Published:Updated:

சாண்ட்விச் சக்கைப்போடு வருமானம்!

சாண்ட்விச் சக்கைப்போடு வருமானம்!

சாண்ட்விச் சக்கைப்போடு வருமானம்!

சாண்ட்விச் சக்கைப்போடு வருமானம்!

Published:Updated:
தொழில்
சாண்ட்விச் சக்கைப்போடு வருமானம்!
 

சாண்ட்விச் சக்கைப்போடு வருமானம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சாண்ட்விச் சக்கைப்போடு வருமானம்!
சாண்ட்விச் சக்கைப்போடு வருமானம்!

ணம் சம்பாதிக்கிற மக்கள் புதுமையாக, ஆரோக்கியமாக எது கிடைத்தாலும் உடனே வாங்கிப் பார்க்க ஆர்வம் காட்டும் காலமிது. அதுவும் சாப்பிடும் விஷயத்தில் யாரும் கணக்குப் பார்ப்பதே இல்லை. அந்த வகையில் சென்னையில் ஆங்காங்கே முளைத்து சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் வியாபாரம் ‘சிறு உணவு’ எனப்படும் சாண்ட்விச், மற்றும் பானிபூரி வியாபாரம்.

சாண்ட்விச் மேலைநாட்டு உணவு வகை. பானிபூரி, பேல் பூரி வட இந்திய உணவு வகை. இந்த இரண்டும் கூட்டணி போட்டு, சுண்டி இழுக்கின்றன.

இந்த வகை கடைகள் ஆரம்பிக்க 10,000 ரூபாய் இருந்தால் தாராளம். இடம் என்பது பத்துக்குப்பத்து அறை இருந்தாலே போதுமானது. அதே இடத்தில் பத்து வகையான வியாபாரத்தை ஆரம்பித்துவிடலாம். கடையின் லொக்கேஷன் எப்போதுமே முக்கியம். மக்கள் நடமாடுமிடம், பள்ளி, கல்லூரி, அலுவலகம் என்பது போன்ற இடத்தில் கடை இருந்தால், நல்ல வரவேற்பு இருக்கும். இடமே கிடைக்கவில்லை என்றால்கூட ஏதாவது ஒரு கடை ஓரத்தில் சின்னதாக இடம் கேட்டு மழைக்கு ஒதுங்குவது போல் ஒட்டிக் கொள்ளலாம். பிறகு நாளான பிறகு அல்லது நல்ல இடம் கிடைத்ததும் தனியாக ஆரம்பித்துக்கொள்ளலாம். அதுவரை வாடகைச் செலவு மிச்சம்.

இந்தத் தொழில் காலை 11 மணிக்கு ஆரம்பித்து மதிய நேரத்தில் பரபரப்பு துவங்குகிறது. மாலையில் 5 மணியிலிருந்து 8 எட்டு மணி வரை கூட்டம் களை கட்ட... வியாபாரம் சூடு பிடிக்கும். கடை ஆரம்பிக்கும்போது மாலை நேரமாகத் துவக்கி, ரெஸ்பான்ஸ் பார்த்துவிட்டு, வேலை நேரத்தை மெதுவாக அதிகரித்துக்கொள்ள முடியும். துவக்கத்தில் வெஜிடபிள் சாண்ட்விச், பிரட் ஆம்லெட் என சிம்பிளான ஐயிட்டங்களை மட்டும் வைத்து ஆரம்பியுங்கள். பெரும்பாலானவர்கள் அதிகம் விரும்புவது இந்த வகைகளைத்தான். பிறகு உங்களது தொழில் நேர்த்தி, முன்னேற்றத்தைப் பொறுத்து ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்துங்கள். சாண்ட்விச்சைப் பொறுத்தவரை, வெஜ். சாண்ட்விச், மசாலா சாண்ட்விச், பிரட் பட்டர், மசாலா டோஸ்டட், ஜாம் டோஸ்டட், வெஜ் சீஸ் டோஸ்டட், மசாலா டோஸ்டட், பிரட் ஆம்லெட், மசாலா, சீஸ் மற்றும் சிக்கன் டோஸ்ட், பாய்ல்ட் எக், சீஸ் டோஸ்ட் என 25-க்கும் மேற்பட்ட வெரைட்டிகள் இருக்கின்றன. இதில் டேஸ்ட்டுக்காக சில விஷயங்களைச் சேர்த்து, அது மக்களுக்கும் பிடித்துப் போனால் அதுவும் புது வெரைட்டியாக சக்கைப்போடு போடும். கஸ்டமர்கள் உங்களைத் தேடி வருவார்கள்.

விலைகளும் குறைந்தபட்ச மாக ஆறு ரூபாயிலிருந்து, 28 ரூபாய் வரை இருக்கிறது. விலையை உங்கள் பகுதிக்கு ஏற்ப நிர்ணயித்துக் கொள்ளலாம். வேலைக்கான ஆட்களைப் பொறுத்தவரை நீங்கள் ஒருவரே போதும். பிறகு பிஸினஸ் பிக்-அப் ஆகும்போது உதவிக்கு ஒருவரை வைத்துக் கொள்ளலாம். சம்பளமும் ஆரம்பத்தில் 1,000 ரூபாய்க்குள் கொடுக்கலாம்.

சாண்ட்விச் சக்கைப்போடு வருமானம்!

தேவையானவை

ரு ஸ்டவ், எலெக்ட்ரிக் அடுப்பு அல்லது கேஸ் ஸ்டவ், காய்கறி நறுக்கும் கட்டை, அதற்கான கத்தி இரண்டு, பெரிய வெங்காயம், பெங்களூர் தக்காளி, வேகவைத்த உருளைக்கிழங்கு, வெள்ளரிக்காய், பிரட், பட்டர், முட்டை, மிளகுப்பொடி, உப்பு, புதினா, கொத்துமல்லி, மிளகாய், புளி போட்டு அரைத்த சட்னி, பேப்பர் பிளேட், தக்காளி சாஸ் பாட்டில்.

எப்படி ஆரம்பிப்பது..?

பு திதாக இந்தத் தொழிலில் இறங்குகிறீர்களா..? கவலையே வேண்டாம். இந்தத் தொழிலில் செய்முறை மிக எளிது. வெஜ் சாண்ட்விச் என்றால் உருளைக்கிழங்கு, தக்காளி, வெங்காயம், வெள்ளரி என நான்கையும் வட்ட வட்டத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். இரண்டு ஸ்லைஸ் பிரட் எடுத்து அதன் ஓரங்களை கட் செய்துவிட்டு அதில் பட்டர், புதினா சட்னி தடவி, அதன்மேல் காய்களை அழகாக அடுக்கி வைத்து, இரண்டாவது பிரட்டுடன் வைத்து மூடி தர, கலர் கலராக பார்ப்பதற்கே நன்றாக இருக்கும். இது பசியைத் தூண்டிவிட்டு சாப்பிடு பவர்களை இரண்டு, மூன்று என வாங்க வைக்கும். நண்பர்களோடு வரும்போதும் எண்ணிக்கை அதிகரிக்கும்... வியாபாரமும் கூடும்.

இந்தத் தொழிலை கற்றுக் கொள்வது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஒரு நாள் இதுபோன்ற கடை வாசலில் நின்று கவனித்து, அதை ஒன்றுக்கு இரண்டுமுறை வீட்டில் செய்து பாருங்கள். பிறகு, வேகம் அதிகரித்து வருபவர்களை எளிதாகச் சமாளித்துவிடுவீர்கள்.

காய்களை உள்ளூர் மார்கெட்டில் மொத்த விலைகளிலும், பிரட் மற்றும் முட்டை, ரெடிமேட் தக்காளி சாஸ்களை மொத்த விற்பனையாளரிடம் வாங்கினால் விலை குறைவாகக் கிடைக்கும். தினமும் புத்தம் புதிய காய்களும் பிரட்டும் மட்டுமே வாங்க வேண்டும். விலை குறைவானவற்றை வாங்கி வாடிக்கையாளரின் நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள். அதிகபட்சம் ஒருநாள் வேண்டுமானால் ஸ்டாக் இருக்கலாம். காய்கறி, முட்டை விலை தினம் தினம் மாறுபடும். ஆனால், அதற்கேற்ப உங்கள் விற்பனை விலையை மாற்ற முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். மிளகுப் பொடி, சட்னி தயாரிப்பது, காய்களைக் கழுவி சுத்தப்படுத்துவது, உருளைக்கிழங்கை வேகவைப்பது என்பதை எல்லாம் கூடியவரை வீட்டிலேயே முடித்துக் கொள்ளுங்கள்.

யாருக்குப் பயன்படும்..?

ல அலுவலகங்களில் டீ நேரத்தில் பிஸ்கட், சமோசா, மிக்சர், முறுக்கு என்பதெல்லாம் கடந்து, இப்போதெல்லாம் போன் போட்டு ஆர்டர் தருகின்றனர். இதைச்சாப்பிடுவதால் உடம்பு சதை போடுவதில்லை. அதோடு இளைஞர்கள், பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்கள் என வயது வித்தியாசமின்றி அனைவரும் ஆதரவு தரும் உணவாக மாறிவருகிறது.

சாண்ட்விச் சக்கைப்போடு வருமானம்!

வார நாட்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இன்னும் இரு மடங்காகி விற்பனை அதிகரிக்கும். அலுவலகம், சாஃப்ட்வேர் கம்பெனிகளில் உங்கள் கடையில் என்னென்ன கிடைக்கும் என்ற மெனுவை அவற்றின் விலை, போன் நம்பருடன் சேர்த்து பிட் நோட்டீஸ் போல விநியோகித்துவிடுங்கள். கஸ்டமர்கள் தானாகத் தேடி வருவார்கள்.

லாபம் என்பது உணவுத்துறைக்கே உள்ள உயரிய குணம் போல 35% வரை தரும் என்பதால் நம்பிக்கையுடன் துவக்கலாம்.

வாடிக்கையாளர்களின் மனநிலை அறிந்து, ஒவ்வொரு உணவாக அறிமுகப்படுத்துங்கள். உங்களுக்கு அருகே எத்தனை போட்டியாளர்கள் வந்தாலும் பிரச்னை இல்லை. உங்கள் அணுகுமுறை, கிறங்க வைக்கும் சுவை காரணமாக பிஸினஸ் ஸ்திரமாகவே இருக்கும்.

உங்களுக்கென ஒரு தனித்தன்மையான உணவை மார்க்கெட்டில் இறக்கிவிடுங்கள். லாபம் பாருங்கள். ஆல் தி பெஸ்ட்!

சிறு தீனி... பெரிய லாபம்!

சாண்ட்விச் சக்கைப்போடு வருமானம்!

வெ ஜிடபிள் சாண்ட்விச் மாதிரி நொறுக்குத்தீனியும் நல்ல பிஸினஸ்தான்!

சேலம் பகுதியில் இந்த பிஸினஸ் சிறப்பாக நடக்கிறது. இதற்குத் தேவையெல்லாம் தட்(டுவ)டை, பீட்ரூட், கேரட், கடலை பொரி, நிலக்கடலை, தக்காளி சட்னி, புதினா சட்னி, மிளகாய்ப்பொடி, வெங்காயம் மட்டுமே.

ஒரு நான்கு சக்கர வண்டியில் இதையெல்லாம் கடைபரப்பினால் மக்கள் தானாகவே தேடி வருவார்கள்.

ஒரு டம்ளர் பொரியில் மிளகாய்ப் பொடி தூவி, அதில் இரண்டு தட்டு வடைகளை நொறுக்கிப்போட்டு வெட்டி வைத்திருக்கும் கேரட், பீட்ரூட்டைக் கலக்கிக் கொடுத்தால், அது காரப்பொரி. இதை நான்கு முதல் ஐந்து ரூபாய்வரை விற்கலாம். இதனுடைய அசல் என்று பார்த்தால் இரண்டு ரூபாய்தான்.

சாண்ட்விச் சக்கைப்போடு வருமானம்!

அதுவே இரண்டு தட்டுவடைகளை எடுத்து தக்காளி சட்னியையும், புதினா சட்னியையும் அதன்மேல் தடவி வட்டமாக நறுக்கப்பட்ட கேரட்டையும், பீட்ரூட்டையும் நடுவில் வைத்துக் கொடுத்தால் அது தட்டுவடை செட். இது ஒரு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதிலேயே தக்காளியையும், வெங்காயத்தையும் வைத்துக்கொடுத்தால் அது தக்காளி செட். இதன் விலை இரண்டு ரூபாய். இதேபோல் முறுக்கு செட்டும் விற்கலாம்.

மாலை ஆறு மணியிலிருந்து இரவு பதினோரு மணிவரை இந்த வியாபாரத்துக்கான நேரம். சாதாரண மாகவே வியாபாரம் நடந்தால் கூட 200 முதல் 300 ரூபாய்வரை லாபம் பெறமுடியும். நம் எண்ணங்களில் உதிக்கும் காம்பினேஷனில் செய்துகொடுத்தால் தனித் தனியாக ரேட் வைத்து விற்கலாம். இந்த பிஸினஸில் 50%வரை லாபம் உண்டு.

- அ.பரஞ்சோதி
படங்கள்: சௌந்தரவிஜயன்

சம்மர் பிஸினஸ்!

னி வருவது கோடைகாலம். பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை என்பதால், கவனத்தில் கொண்டு ஐஸ்க்ரீம் ஏஜென்சி எடுத்து வைக்கலாம். அது காலை முதல் மாலை வரை நன்றாகப் போகும். குளிர்பானங்கள், பானி பூரி, பேல் பூரி, பாவ் பாஜி என கிட்டத்தட்ட 30 வகையான வடஇந்திய உணவுகள் இருக்கின்றன. இதற்கு அதிக முதலீடோ, இட வசதியோ தேவையில்லை. இருக்கிற இடத்திலேயே வைத்து வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தி வருமானம் பார்க்கலாம். அதில் தற்போது புதுவரவாக மக்காச் சோளத்தை வைத்து புதிய நான்கு வெரைட்டிகளும், பாவ் பாஜி மாடலை வைத்து இன்னும் நான்கு வெரைட்டிகளும் வந்துள்ளன. இவை எல்லாமே புதிய சுவையைத் தருவதால் மக்களிடம் வரவேற்பைப் பெற்று தனி ரசிகர் கூட்டமே உருவாகிவருகிறது. இதன் விலைகளும் ரூபாய் 15லிருந்து 35 வரை இருக்கிறது. அதனை அடுத்து ஜூஸ், மில்க்ஷேக், ஐஸ்க்ரீம் போன்ற பலவும் உள்ளதால் வியாபாரம் வெயிலில் சூடு பறக்கும். வருமானமும் ‘ஜிவ்’வாகும். வெயில்கால பிஸினஸ் கூட்டத் தொடரில் கலந்துகொண்டு முன்னேறுங்கள்!


சாண்ட்விச் சக்கைப்போடு வருமானம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism