Published:Updated:

வாடாத பூக்கள் வளமான பிஸினஸ்!

வாடாத பூக்கள் வளமான பிஸினஸ்!

வாடாத பூக்கள் வளமான பிஸினஸ்!

வாடாத பூக்கள் வளமான பிஸினஸ்!

Published:Updated:
தொழில்
வாடாத பூக்கள் வளமான பிஸினஸ்!
 

வாடாத பூக்கள் வளமான பிஸினஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாடாத பூக்கள் வளமான பிஸினஸ்!
வாடாத பூக்கள் வளமான பிஸினஸ்!
வாடாத பூக்கள் வளமான பிஸினஸ்!

பூ த்துக் குலுங்கும் அலுவலகங்கள், வண்ணப் பூக்கள் நிறைந்த நிறுவனங்கள் என்று பூஞ்சோலை களாக இருக்கின்றன சென்னையின் பல வணிக மையங்கள்! இந்தப் பூச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றத் தேவையில்லை, வாடிப்போகும் வாய்ப்புகள் இல்லை. கொஞ்ச நாட்களுக்கு ஒருமுறை கழுவிக் காய வைத்தால் போதும்!

அட, ஆமாங்க... எல்லாமே செயற்கைப் பூக்கள். சட்டென பார்த்தால் வித்தியாசம் தெரியாத அளவு மிருதுவான துணியாலான செயற்கைப் பூக்கள்.

‘‘சமீபமாக சென்னை போன்ற பெருநகரத்தில் பலராலும் விரும்பப்படும் விஷயமாக இருக்கிறது இந்த செயற்கைப்பூ அலங்காரம். தங்கள் அலுவல கத்தை அலங்கரித்துக்கொள்ள விரும்பாதவர்கள் யார் இருக்க முடியும்..? அதுவும், அதிகம் செலவு வைக்காத அலங்காரம் என்றால் எல்லோருக்குமே ஆசை இருக்கத்தானே செய்யும். அதுதான் எனக்கு அற்புதமான தொழில் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது’’ என்றார் மங்களா சரவணன்.

சென்னை, தி.நகரில் உள்ள பாண்டி பஜார் பகுதியில் இருக்கிறது இவருடைய செயற்கைப் பூக்கடை! ஆஸ்திரேலியா, சீனா, ஹாங்காங் போன்ற நாடுகளில் இருந்து செயற்கைப் பூக்களை வரவழைத்து நம்மூர் அலுவலகங்களுக்கும், வியாபார நிறுவனங் களுக்கும் அலங்காரம் செய்து கொடுக்கிறார் இவர்.

பிலிப்ஸ், ரிலையன்ஸ், கேஸ்ட்ரால், சிட்டி பேங்க், ஸ்டேட் பேங்க், கனரா பேங்க், சத்யம் இன்ஃபோ வே, ஜி.ஆர்.டி ஹோட்டல்கள், நீல்கிரிஸ் - இவரது வாடிக்கையாளர்கள்.

‘‘டிகிரி முடித்து வீட்டில் இருந்தாலும் உள்ளுக்குள் ஏதாவது ஒரு பிஸினஸ் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்கான சரியான வாய்ப்பு கிடைக் காமல் தவித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் என் தோழி சென்னையில் ஒரு கடையில் செயற்கைப் பூவை எனக்கு அறிமுகம் செய்தார். அது, என் உறவினர் கள் பலரையும் கவர்ந்துவிட, எல்லோருக்கும் நானே வாங்கிக்கொடுத்தேன். வெறுமனே கொடுக்காமல் அதை பூங்கொத்தாகவோ, பூ ஜாடி அலங்காரமாகவோ கொடுக்க... அதைப் பார்த்துவிட்டு இன்னும் பலரும் கேட்க, எனக்குள் பளீரென ஒளிர்ந்தது பிஸினஸ் பல்ப்.

தீவிரமாக இறங்கினேன். நான் பூக்கள் வாங்கிய கடையிலேயே ‘அது எந்த நாட்டிலிருந்து வருகிறது?’ என்று விசாரித்து, அந்நாட்டு கம்பெனிகளுடன் பேசி பூக்களை நேரடியாக வரவழைத்தேன். அப்போது தொடங்கிய என் பயணம் இந்த செயற்கை நந்தவனத்தில் சிறப்பாக போய்க் கொண்டிருக்கிறது’’ என்கிறார் மங்களா.

ரோஜா, சூரியகாந்தி, லில்லி மலர்களின் தோற்றத் தில் பளீர் வண்ணத்தில் இருக்கின்றன அந்தப் பூக்கள். ‘‘இப்போது மக்கள் மத்தியில் இந்தப் பூக்கள்தான் சூப்பர் ஸ்டார்களாக இருக்கின்றன. கார்னேசன், டூலிப், சன்பிளவர்ஸ், பேர்ட் ஆஃப் பேரடைஸ், கலா லில்லி, டைகர் லில்லி போன்ற இந்த மலர்களைக் கொண்டுதான் இப்போது பல இடங்களை அலங்கரித்து வருகிறேன்’’ என்று சொன்ன மங்களா, இப்போது செமபிஸி! வெறும் பூக்கள் மட்டுமல்லாமல் சிறு மரங்கள், நீண்ட செடிகொடிகள் என்று இன்னும் அடுத்த கட்டத்தையும் தொட்டிருக்கிறார் இவர்.

‘‘நூறு ரூபாய் துவங்கி, ஆயிரக்கணக்கான ரூபாய்வரை விற்கக் கூடிய பூங்கொத்துகள் தயாரிக்க முடியும். அதேபோல, அலுவலகங்கள் வீடுகளுக்கு அலங்கரிக்க ஆயிரத்தில் தொடங்கி லட்சக்கணக்கில்கூட பட்ஜெட் இருக்கிறது. பணத்துக்கு உண்மையான மதிப்பு இந்தப் பூக்கள்!’’ என்றார்.

ஒருநாளுக்கு சில மணிநேரம் செலவிடத் தயாராக இருந் தால் போதும், வீட்டில் இருந்தபடியே ஆயிரக்கணக்கில் சம்பா திக்க முடியும் என்பது மங்களா சரவணனின் அனுபவம்.

‘‘ஒருகட்டத்தில் என் வியாபாரம் சூடு பிடித்ததும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த என் கணவர் வேலையை விட்டுவிட்டு இந்தத் தொழிலில் இணைந்து கொண்டார். இப்போது இருவரும் சேர்ந்து இன்னும் அதிகமாக சம்பாதிக்கிறோம். என் கணவர் ஆர்டர் எடுக்க, நான் திறமையாக அலங்காரத்தைச் செய்து கொடுக்கிறேன். சாதாரண மலர்கள் என்றால் இரண்டு நாட்களுக்கு மேல் வைத்திருக்க முடியாது. இந்த செயற்கை மலர்களை ஐந்து வருடங்கள்கூட பாதுகாப் பாக வைத்திருக்க முடியும். தூசி, அழுக்கு படிந்தால் கழுவி சுத்தம் செய்து கொள்ள முடியும்’’ என்கிறார்.

இந்த செயற்கை மலர்களை வெளிநாடு களில் இருந்து கப்பல் மூலம் வரவழைக்கும் மங்களா, இந்தத் தொழிலுக்கு தமிழ்நாட்டில் நல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறுகிறார்.

‘‘இப்போது எல்லா நகரங்களிலுமே அலுவலகங்கள், ஹோட்டல்கள், ஷோ-ரூம் கள் அதிகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதனால், எந்த ஊரைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்தத் தொழிலில் இறங்கலாம். ரூபாய் 10,000 முதலீடு செய்தால் சுளையாக நாலாயிரம் ரூபாய்வரை மாத வருமானம் கிடைக்கும் தொழில் இது’’ என்றார்.

திருமணம், பிறந்தநாள் விழாக்களுக்கு இந்த செயற்கை மலர்களை வாடகைக்கு விட்டும் சம்பாதிக்க முடியும். இப்போது நகரங்களில் அடுக்குமாடிகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. அங்கெல்லாம் இயற்கைத் தாவரங்களை வளர்க்க முடியாது என்பதால் செயற்கை மலர்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.

மார்க்கெட் மலர்கள் என்றால், சீசனுக்கேற்ப விலை ஏறும், இறங்கும். அந்தப் பிரச்னை செயற்கை மலர்களுக்கு இல்லை. இதுவும் இந்தத் தொழிலுக்கு சாதகமான அம்சம்.

செயற்கைப் பூக்கள் விற்பனையில் மங்களாவைப் போல விரல் விட்டு எண்ணக்கூடிய ஆட்கள்தான் இருக்கிறார்கள். ஆனால், எத்தனை ஆட்கள் வந்தாலும் அவர்களுக்கு வாய்ப்புள்ள தொழில் இது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism