Published:Updated:

ஹலோ வாசகர்களே

ஹலோ வாசகர்களே

ஹலோ வாசகர்களே

ஹலோ வாசகர்களே

Published:Updated:
ஸ்பெஷல்ரும்
ஹலோ வாசகர்களே,
 
பு திய நிதி ஆண்டு பிறக்கிறது. கடந்த ஆண்டு பங்குச் சந்தைக்கும் வியாபார நிறுவனங்களுக்கும் லாபகரமான ஆண்டாகவே இருந்தது.

புதிய ஆண்டும் அனைத்துத் துறையினருக்கும் புதுப்புது லாபங்களைத் தரும் என்று நம்புவோம்.

சென்ற இதழில் வெளியான ‘கற்றாழை’ கட்டுரைக்கு மானாவாரியாக வரவேற்பு. ‘நாணயம் வாசகர்களில் பலருக்கு எழுந்த சந்தேகங்களுக்குப் பதில் சொல்வதில் இந்த 15 நாளும் சந்தோஷமாக நகர்ந்தன. பலரது வருமா னத்துக்கு வழி செய்கிறோம் என்ற உற்சாகத்துடன் அவர்களுக்கு எல்லா விவரங்களும் தந்து உதவினேன்’ என்று புளகாங்கிதப்படுகிறார் கட்டுரையில் இடம் பிடித்த விருதுநகர் வி.கே.ராமசாமி. வாசகர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் இதுபோன்ற கட்டுரைகளாகத் தேடித் தேடி வெளியிட எங்கள் டீம் தொடர்ந்து களத்தில் சுறுசுறுத்துக்கொண்டிருக்கிறது.

அப்படி ஒரு வாய்ப்பாகத்தான் நாப்கின் மெஷின் கண்டுபிடிப்போடு எங்களிடம் வந்த முருகானந்தம், புதிய தொழில் வாய்ப்பைச் சொல்லி, மாதம் 10,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க உங்களுக்கு வழிகாட்டுகிறார்.

‘பணம் கொட்டும் பங்குச் சந்தையை எட்ட நின்றுதான் வேடிக்கைப் பார்க்க முடிகிறது. நானும் பண மழையில் நனைய என்ன செய்ய வேண்டும்..?’ என்ற பலரின் கேள்விகளுக்கும் பதிலாக பங்குச் சந்தையின் அரிச்சுவடியிலிருந்து சிகரத்தை நோக்கித் துவங்குகிறது புதிய தொடர்!

வாசகர்களின் வசதிக்காக இந்த இதழின் வடிவமைப்பில் சிறிய மாற்றங்களைச் செய்திருக்கிறோம். முதலீட்டுத் திட்டங்களுக்கு உதவும் விதமாக மியூச்சுவல் ஃபண்ட், இன்ஷூரன்ஸ் என்று தனிப் பிரிவுகளை உண்டாக்கி, அப்பகுதிகளுக்கான பக்கங்களிலும் கூடுதல் ஒதுக்கீடு செய்து இருக்கிறோம். கைமுதல் இல்லையே எனக் கலங்கி நிற்பவர்களுக்கு வழிகாட்டும் வகையில் கடன் என்ற முதலீட்டு வழிக்கான புதிய பக்கமும் உண்டு.

கோயில்களும் போஸ்ட் ஆபீஸ்களும்கூட மியூச்சுவல் ஃபண்ட்களின் பக்கம் தங்கள் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்திருக்கிற நேரம் இது. அதன் முழுப் பரிமாணத்தையும் நீங்கள் தெரிந்துகொள்வதற்கும் மிகச் சிறந்த தருணம் இது! லாபகரமான, பாதுகாப்பான அந்த முதலீட்டு முறைகளைப் பற்றிச் சொல்லி, உங்கள் காட்டில் காசு மேலே காசு கொட்ட வைக்கும் கலக்கலான புதிய தொடர் பற்றிய அறிவிப்பு இந்த இதழின் கடைசிப் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது. அதோடு, மியூச்சுவல் ஃபண்ட்களின் புதிய வெளியீடு, உண்மையிலேயே லாபகரமானவைதானா என்ற புதிர் அவிழ்க்கும் ஒரு சிந்தனையை உங்கள்முன் வைத்திருக்கிறோம்.

தங்கத்தை விடவும் அதிகமான வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கிறது வெள்ளி. ‘பின்னணி என்ன..? இப்போது வெள்ளியை வாங்கி வைப்பது பணத்தைப் பெருக்கும் முதலீடாக இருக்குமா..?’ என்று ஒரு விரிவான அலசல் உள்ளே இருக்கிறது.

‘லைஃப் டைம் ஃப்ரீ’ என்ற செல்போன் நிறுவனங்களின் அறிவிப்பு, பலரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது. அதை எந்த அளவுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற விவரமான வழிகாட்டுதல் கட்டுரையும் உங்களுக்காகக் காத்திருக்கிறது.

தெருவுக்குத் தெரு புதிய அபார்ட்மென்ட்கள் எழுந்துகொண்டே இருக்கின்றன. கட்டுமானப் பணியில் இருப்பவர்களும் வீடு கட்டிக் கொண்டிருப்பவர்களும் கவனித்துச் செயல்படுத்தக்கூடிய பிராக்டிகலான யோசனைகளை அளித்திருக்கிறோம். நிச்சயம் உங்களுக்குப் பயன்படும்.

நீங்கள் வளர்ந்தால், நாங்கள் மகிழ்வோம். படியுங்கள்... பணத்தைப் பெருக்குங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism