Published:Updated:

காக்டெய்ல்

காக்டெய்ல்

காக்டெய்ல்

காக்டெய்ல்

Published:Updated:
நடப்பு
காக்டெய்ல்
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காக்டெய்ல்

ட்சய திருதியையால் நகைக் கடைகள் அடைகிற லாபத்துக்குப் போட்டியாக களமிறங்கிவிட்டன வங்கிகள். இந்த வருட அட்சயதிருதியை விற்பனை 200 கிலோ தங்கம் என்று பிரமிக்கவைக்கும் நம்பர் சொல்கிறார்கள். இதில் ஐ.சி.ஐ.சி.ஐ-யின் பங்கு கணிசமானதாம்!

இந்த ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சிண்டிகேட் வங்கி, ரெப்கோ வங்கி போன்ற வங்கிகளும் களத்தில் இறங்கின. பெரும்பாலும் ஐந்து கிராம், எட்டு கிராம் நாணயங்கள்தான் என்றாலும் அட்சயதிருதியை ஸ்பெஷலாக 20 கிராம், 25 கிராம் நாணயங்களை விற்பனை செய்திருக்கிறார்கள். அவசரகாலத்தில் இதை வங்கிகளில் வைத்துப் பணமாக்க முடியாது. ஆனால், ‘916 ஹால்மார்க்’ மதிப்பை வைத்து பணம் கொடுக்க நகைக்கடைகள் தயாராக இருப்பதால், மக்கள் இந்தத் தங்க நாணயங்களை வாங்க ஆர்வம் காட்டியிருக்கிறார்கள்.

காக்டெய்ல்

‘டெ ண்டுல்கர் குடிக்கச் சொல்லும் ஊட்டபானத்தைக் குடிக்கிறார்கள்... டோனி சொல்கிற சோப்பைத் தேய்க்கிறார்கள்... டிராவிட் சொல்லும் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் பாலிசி எடுக்கிறார்கள்... ஷேவக் சொல்லும் வலி நிவாரணியைப் பயன்படுத்துகிறார்கள்’-இவர்கள் மேல் மக்கள் வைத்திருக்கும் மரியாதையைப் பயன்படுத்தி, தங்கள் தயாரிப்புகளை விற்கின்றன பல நிறுவனங்கள்.

கிரிக்கெட் வீரர்களுக்கு நிகராக முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறார் இந்திய டென்னிஸ் புயல் சானியா மிர்ஸா! மேடம் இப்போது பத்துக்கும் மேற்பட்ட பிராண்ட்களுக்கு மாடலாக இருக்கிறார். ஹிந்துஸ்தான் பெட்ரோ லியம், டாடா டெலி சர்வீஸ், அட்லஸ் சைக்கிள், ஜீ.வி.கே இண்டஸ்ட்ரி, லோட்டோ ஷூ, சகாரா, டாடா டீ, டாடா ஸ்போர்ட்ஸ் என நீள்கிறது சானியாவின் பட்டியல்.

காக்டெய்ல்

இவரது ஒரு வருட விளம்பர வருமானம் 12 கோடி என்கிறார்கள்.

‘‘வெ ல்லம் விலை இப்போதைக்கு உயராது. ஏனென்றால், அதன் உற்பத்தி வெகுவாக அதிகரித்துள்ளது’’ என்று சுறுசுறுப்பாகப் பேச ஆரம்பித்தார் தமிழ் நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.பி.சொரூபன்.

‘‘துவரம் பருப்புக்கான டிமாண்ட் குறைந்துள்ளது. அதனால், இப்போதைக்கு விலையில் மாற்றம் இருக்காது. மழையால் பாதிக்கப்பட்ட மல்லியை சில இடங்களில் தரமான மல்லியுடன் கலந்துவிடுவதால், நல்ல மல்லிக்கு டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. ஆனால், சில்லறை விற்பனையின் தேவை குறைவு என்பதால் விலை அதிகரிக்க வாய்ப்பில்லை. தமிழ்நாட்டில் பூண்டுக்கு தேவை இருக்கிற நேரம் இது. ஆனால், வரத்து குறைவால், விலை அதிகரித் துள்ளது. இன்னும் ஒரு மாதத்துக்கு இதே நிலை நீடிக்கும் என்பதை, பூண்டு வாங்குபவர்கள் மனதில் கொள்ளுங்கள்.

காக்டெய்ல்

உள்நாட்டில் விளையும் கோதுமையை பன்னாட்டு நிறுவனங்கள் நல்ல விலை கொடுத்து வாங்கி, இருப்பு வைத்து வருகிறது. அதனால், உள்ளூர் மார்க்கெட்டில் விலை உயர்ந்து காணப்படுகிறது. இதனால், கோதுமையில் இருந்து தயாரிக்கப்படும் மைதா, ரவை, ஆட்டா போன்றவற்றின் விலையும் மூட்டைக்கு 70 ரூபாய் முதல் 80 ரூபாய்வரை அதிகரித்திருக்கிறது’’ என்கிறார் எஸ்.பி.சொரூபன்.

‘‘கோ டைக்காலம் வந்தாலே காய்கறிகளின் விளைச்சல் குறைந்து, விலை ஏற்றம் துவங்கிவிடும். கடந்த மூன்று மாதமாக கிலோ ஐந்து ரூபாயாக இருந்த தக்காளி, இப்போது 16 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இதேபோன்று பல காய்கறிகளின் விலையும் வெகுவாக அதிகரித்துள்ளது’’ என்கிறார் கோயம்பேடு மார்க்கெட் மொத்த காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் தியாகராஜன்,

‘‘தமிழ்நாட்டில், கோடை மாதங்களில் விளைச்சல் இருக்காது. மேலும், அருகாமை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து வரவேண்டிய தக்காளி உள்ளிட்ட பல காய்கறிகளின் வரத்து குறைந்துவிட்டதால், கத்தரிக்காய் கிலோவுக்கு நான்கு ரூபாயும், முருங்கைக்காய் ஆறு ரூபாயும், அவரைக்காய் எட்டு ரூபாயும் அதிகரித்துள்ளது. இவற்றின் வரத்து உயர்ந்தாலே ஒழிய, விலைகள் குறைய வாய்ப்பில்லை!’’ என்றார் கவலையோடு.

காக்டெய்ல்

மு ம்பையே தங்கமயமாக இருந்தது சமீபத்தில். நகை வடிவமைப்பாளர்கள், வியாபாரிகள் பயன்பெறும் வகையில் லண்டனைச் சேர்ந்த ‘வேர்ல்ட் கோல்ட் கவுன்சிலும் இந்தியாவின் ஜெம்ஸ் அண்ட் ஜூவல்ஸ் எக்ஸ்போர்ட் லேண்ட் அமைப்பும் இணைந்து நடத்திய கண்காட்சிதான் காரணம்!

‘‘மிகவும் பிரமிப்பாக இருந்தது. தங்கம், வெள்ளி, வைரம், மற்ற கல்நகைகள் என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனி இடம். ஒவ்வொரு பகுதியையும் சுற்றி வந்த போது அசந்து போனோம். அதோடு, எல்லா தரப்பினருக் கும் ஏற்ற வகையில் பல கருத்தரங்குகளை நடத்தியதும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது’’ என்றனர் சென்னையில் இருந்து இந்தக் கண்காட்சியைப் பார்த்துவந்த விஜயகுமாரும், பாலசுப்ரமணியனும்!

கண்காட்சியிலேயே எல்லோரையும் கவர்ந்தது கொல் கத்தாவினர் அமைத்திருந்த ‘ஆன்டிக்’ ஸ்டால்தானாம். அங்கு இருந்தது எல்லாமே அரசர்களும் ராணிகளும் பயன்படுத்திய நகைகள்.

‘‘தங்கத்தோடு தாமிரத்துக்குப் பதிலாக வேறு ஒரு உலோகத்தைச் சேர்த்து உருவாக்கும் ‘வொயிட் கோல்ட்’ எனப்படும் வெண்மை நிற தங்கத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. இவைதவிர, நகைகள் தயாரிக்கப் பயன்படும் இயந்திரங்கள், நகையை உரசாமலே எத்தனை கேரட் என்று கண்டுபிடிக்கும் கருவி போன்றவையும் கண்காட்சியில் பலரையும் கவர்ந்தன’’ என்கிறார்கள் இருவரும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism