Published:Updated:

சிக்கனம்: அரிசி விலை பாதியாகணுமா..?

சிக்கனம்: அரிசி விலை பாதியாகணுமா..?

சிக்கனம்: அரிசி விலை பாதியாகணுமா..?

சிக்கனம்: அரிசி விலை பாதியாகணுமா..?

Published:Updated:
சிக்கனம்
சிக்கனம்: அரிசி விலை பாதியாகணுமா..?
 

அரிசி விலை பாதியாகணுமா..?

கோவையைச் சேர்ந்த ராஜேஷ் குடும்பம், தன் நண்பர்கள் குடும்பத்தோடு, ஒரு வேனில் சுற்றுலா கிளம்பினார்கள். சுற்றுலாவின் நோக்கமே கிராமத்துப் பயணம்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிக்கனம்: அரிசி விலை பாதியாகணுமா..?

கரத்தில் வளரும் தங்கள் குழந்தைகள், கிராமத்து வாசமே தெரியாமல் வளர்கிறார்களே... என்ற கவலையும் சுற்றுலாவின் நோக்கத்தில் ஒன்று. ஆனால், பின்னணியில் இருந்தது வேறு ஒரு முக்கிய நோக்கம். அதில் இருக்கிறது மிக முக்கிய சிக்கனம்.

தாங்கள் சாப்பிடும் சாப்பாடு எதில் இருந்து வருகிறது என்பதைக் குழந்தைகளுக்குக் காட்டுவதற்காக விவசாய நிலமும் நெல் அரவை இயந்திரங்களும் இருக்கும் இடத்தில் டேரா போட்டார்கள் நகரத்து நண்பர்கள். காலையில் பயணம் வந்தவுடனே, நல்ல நெல்லாகத் தேர்ந்தெடுத்து வாங்கினார்கள். அதை அரிசி ஆலையில் கொடுத்து அவித்து, காய வைத்து, உமி நீக்கி, அரிசியாக மாற்றுவது வரை குழந்தைகளுக்குக் காட்டிய வர்கள், மாலை அதே வேனில் அரிசி மூட்டை களோடு நகரம் நோக்கிப் பயணமானார்கள். ஆறு மாதக் குடும்பத் தேவைக்கான அரிசி, கிட்டத்தட்ட பாதி விலையில் அவர் களுக்குக் கிடைத்துவிட்டது. சுற்றுலாவுக்கு சுற்றுலா... சிக்கனத்துக்கு சிக்கனம்!

ராஜேஷ் குடும்பத்தார் போல செயல்படுபவர்கள், இப்போது அதிகமாகிக்கொண்டே போகிறார்கள். உங்கள் வீட்டையே எடுத்துக் கொள்ளுங்கள். நான்கு நபர்களைக் கொண்ட ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்துக்கு, ஒருமாதத்துக்கு சராசரியாக எத்தனை கிலோ அரிசி தேவைப்படும்..? 25 கிலோ! மளிகைச் செலவில் அதற்கு ஆகும் செலவு... கிலோவுக்கு 24 ரூபாய் என்ற கணக்கில் சுமாராக 600 ரூபாய்! அப்படியானால் ஒரு வருடத்துக்கு 7,200 ரூபாய் செலவாகும். ராஜேஷ் குடும்பத்தார் போல, ஒரு சின்ன சிக்கன நடவடிக்கையில் இறங்கி னால், இந்தச் செலவு அப்படியே பாதியாகி விடுமே!

நீங்கள் வீட்டில் வாங்கும் அரிசிக்கு பதிலாக அதே ரகம் நெல்லை வாங்கிக்கொள்ளுங்கள். உதாரணமாக, பொன்னி அரிசி வாங்குபவராக இருந்தால், அதற்குப் பதிலாக பொன்னி நெல் ஒரு மூட்டை வாங்கிக்கொள்ளுங்கள். 75 கிலோ என்பது சுமாராக 500 ரூபாய் என்ற விலையில் கிடைக்கும். இந்த நெல்லை மில்லில் கொடுத்து, அரைத்து அரிசியாக்கினால், 40 முதல் 45 கிலோ வரை கிடைக்கும்.

புழுங்கலாக்கும் செலவு, அரைக்கும் செலவுகளை நெல்லில் இருந்து கிடைக்கும் உமி, தவிடு போன்றவை ஈடுகட்டிவிடும். உமியை எரி பொருளாகவும், தவிடை... கோழி, மாட்டுத் தீவனத்துக்கு மூலப்பொருளாகவும் பயன்படுத் துவதால் அதற்கும் நல்ல விலை கிடைக்கும்.

போக்குவரத்துச் செலவுகளையும் சேர்த்தால்கூட, ஒரு கிலோ அரிசி ரூபாய் 12-க்குள்ளேயே முடிந்து விடும்.

நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism