Published:Updated:

ஸ்டூடண்ட் நம்பர் 1

ஸ்டூடண்ட் நம்பர் 1

ஸ்டூடண்ட் நம்பர் 1

ஸ்டூடண்ட் நம்பர் 1

Published:Updated:
வேலை
ஸ்டூடன்ட் நம்பர் 1
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்டூடண்ட் நம்பர் 1

ஏனென்றால், இங்கு நாங்கள் படிக்கிற விஷயங்களை பிராக்டிகலாகச் செய்து பார்க்கும்போது, அதற்கு பெரிய அங்கீகாரமும் நல்ல பணமும் கிடைக்கிறது. படிப்புக்கு படிப்பும் ஆச்சு... வருமானத்துக்கு வருமானமும் ஆச்சு என்னும்போது என்னால் கூடுதல் உற்சாகத்தோடு படிப்பில் கவனம் செலுத்தமுடிகிறது.

என் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. ஒரு கட்டத்துக்கு மேல் படிப்புக்காக பணம் செலவழிப்பது சிரமமான விஷயம். ஆனாலும், என் படிப்பு ஆர்வத்துக்குத் தடை போடாமல் பெற்றோர் என்னை கல்லூரிக்கு அனுப்பி வைத்தார்கள். அவர்களுக்குச் சிரமம் வைக்காமல் என் படிப்புக்கான செலவுகளை நானே பார்த்துக்கொள்ளும் வழிகளைத் தேடினேன்.

வீட்டிலேயே 10-ம் வகுப்புக்கு டியூஷனைத் தொடங்கினேன். என் பாடத்திட்டத்தில் ஒன்றான டெக்ஸ்டைல் டிஸைன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கிறது. இப்போது இருக்கும் டெக்ஸ்டைல் நிறுவனங்கள், புதிதான, கலையம்சத்துடன் கூடிய டிஸைன்களுக்கு நல்ல மரியாதை கொடுத்து வாங்கிக்கொள்கிறார்கள். அதனால், அந்த நிறுவனங்களுக்கு நல்ல, நல்ல டிஸைன்களை செய்து கொடுத்து மாதத்துக்கு 8,000 ரூபாய்க்குக் குறையாமல் சம்பாதித்து வருகிறேன். இதனால் குடும்பத்தாருக்கும் பணம் கொடுக்க முடிகிறது.

இளநிலை படிப்பு முடித்தவுடன் நானே டெக்ஸ்டைல் நிறுவனங்களிடம் இருந்து ஆர்டர்கள் வாங்கி டிஸைனிங் செய்து கொடுக்கத் தொடங்கினேன். என் டிஸைனிங் திறமைக்கு மத்திய அரசின் அவார்டும் ஸ்காலர்ஷிப்பும் கிடைத்திருக்கிறது. இது எனக்குக் கூடுதல் உற்சாகத்தைத் தந்திருக்கிறது.

எல்லோருக்குள்ளும் ஏதாவது ஒரு திறமை இருக்கிறது. படிப்பு முடிந்து வேலை தேடும்போது, தான் அதை வெளிப்படுத்த வேண்டும் என்று காத்துக்கொண்டிருக்காமல், படிக்கும்போதே அத்திறமையைப் பயன்படுத்த ஆரம்பித்தால், நாம் இளம் வயதிலேயே பட்டை தீட்டப்படுவதோடு, நல்ல சன்மானமும் கிடைக்கும். இது என் அனுபவத்தில் கண்ட உண்மை!’’

‘ஸ்டூடன்ட் நம்பர் ஒன்’னை அறிமுகம் செய்து
ரூ. 200 பரிசு பெறுகிறார் ஆனந்தகுமார்.


தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism