Published:Updated:

திருச்சியை திணறடித்த பண ஐடியா!

திருச்சியை திணறடித்த பண ஐடியா!

திருச்சியை திணறடித்த பண ஐடியா!

திருச்சியை திணறடித்த பண ஐடியா!

Published:Updated:
நடப்பு
திருச்சியை திணறடித்த பண ஐடியா!
 

திருச்சியை திணறடித்த பண ஐடியா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருச்சியை திணறடித்த பண ஐடியா!

‘‘என் கையில் இன்னும் இருபது வருடத்தில் ஒரு கோடி ரூபாய் இருக்கும் என்று திட்டமிட்டு அதை நோக்கிச் சென்றுகொண்டிருந்தேன். ஆனால், இங்கே உங்கள் பேச்சைக் கேட்டபிறகு, நீங்கள் காட்டும் வழியைப் பார்த்தபிறகு, அது ஆறேழு வருடங்களிலேயே சாத்தியம் என்ற பெரிய நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது.

திருச்சியை திணறடித்த பண ஐடியா!

எனக்குள் இருந்த சிறிய தயக்கமும் பயமும் விலகிவிட்டது. உங்களைச் சந்தித்தது எங்கள் நல்ல நேரத்துக்கான ஆரம்பம்!’’ என்று நெகிழ்ந்து மனப்பூர்வமாகச் சொன்னார், உடுமலைப்பேட்டை வாசகரான சிவக்கொழுந்து! இந்த நிகழ்ச்சிக் காகவே திருச்சி வந்திருந்தார் இவர்.

மத்திய வயதில் இருந்த கலையரசு என்ற வாசகர், ‘‘ஏன் சார்..! நீங்கள் இருவரும் 20 வருஷத்துக்கு முன்னாடி வந்திருக்கக் கூடாதா... மிஸ் பண்ணிட்டோமே சார்!’’ என்றார், அந்த உரைகேட்டு.

‘‘இப்போதுகூட காலம் தாழ்ந்துவிடவில்லை... இங்கிருந்து ஆரம்பித்து கோடீஸ்வரராக முடியும். வாழ்க்கையில் பணக்காரராக முடியும். தளராமல் செயல்படுங்கள்!’’ என்று அவருக்கு உற்சாகம் தந்தார் புகழேந்தி.

திருச்சியை திணறடித்த பண ஐடியா!
திருச்சியை திணறடித்த பண ஐடியா!

‘‘பணம் சேர்ப்பது, பணக்காரராவது என்பதெல்லாம் அநேகம் பேருக்குப் பிடிபடாத ஒரு புதிர். அதை இத்தனை எளிமையாக, தெளிவாகக் கற்றுக்கொடுத்த இந்தக் கூட்டம் எங்கள் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை!’’ என்று சிலாகித்தார் இன்னொரு வாசகர்.

நாணயம் விகடன் ஏற்பாட்டில், கோவை வெற்றியைத் தொடர்ந்து கடந்த 7-ம் தேதி, திருச்சியில் வாசகர்களைச் சந்தித்தார்கள் ‘பணத்தைப் பெருக்க வழிசொல்லும்’ நாகப்பன் - புகழேந்தி.

இந்த நிகழ்ச்சிக்கு, திருச்சியின் மையப்பகுதியில் இருக்கும் ‘தேவர் ஹால்’ தான் அரங்கம். முன்பதிவுக்கு நாம் அளித்திருந்த அவகாசத்துக்கு மூன்று நாட்களுக்கு முன்பே, உஷாராகத் தங்கள் இருக்கையைப் பதிவு செய்துகொண்டுவிட்டார்கள் நாணயம் வாசகர்கள். 650 பேர் அமரக்கூடிய அந்த ஹாலில் சுமார் 1,000 பேர் வரை வந்திருந்து ஹவுஸ்ஃபுல்லாக நிகழ்ச்சியை ஆர்வத்துடன் கேட்டார்கள்.

பெட்டிக்கடைக்காரர் முதல் பிரபல வங்கியின் டைரக்டர் வரை என வந்திருந்த வாசகர்களின் அணிவகுப்பு, பெண்களும் காட்டிய ஆர்வம், வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்குச் செல்லவேண்டும் என்ற துடிப்போடு வந்திருந்த மத்தியதர வர்க்கம்... என்று வாசகர்களிடம்தான் என்னவொரு கலவை!

திருச்சியை திணறடித்த பண ஐடியா!

திட்டமிட்டிருந்தபடி காலை பத்து மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. நம் அறிமுக உரைக்குப் பிறகு, நிகழ்ச்சியின் சுருக்கம் பற்றி நாகப்பன் ஆரம்ப உரை கொடுக்க... தங்களது ‘சேமிப்பு, முதலீடு, வளமான வாழ்க்கை’ நிகழ்ச்சியை பவர் பாயின்ட் பிரசன்டேஷன் மூலம் ஆரம்பித்தார்கள். நாகப்பன் பாயின்ட்களை திரையில் எடுத்துக் கொடுக்க... அதுபற்றிய விளக்கங்கள் சொன்னபடியே வாசகர்கள் கூட்டத்துக்குள் புகுந்து புறப்பட்டார் புகழேந்தி.

கலகலவென நகர்ந்த வளமான வாழ்க்கைக்கு வழி சொல்லும் இந்த நிகழ்ச்சியில்... வருமானத்தைப் பெருக்கும் வழிகள், சேமிப்பு, திட்டமிட்ட முதலீடு, பாதுகாப்பான வருமானம், நிம்மதியான, வசதியான ஓய்வுகாலம் என்று வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் எப்படிக் கடக்கவேண்டும் என்ற திட்டத்தை, இரட்டையர்கள் தங்கள் பாணியில் விளக்கமாக எடுத்துச்சொல்ல ‘ஊசி விழுந்தால் கேட்கும் அமைதி’யுடன்

திருச்சியை திணறடித்த பண ஐடியா!

பிரமிப்பாக உள்வாங்கிக் கொண்டார்கள் வாசகர்கள். ஆராய்ச்சி வகுப்போ என்று சந்தேகப்படும் அளவுக்கு பலரும் குறிப்பெடுத்துக் கொண்டது கண்கொள்ளாக் காட்சி.

மேடையில் இருந்தபடி நிகழ்ச்சி செய்வதைவிட, வாசகர்களின் தேவை அறிந்து பேச, இப்படி அவர்களுடன் இருந்தபடியே நிகழ்ச்சி நடத்துவதை ரசித்துச் செய்தார் புகழேந்தி. அவர் சொல்கிற கருத்தில் உடன்பாடு இருந்தால் அதை ஆமோதிப்பதும், மாறுபட்ட கருத்து இருந்தால் அதையும் சொல்வதுமாக முழுக்க ஒரு கலந்துரையாடலாகவே இருந்தது அது. வாசகர்கள் வாங்கி தங்கள் குரலை வெளிப்படுத்த தனி கார்ட்லெஸ் மைக்குகள் அரங்கில் தயாராக இருந்தன.

திருச்சியை திணறடித்த பண ஐடியா!
திருச்சியை திணறடித்த பண ஐடியா!

தங்களின் பல சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளும் களமாகவும் அமைந்துவிட்டது. அவர்களுக்கு வசதியாக சிறிய கேள்வித்தாள் ஒன்று கொடுக்கப்பட்டிருக்க... அந்த கேள்வி-பதில் நேரத்தை லட்டு மாதிரி பயன்படுத்திக் கொண்டார்கள் வந்திருந்த வாசகர்கள்.

அவற்றில் சில கேள்விகளுக்கான பதில்கள் இங்கே...

‘‘மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட் ஆக கல்வித் தகுதி என்ன..? வயது வரம்பு என்ன..?’’ என்று கேட்டிருந்தார் பிரபாகர் என்ற வாசகர்.

‘‘மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட் என்பது ஒரு நல்ல வேலை. எப்படி இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் என்பது ஒரு ஜெனரேஷனுக்கே நல்ல வருமானம் தரும் வேலையாக இருந்ததோ... அதுபோல, வருங்காலத்தில் அடுத்த பத்தாண்டுகளுக்கு மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட் என்பது நல்ல வாய்ப்பாக இருக்கப்போகிறது. இது சுலபமான வேலையும்கூட!’’ என்று ஆரம்பித்து அதுபற்றிய விரிவான தகவல்களைச் சொன்னார் நாகப்பன். (அந்த விவரங்கள் இந்த இதழில், ‘உங்கள் கனவுகள் இங்கே காசாகும்’ தொடரில் இடம் பெற்றுள்ளது).

திருச்சியை திணறடித்த பண ஐடியா!

‘‘எதன் அடிப் படையில் கம்பெனி பங்குகளை வாங் கலாம்..?’’ என்று கேட்டிருந்தார் பாலசுப்பிரமணியன்.

‘‘ரொம்ப சிம்பிளா கம்பெனியின் அடிப் படையைப் பார்த்து வாங்குங்கனு சொல்லிட்டுப் போயிடலாம். ஆனா, அடிப்படை எனப்படும் ஃபண்டமென்டல்ஸ் நன்றாக உள்ள நிறுவனப் பங்குகளே சிலசமயம் ஏறாமல் உள்ளதையும் பார்க்கமுடிகிறது. டெக்னிக்கல் அனாலிஸிஸ் உள்ளிட்ட பல விஷயங்களைப் பார்க்கவேண்டும். இதற்கெல்லாம் மேலாக, கவனிக்க வேண்டியது ஒன்று உண்டு.

மேனேஜ்மென்ட்டின் கொள்கை தெளிவாக,, நேர்மையாக உள்ளதா..? தொழில் நன்றாக நடந்து லாபம் வரும்போது அதை நியாயமாகப் பங்குதாரர்களுக்குப் பிரித்துக் கொடுத்திருக்கிறார்களா..? என்பதைத்தான் பார்க்கவேண்டும். நிர்வாகம் நன்றாக இருந்து, நல்ல லாபமும் வந்து, அதைப் பிரித்துக்கொடுக்காத நேர்மையற்ற நிர்வாகத்தின் பங்குகளை வாங்காமல் இருப்பது நல்லது.’’

காப்பீடு பற்றிய ஒரு கேள்விக்குப் பதில் சொன்ன நாகப்பன், ‘‘இன்ஷூரன்ஸில், ‘க்ளைம் செட்டில்மென்ட் ரேஷியோ’ என்று ஒன்று உண்டு. அது இந்தியாவில் மிக பிரமாதமாக இருக்கிறது. ஒரு அசம்பாவிதம் நடந்துவிடுகிறது. பாலிசி எடுத்தவரின் உறவினர்கள் அதைக்கோரி விண்ணப்பிக்கும்போது, அதற்கான ஃபார்மாலிட்டிகள் முடிந்து பணம் கைக்கு வந்துவிடுகிறது. இப்படி இன்ஷூர் செய்தவர்களில் 100-க்கு 90 பேருக்கு க்ளைம் கிடைத்திருப்பது, இந்தியாவில் மட்டுமே நடந்திருக்கிற ஒரு சாதனை. இது ஒரு புள்ளிவிவரத் தகவல். சில வளர்ந்த நாடுகளில் கூட இந்த எண்ணிக்கை 100-க்கு 50 என்ற அளவில்தான் இருந்திருக்கிறது.

திருச்சியை திணறடித்த பண ஐடியா!

இன்ஷூரன்ஸ் நம்நாட்டில் நல்ல முறையில் செயல்பட்டு வருவதற்கு இந்தப் புள்ளிவிவரம் ஓர் ஆதாரம்!’’

வந்திருந்த ஏராளமான கேள்விகளில் இருந்து, சில பதில்களைச் சொன்ன இரட்டையர்கள் நிகழ்ச்சி முடித்த பிறகும் பல சந்தேகங்களோடு மொய்த்து, ஆட்டோகிராஃப் பெற்று, கைகொடுத்து வழியனுப்புவது வரை அன்புகாட்டி அசத்தி விட்டார்கள் திருச்சி வாசகர் கள். பூரிப்பு கலந்த திருப்தியோடு அவர்களிடமிருந்து விடைபெற்ற நாகப்பன் - புகழேந்தியை, அடுத்து எந்த ஊருக்கு அழைத்து வரப்போகிறது நா.வி?

பல ஊர்களில் இருந்தும் வருகிறது அழைப்பு... அடுத்த இதழ் வரை காத்திருங்களேன்..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism