Published:Updated:

பில்டர்கள் ஜெயிக்க பிரமாத வழிகள்!

பில்டர்கள் ஜெயிக்க பிரமாத வழிகள்!

பில்டர்கள் ஜெயிக்க பிரமாத வழிகள்!

பில்டர்கள் ஜெயிக்க பிரமாத வழிகள்!

Published:Updated:
தொழில்
பில்டர்கள் ஜெயிக்க பிரமாத வழிகள்!
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பில்டர்கள் ஜெயிக்க பிரமாத வழிகள்!

5 ஆண்டு கியாரண்டி!

யிரக்கணக்கில் செலவுசெய்து வாங்கும் டி.வி, வாஷிங்மெஷின் போன்றவற்றுக்குக்கூட, சில ஆண்டு கள் உத்தரவாதம் (கியாரண்டி) வழங்கப்படும்போது, பல லட்சங்கள் கொடுத்து வாங்கும் வீடுகளுக்கு உத்தரவாதம் இல்லாமல் இருந்தால் எப்படி?

குறைந்தது 3 முதல் 5 ஆண்டுகளுக்கு தண்ணீர் பிரச்னை, மின் இணைப்பு கோளாறு, உள்புற - வெளிப்புற பூச்சு பிரச்னை, கட்டடத்தில் விரிசல் போன்ற குறைபாடுகளை நிவர்த்திசெய்து தர வேண்டும். வேண்டுமானால், வீடு கட்டுவதற்காக ஒப்பந்தம் போடும்போதே இதையும் குறிப்பிடலாம். இதுபோன்ற உத்தரவாதத்தை பூனா நகரைச் சேர்ந்த ‘கெரா டெவலப்மென்ட்’ கட்டுமான நிறுவனம் அளித்து வருகிறது.

மஞ்சளுக்கு கல்

கு ளியல் அறையில் வழவழப்பான மொஸைக்கோ அல்லது டைல்ஸோ போடும்போதே, ஒரு சொரசொரப்பான சிறு கல்லைப் பதித்து விட்டால் மஞ்சள் தேய்த்துக் குளிக்க விரும்பும் பெண்களுக்குப் பயன்படும். அதைக் கொஞ்சம் டிஸைனாக அமைத்துவிட்டால் அழகாகவும் தெரியும். லாட்ஜ் போன்ற தங்குமிடங்களில்கூட இதை அமைக்கலாம்.

(இக்கல்லை தயாரித்து சப்ளை செய்வதை ஒரு தொழிலாகவும் செய்யலாம்)

பில்டர்கள் ஜெயிக்க பிரமாத வழிகள்!


கட்டைச் சுவரில் தோட்டம்

வீ டு என்றால் ஒரு தோட்டமும் இருந்தால் கூடுதல் அழகுதான். ஆனால், வானத்தை நோக்கி வளரும் அபார்ட்மென்டுகளில் தோட்டத்துக்கு எங்கே செல்வது? அதனால், மொட்டை மாடியில் சுற்றுச் சுவர் கட்டும்போதே, இருபக்கமும் ஒரு கல் செங்கல் வைத்து, சின்ன தொட்டி போல கட்டிவிட்டால், அதில் மண் கொட்டி செடிகள் வளர்க்கலாம்.

அதேபோல, ஜன்னல் கதவுகளைப் பக்கவாட்டில் திறப்பது போல அமைத்தால் ஜன்னல் திண்டின் வெளிப்புறத்தில்கூட தொட்டிச் செடிகள் வைக்கலாம்.

வீட்டுக்குள் வர்ணஜாலம்

வீ ட்டு மேல் கூரையில் வர்ணம் தீட்டிக் கொடுக்கலாம். மேலும் நவீன தொழில்நுட்ப உதவியுடன் வானத்தின் இரவுத் தோற்றத்தை மேல் கூரையில் பெயிண்ட் செய்து தரலாம்.

பில்டர்கள் ஜெயிக்க பிரமாத வழிகள்!


டி.வி-க்கொரு அறை

வீ ட்டைக் கட்டும்போதே, ஹால் சுவரில் டி.வி மற்றும் சி.டி பிளேயர் வைப்பதற்கு ஏற்ப, ஒரு ஷெல்ஃப் போன்ற அமைப்பை உருவாக்கிவிட வேண்டும். அது வெளியே நீட்டிக் கொண்டிருக்காமல் சுவரோடு சுவராக இருக்கும் வகையில் ஏ.ஸி மெஷினுக்கு வைப்பதுபோன்ற ஏற்பாட்டைச் செய்தால் இடத்தை அடைக்காமல் இருக்கும்.

பிராணிகளுக்கு இட ஒதுக்கீடு

ற்போது வளர்ப்புப் பிராணிகள் இல்லாத வீடுகளே இல்லை என்னும் அளவுக்கு நாய், பூனை, கிளி, புறா போன்ற வளர்ப்புப் பிராணிகள் பெருகி விட்டன. ஆனால், வீடுகளில் அவற்றுக்கென தனியாக இடம் இருப்பதில்லை. வீட்டுப் பால்கனியிலோ, அல்லது வெளியே சிட் அவுட் பகுதியிலோ வளர்ப்பு பிராணிகளுக்கென தனியான இட வசதியை உருவாக்கிக் கொடுத்தால் எல்லோருக்கும் பிடிக்கும்.

பில்டர்கள் ஜெயிக்க பிரமாத வழிகள்!


ரகசிய லாக்கர் வசதி

ப்போது பல வீடுகளில் துணிமணிகளை வைக்க சுவரிலேயே வாட்ரோப் என்னும் அலமாரியை அமைத்து விடுகிறார்கள். ஆனால், விலையுயர்ந்த நகைகளை வைத்துப் பாதுகாப்பதற்கு தகுந்த ஏற்பாடு இல்லாமல் இருக்கிறது. அதற்காக ஸ்பெஷலாக ஒரு சேஃடி லாக்கரை வீட்டில் ஒரு மறைவான இடத்தில் உருவாக்கித் தரலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism