூடங்கள், ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் போன்றவை இவர்களுடைய முக்கிய வாடிக்கையாளர்கள்.

இந்நிறுவனம் நைஜீரியா அரசோடு சேர்ந்து அங்கு ஓர் ஆலையும், கேரள அரசோடு சேர்ந்து ‘மலபார் பில்டிங் ப்ராடக்ட்ஸ்’ கம்பெனியும் நடத்தி வந்தது. இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவில் ஏரோகான் பேனல்களுக்கு காப்புரிமை வைத்துள்ளது. இதேபோல இன்னும் சில கட்டுமானப் பொருட்கள் உற்பத்தி செய்யும் இயந்திரங்களுக்கு அமெரிக்க காப்புரிமையும் பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு இது தனது ஹெவி இன்ஜினீயரிங் பிரிவை விற்றுவிட்டது. மலபார் இண்டஸ்ட்ரீஸில் கேரள அரசிடம் இருந்த பங்குகளை மொத்தமாக வாங்கியதன் மூலம் அந்த நிறுவனத்தை தன்னுடன் இணைத்துக்கொண்டது. இந்த ஆண்டில் மொத்தம் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 புதிய தொழிற்சாலைகளை இது தொடங்க உள்ளது. இந்த ஆலைகளில் உயர்தொழில்நுட்ப கட்டுமானப் பொருட்கள் மற்றும் அவற்றைத் தயாரிக்கும் இயந்திர உற்பத்தியில் ஈடுபட உள்ளது.

ஆந்திர அரசு இந்நிறுவனத்தில் வைத்திருந்த கணிசமான பங்குகளை தற்போது விற்று வருவதால், இப்பங்கு விலையில் சற்றே வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இப்பங்குகளை வாங்க நல்ல நேரமிது! இப்பங்குகளை வாங்குவது, நீண்டகால அடிப்படையில் பிரமாதமான வருமானத்தை ஈட்டித்தரும்.

பங்குப் பரிந்துரை
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism