Published:Updated:

செய்யும் வேலை பிடித்திருக்கிறதா..!

செய்யும் வேலை பிடித்திருக்கிறதா..!

செய்யும் வேலை பிடித்திருக்கிறதா..!

செய்யும் வேலை பிடித்திருக்கிறதா..!

Published:Updated:
வேலை
செய்யும் வேலை பிடித்திருக்கிறதா..!
 

‘‘சனிக்கிழமை எப்போது வரும், இரண்டு நாட்கள் லீவு கிடைக்குமே என்று சிலர் ஏங்கிக்கொண்டிருப்பார்கள். வேறு சிலரோ திங்கட்கிழமை
எப்போது விடியும், எப்போது வேலைக்குச் செல்வோம் என்று
தவித்துக் கொண்டிருப்பார்கள். இந்த இரண்டு பிரிவினரில் யார் வாழ்க்கையில் ஜெயிப்பார்கள், வேலைக்குச் செல்ல ஆர்வமாகக் காத்திருப் பவர்கள்தானே..!’’ என்று படு பிராக்டிகலாகப் பேச ஆரம்பித்தார், திருச்சி
‘பெல்’ தொழிற் சாலையின் மனிதவள நிர்வாகத்தின்
கூடுதல் பொதுமேலாளர் ஆனந்தன்.

நாம் பார்க்கும் வேலை நமக்குப் பிடித்திருக்கிறதா என்பதை
அறிந்துகொள்ள இதோ அவர் தரும் டிப்ஸ்கள்...

‘‘எ ன்ன... லஞ்ச் டைம் வந்ததுகூடத் தெரியாம வேலையிலே மூழ்கிப் போயிட்டியா... சாப்பிட்டுட்டு வந்து கன்டினியூ பண்ணலாமே...’’ என்று அடுத்தவர் நினைவுபடுத்தும் அளவுக்கு வேலையில் ஈடுபாட்டுடன் இருப்பவர்களா நீங்கள், வெரிகுட்! உங்களுக்குப் பிடித்தமான வேலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செய்யும் வேலை பிடித்திருக்கிறதா..!

வேலை பிடிக்கவில்லை என்று புலம்பிக் கொண்டிருப்பதைவிட, வேலைக்கான தகுதிகளை வளர்த்துக்கொள்வதே புத்திசாலித்தனம்.

கிடைத்த வேலையில் பிடித்தமான விஷயங்கள் எதுவென்று அறிந்து, அதில் கவனத்தைச் செலுத்தி வேலையை மேலும் பிடித்தமானதாக மாற்றிக் கொள்ளுங்கள்.

க ஊழியருக்கு வேலையில் சந்தேகம் எழும் போது, நீங்கள் ஓடிச்சென்று உதவி செய்கிறீர்களா... சபாஷ்!, நீங்கள் செய்யும் வேலையில் உங்களுக்கு நிறையத் தெரிந்திருக்கிறது என்றுதான் அர்த்தம். இல்லையென்றால், ‘அது யாருடைய பிரச்னையோ... எனக்கு என்ன வந்திருக்கிறது?’ என்ற மனநிலையில் இருந்தால், வளர்ச்சி என்பதே இல்லாமல் அங்கேயே கடைசிவரை உட்கார்ந்திருப்பீர்கள்.

‘பு திய பிராஜெக்ட்களை யார் பொறுப்பில் கொடுக்கலாம்?’ என்ற பேச்சு அலுவலகத்தில் வரும்போது,உங்கள் கைகள் தானாக உயர்கின்றனவா, நல்லது... நீங்கள் செய்யும் வேலையில் ஈடுபாட்டோடுதான் இருக்கிறீர்கள்.

அதில்லாமல், ‘இது எதற்கு கூடுதல் வேலை..?’ என்று யோசித்து, உங்கள் பக்கம் பார்வை திரும்பினாலும்கூட, ‘என் வேலையே தலைக்கு மேலே இருக்கு..!’ என்கிற ரகமா நீங்கள்..? உங்கள் முன்னேற்றம் சந்தேகத்துக்கு இடமானதுதான்... சரி செய்து கொள்ளுங்கள்!

டே பிளையும் நாற்காலியையும் அலுவலக கடிகாரத்துக்கு எதிரே போட்டுக்கொண்டு அதைப் பார்த்துக்கொண்டே வேலை செய்துவிட்டு, ஐந்து மணியானதும் எகிறிக் குதித்து வீட்டுக்கு ஓடுபவர்களை அதிகாரி ஆதரிக்கமாட்டார். நீங்கள் தினசரி அலுவலகம் வந்து போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான். இத்தனை நேரம்தான் வேலை என்று வட்டம் போட்டுக்கொண்டால் வாழ்க்கைத் தரமும் அந்த வட்டத்தைத் தாண்டாது.

ந்த வேலையை இன்றைக்கு முடிக்க வேண்டும் என்ற முனைப்போடு இருக்கிறீர்களா..? கை கொடுங்கள்... உங்கள் வேலை உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்பது சொல்லாமலே தெரிகிறது.

த்திரி வெயிலிலும் களைப்படையாமல் வேலை செய்துகொண்டிருப்பது சூரியன்தான். அதேபோல, நீங்களும் வேலை செய்தால் சூரியன் போல சூப்பராக பிரகாசிப்பீர்கள். ஏனென்றால், உங்கள் வேலை உங்களுக்கு ரொம்பப் பிடித்திருக்கிறதே! நான் செய்த வேலைக்கு மரியாதை கிடைக்கவில்லை என்று சோர்ந்துகிடந்தால், எழுந்திருக்கவே முடியாது. கடமையைச் செய்யுங்கள்... பலன் தானாகவே கிடைக்கும்.

ல்லோரும் ஒருவழியில் செல்லும்போது நீங்கள் இன்னொரு பாதையைக் கண்டுபிடித்து, வேகமாகவும் வித்தியாசமாகவும் வேலைபார்க்கும் குணம் உடையவரா... உங்களுக்கு ஒரு ஷொட்டு! வேலையை ரசித்துச் செய்பவரால் மட்டுமே நிர்வாக வளர்ச்சிக்காக புதுமையாகச் சிந்திக்கமுடியும். வெற்றி என்னும் அறைக்குள் நுழைய, புதிய கண்டுபிடிப்புகள்தான் சாவி. செய்கிற வேலையை விரைந்து கச்சிதமாக முடிக்க புதிய பாதைகளை வகுத்துச்செல்வது, வேலையை ரசித்துச் செய்பவரின் குணமாக இருக்கும்.

ன்க்ரிமென்ட், பிரமோஷன் என்று உங்களுடைய வேலைக்கு மரியாதை செய்ய நிர்வாகம் கணக்கிடுவதற்கு முன்பே, நீங்களே சுயமதிப்பீடு செய்து, அதற்கான பல டெஸ்ட்களை செய்துகொள்கிறீர்களா... முதுகில் தட்டிக் கொள்ளுங்கள், உங்கள் வேலையின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது. ஒருவேளை, நிர்வாகம் சலுகை தராமல் போய்விட்டாலும், சுய மதிப்பீட்டில் திருப்தி இருந்தால், உற்சாகமாக வேலை பார்க்கமுடியுமே!

‘அ வருக்கு பிரமோஷன் கிடைத்துவிட்டதே... இவருக்கு டபுள் இன்க்ரிமென்ட் போட்டு விட்டார்களே...’ என்றெல்லாம் சக ஊழியர்களோடு ஒப்பிட்டுப் பார்க்காமல், உங்கள் திறமைமீது நம்பிக்கை வைத்து உழைக்கும் ஆளா... காலரை உயர்த்திக் கொள்ளுங்கள். வேலை பிடித்தமானதாகத்தான் இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism