Published:Updated:

மணியைக் கட்டு... நஷ்டம் தவிர்!

மணியைக் கட்டு... நஷ்டம் தவிர்!

மணியைக் கட்டு... நஷ்டம் தவிர்!

மணியைக் கட்டு... நஷ்டம் தவிர்!

Published:Updated:
பாதுகாப்பு
மணியைக் கட்டு... நஷ்டம் தவிர்!
 

மணியைக் கட்டு... நஷ்டம் தவிர்!

வியாபாரிகள், யானையைப் போல! நகரத்தின் பொருளாதாரத்தை நிலைநிறுத்தும் அளவுக்குப் பலம் வாய்ந்தவர்கள். ஆனால், அந்த பலத்தை உணராமல் மற்றவர்களின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, அடங்கி ஒடுங்கி நடப்பார்கள், பாகனின் அங்குசத்துக்குப் பயப்படும் யானையைப் போல!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மணியைக் கட்டு... நஷ்டம் தவிர்!

சி ல நேரங்களில் இழப்பு ஏற்படும்போதுகூட அதைத் தாங்கிக்கொண்டு அமைதியாக இருந்து விடுவார்களே தவிர, எதிர்க்கத் துணிவதில்லை. காரணம், வியாபாரி என்பவர் கண்ணாடி வீட்டில் இருப்பவர் மாதிரி!

குறிப்பிட்ட சில பகுதி வியாபாரிகள் அந்த எண்ணத்தை உடைத்து, தங்களுக்குத் தாங்களே பாதுகாப்பு அரண் அமைத்துக்கொண்டு சிறப்பாகச் செயல்படுவது உண்டு. சென்னை திருவல்லிக்கேணி பகுதி வியாபாரி கள் அந்த ரகம்தான்! தங்களுக்கென பாதுகாப்பு சங்கம் ஒன்றை அமைத்து, எந்தச் சிக்கலும் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

சங்கத்தின் செயலாளர் யோகநாதனைச் சந்தித்தோம். ‘‘இங்கு அடிக்கடி ஆட்டோ வில் வரும் ஒரு கும்பல் அப்படியே கடைக்குள் புகுந்து கையில் கிடைத் ததை வாரிக்கொண்டு பறந்துவிடும். பஜாரே அலறும் அந்தச் சம்பவத்தில் ஆட்டோ பார்ட்டிகளைப் பிடிக்க முடியாது.

‘அவனுங்க கடைக்குள் புகுந்ததும் ஒரு குரல் கொடுத்திருந்தால் சுத்தி ரவுண்ட் கட்டியிருக்கலாமே... இப்ப என்ன செய்யறது..?’ என்று சம்பவம் நடந்து முடிந்தபிறகு கடைக்காரர்கள் கூடிநின்று வருத்தப் படுவது உண்டு. இதுபோன்ற பல சம்பவங்கள் தொடர்ந்து நடக்க... நாங்கள் ஒன்றாகக் கூடிப் பேசினோம். இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்று திட்டமிட்டோம். எங்களை மிரட்டிக் கொண்டிருக்கும் பூனைக்கு யார் மணி கட்டுவது என்று யோசித்தபோது, ‘அட... மணி கட்டுவதே நல்ல யோசனையாக இருக்கிறதே!’ என்று தோன்ற காலிங்பெல் ஒன்றைக் கட்டிவிட்டோம்’’ என்றவர்,

‘‘பத்து கடைகளுக்கு ஒன்று என்ற கணக்கில், அலாரம் பெல்லைப் பொருத்தினோம். அதற்கான ஸ்விட்சை கடையில் வைத்துவிடுவோம். அருகில் உள்ள கடைகளில் பிரச்னை என்று வரும்போது... அந்த ஸ்விட்சை அழுத்தி சத்தம் எழுப்பினால், போதும், எல்லாக் கடைக்காரர்களும் வெளியேவந்து சூழ்ந்துகொள்வார்கள்.

மணியைக் கட்டு... நஷ்டம் தவிர்!

கடைக்காரர்கள் சுற்றி வளைப்பதைத் தெரிந்த உடன், பிரச்னை செய்ய வந்தவர்கள் ஓடிவிடுவார்கள். இதனால், எங்களுக்குப் பல சமயங்களில் நஷ்டம் தவிர்க்கப்பட்டிருக்கிறது’’ என்றார்.

வியாபாரிகளுக்கு எல்லா ஊரிலும் இதுபோன்ற பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன. டொனேஷன் கேட்டு வந்து அடாவடியாக நிற்பது, பொருளை வாங்கிவிட்டு சத்தம் போடுவது என்று கிளம்பும் முரட்டுப் பூனைகளுக்கு உங்கள் ஊரிலும் ஒரு மணி கட்டுங்களேன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism