Published:Updated:

பிஸினஸ் குட்டிக்கதை

பிஸினஸ் குட்டிக்கதை

பிஸினஸ் குட்டிக்கதை

பிஸினஸ் குட்டிக்கதை

Published:Updated:
தொழில்
பிஸினஸ் குட்டிக்கதை!
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிஸினஸ் குட்டிக்கதை

சா மிக்கண்ணு தன் இரண்டு மகன்களுக்கும் ஆளுக்கு ஐம்பதாயிரம் ரூபாயைக் கொடுத்து, ‘‘புத்திசாலித்தனமா தொழில் செஞ்சு பொழச்சுக்குங்க’’ என்றார்.

மூத்தவன் ரமேஷ், அதே ஊரில் தென்னந்தோப்பு ஒன்றை குத்தகைக்கு எடுத்து தேங்காய் மண்டியைத் தொடங்கினான். சின்னவன் சுரேஷ், அதேபோல, தென்னந்தோப்பை குத்தகைக்கு எடுத்தான். ஆனால், கடை எதுவும் போடவில்லை. இப்படியே ஆறு மாதம் போனது.

‘‘ஊதாரியா ஊர் சுத்தறான்னு தம்பியைப் பற்றி ஊருக்குள் தப்பாப் பேசறாங்கப்பா... என்னை மாதிரி ஒரு கடை போட்டு உட்காரச் சொல்லி புத்திமதி சொல்லுங்கப்பா’’ என்று ரமேஷ் வந்து சொல்ல, சாமிக்கண்ணு ஒரு திட்டம் போட்டார். இருவரையும் அழைத்தார்.

‘‘நான் கொடுத்த ஐம்பதாயிரம் இப்போது என்னாச்சு?’’ என்று கேட்டார். பெரியவன் ரமேஷ், ‘‘கடை நல்லா போகுதுப்பா... ஆறே மாசத்தில் லாபம் மட்டுமே பாதிக்கும் மேல வந்திருக்கு’’ என்று சொல்லி இருபத்தைந்தாயிரம் ரூபாயைக் கொடுத்தான்.

‘‘ஏதோ என்னால் முடிஞ்சதுப்பா...’’ என்றபடி சுரேஷ் கொடுத்த பணத்தை எண்ணிப் பார்த்த சாமிக்கண்ணுவுக்கு ஆனந்த அதிர்ச்சி. சுரேஷ் கொடுத்த தொகை 50,000 ரூபாய்.

‘‘எப்படி இவ்வளவு பணம் சம்பாதித்தாய்?’’ என பெருமையும் ஆர்வமுமாக கேட்டார் சாமிக்கண்ணு.

அதற்கு சுரேஷ், ‘‘நம்மூரில் தேங்காய் நல்லா விளையுது. ஆனால், பெரிதாக லாபம் பார்க்கிற அளவுக்கு விலை கிடைப்பதில்லை. அதனால், தேங்காய்க்கு டிமாண்ட் இருக்கிற இடங்களைத் தேடிப் போனேன். தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் கம்பெனி, பிஸ்கட் ஃபேக்டரினு அலைந்து திரிந்து ஆர்டர் பிடித்து நம்மூர் தேங்காய்களை அங்கு அனுப்பினேன். நல்ல விலையும் கிடைக்குது. காலாகாலத்துக்கு ஆர்டரும் கிடைத்தது’’ என்றான்.

‘உள்ளூர் வியாபாரம் ஒருபக்கம் இருந்தாலும், தேவை உள்ள இடங்களைத் தேடிப் போனால் இன்னும் பரந்து விரிந்த வியாபாரமும் கூடுதல் லாபமும் பெறலாம்’ என்ற உண்மையை அண்ணனுக்குக் கற்றுத் தந்தான் சுரேஷ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism