ஸ்பெஷல் |
டிக்ஷ்னரி |
செக்யூரிட்டி எக்ஸ்சேன்ஞ் கமிஷன் - இந்திய பங்குச் சந்தை நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் அமைப்பான ‘செபி’யைப் போல, அமெரிக்காவில் உள்ள அமைப்பு. ப்ளூசிப் கம்பெனிகள் - பங்குச் சந்தையில் உள்ளவற்றுள் சிறந்த, வலுவான, ஒழுங்காக டிவிடெண்ட் தரக்கூடிய பங்கு நிறுவனங்கள் ‘ப்ளூசிப் கம்பெனிகள்’ எனப்படுகின்றன. மிபார் ( MIBOR ) - மும்பை இன்டர்பேங்க் ஆஃபர்ட் ரேட் என்பதன் சுருக்கம். வங்கிகள் தங்களுக்கிடையே குறுகியகால கடனாகப் பரிமாறிக்கொள்ளும் கடனுக்கு மும்பையில் நிர்ணயிக்கப்படும் வட்டிவிகிதம். பாலி ப்ரோப்லின் - ஒருவகையான பிளாஸ்டிக் வேதிப்பொருள். அதிக வெப்பத்தைத் தாங்கக்கூடிய இது உணவுப் பொருள் பேக்கேஜிங், டெக்ஸ்டைல்ஸ், ஆட்டோமொபைல் போன்ற பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. |
