Published:Updated:

இன்ஷூரன்ஸ்: இளமையில் எடு!

இன்ஷூரன்ஸ்: இளமையில் எடு!

இன்ஷூரன்ஸ்: இளமையில் எடு!

இன்ஷூரன்ஸ்: இளமையில் எடு!

Published:Updated:
பாதுகாப்பு
இன்ஷூரன்ஸ்: இளமையில் எடு!
 

இளமையில் எடு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்ஷூரன்ஸ்: இளமையில் எடு!

‘‘மகனுக்கு டாக்டர் ஸீட் கிடைச்சிருக்கு...’’

‘‘சந்தோஷம்... அடுத்து என்ன செய்யப்போற?’’

‘‘வேறென்ன செய்யறது... ஃபீஸ் கட்ட வீட்டை விக்கப் போறேன்...’’ \ இது கல்விக் கட்டணங்களைப் பற்றி விளக்கச் சொல்லப்படும் ஜோக்!

இன்ஷூரன்ஸ்: இளமையில் எடு!

னால், இந்த ஜோக்கின் பின்னணியில் இருப்பது கல்விக்கட்டணத்தின் கொடுமை என்று ஒரு கோணம் இருந்தாலும் அந்தத் தகப்பனின் திட்டமிடாத குணமும் இருப்பதையும் நாம் கவனிக்க வேண்டும். பெற்றோருக்கு பிள்ளை பிறந்ததுமே அதை டாக்டர் ஆக்க வேண்டும் என்ற கனவு மட்டும் பிறந்துவிடுகிறது. ஆனால், அதற்கு ஆகும் செலவுக்கு என்ன செய்வது என்பதைப் பற்றி அவர்கள் சிந்திப்பதே இல்லை. அதனால், பிள்ளையின் டாக்டர் படிப்புக்கு ஃபீஸ் கட்ட வீட்டைத்தான் விற்க வேண்டிவரும்.

இதுவே சின்னதாகத் திட்டமிட்டு, குழந்தை யின் பெயரில் ஒரு கல்வி காப்பீடு செய்திருந்தால், கல்லூரிச் செலவுகளுக்கு கண்ணைக் கசக்க வேண்டிய சூழ்நிலை வராது.

ஆயுள் காப்பீடு, விபத்துக் காப்பீடு போலவே கல்விக்கும் காப்பீடு இருக்கிறது. நேரடியாகக் கல்வியோடு தொடர்புடை யதாக இல்லாவிட்டாலும் குழந்தைகளின் கல்வித் தேவையை மனதில்கொண்டு, அதற்கு ஏற்ற வயதில் கிடைக்கும் வகையில் பல பாலிசிகள் இருக்கின்றன.

இன்ஷூரன்ஸ்: இளமையில் எடு!

எல்.ஐ.சி\யில் உள்ள சிறுவர் காப்பீட்டுத் திட்டங்களைப் பற்றிச் சொன்ன அதன் கோட்ட மேலாளர் அண்ணாதுரை, சிறுவர் களுக்கான காப்பீட்டுத் தேவை பற்றி விவரித்தார்.

‘‘என்னதான் திட்டமிடல் இருந்தாலும் எதிர்பாராத செலவுகள் என்பது நம் வாழ்க்கையில் இருந்துகொண்டேதான் இருக்கும். மருத்துவச் செலவுக்கு என்று நம் வருமானத்தில் ஒருபகுதியை எடுத்து வைத்தாலும், திடீரென்று பெரிய அளவில் ஆபரேஷன் போன்ற தேவைகள் வரும்போது தடுமாறிவிடுவோம் அல்லவா... அப்போதெல்லாம் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் கைகொடுக்கும். அதேபோல, குழந்தைகளின் கல்விக் கட்டணங்கள் திடீரென்று உயர்ந்து நம்மைத் தடுமாற வைத்துவிடும். அந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க இதுபோன்ற பாலிசிகள் பயன்படும்’’ என்று சொன்ன அண்ணாதுரை, தன் அனுபவத்தில் கண்ட ஓர் உதாரணத்தைச் சொன்னார்.

‘‘ஆட்டோ டிரைவர் ஒருவரின் மகன் நன்றாகப் படிப்பான். அவன் முதல் வகுப்பில் தேர்வு எழுதியதைப் பார்த்து, டபுள் பிரமோஷன் கொடுத்து மூன்றாம் வகுப்பில் போட்டார்கள். கூடவே, படிப்புக்கான ஸ்காலர்ஷிப்பும் கொடுத்தார்கள். அப்போது, அந்த ஆட்டோ டிரைவருக்கு தன் மகனை எதிர்காலத்தில் பெரிய கம்ப்யூட்டர் இன்ஜினீயர் ஆக்கவேண்டும் என்ற கனவு. அப்போதுதான் நான் இந்த பாலிசி பற்றிச் சொன்னேன். உடனே, ‘இப்போது என் மகனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டுவதாக நினைத்து பல்லைக் கடித்துக்கொண்டு பாலிசியைக் கட்டிவிடுகிறேன்’ என்று சொல்லி பாலிசி எடுத்துவிட்டார்.

அந்தப் பையன் கல்லூரிக்குப் போகும் நேரத்தில் அந்த ஆட்டோ டிரைவர் எந்தச் சிரமமும் படமாட்டார். இது நிச்சயம்!’’ என்றார்.

இன்ஷூரன்ஸ்: இளமையில் எடு!
இன்ஷூரன்ஸ்: இளமையில் எடு!

எல்.ஐ.சி போலவே பல தனியார் காப்பீட்டு நிறுவனங்களும் சிறுவர்களுக்கான பாலிசி திட்டங் களை வைத்திருக்கின்றன.

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்சியல் வழங்கும் சிறுவர்களுக்கான காப்பீட்டுத் திட்டங்கள் குறித்து சொன்னார் அதன் சீனியர் மேனேஜர் சந்திரசேகர். ‘‘இப்போது இருக்கும் சூழலில் மிடில்கிளாஸ் மக்களுக்கு பள்ளிக்கூடக் கல்வியே கொஞ்சம் பாரமான சூழ்நிலைதான். அதனால், மக்கள் ஆரம்பத்திலேயே அதற்கும் சேர்த்து திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். அதை மனதில் வைத்துதான் எங்களின் ‘ஸ்மார்ட் கிட் திட்டம்’ குழந்தைகளின் பள்ளித் தேவைகளுக்குப் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது’’ என்றார் அவர்.

இதுபோன்ற குழந்தைகள் காப்பீட்டுத் திட்டத்தில், பாலிசி எடுத்த பிறகு பெற்றோருக்கு அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்தால், மீத பாலிசி தொகையை ரத்து செய்வதோடு குழந்தைக்கு உரிய காலகட்டத்தில் பாலிசியின் முதிர்வுதொகை கிடைக்கும் வழியும் இருக்கிறது.

பிள்ளைகளின் எதிர்காலத்தை வளமானதாக்க, இப்போதே முதலீட்டைத் துவங்குங்கள். இந்த முதலீட்டுக்கு வருமான வரிச்சலுகையும் கிடைக் கிறது என்பது கூடுதல் லாபமாக இருக்கிறது.

எல் .ஐ.சி\யின் திட்டமான ‘சில்ரன் டிஃபர்டு என்டோவ்மென்ட்’டில் பெற்றோர் பெயரில் எடுக்கப்படும் பாலிசி 21-வது வயதில் குழந்தை பெயருக்கு மாறிவிடும். அப்போது, பணம் தேவைப்பட்டால் பாலிசியை முடித்துக்கொள்ளலாம். அதன் பிறகான பிரீமியம் மிகவும் குறைவாகவே இருக்கும். அதாவது, ஒரு லட்சம் ரூபாய்க்கு ஆண்டு பிரீமியம் 1,500 ரூபாய்தான். சிறு வயதி லேயே பாலிசி எடுப்பதால் இச்சிறப்பு சலுகை.

இந்த என்டொவ்மென்ட் திட்டத்தில் பெற்றோர் பெயரில் பாலிசி எடுத்து குழந்தைகளை வாரிசாக நியமித்தால் பெற்றோருக்கு இறப்பு, விபத்து காப்பீடு கிடைப்பதோடு குழந்தைகளுக்குக் கல்வி, திருமணச் செலவுக்குப் பணமும் கிடைக்கிறது. குழந்தைகளுக்கு பணம் முழுமையாகப் போய்ச் சேரவேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்கள் இத்திட்டத்தைத் தேர்வு செய்யலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism