Published:Updated:

தரகர் டிப்ஸ் - இனியெல்லாம் ஏற்றமே!

தரகர் டிப்ஸ் - இனியெல்லாம் ஏற்றமே!

தரகர் டிப்ஸ் - இனியெல்லாம் ஏற்றமே!

தரகர் டிப்ஸ் - இனியெல்லாம் ஏற்றமே!

Published:Updated:
பங்குகள்
தரகர் டிப்ஸ் - இனியெல்லாம் ஏற்றமே!
 

இனியெல்லாம் ஏற்றமே!

‘‘நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல... சட்டமன்றத் தேர்தல் முடிவுகளும் பங்குச் சந்தையில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியதுதான். அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில், இரண்டு மாநிலங்களில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சி வந்திருப்பது பங்குச் சந்தையில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தரகர் டிப்ஸ் - இனியெல்லாம் ஏற்றமே!

து, பங்குச் சந்தையை கொஞ்ச காலத்துக்கு மந்த நிலையில் வைத்திருக்கும். தனிப்பட்ட பங்குகள் பற்றி வரும் செய்திகளைப் பொறுத்து விலையேற்றமும் வீழ்ச்சியும் இருக்கும் என்று நம்புகிறேன்’’ என்று ஆரம்பித்தார் ‘ஆனந்த் ரதி’ பங்குத்தரகு நிறுவனத்தின் தமிழக நடவடிக்கைகள் பொறுப்பாளரான ஹரீஷ் தூதியா. வட மாநிலங்களில் வலுவான ‘ஆனந்த் ரதி’, தமிழகத்தில் அண்மையில்தான் கால்பதித்தது.

‘‘பொதுவாகப் பார்த்தால், அடுத்த 2, 3 ஆண்டு களுக்கு இந்திய பங்குச் சந்தையில் தொடர்ந்து ஏற்றம் காணப்படும். புதிதாக பங்குச் சந்தையில் நுழைய விரும்பும் முதலீட்டாளர்கள் இன்றைய நிலையிலும் உள்ளே வரலாம். ஆனால், எந்தப் பங்குகளை வாங்குவது என்று முடிவெடுப்பதில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. அண்மையில் கொஞ்சம் வேகமான ஓட்டத்தில் கூடுதலாக விலையேறிவிட்ட சில பங்குகள், அந்த விலையேற்றத்திலிருந்து பின்னோக்கி வர ஆரம்பிக்கும். எப்படியும் இன்னும் சில வாரங்களுக்குள் சந்தையில் ஒரு பின்னடைவு திருத்தம் இருக்கும். அந்தச் சமயத்தில் இந்தப் பங்குகளை வாங்குவது லாபகரமானது.

மற்றபடி, பொதுவாக இன்றைக்கு இந்திய பங்குகளின் சராசரி பி/இ விகிதம் 20-21 என்ற அளவில் இருக்கிறது. ஆனால், சர்வதேச சராசரி பி/இ விகிதமோ 25-27. சந்தையில் இப்போது அதிகரித்துவிட்ட அந்நிய முதலீட்டாளர்கள் இந்த அடிப்படையில்தான் அணுகுவார்கள். அதனால் நம் பங்குகள் இன்னும் 15 முதல் 20% வரை விலை உயர வாய்ப்பு இருக்கிறது.

வரப்போகும் 2006-07 நிதியாண்டு முடிவுகளில் இந்திய நிறுவனங்கள் இன்னும் அதிகமாக சம்பாதித்து லாபம் பார்த்தால், பங்குகள் விலையும் அதிகரிக்க வாய்ப்புண்டு. அந்தக் கணக்கீட்டில் இந்த ஆண்டு இறுதிக்குள் சென்செக்ஸ் 14 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டிவிடும்’’ என்று சொன்ன ஹரீஷ், தொடர்ந்தார்.

‘‘நமது விவசாய உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் அவர்களின் வருமானமும் வாழ்க்கைத்தரமும் உயரச் செய்யலாம். அதன் மூலமாக, எல்லா தொழில்களுக்கும் வளர்ச்சி வாய்ப்புகள் அதிகரிக்கும். அதேபோல, நாட்டின் அடிப்படை கட்டமைப்பில் தொடர் வளர்ச்சிக்கு வாய்ப்புகள் உள்ளன. அதோடு, அந்நிய நேரடி முதலீடுகள் பெருகிக்கொண்டிருப்பது, புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படுவது போன்ற நடவடிக்கைகளின் மூலம், அடுத்த 5 ஆண்டுகளில் நமது பங்குசந்தை, உலகின் சூப்பர் பவராக மாறிவிடும்’’ என்றார் ஹரீஷ் உற்சாகமாக.

தரகர் டிப்ஸ் - இனியெல்லாம் ஏற்றமே!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism