Published:Updated:

கையில் திட்டம் இருக்கிறதா..? கடன் தர நாங்கள் ரெடி!

கையில் திட்டம் இருக்கிறதா..? கடன் தர நாங்கள் ரெடி!

கையில் திட்டம் இருக்கிறதா..? கடன் தர நாங்கள் ரெடி!

கையில் திட்டம் இருக்கிறதா..? கடன் தர நாங்கள் ரெடி!

Published:Updated:
கடன்
கையில்திட்டம் இருக்கிறதா..? கடன் தர நாங்கள் ரெடி!
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கையில் திட்டம் இருக்கிறதா..? கடன் தர நாங்கள் ரெடி!
கையில் திட்டம் இருக்கிறதா..? கடன் தர நாங்கள் ரெடி!

‘‘க டனுக்கான விண்ணப்பத்தைக் கொடுத்த அடுத்த நாளே உங்கள் கையில் பணம் கிடைத்தால் எப்படி இருக்கும். அந்த சந்தோஷத்தை எங்கள் வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். தொழில் என்பதே திட்டமிடுதல்தானே! அதை நினைத்தவுடன் செய்தால்தான் சூடு குறையாமல் வேகமெடுக்கும்’’ - நம்பிக்கை வார்த்தைகளில் சொல்கிறார் இந்தியன் வங்கியின் ‘மகளிர் சுய உதவி குழுக்களுக்கான சிறப்பு கிளையின் மேலாளர் மனோகரன்.

அதென்ன சிறப்பு கிளை..? ‘‘சுய உதவி குழுக்களுக்கு கடன் எளிதாகக் கிடைக்கவேண்டும் என்பதற்காக ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் இந்தியாவிலேயே முதல்முறையாக துவக்கப்பட்ட சிறப்புக் கிளை இது. தொடங்கிய பத்து மாதங்களில் 1,512 குழுக்களுக்கு சுமார் 10 கோடி ரூபாயைக் கடனாகக் கொடுத்திருக் கிறோம். அதில் மூன்றேகால் கோடி ரூபாய் திருப்பிச் செலுத்தப்பட்டிருக்கிறது. உண்மையான முன்னேற்றம் விரும்பும் ஆட்களுக்குத்தான் உதவி செய்து கொண்டிருக்கிறோம் என்பதைச் சொல்லும் தொகை இது!’’ என்று உற்சாகமாகச் சொல்கிறார் மனோகரன்.

‘‘10 பெண்களுக்கு மேல் ஒன்றாகச் சேர்ந்தால் ஒரு சுய உதவிக்குழுவைத் தொடங்கிவிட முடியும். பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் ஏதாவது ஒரு அரசு வங்கியில் சேமிப்புக் கணக்கைத் தொடங்கி மாதம் கொஞ்சம் பணத்தை சேமிக்க வேண்டும். பின், அதே வங்கியில் சேமித்த தொகையில் இருந்தே உள்கடன் பெற்று அதனைச் சரியாகத் திருப்பிச் செலுத்தி இருக்க வேண்டும். குழு தொடங்கப் பட்டு குறைந்தது ஆறு மாதங்கள் ஆகியிருக்க வேண்டும். வாராந்திர கூட்டங்களைத் தொடர்ந்து நடத்தி அதனை எழுதி வைத்திருக்க வேண்டும்... என்பது இந்த சிறப்புக் கிளையில் கடன்பெற தேவைப்படும் சில நிபந்தனைகள்.

இந்த ஆதாரங்களுடன் எங்களை அணுகினால் குழு சேமித்துள்ள தொகையைப் போல் 3 முதல் 10 மடங்கு வரை கடனாக வழங்குவோம். அதில் 2 லட்சம் வரை 10% வட்டி, அதற்கு மேல் 11% வட்டி என்று வாங்குகிறோம். வாங்கிய அடுத்த மாதத்திலிருந்து 36 மாதங்கள் வரை கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் தருகிறோம். ஆனால், எங்களிடம் கடன் வாங்கிய குழுக்கள் 15 மாதங்களுக்குளேயே மின்னலாகக் கட்டிவிடுகிறார்கள்’’ என்றவர், ஓர் உதாரணம் சொன்னார்.

‘‘கடும் மழையால் சென்னையே மிதந்த சமயம் அது. சைதாப்பேட்டை பகுதியில் எங்களிடம் கடன் வாங்கி யவர்களின் குடிசைகளையும் வெள்ளம் அடித்துக்கொண்டு போய்விட்டது. அவர்கள் தங்குவதற்குகூட இடமில்லாமல் ஏதோ ஒரு பள்ளிக்கூடத்தில் தங்கி இருந்தாலும் எனக்கு போன் பண்ணி இன்னும் பத்து நாளுக் குள் பணத்தைக் கட்டி விடுகிறோம் என்று சொன்னார்கள். தவறாமல் பத்து நாள்களுக்குள் கட்டியும் விட்டார்கள்.

இப்படி சின்சியரான சுய உதவி குழுக்கள் சென்னையிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் சுமார் 10 ஆயிரம் வரை இருக்கின் றன. தகுதியுடையவர்கள் அனை வருக்கும் குறைந்தது 30 ஆயிரத்தில் இருந்து எவ்வளவு தொகை வேண்டுமென்றாலும் வழங்கத் தயாராக இருக்கிறோம். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருக்கிற சுயஉதவி குழுக்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வங்கிகளை அணுகியும் எளிதாகக் கடனைப் பெற்றுக் கொள்ள முடியும். டிபார்ட்மென்ட் ஸ்டோர்ஸ், மெஸ் வைத்து நடத்துபவர்கள் என்று பெண்கள் வருமானம் ஈட்டித் தரும் குடும்பங்கள் மட்டுமே மொத்தம் 20,000-க்கு மேல் இருக்கிறது’’ என்கிற மனோகரனின் முகத்தில் பல குடும்பங்களின் சந்தோஷம் ஒன்றாக தெரிந்தது.

‘‘சுய உதவி குழுக்களுக்கு கடன் தருவதற்கென்றே மைக்ரோ ஃபைனான் சியல் இன்ஸ்டிடியூசன்ஸ் ( Micro Finanancial Institutions ) என்னும் தனியார் அமைப்புகள் இருக்கின்றன. அவர்கள் வங்கிகளிடமிருந்து 8- 11% வட்டிக்கு கடன் வாங்கி, அதனை சுய உதவி குழுக்களுக்கு 12-21% வட்டியில் கொடுக்கிறார்கள்.

ஒருவகையில் வங்கிகளுக்கு இது, கடன் வசூல் செய்யும் சிரமத்தைக் குறைக்கிறது என்றாலும் அதிக வட்டியால் பாதிக்கப்படுவது சுய உதவி குழுக்கள்தான். இதனைத் தடுக்க, வங்கிகளில் வாங்கும் வட்டியை விட மூன்று சதவிகித அதிக வட்டியில் மட்டுமே குழுக்களுக்கு கடன் கொடுக்க வேண்டும் என்ற புதிய வரைமுறையை அரசு கொண்டு வந்துள்ளது.

இந்தியா முழுவதும் வாங்கிய கடனை 95% குழுக்களுக்கு மேல் சரியாக திருப்பிச் செலுத்திவிடுவதால் அனைத்து வங்கிகளும் தற்போது சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்குவதில் ஆர்வமாக இருக்கின்றன. இதனால் சுய உதவி குழுக்கள் நேரடியாகவே வங்கிகளை அணுகி, நியாயமான வட்டியில் கடனை பெற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

கணவன் இறந்து போனாலும் அதற்கு அடுத்த நாளே மனைவி பணத்தை ஞாபகமாகக் கொடுத்து அனுப்பிய சம்பவங்களும் உண்டு. இந்த மாதிரி பொறுப்பான பெண்களால்தான் நாங்களும் கடனை வழங்கி சிறப்பாக செயல்பட முடிகிறது!’’ என்று உணர்ச்சி ததும்ப சொன்னார் மனோகரன்.

‘‘இன்ன தொழில்தான் என்று இல்லை. வருமான வாய்ப்புள்ள புதிதான, வித்தியாசமான தொழில்களுக்கும்கூட கடன்களை வழங்குகிறோம். மீன்களை மொத்தமாக வாங்கி ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு சப்ளை செய்பவர்கள், கண்ணாடியில் அழகான படங்கள் வரைந்து விற்பவர்கள், செம்பருத்தித் தூள் தயாரித்து சில்லறையாக விற்பவர்கள் என பலவிதமான தொழில்கள் இருக்கின்றன. அவற்றை நம்பிக்கையாக வெற்றிகரமாக நடத்தும் பெண்களின் உழைப்புதான் இந்த வங்கி சிறப்பு கிளையின் அடிப்படையே!’’ என்கிற மனோகரன் கைநிறைய காசோடு காத்திருக்கிறார். வலுவான தொழில் திட்டம் உங்களிடம் இருக்கிறதா..? வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism