Published:Updated:

கடன்: நகை வாங்கவும் கை கொடுக்குது வங்கி!

கடன்: நகை வாங்கவும் கை கொடுக்குது வங்கி!

கடன்: நகை வாங்கவும் கை கொடுக்குது வங்கி!

கடன்: நகை வாங்கவும் கை கொடுக்குது வங்கி!

Published:Updated:
கடன்
கடன்: நகை வாங்கவும் கை கொடுக்குது வங்கி!
 

நகை வாங்கவும் கை கொடுக்குது வங்கி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடன்: நகை வாங்கவும் கை கொடுக்குது வங்கி!
கடன்: நகை வாங்கவும் கை கொடுக்குது வங்கி!

பெ ண்கள் முன்னேற்றத்தில் எப்போதுமே தனிக்கவனம் செலுத்துகின்றன வங்கிகள். அவர்களுக்கென தனி கிளைகள், சிறப்புச் சலுகைகள் என வழங்கிவரும் வங்கிகள், பெண்களுக்கென்றே பிரத்யேகக் கடன்களையும் வழங்கி வருகின்றன.

‘‘பெண்களின் கல்யாணச் செலவு என்பது இப்போதும் குடும்பத்தினருக்குப் பெரிய சுமையாகத்தான் இருக்கிறது. என்னதான் திட்டமிடலோடு இருந்தாலும் கல்யாணம் என்று வரும்போது எதிர்பாராத செலவுகளால் மூச்சுத் திணறும் நிலை இருக்கும். அந்தச் சுமையைக் குறைக்கும் வகையில் எங்கள் வங்கி ‘வி கன்யாடன்’ என்ற பெயரில் 10% வட்டியில் ஐந்து லட்ச ரூபாய்வரை கடன் வழங்குகிறது’’ என்கிறார் விஜயா வங்கியின் மண்டல பொதுமேலாளர் விட்டல்தாஸ் ஷெட்டி.

திருமணத்தை முன்நின்று நடத்தும் பெண்ணின் பெற்றோர் அல்லது சகோதரர்களும் இந்தக் கடனைப் பெறலாம். இதற்கு செக்யூரிட்டியாக சேமிப்புப் பத்திரங்கள், ஆயுள்காப்பீடு பாலிசிகளைக் காட்ட வேண்டியிருக்கும்.

நகை, வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவற்றை வாங்க அந்தப் பொருட்களையே செக்யூரிட்டியாகக் கொண்டு ‘வி மங்களா’ என்ற பெயரில் 3 லட்ச ரூபாய்வரை பெண்கள் கடன் பெற்றுக்கொள்ளும் வசதியும் விஜயா வங்கியில் இருக்கிறது. இதற்கும் 10% வட்டி.

டெய்லர் கடை, பியூட்டி பார்லர், மெடிக்கல் ஷாப், பால் பூத் போன்ற 22 வகையான தொழில்களைத் தொடங்க, ரூபாய் 5 லட்சம் வரை கடன் கிடைக்கிறது. இதற்கு மெஷின்கள் அல்லது தொழில் தொடங்க கட்டும் கட்டடங்களை செக்யூரிட்டியாகக் காட்டினால் போதும். ஒரே ஒரு நிபந்தனை, தொழிலுக்குத் தேவையான பணத்தில் 15% கையிருப்பாக வைத்திருக்கவேண்டும். இதற்கான வட்டி விகிதம் 7.50% லிருந்து 11.5% வரை, வாங்கும் தொகையைப் பொறுத்து மாறுபடும்.

5 லட்ச ரூபாய்வரை சிறுதொழில் கடன் தருகிறது பாரத ஸ்டேட் வங்கி. பெண்களுக்காக ‘ஸ்ரீ சக்தி பேக்கேஜ்’ என்ற பெயரில் வழங்கப்படுகிற இந்தக் கடனில் இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் பெற்றால், பொதுவான வட்டி விகிதத்தை விட குறைவாகவே கடன் பெறமுடியும். அதேசமயம், தங்கள் திட்டத்துக்குத் தேவையான பணத்தில் 5% மட்டும் கையிருப்புக் காட்டினாலே போதுமானது.

கடன்: நகை வாங்கவும் கை கொடுக்குது வங்கி!

கடன் வழங்குவது மட்டுமன்றி பயிற்சிகளையும் சேர்த்து அளிக்கும் வங்கிகளும் இருக்கின்றன. சென்னை வட்டார கனரா வங்கியின் மகளிர் தொழில் முனைவோர் துறை அதிகாரி சுதா ஷா-விடம் பேசினோம். ‘‘புதிதாகத் தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்குத் தேவையான ஆலோசனைகள், பயிற்சிகள், கடன் வசதிகளையும் செய்து தருகிறோம்.

பிரின்டிங் தொழில், விளக்கு தயாரிப்பது, ஆடை தயாரிப்பு, சுய உதவி குழுக்கள் அமைக்க உதவுதல் போன்ற பல்வேறு தொழில்களுக்கு நிறுவனங்களின் மூலம் இலவசப் பயிற்சி அளிக்கிறோம். அதன்பிறகு தேவைக்கேற்ப கடனுக்கும் ஏற்பாடு செய்கிறோம்.

சுய உதவி குழுக்கள் தங்களது பொருள்களை விற்பனை செய்ய, கனரா பஜார் என்ற பெயரில் கண்காட்சிகளையும் நடத்துகிறோம்’’ என்று சொன்ன சுதா ஷா, அடுத்து வீட்டு உபயோகப் பொருட்களுக்கான கடன் திட்டம் பற்றி சொன்னார். ‘‘பெண்கள் தங்களுக்குத் தேவையான நகைகள், வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவதற்கென 50,000 ரூபாய்வரை 11.5% வட்டியில் கடன் வழங்குகிறோம். வேலைக்குப் போகாத பெண்கள் தங்கள் கணவர், குழந்தைகளின் வருமானத்தை ஆதாரமாகக் காட்டிக் கடன் வாங்கலாம்’’ என்றார்.

கடன் திட்டங்களைப் பயன்படுத்தி, வருமானத்தைப் பெருக்குங்கள் பெண்களே!

எங்கெங்கே கடன் கிடைக்கும்..?

ந்தியன் வங்கியின் வட்டார அலுவலகத்தில் தொழில் முனையும் பெண்களுக்கு உதவ தனிப் பிரிவு இயங்குகிறது.

பேங்க் ஆஃப் இந்தியாவில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கும், தொழில் தொடங்கும் பெண்களுக்கும் ஒரு சதவிகிதம் குறைந்த வட்டியில் கடன் தருகிறார்கள்.

அரசு சாரா நிறுவனங்கள் மூலம் கிராமப்புறப் பெண் களுக்கு பயிற்சிகள் அளிக்கவும், பின் அவர்கள் புதிதாக தொழிற்கூடங்களை நிறுவவும், பெண்களுக்கென சிறப்புக் கடனை அளிக்கிறது சிறு தொழில் வளர்ச்சி வங்கி.

மத்திய சமூக நல வாரியம், உற்பத்தி தொழிற்கூடங்களைத் தொடங்கும் பெண்களுக்கு 3 லட்சம் வரை கடன் அளிக்கிறது.

சுய உதவிக்குழுக்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்புப் பயிற்சி அளிக்கும் திட்டத்தோடு வந்தால் அதற்கு தேவையான நிதியை இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வு துறை வழங்குகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism